பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
நெல்லை பாதிரியாருக்கு மரண தண்டனை! சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு...
Tirunelveli, Tamil Nadu:2022ஆம் ஆண்டில், நெல்லை பகுதிக்குட்பட்ட வழிபாட்டு தலத்திற்கு, பிரார்த்தனைக்காக வந்திருந்த 4 சிறுமிகளை, அங்கு பணியாற்றி வந்த பாதிரியார் ஆபிரகாம் (47) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மரண தண்டனை:
2022ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிரியார் ஆபிரகாமிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபனம் ஆனது. இதைத்தொடர்ந்து, குற்றவாளி ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
TNPL தொடரிலும் சொதப்பிய வருண்... இனி இந்திய அணியில் நோ சான்ஸ்?
Chennai, Tamil Nadu:TNPL 2026, Varun Chakravarthy:
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் நகரில் முதல் 20 லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 8 லீக் போட்டிகளும், பிளே ஆப் சுற்றுப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளன.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் நேற்று (ஆகஸ்ட் 19) மோதின. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு மிக போட்டியாக பார்க்கப்பட்டது.
விக்கெட் எடுக்காத வருண்
திண்டுக்கல்லில் நடந்த 5 லீக் ஆட்டங்களிலும் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது உடற்தகுதிபெற்று மீண்டுவிட்ட நிலையில், நேற்றைய போட்டியில் களமிறங்கினார். அவரது ஆட்டத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 34 ரன்களை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவர்பிளேவிலும் அவர் ஒரு ஓவரை வீசினார். அதன்பின் 7வது ஓவரையும் வீசினார். அதன்பினன் பிறகு பகுதியில் 2 ஓவர்களை வீசியும் விக்கெட் எடுக்க இயலவில்லை. ஓபனர்கள் ராஜ்குமார், சுரேஷ் குமார் இவரை வெளுத்து வாங்கினர். சஞ்சய் யாதவும் இவரை சிறப்பாக கையாண்டார்.
மிஸ்ட்ரி அம்சம் முடிந்துவிட்டதா...?
தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி வீசும் லெந்தில் பிழை செய்து வருவதாலும், அவரது பந்துவீச்சை பேட்டர்கள் கணிக்கத் தொடங்கிவிட்டதாலும் அதிக ரன்களை வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மிஸ்ட்ரி அம்சத்தை அவர் மீண்டும் தொலைத்துவிட்டாரோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனால் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சொதப்பல்
கடைசியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வருண் சக்ரவர்த்தி இரண்டு போட்டிகளில் விளையாடி 72 ரன்களை கொடுத்து, 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். கடந்த 2026 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 11 விக்கெட்டையே வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவரது மோசமான பந்துவீச்சாகும்.
வருண் சக்ரவர்த்தி மீதான எதிர்பார்ப்பு
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகியிருந்தார். அவர் மீண்டு வந்து எப்போது பார்முக்கு வருவார் என பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு CM விஜய்யின் குட் நியூஸ்... நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு
Chennai, Tamil Nadu:நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு குறித்து சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
ஊக்கத்தொகை உயர்வால், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலையாகக் கிடைக்கும். சர்க்கரை ஆலையில் பதிவு செய்த கரும்புக்கு ஒரு டன், 709.50 ரூபாயை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும், சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3,290.50 ஆக மத்திய அரசு வழங்குகிறது.
. @TVKVijayHQ : நெல் மற்றும் கரும்புக்கான ஊக்க தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்pic.twitter.com/6WcZfViBiD
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 10, 2026
சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289 ஊக்கத்தொகை அதிகரிப்பு, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.159 ஊக்கத்தொகை அதிகரிப்பு. ஓராண்டில் ரூ.156க்கு மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல்முறை.
மெஸ்ஸியின் தந்தை காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Rosario, Santa Fe:Jorge Messi Passed Away: அர்ஜென்டினா நாட்டின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 68.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு 10 மணிக்கு லியோனல் மெஸ்ஸியின் தந்தை மருத்துவமனையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்திய கால்பந்து அணி
மெஸ்ஸியின் ஆரம்பகால கிளப், Newell's Old Boys, ஜார்ஜ் மெஸ்ஸியின் உயிரிழப்பு செய்தியை உறுதிசெய்துள்ளது. அதேநேரத்தில் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.
கண்ணீர்விட்ட மெஸ்ஸி
நடந்து முடிந்த 2026 பிபா உலகக் கோப்பை தொடரின்போது மெஸ்ஸியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அல்ஜிரியா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பிறகு, லியானல் மெஸ்ஸி கண்ணீர்விட்டு கொண்டாடினார். அவரது தந்தையின் உடல்நலம் சார்ந்தும்தான் அவர் கண்ணீர் விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதாவது களத்தில் அப்பாற்பட்ட ஒரு நிகழ்வால் உணர்ச்சிவசப்பட்டதாக மெஸ்ஸியும் கூறியிருந்தார்.
வதந்தியை மறுத்த குடும்பம்
மெஸ்ஸியின் தந்தை உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவியபோது, மெஸ்ஸியின் குடும்பம் அதனை முற்றிலும் மறுத்தது. அவர் உடல்நலக்குறைவில் இருந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிபா உலகக் கோப்பை தொடர் முடிந்து மூன்று வாரத்திற்குள் மெஸ்ஸியின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மெஸ்ஸி நம்புவது இவர் ஒருவரே...
லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்வில் ஜார்ஜ் மெஸ்ஸி முக்கிய பங்காற்றி உள்ளார். ஆரம்ப காலத்தில் இருந்து மெஸ்ஸி பெரிதும் நம்புவது அவரதை தந்தையைதான். அர்ஜென்டினாவில் இருந்து இளம் வயதிலேயே பார்சிலோனாவுக்கு சென்றதும் இவரது முடிவில்தான். PSG, மியாமி போன்ற அணிகளில் மெஸ்ஸி தற்போது விளையாடுவதற்கும் இவரே காரணம்.
மைதானத்திற்கு வராத மெஸ்ஸியின் குடும்பம்
மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. 2022 உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமயில்தான் அர்ஜென்டினா வென்றது. சமீபத்தில் முடிந்த 2026 பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. இந்த போட்டியின்போது மெஸ்ஸியின் குடும்பத்தார் மைதானம் வராதது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Budget 2026: சைக்கிள், லேப்டாப்... Gen Z பசங்களுக்கு அடித்தது ஜாக்பாட் - முக்கிய அறிவிப்புகள்
Chennai, Tamil Nadu:Tamil Nadu Budget 2026 Key Announcements For Gen Z : 2026-27 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்பட்டது. 59 ஆண்டுகளுக்கு பிறகு திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சியாக தவெக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறைக்கான அறிவிப்புகள்
அதேபோல், முதலமைச்சர் விஜய் ஆட்சியமைக்க முக்கிய பங்காற்றியவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களான Gen Z தலைமுறையினர். இந்நிலையில், தவெகவின் முதல் பட்ஜெட்டில் அவர்களின் பல்வேறு கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எகிறியது.
அந்த வகையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் மாணவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Gen Z கவனத்திற்கு...
- சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
- முதல்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டத்திற்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 3,734 பள்ளிகளை ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்டப இருக்கிறது.
- தரமான கல்வி வழங்க காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதிகளுடன் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும்.
- 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாமல் சீருடை , புத்தகம் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு.
- 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/Fm0oTScigF
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
- ரூ.2000 கோடியில் கல்லூரி மாணாக்கருக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ஒதுக்கீடு.
- மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனம்.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/E3kAN6RuI5
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
கல்வித்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு
- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கீடு
- பள்ளிக்கல்வித்துறைக்கு 2025-26 நிதியாண்டில் 46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2026-27 நிதியாண்டில் ரூ.2240 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- 2025-26 நிதியாண்டில் ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.101 கோடி குறைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைது: களத்தில் திமுக, ஸ்தம்பிக்கும் தமிழ்நாடு - தவெகவுக்கு குவியும் கண்டனங்கள்
Chennai, Tamil Nadu:DMK Protest Amid Udhayanidhi Stalin Arrest : முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசார் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் அழைத்துச் செல்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் ததடுக்க முயற்சித்து வருகின்றனர். அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் 9 பிரிவுகளின் கீழ் கைது.. எப்ஐஆரில் இருப்பது என்ன? முழு விவரம
உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்றுகொண்டிருந்த போலீசார் வாகனத்தை திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆகியோர் பின்தொடர்ந்தனர். இந்நிலையில், தாம்பரம் செக் போஸ்டில் அவர்களின் கார்களை பேரிகாட் பயன்படுத்தி போலீசார் தடுத்து நடத்தினர்.
DMK members have alleged that a party functionary was injured after being assaulted by the police. pic.twitter.com/M8W8nZ3ArS
— Vignesh Theni (@Vignesh_twitz) August 4, 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - தலைவர்கள் கண்டனம்
அன்புமணி கண்டனம்
உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 4, 2026
கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்
ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!
மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில…
பிரேமலதா கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது என்றும்; அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை!#dmdkofficial #premamalathavijayakanth pic.twitter.com/ZmdOHE8PC7
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) August 4, 2026
கனிமொழி கண்டனம்
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவரது X தளத்தில், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 4, 2026
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது…
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்" என தவெக அரசை கண்டித்துள்ளார்.
தங்கம் தென்னரசு கண்டனம்
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது X தளத்தில், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) August 4, 2026
ஆளுங்கட்சியை எதிர்த்துப்…
ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஆட்சியின் பலத்தை காட்டுவதல்ல; மாறாக, அதன் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் குரலை வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயல்வது ஜனநாயக மரபுகளுக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானது. இது ஒரு தலைவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்" என தவெக அரசை கண்டிதுள்ளார்.
'ஆபாசநிதி...' உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சுக்கு... கடுமையாக சாடும் அமைச்சர்கள்
Chennai, Tamil Nadu:Udhayanidhi Stalin Controversy Speech : தஞ்சாவூரில் விவசாயப் பிரச்னைகளை முன்னிறுத்தி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கண்டித்து திமுக நேற்று (ஆகஸ்ட் 3) ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதில் முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெகவினர் இணையத்தில் கடுமையாக சாடி வருகின்றனர். இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | “தமிழ்நாட்டின் டம்மி முதல்வர்..” விஜய்யை கடுமையாக தாளித்த உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சர் என். ஆனந்த் கண்டனம்
இந்தச் சூழலில், இன்று அதிகாலை 2.57 மணிக்கு நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" என கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
— N Anand (@BussyAnand) August 3, 2026
அவை அடக்கமும்…
'ஆபாசநிதிகளை என்ன சொல்ல...?'
மேலும் அமைச்சர் என். ஆனந்த், "Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான, நமது தமிழ்நாடு முதலமைச்சரை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
மேலும் படிக்க | ஸ்ரீபெரும்புதூர் : கண்ணாடியில் ஆட்டோகிராப் போட்ட முதலமைச்சர் விஜய்
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை...?" என உதயநிதியை ஆபாசநிதி என குறிப்பிட்டு கடுமையாக சாடி உள்ளார்.
உதயநிதிக்கு எச்சரிக்கை
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் (விஜய்) சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றும்; யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்றும் அவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாடல்
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்றும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடுமையாக சாடியுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
இதுகுறித்து அவரது X பதிவில், "பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் ஆபாசநிதி.
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
— Aadhav Arjuna (@AadhavArjuna) August 3, 2026
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல,…
பெண்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்...
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி" என உதயநிதியை கடுமையான விமர்சித்துள்ளார்.
மேலும், "பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்..." என ஆதவ் அர்ஜுனா சாடி உள்ளார்.
அமைச்சர் ரமேஷ் கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவரது X பக்கத்தில், "பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
— TVK Ramesh (@RameshOffcl) August 3, 2026
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது, பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால் சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்" என கடுமையாக சாடி உள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் அவரது X பக்கத்தில் நள்ளிரவு 12.52 மணிக்கு பதிவிட்டுள்ளார். அதில் அவர், "பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
#ஆபாசநிதி
— Rajmohan (@imrajmohan) August 3, 2026
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட… pic.twitter.com/i7YBQzgp9Q
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
'உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'
தவெக தரப்பில் மட்டுமின்றி, அவர்களின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தரப்பில் இருந்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்றிரவு அவரது X பக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
— Manickam Tagoreமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 3, 2026
அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.@Udhaystalin
அரசியல் களத்தில் பரபரப்பு
உதயநிதி ஸ்டாலின் அவரது பேச்சுக்கு விளக்கம் அளிப்பாரா அல்லது கடும் எதிர்வினைகளை ஏற்று மன்னிப்பு கோருவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருக்கும் நேரத்தில் இந்த சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
மேலும் படிக்க | முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் முக்கிய அப்டேட்!
தவெகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம்... உதயநிதி மீது மகளிர் ஆணையத்திலும் புகார்!
Chennai, Tamil Nadu:TVK Protest Against Udhayanidhi Stalin : எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 2) தஞ்சையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக, இரட்டை அர்த்த மொழியில் ஆபாசமாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், கீர்த்தனா, ரமேஷ் உள்ளிட்ட பலரும் உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | 'ஆபாசநிதி...' உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சுக்கு... கடுமையாக சாடும் அமைச்சர்கள்
டிரெண்டிங்கில் ஆபாசநிதி
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அமைச்சர்கள் உள்பட தவெகவினர் அனைவரும் சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலினை 'ஆபாசநிதி' என குறிப்பிட்டு கடுமையாக சாடி வருகின்றனர். X தளத்தில் ஆபாசநிதி என்ற சொல் டிரெண்டிங்கில் இருக்கும் அளவிற்கு, உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இன்று காலை தவெக போராட்டம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | “தமிழ்நாட்டின் டம்மி முதல்வர்..” விஜய்யை கடுமையாக தாளித்த உதயநிதி ஸ்டாலின்!
இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக மகளிரணி சார்பாகவும் உதயநிதிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்
இந்நிலையில், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையத்திற்கு தவெக கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், காவல் நிலையங்களில் புகார் அளிக்கவும் தவெகவினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வாரியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு காவல் நிலையங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா தண்ணீர் திறந்தும்... டெல்டாவுக்கு வராதது ஏன்? காவிரி கடந்து வரும் பாதை - Explained
Mettur, Tamil Nadu:Cauvery River Full Details: காவிரி நதிநீர் பிரச்னை தற்போது தலைவிரித்தாடுகிறது. காவிரி ஆறுதான் தென்னிந்தியாவின் விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழை (கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்) மற்றும் வடகிழக்கு பருவமழை (தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள்) ஆகிய 2 பருவமழைகளினால் நீரை பெறும் அபூர்வமான தென்னிந்திய ஆறாகும்.
அணைகளில் தண்ணீரே இல்லை என கர்நாடக முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருக்க, கர்நாடகாவின் கபினி அணை நிறைந்துவிட்டது. கபினி அணையில் இருந்துதான் நீர் வெளியேற்றி வருகிறார்களே, பின்னர் ஏன் இன்னும் கடைமடையில் தண்ணீர் இல்லை என டெல்டா அல்லாத பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, இதை புரிந்துகொள்ள நீங்கள் காவிரியின் தலை முதல் பாதம் வரை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொண்டால் மட்டுமே ஒவ்வொரு பகுதிக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பகுதி 1: காவிரி ஆற்றின் தோற்றம்
காவிரியின் நீளம்
- மொத்தம் நீளம்: 800 கி.மீ.,
- கர்நாடகா: 320 கி.மீ.,
- தமிழ்நாடு - கர்நாடக எல்லை: 64 கி.மீ.,
- தமிழ்நாடு: 416 கி.மீ.,
காவிரி படுகை பரப்பு
- கர்நாடகா: 34,273 சதுர கி.மீ., (42%)
- தமிழ்நாடு: 43,868 சதுர கி.மீ., (42%)
- கேரளா: 2,866 சதுர கி.மீ., (3.5%)(கபினி, பவானி, பாம்பாறு போன்று கிளை நதிகளின் பிறப்பிடம்)
- புதுச்சேரி: 148 சதுர கி.மீ., (0.5%)(காரைக்கால் பாசன மண்டலம்)
பகுதி 2: காவிரி கடந்து வரும் முக்கிய பகுதிகள் & கிளை ஆறுகள்
கர்நாடக பகுதி
பிறப்பிடம்: கர்நாடக மாநிலம் குடகு (Coorg) மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் தலைகாவேரி என்ற இடத்தில் இருந்து காவிரி நதி பிறக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,341 மீட்டர் உயரத்தில் உருவாகி வருகிறது.
காவிரி கடக்கும் முக்கிய பகுதிகள்: குடகு, மைசூரு, மண்டியா, சாமராஜநகர்
முக்கிய கிளை ஆறுகள்: ஹேமாவதி, ஹாரங்கி, லோகபாவனி, சிம்ஷா, அர்க்காவதி (இடது கரை); லட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணவதி (வலது கரை)
தமிழ்நாட்டு பகுதி
எல்லை: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வழியாக பிரம்மாண்டமான முறையில் காவிரி தமிழ்நாட்டுக்குள் என்ட்ரி ஆகிறது.
காவிரி கடக்கும் முக்கிய பகுதிகள்: தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை
முக்கிய கிளை ஆறுகள்: பவானி ஆறு (ஈரோடு), நொய்யல் (கரூர்), அமராவதி (கரூர்) ஆகிய ஆறுகள் காவிரியில் இணைகிறது.
பகுதி 3: கர்நாடகாவில் காவிரியின் பயணம்
ஹாரங்கி அணை
குடகு மலையில் காவிரியின் முதல் முக்கிய கிளை நதியாக ஹாரங்கி இணைகிறது.
- மொத்த நீர்மட்டம்: 129 அடி
- தற்போதைய நீர்மட்டம்: 126.79
- முழு கொள்ளளவு: 8.50 TMC
- தற்போதைய இருப்பு: 7.75 TMC (91.2%)
- நீர்வரத்து: 10,430 கன அடி
- நீர் வெளியேற்றம்: 14,470 கன அடி
ஹேமாவதி அணை
ஹாசன் மாவட்டத்தில் இருந்து ஹமாவதி ஆறு காவிரியுடன் இணைகிறது. ஹேமாவதி ஆற்றின் குறுக்கே ஹேமாவதி அணை உள்ளது. அங்கிருந்து நீர் திறக்கப்பட்டு காவிரியில் இணைகிறது.
- மொத்த நீர்மட்டம்: 117 அடி
- தற்போதைய நீர்மட்டம்: 105.37
- முழு கொள்ளளவு: 37.10 TMC
- தற்போதைய இருப்பு: 26.96 TMC (72.7%)
- நீர்வரத்து: 11,884 கன அடி
- நீர் வெளியேற்றம்: 500 கன அடி
கிருஷ்ணராஜசாகர் அணை
ஹராங்கி, ஹேமாவதி, லட்சுமண தீர்த்தா நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் வெறும் இடங்களில் காவிரி நதியில் சேர்ந்து கிருஷ்ணராஜசாகர் அணையை அடைகிறது.
- மொத்த நீர்மட்டம்: 124.80 அடி
- தற்போதைய நீர்மட்டம்: 96.90 அடி
- முழு கொள்ளளவு: 49.45 TMC
- தற்போதைய இருப்பு: 20.48 TMC (41.4%)
- நீர்வரத்து: 22,055 கன அடி
- நீர் வெளியேற்றம்: 1,766 கன அடி
கபினி அணை
கபினி ஆறு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உருவாகிறது. தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் வந்து சேர்கிறது.
- மொத்த நீர்மட்டம்: 65 அடி
- தற்போதைய நீர்மட்டம்: 62.95 அடி
- முழு கொள்ளளவு: 37.10 TMC
- தற்போதைய இருப்பு: 26.96 TMC (93.3%)
- நீர்வரத்து: 23,009 கன அடி
- நீர் வெளியேற்றம்: 9,958 கன அடி
Mysuru, Karnataka: Heavy rainfall in Kerala's Wayanad has significantly increased the inflow into the Kabini Dam. As the reservoir filled up, around 25,000 cusecs of water was released into Tamil Nadu, following the Cauvery water-sharing formula. The release comes despite Tamil… pic.twitter.com/gJ6VvoDYon
— IANS (@ians_india) August 2, 2026
T. நரசிபுரா
கபினி அணையில் இருந்து வரும் நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வரும் நீரும் கர்நாடகாவின் நரசிபுரா பகுதியில்தான் ஒன்று சேர்கின்றன. இதற்கு பிறகே, சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் சிறு சிறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீரும் காவிரி நதியில் சேரும்.
பிலிகுண்டுலு
- கர்நாடகாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த நீர் தற்போது ஒன்றிணைந்து பிலிகுண்டுலுவை அடையும். இங்கு மத்திய நீர்வள ஆணையத்தின் நீர் அளவீட்டு நிலையம் உள்ளது. இங்குதான் தமிழ்நாட்டுக்குச் செல்லும் நீரின் அளவு கணக்கிடப்படுகிறது.
- வெறும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அளவை மட்டும் வைத்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் வருகிறது என்பதை கணக்கிட முடியாது.
- இடையில் காவிரிக்கு வந்து சேரும் மற்ற துணையாறுகளின் நீர்வரத்து, ஆற்றின் உண்மையான ஓட்டம், அதன் பயண நேரம் மற்றும் பதிவாகி உள்ள மழையின் அளவு ஆகிய அனைத்தையும் வைத்தே அதை கணக்கிட இயலும்.
- பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டம்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நீரின் சரியான அளவாகும். எனவேதான், அங்கிருந்து கணக்கிடப்படுகிறது. இதுதான் காவிரியின் கர்நாடகாவில் கடந்து வரும் முக்கிய பகுதியாகும்.
மேலும் படிக்க | Explained: மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையா? மத்திய அரசு vs தமிழக அரசு
பகுதி 4: தமிழ்நாட்டில் காவிரியின் பயணம்
'இந்தியாவின் நயாகரா' எனப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வழியாக காவிரி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறது.
மேட்டூர் அணை
தமிழ்நாட்டின் மிகப்பெரிய விவசாய மற்றும் குடிநீர் ஆதாரம், மேட்டூர் அணைதான். காவிரி முதலில் இங்குதான் வந்தடைகிறது.
மொத்த நீர்மட்டம்: 120 அடி
தற்போதைய நீர்மட்டம்: 73.18 அடி
முழு கொள்ளளவு: 93.47 TMC
தற்போதைய இருப்பு: 35.49 TMC (38%)
நீர்வரத்து: 68 கன அடி
நீர்வெளியேற்றம்: 1003 கன அடி
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு காவிரியுடன் இணைகிறது. பவானி கூடுதல் நீர் பவானிசாகர் அணையில் இருந்து வரும்.
மொத்த நீர்மட்டம்: 105 அடி
தற்போதைய நீர்மட்டம்: 57.12 அடி
முழு கொள்ளளவு: 32.80 TMC
தற்போதைய இருப்பு: 6.36 TMC (19.4%)
நீர்வரத்து: 7,119 கன அடி
நீர் வெளியேற்றம்: 843
அமராவதி அணை
கோவை மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் ஆறு கரூர் மாவட்டத்தில் காவிரியில் இணைகிறது. கரூருக்கு அருகே ஆனைமலைப் பகுதியில் இருந்து உருவாகி அமராவதி அணையை கடந்து அமராவதி ஆறு காவிரியுடன் இணைகிறது.
மொத்த நீர்மட்டம்: 90 அடி
தற்போதைய நீர்மட்டம்: 42.03 அடி
முழு கொள்ளளவு: 4.05 TMC
தற்போதைய இருப்பு: 0.82 TMC (20.1%)
நீர்வரத்து: 1,530 கன அடி
நீர் வெளியேற்றம்: -
திருச்சியில் காவிரி
மேட்டூர் அணைக்கு கீழே பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் காவிரியில் இணைவதால் டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை இவை அளிக்கின்றன. எனவே, மேட்டூர் மட்டுமின்றி இங்கிருந்து நீர் வெளியேறுவதையும் விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள்.
1. முக்கொம்பு மேல் அணைக்கட்டு: காவிரி திருச்சியை அடையும்போது அதன் அகலம் அதிகரிக்கும். காவிரி திருச்சியில் முக்கொம்பு அணைக்கட்டில் இருந்து கொள்ளிடம் மற்றும் காவிரி (கல்லணை நோக்கி) என இரண்டாக பாயும். கொள்ளிடம் பிரதான வெள்ள வடிகாலாகப் பயன்படுகிறது.
2. கல்லணை: உலகப் புகழ்பெற்ற கல்லணையில் காவிரி மீண்டும் 4 முதன்மை அமைப்புகளாக பிரிகிறது.
- காவிரி: முதன்மை பாசன ஆறு.
- வெண்ணாறு: மத்திய டெல்டா பாசனம்
- கல்லணைக் கால்வாய்: புதுக்கோட்டை மற்றும் தஞ்சை வறண்ட பகுதிகளுக்கான பாசனக் கால்வாய்
- கொள்ளிடம்: உபரி நீர் மேலாண்மை.
பகுதி 5: கடலில் கலக்கும் காவிரி
காவிரி நதிநீர் ஒரே இடத்தில் கடலில் கலக்காது. பல கிளைகளாக பிரிந்து கடலில் சங்கமிக்கிறது.
- பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் முதன்மை கிளை வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- காரைக்கால்: வெண்ணாறின் கிளைகள் மற்றும் அரசலாறு புதுச்சேரி மண்டலமான காரைக்கால் வழியாக கடலில் கலக்கின்றன.
- பழையார்: கொள்ளிடம் ஆறு கடலூர் - மயிலாடுதுறை எல்லையில் பழையார் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பின்குறிப்பு: அணைகள் குறித்த தரவுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, முக்கிய அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து தொடர்ப்பு பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். தரவுகள் அனைத்தும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குட்பட்டது. (லிங்க் இதோ)
தொட்டதெல்லாம் பெருகும் ஆடிப்பெருக்கு : தங்கம் வாங்கலாமா? என்னென்ன வாங்கலாம்?
Chennai, Tamil Nadu:Aadi Perukku 2026 : "ஆடி பட்டம் தேடி விதை" என்பது தமிழ் பண்பாட்டில் முக்கிய பழமொழிகளில் ஒன்று. இயற்கையையும், நீர்நிலைகளையும் வழிபடும் மகத்தான நாளே ஆடிப்பெருக்கு (ஆடி 18).
ஆடி மாதத்தில் பெருகி வரும் காவிரியைப் போல, நம் வாழ்விலும் வளமும் செல்வமும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது. ஆடி 18இல் 'தொட்டதெல்லாம் பெருகும்' என்பது காலம் காலமாக மக்களிடையே இருந்து வரும் ஆழமான நம்பிக்கை.
இன்று தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
- பொதுவாக தங்கம் வாங்குவதற்கு அக்சய திருதியை புகழ்பெற்றது என்றாலும், தமிழர்கள் வாழ்வில் ஆடி 18ஆம் தேதியான ஆடிப் பெருக்கும் அதற்கு இணையான உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.
- இந்த நாளில் தங்கம் வாங்குவது சுபயோகத்தைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப சிறிய தங்க நாணயம், மூக்குத்தி அல்லது வெள்ளி நாணயம் வாங்கினாலும் வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் பெருகும்.
- தங்க நகையாக வாங்க இயலாதவர்கள், தங்கப் பத்திரங்கள, Gold ETF அல்லது சிறு சேமிப்புத் திட்டங்களில், நீங்கள் இன்று முதல் முதலீட்டைத் தொடங்கலாம். இது எதிர்காலச் செல்வத்தைப் பெருக்க உதவும்.
என்னென்ன பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும்?
ஆடி பெருக்கு தினத்தில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. மங்கலப் பொருட்களும் எளிய வீட்டு உபயோகப் பொருட்களும் கூட ஆடிப் பெருக்கில் வாங்கும்போது பெருமளவிலான நன்மைகளைத் தரும்.
கல் உப்பு
மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் கல் உப்பை ஆடி 18 அன்று வாங்கி, வீட்டின் உப்பு ஜாடியில் நிரப்பி வைத்தால் வீட்டில் அன்னபூரணியின் அருள் நிலைத்து நிற்கும்; வறுமை அகலும்.
மஞ்சள், குங்குமம்
சுமங்கலிப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் மங்கலப் பொருட்களான விரலி மஞ்சள், குங்குமம் ஆகியவை வாங்குவது குடும்பத்தில் அமைதியையும் மங்களத்தையும் பெருக்கும்.
மேலும் படிக்க | ஆடிப்பெருக்கு: தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் என்ன? வீட்டிலேயே வழிபடுவது எப்படி? முழு விவரம்
பச்சரிசி, வெல்லம்
வீட்டிற்குத் தேவையான தானியங்கள், குறிப்பாக பச்சரிசி மற்றும் வெல்லம் வாங்குவது வீட்டில் எப்போதும் உணவுப் பஞ்சமில்லாமல் வைத்திருக்கும்.
பித்தளை, செம்புப் பாத்திரங்கள்
புது பாத்திரங்கள் வாங்கி, அதில் நீர் அல்லது அரிசி நிரப்பி வைப்பது செல்வ விருத்தியைத் தரும்.
புதிய கணக்கு புத்தகங்கள்
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தவும், புதிய கணக்கு புத்தகங்களைத் தொடங்கவும் இந்நாள் மிகச் சிறந்தது.
ஆடிப் பெருக்கு என்பது வெறும் பொருட்கள் வாங்கும் நாள் மட்டுமல்ல; இயற்கைக்கு நன்றி தெரிவித்து, நேர்மறை எண்ணங்களை மனதில் விதைக்கும் நாள். நாம் வாங்கும் பொருட்கள் எதுவாக இருப்பினும், முழு நம்பிக்கையோடும் இறை வழிபாட்டோடும் வாங்கும்போது, நம் இல்லத்திலும் உள்ளத்திலும் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகிக்கொண்டே இருக்கும்.
மேலும் படிக்க | ஆடி பிறப்பு : இந்த மாதம் என்னென்ன செய்யலாம்...? என்னென்ன செய்யக்கூடாது...?
டி.கே. சிவக்குமார் திமுக சொல்வதையே நம்புவார் - அமைச்சர் நிர்மல் குமார் தடாலடி
Chennai, Tamil Nadu:Minister CTR Nirmal Kumar Latest News : சென்னை விமானநிலையத்தில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) காலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் ரத்து, காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர் பேசியிருந்தார். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக குடும்பம் சொல்வதைதான் அவர் கேட்பார் என அவர் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
திமுக குழப்பம் ஏற்படுத்துகிறது...
சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், "முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என நினைத்து திமுக செயல்படுகிறது. ஆட்சியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது...?. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் சேர்ந்து ஏதேனும் ஒரு வகையில் திமுக முட்டுக்கட்டை போடுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவசரமாக மனு தாக்கல் செய்து திமுக குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. டி.கே. சிவக்குமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் நீண்ட நாள் உறவு உள்ளது.
ஜெயலலிதா கருணாநிதி செய்த காரியம்...
முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் கிடைக்கக்கூடாது என செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்கிறது. காவிரி -கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே எண்ணத்தில் உள்ளனர்.
ஜெயலலிதா இருந்த போது, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கக் கூடாது என கருணாநிதி அழுத்தம் கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு பெயர் கிடைத்த விடக் கூடாது என்பதற்காக கருணாநிதி செய்தது போல் தற்போதும் செய்கிறார்கள்.
'சிவக்குமார் திமுக சொல்வதேயே கேட்கிறார்'
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு நன் மதிப்பை பெற்றுக் கொடுப்பது போல் திமுக செயல்படுகிறது. காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு திமுகவும், டி.கே. சிவக்குமாரும் சேர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர். காங்கிரஸ் தலைமை சொன்னால் கூட டி.கே. சிவக்குமார் கேட்க மாட்டார். திமுக சொல்வதை தான் கேட்கிறார்" என்றார்.
மேலும் படிக்க | ஜூலையில் மின் கட்டணம் உயர்வா...? TANGEDCO போட்ட முக்கிய அறிவிப்பு
'ஜனநாயகன்' போஸ்டர் கிழிப்பு... விஜய்க்கு எதிர்ப்பு - கர்நாடகாவில் பரபரப்பு
Mandya, Karnataka:Cauvery Dispute Protest In Karnataka : கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள குருஸ்ரீ திரையரங்கு முன்னர் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி, படத்தின் போஸ்டரை கிழித்து விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
#WATCH | Mandya, Karnataka: Amid rising tensions over the Cauvery issue, posters of Tamil Nadu CM Vijay’s film 'Jana Nayagan' were removed in Mandya.
— ANI (@ANI) July 30, 2026
The film posters and banners of actor and Tamil Nadu CM Vijay’s movie that had been put up at Gurushree Theatre in Mandya were… pic.twitter.com/IkXvSMDAou
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கன்னடம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பதற்றம் அதிகமாகி உள்ளது.
Bye Bye Jinks... அஜிங்கயா ரஹானே ஓய்வு - மறக்க முடியாத இந்த 3 பெஸ்ட் ஆட்டங்கள்!
Mumbai, Maharashtra:Ajinkya Rahane Retirement : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்கயா ரஹானே இன்று அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான இவர், 2013ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதேநேரத்தில், 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் இடம்பெறாத ரஹானே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். கடைசியாக 2023ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியதுதான் இவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
கர்நாடகாவுக்கு செக்... மேகதாது அணை DPR நிராகரிப்பு - இனி அடுத்தது என்ன?
Saggayam 'A' Beat, Karnataka:Mekedatu Dam : மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால், அப்போதே விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையோ தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் புதிய கூறுகளை சேர்க்குமாறு கடந்த 2026 ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவை காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, அதை மீண்டும் கர்நாடக அரசுக்கே கடந்த ஜூன் 29ஆம் தேதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 TMC நீரை மேகதாது அணமை மூலம் எடுத்துக்கொள்வோம் என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய கடிதத்தில் அஅதை 6.95 TMC ஆக கர்நாடகா உயர்த்திருக்கிறது. 2019இல் கூறியதை விட 2.2 TMC நீர் அதிகம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசால் 6.50 TMC நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், அதற்கு மாறாக கூடுதல் நீரைப் பயன்படுத்த வேண்டி கோரிக்கை வைக்க இயலாது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூவுலகின் நண்பர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு மத்திய நீர் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்டமும், மேகதாது அணை திட்டமும் இணைக்கும் வகையில் உள்ளன.
காவிரி ஆற்றின் நீரை அதிகளவில் பயன்படுத்தும் வகையில் மேகதாது திட்டம் இருப்பதால் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கை கடந்த மாதம் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க | Explained: மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையா? மத்திய அரசு vs தமிழக அரசு
“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது..” கர்நாடக முதல்வர் அதிரடி! என்ன செய்யப்போகிறார் CM விஜய்?
Nagalapuram, Tamil Nadu:தமிழ்நாட்டிற்கு, இப்போதைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்மார் ஸ்ட்ரிக்ட் ஆக கூறியிருப்பது மக்களை கலக்கமடைய செய்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்போது கர்நாடகாவும் கை விரித்திருப்பது கவலை அளித்திருக்கிறது.
“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது”
ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிற்கும் காவிரி நீர் திறந்து விடுவதில் பஞ்சாயத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, ஜூலை 29ஆம் தேதியான இன்று தொடங்கி, அடுத்த 15 நாட்களுக்கு, 4.5 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டுமென காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தெரிவித்திருந்தது. இந்த சமயத்தில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கூறியிருப்பது இந்த பிரச்சனையை இன்னும் அதிகரித்திருக்கிறது.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி! தமிழ்நாடு பட்ஜெட்டில் வரும் முக்கிய அறிவிப்பு?
கடந்த ஜூன் மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை தோராயமாக 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை வெறும் 3.54 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சமீபத்தில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஜூலை 29ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல், அடுத்த 15 நாட்களுக்கு சுமார் 3,500 கன அடி வீதம் 4.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று, இக்குழு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு வந்த பிறகும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் பருவமழை இந்த அண்டு போதுமான அளவு பெய்யாததால், இங்கிருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்திருப்பதாகவும், குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்ததையடுத்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
தமிழ்நாடு முதல்வர் விஜய், காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின்போது, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து பேச இருக்கும் அவர், பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் இரு மாநிலங்களின் நலன் சார்ந்த விஷயங்களை விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல் நினோ பாதிப்பால் தமிழ்நாட்டின் முக்கியமான சில மாவட்டங்கள் வறட்சியில் பாதிக்கப்படுவதை ஒட்டி, குறைவான மழைப்பொழிவு, நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர் தேக்கம் இன்மை உள்ளிட்டவை இவர் சந்திக்கப்போகும் பெரிய சவாலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மக்களே உஷார்! நாளை (ஜூலை 30) இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது - முழு லிஸ்ட் இதோ!
