For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
बाराबंकी में टेंट कारोबारी ने खुद को गोली मारीः लाइसेंसी पिस्टल से की आत्महत्या,अस्पताल में मृत घोषि
Why Vaithilingam Joined DMK: தமிழக அரசியலில் டெல்டா மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்டவர் வைத்திலிங்கம். அதிமுகவின் "ஐவர் குழு"வில் ஒருவராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவர் ஏன் ஓ.பி.எஸ் அணியை விட்டு விலகினார்? எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் என்ன? என்பது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?
டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் (OPS) ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை என வைத்திலிங்கம் கருதுகிறார். அதேநேரம் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முடிவுகளை எடுப்பதில் நிலவும் காலதாமதமே அவர் விலக முதன்மைக் காரணமாக இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி மீது வைத்திலிங்கம் கூறிய குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை குறித்து வைத்திலிங்கம் கூறுகையில், 'அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பலம்' என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் எடப்பாடி தரப்பின் செயல்பாடுகள் மற்றும் சர்வாதிகாரப் போக்கு தனக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட முறையில் அழைத்தார்கள், ஆனால் நான் செல்லத் தயாராக இல்லை. அவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை எனவும் கூறினார்.
அதிமுக தற்போது ஒரு ஜனநாயக இயக்கமாக இல்லை என்பதே வைத்தியலிங்கத்தின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. அதிமுக இன்று சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும், ஈபிஎஸ் தலைமையில் சர்வாதிகாரப் போக்கு நிலவுவதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக மக்கள் ஏற்கவில்லை என்றும், மாறாக தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டங்களே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அவர் கூறினார்.
திமுகவைத் தேர்ந்தெடுத்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
வைத்தியலிங்கம் தனது அரசியல் மாற்றத்தை ஒரு "தாய் கழகத்திற்குத் திரும்புதல்" என்றே அடையாளப்படுத்துகிறார். திராவிட இயக்கம் என்பது சமூக நீதிக்காக உருவாக்கப்பட்டது. அதன் ஆதி மூலமான திமுகவே இன்று தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறது என்பது அவரது வாதமாக இருக்கிறது. தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவரது தலைமைப் பண்பு தன்னைக் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் தொகுதி கேட்டுத்தான் திமுகவிற்குச் சென்றேன் எனக் கூறுகிறார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் பட்ஜ்ஹில் ஒன்றே ஓன்று தான், 'நான் எந்த டிமாண்டும் வைக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தான் திமுகவில் இணைந்தேன்' எனக் கூறினார். அதிமுக என்பதே திமுகவிலிருந்து வந்ததுதான். எனவே மக்கள் இதைத் தாய் கழகத்திற்குச் சென்றதாகவே பார்ப்பார்கள் எனவும் விளக்கம் அளித்தார்.
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா?
வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி திமுக தனது பலத்தைப் பெருக்கி வருவதன் அடையாளமாக இந்த இணைப்பு பார்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இணைப்பு விழாவில், அதிமுகவின் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் படிக்க - கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்! கைகோர்த்த டிடிவி தினகரன்.. அப்போ ஓபிஎஸ்?
மேலும் படிக்க - விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? கருணாஸ் முக்கிய தகவல்!
மேலும் படிக்க - திமுக போட்ட 4 முக்கிய தீர்மானம்! 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு வீடும் டார்கெட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ