ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.