Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

மக்கள் மகிழ்ச்சியோடு வந்து செல்லலாம்!

SMShiva Murugesan
Dec 17, 2025 16:02:52
விஜய் கூட்டத்துக்கு அனைவருக்கும் அனுமதி: செங்கோட்டையன் தகவல்!
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RSRK Spark
Dec 17, 2025 09:46:07
Delhi, Delhi:

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா வெளியிட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை முதல் டெல்லியில் உள்ள எந்தவொரு பெட்ரோல் பங்கிலும், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் வாகனத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் எரிபொருள் நிரப்ப முடியாது. இதை சரிசெய்ய வாகன ஓட்டிகளுக்கு இன்று புதன்கிழமை ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

மேலும் படிக்க | பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்... வலுக்கும் சர்ச்சை - வீடியோ வைரல்

பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நொய்டா, குர்கான், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக தனியார் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரநிலையை பூர்த்தி செய்யாத வெளிமாநில வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் அனுமதிக்கப்படாது. மீறி உள்ளே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெட்ரோல் பங்குகளிலும், எல்லைகளிலும் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரக் கருவிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். வாகனங்களின் பிஎஸ் வகை மற்றும் பியூசி சான்றிதழ் ஆகியவை முறையாக சரிபார்க்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே GRAP 3 மற்றும் 4-ன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் டெல்லியில் அமலில் உள்ளன.

  • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்கு தடை தொடர்கிறது.
  • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத பிஎஸ்-4 ரக நடுத்தர சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லி-என்சிஆர் பகுதியில் இயங்க தடை நீடிக்கிறது.

அரசின் பிற நடவடிக்கைகள்

  1. வாகன கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, மாசுபாட்டை குறைக்க பிற துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 
  2. மின்சாரப் பேருந்துகள்: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த இதுவரை 3,427 மின்சார பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 2026 டிசம்பருக்குள் 7,500 இ-பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  3. தொழிற்சாலைகள் கண்காணிப்பு: மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, சுமார் ரூ. 9.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 280 ஆலைகளில் ஆன்லைன் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  4. குப்பை கிடங்குகள்: குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அழிக்கும் பணிகள் நாள் ஒன்றுக்கு 35,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 45 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற காடுகள் வளர்க்கப்படுகின்றன.
  5. ஹீட்டர்கள் விநியோகம்: குளிர்காலத்தில் பாதுகாவலர்கள் வெப்பத்திற்காக விறகு அல்லது குப்பைகளை எரிப்பதை தடுக்க, 10,000 எலக்ட்ரிக் ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் ஜெனரேட்டர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் சாடல்

காற்று மாசு என்பது டெல்லி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு "நோய்" என்று குறிப்பிட்ட அமைச்சர் சிர்சா, இதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காற்று மாசு பிரச்சனையில் மௌனம் சாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார். புதிய விதிமுறைகள் சிரமமாக இருந்தாலும், டெல்லியின் காற்றை சுத்தப்படுத்த இவை அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் உடனடியாக தங்கள் வாகனங்களுக்கான பியூசி சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | சிக்கன் தந்தூரிக்கு தடை! Non Veg பிரியர்களுக்கு அதிர்ச்சி உத்தரவு.. ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 17, 2025 07:26:03
Chennai, Tamil Nadu:

ஐபிஎல் 2026 மினி ஏலம் நேற்று அபுதாபியில் உள்ள எத்திஹாத் அரினாவில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் பல இளம் வீரர்கள் கோடிகளில் புரண்டாலும், சில முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு இது ஒரு சோகமான ஏலமாகவே அமைந்தது. கேமரூன் கிரீன், பிரசாந்த் வீர் போன்றோர் மிகப்பெரிய தொகையை பெற்று கொண்டாடி வரும் வேளையில், கடந்த சீசனில் கோடிகளில் சம்பளம் வாங்கிய பல வீரர்கள், இம்முறை மிகக்குறைந்த தொகைக்கே ஏலம் போயுள்ளனர். மொத்தம் 369 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், 10 அணிகளும் சேர்ந்து வெறும் 77 இடங்களை மட்டுமே நிரப்பின. கடந்த 2025 சீசனில் மோசமான ஆட்டம், அணியின் புதிய வியூகங்கள் மற்றும் வீரர்களின் உடற்தகுதி போன்ற காரணங்களால் பல வீரர்களின் சந்தை மதிப்பு இம்முறை அதிரடியாக குறைந்துள்ளது. அப்படி சம்பளத்தில் பெரும் சரிவைச் சந்தித்த 5 முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | 14.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கிய கார்த்திக் சர்மா! இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லையா? 

வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer)

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். கடந்த 2025 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை நம்பி ரூ. 23.75 கோடி என்ற இமாலய தொகையை கொடுத்து வாங்கியது. ஆனால், அவர் அந்த நம்பிக்கையை காப்பாற்றத் தவறினார். 7 இன்னிங்ஸ்களில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கேகேஆர் அணி அவரை விடுவித்தது. ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் வந்த அவரை வாங்க அணிகள் முதலில் தயங்கின. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு அவரை வாங்கியது. இது கடந்த முறையை விட சுமார் 16.75 கோடி ரூபாய் குறைவு.

ஆகாஷ் தீப் (Akash Deep)

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், லக்னோ அணியால் கடந்த முறை அதிக விலைக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 12.05 என்ற மிக அதிகமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் லக்னோ அணி அவரை கழட்டிவிட்டது. இந்த முறை ஏலத்தின் ஆரம்ப சுற்றுகளில் யாரும் அவரை வாங்க முன்வரவில்லை. பின்னர் Accelerated சுற்றில் கொல்கத்தா அணி அவரை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு வாங்கியது.

ஆன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje)

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்ஜே, காயம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். காயங்கள் காரணமாக கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இவரால் விளையாட முடிந்தது. இது அவரது சந்தை மதிப்பை வெகுவாக பாதித்தது. இம்முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவும் இந்த பட்டியலில் இணைகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்தாததால் விடுவிக்கப்பட்டார். இம்முறை லக்னோ அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

டேவிட் மில்லர் (David Miller)

தென்னாப்பிரிக்காவின் அனுபவ அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் சம்பள குறைப்பிலிருந்து தப்பவில்லை. கடந்த சீசனில் ரூ. 7.5 கோடிக்கு விளையாடிய இவர், இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வயது மற்றும் ஃபார்ம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஐபிஎல் ஏலம் என்பது ஒரு சூதாட்டம் போன்றது. ஒரு சீசனில் உச்சத்தில் இருக்கும் வீரர், அடுத்த சீசனில் அதலபாதாளத்திற்கு செல்லலாம் என்பதற்கு வெங்கடேஷ் ஐயர் ஒரு சிறந்த உதாரணம். அணிகள் இப்போது பெயருக்காக பணத்தை செலவழிக்காமல், தற்போதைய ஃபார்ம் மற்றும் அணியின் தேவைக்கேற்பவே செலவு செய்கின்றன என்பது இந்த ஏலத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 17, 2025 06:14:02
Patna, Bihar:

Bihar CM Nitish Kumar Hijab Row: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்த இழுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Nitish Kumar Hijab Row: சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ  

பீகாரில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அரசு விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

அந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஆணையை வழங்கியபோது, அந்த பெண்ணின் ஹிஜாப்பை முகத்தில் இருந்து வேகமாக கீழே இறக்கிவிட்டார். இது அங்கு சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அதிகளவில் மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயல் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Nitish Kumar Hijab Row: நிதிஷ் குமார் மீது புகார்

நிதிஷ் குமாரின் இந்த சர்ச்சையான செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் செயல் பொருத்தமற்றது என்றும் அவமானகரமானது என்றும் கண்டித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் பெண் நிர்வாகி சுமையா ராணா, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் ஆகியோர் மீது கைசர்பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Nitish Kumar Hijab Row: புகார் அளித்ததன் காரணம் என்ன?

புகார் அளித்த பின்னர் சுமையா ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் ஹிஜாப்பை கழற்றுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்துகொள்வது, அவர் தனது தொண்டர்களும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையும்," என்று அவர் சாடினார். 

சஞ்சய் நிஷாத் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் சுமையா ராணா எதிர்த்தார். 'பர்தாவை கழற்றியது குறித்து ஏன் இவ்வளவு சர்ச்சை? அவரது கைகள் அந்த பெண்ணின் முகத்தை மட்டுமே தொட்டன' என்று கூறுகிறார். அப்படியென்றால், கை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடக்கும்?. இதனால்தான், நான் புகார் அளித்தேன்" என்றார், சுமையா ராணா.

Nitish Kumar Hijab Row: 'வழக்குப்பதிவு செய்யலாம்'

சுமையா ராணா உடன் வந்த வழக்கறிஞர் மிஷாம் ஜைதி கூறுகையில், "இந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த கருத்துக்களும் கடுமையான தண்டனைக்குரிய பிரிவுகளுக்கு கீழ் வரும் பிரச்னையாகும். அவர் ஒரு பெண்ணின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளார். சஞ்சய் நிஷாத் செய்தது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உள்ளது. இது பிரிவு 153A இன் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். 

ஏனெனில் நீங்கள் தெரிந்தே கலவரங்களைத் தூண்டக்கூடிய, அமைதியின்மையை உருவாக்கக்கூடிய, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்" என்றார். ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்காக நிதிஷ் குமாருக்கு நேரடியாகப் பிரிவு 354 பொருந்தும் என்றும் அவர் கூறினார். 

மேலும் படிக்க | பாஜகவில் தேசிய 'செயல்' தலைவர் பதவி... நிதின் நபின் நியமனம் - யார் இவர்?

மேலும் படிக்க | இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும் படிக்க | பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சம்பளம் + ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 17, 2025 05:12:13
Chennai, Tamil Nadu:

Chennai Latest News, Police Inspector Renuka Devi: பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்த ரேணுகாதேவி தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அசோக் பில்லர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரேணுகாதேவி. 52 வயதான இவர் கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக தேர்வாகி, 2023ஆம் ஆண்டு முதல் அசோக் பில்லரில் உள்ள பொருளாதார குற்றங்களை தடுக்கும் பிரிவின் தலைமையகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

Chennai Latest News Renuka Devi: கண்டித்த மேல் அதிகாரி

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவில், ஆறு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக, ஐந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் என தவறுதலாக தொகையை குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றங்களை தடுக்கும் பிரிவு தலைமையாக காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆஷிஷ் ராவத் கண்டித்ததாக கூறப்படுகிறது.

Chennai Latest News: தற்கொலைக்கு முயற்சி

அது மட்டுமின்றி நேற்று இரவு (டிசம்பர் 16) 8:45 மணியளவில், எழுத்தர்  ரவி, ஆய்வாளரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு உடனடியாக உங்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பணி மாறுதல் கடிதம் கொடுக்கும்படி கூறியதாகவும், இல்லையெனில் 3 (B) charge கொடுப்பார்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போன ஆய்வாளர் ரேணுகாதேவி, வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல...

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்) 

Chennai Latest News: விவாகரத்து பெற்றவர்

வீட்டில் மயக்கம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர் உடனடியாக வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் பரமகுரு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவருக்கு 25 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவரது மகள் வங்கி மேலாளராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் தீப வழக்கு: வக்பு வாரியம் எதிர்ப்பு - விசாரணை ஒத்திவைப்பு

மேலும் படிக்க | ஈரோடு தவெக கூட்டம் முதல் வேட்பாளர் பட்டியல் வரை ? ட்விஸ்ட் தர காத்திருக்கும் விஜய்

மேலும் படிக்க | நாங்க சங்கின்னா..? நீங்க சிங்கியா..? முதலமைச்சரை சாடிய மூத்த தலைவர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 16, 2025 13:52:40
Chennai, Tamil Nadu:

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த முடிவுகள் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. உத்தர பிரதேசத்தின் பிரசாந்த் வீரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கிய கையோடு, ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதே ஆன கார்த்திக் சர்மா என்ற மற்றொரு இளம் வீரரையும் அதே ரூ. 14.20 கோடிக்கு வாங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. எந்தவொரு சர்வதேசபோட்டியிலும் விளையாடாத இந்த சிறுவனுக்கு இவ்வளவு பெரிய தொகையை சிஎஸ்கே ஏன் செலவிட்டது? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

கார்த்திக் சர்மா கிரிக்கெட் பயணம்

ராஜஸ்தானில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 2006ம் ஆண்டு பிறந்தவர் கார்த்திக் சர்மா. சிறு வயதில் தெருவோரங்களில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய இவரது பயணம், ஒரு உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்த பிறகு சூடுபிடித்தது. அங்கு இவரது இயல்பான பேட்டிங் திறமை, பந்தைக் கணிக்கும் விதம் மற்றும் பயமில்லாத அணுகுமுறை பயிற்சியாளர்களை வெகுவாக கவர்ந்தது. படிப்படியாக ராஜஸ்தான் அண்டர்-14, அண்டர்-16 மற்றும் அண்டர்-19 அணிகளில் இடம்பிடித்து தனது முத்திரையை பதித்தார். கார்த்திக் சர்மா, இந்திய ஜாம்பவான்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது முன்மாதிரியாக கொண்டுள்ளார். நெருக்கடியான நேரங்களில் தோனியை போல அமைதியாகவும், பேட்டிங்கில் விராட் கோலியை போல ஆக்ரோஷமாகவும் செயல்படுவதே இவரது பாணி.

சிஎஸ்கேவை கவர்ந்த புள்ளிவிவரங்கள்

  • டி20 ஸ்ட்ரைக் ரேட்: இதுவரை 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 334 ரன்களை குவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவரது ஸ்ட்ரைக் ரேட் 164. அதிலும் 28 சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது இவரது பவர் ஹிட்டிங் திறமைக்குச் சான்று.
  • அறிமுகத்தில் சதம்: 2024-25 ரஞ்சி டிராபி சீசனில் தனது அறிமுக போட்டியிலேயே உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 113 ரன்கள் அடித்து சதம் கண்டார்.
  • லிஸ்ட் ஏ சாதனை: விஜய் ஹசாரே டிராபி போன்ற லிஸ்ட் ஏ போட்டிகளில், ராஜஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து, அணியின் அதிக ரன் ஸ்கோரராகத் திகழ்ந்தார்.
  • விக்கெட் கீப்பிங்: சையது முஷ்டாக் அலி டிராபியில் பேட்டிங் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கிலும் முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

எதிர்கால திட்டம்

நீரஜ் சோப்ரா போன்ற ஒலிம்பிக் வீரர்களை நிர்வகிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனம், கார்த்திக் சர்மாவை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவே அவர் ஒரு 'ஸ்பெஷல் டேலண்ட்' என்பதை உறுதிப்படுத்துகிறது. தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு ஒரு நீண்ட கால விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை. அந்த இடத்தை நிரப்பவே கார்த்திக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 19 வயதில் மஞ்சள் ஜெர்சியில் நுழையும் கார்த்திக் சர்மா, தோனியின் வழிகாட்டுதலில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்! இவரின் வருகையால் சென்னை அணியில் ஏற்கனவே உள்ள உருவில் படேல் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 16, 2025 13:52:15
Chennai, Tamil Nadu:

ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 16 அபுதாபியில் உள்ள எடிஹாட் அரினாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பல வீரர்கள் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. கேமரூன் கிரீன் ஆச்சரியப்படுத்தும் விதமாக கொல்கத்தா அணியால் ரூ. 25.20 கோடிக்கு வாங்கப்பட்டார். இதனை தொடர்ந்து அனைவரின் பார்வையும் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா (Matheesha Pathirana) மீது தான் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் விடுவிக்கப்பட்ட இவரை, மீண்டும் சிஎஸ்கே எடுக்குமா அல்லது வேறு அணி தூக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

பதிரானாவை தூக்கிய கொல்கத்தா

விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது. லக்னோ அணியுடன் போட்டி போட்டு ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது. மதீஷா பதிரானா ஏல பட்டியலில் 4-வது செட்டில் , 'FA1' பிரிவின் கீழ் 29வது வீரராக பட்டியலிடப்பட்டார். பதிரானாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணியின் டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்டாக இருந்தவர் பதிரானா. 2023ல் சிஎஸ்கே கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், கடந்த 2025 சீசனில் பாதி போட்டியில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் எகானமி ரேட் (10.13) சற்று அதிகமாக இருந்ததால் அவரை சிஎஸ்கே விடுவித்தது. இப்போது அவரை கொல்கத்தா 18 கோடிக்கு எடுத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நல்ல ஒரு டெத் பவுலரை தேடி வந்த நிலையில், பதிரானா கிடைத்துள்ளது அவர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பத்திரனா. இவரது தனித்துவமான பந்துவீச்சு முறை லசித் மலிங்காவை நினைவுபடுத்துவதால் இவருக்கு மவுசு அதிகம். ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த வீரர்களை வைத்துள்ள கொல்கத்தாவிற்கு பத்திரனா வருகை இன்னும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 16, 2025 13:51:56
Chennai, Tamil Nadu:

ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று டிசம்பர் 16 அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்களுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஸ்மார்ட்டான தேர்வை செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹொசைனை (Akeal Hosein) அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இந்திய வீரர் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை யாரும் எதிர்பார்க்காத விதமாக 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. 

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பதிரானாவை தட்டிதூக்கிய கேகேஆர்! கண்டுகொள்ளாத சிஎஸ்கே!

யார் இந்த அகீல் ஹொசைன்?

சிஎஸ்கே அணி தனது நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்தது. இதனால் மிடில் ஓவர்களில் பந்துவீச ஒரு தரமான இடது கை சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டார். அந்த இடத்தை நிரப்பவே அகீல் ஹொசைன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அனைவருக்கும் தெரியும். அகீல் ஹொசைனின் துல்லியமான சுழற்பந்து வீச்சு இங்கு எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்களுக்கு கோடிகளில் பணம் கொட்டப்பட்ட நிலையில், ஒரு சர்வதேச தரமுள்ள பந்துவீச்சாளரை வெறும் 2 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே-வின் சாதுரியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் 7.24 என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மட்டுமின்றி, பிக் பாஷ் லீக் (BBL), பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போன்ற உலகின் பல டி20 லீக்குகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு.

பிரசாந்த் வீர்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளம் வீரரான பிரசாந்த் வீர் (Prashant Veer), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடாத ஒரு இந்திய வீரருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுவது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. பிரசாந்த் வீரின் அடிப்படை விலை வெறும் ரூ. 40 லட்சம் மட்டுமே. ஏலம் தொடங்கியதும் சென்னை மற்றும் SRH அணிகள் இவரை எடுக்க போட்டி போட்டன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துணிச்சலாக ரூ. 14.2 கோடிக்கு இவரை தட்டி தூக்கியது.

யார் இந்த பிரசாந்த் வீர்?

உத்தர பிரதேச மாநிலம் அமேதியை சேர்ந்தவர். இடது கை சுழற்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனுமான இவர் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர். சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் உத்தரப் பிரதேச U-23 போட்டிகளில் இவர் வெளிப்படுத்திய ஆட்டம் வியக்கத்தக்கது. சமீபத்தில் நடந்த 6 போட்டிகளில் 112 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 170) மற்றும் 9 விக்கெட்டுகளை (எகானமி 6.76) வீழ்த்தி ஸ்கவுட்களின் கவனத்தை ஈர்த்தார். நொய்டா கிங்ஸ் (Noida Kings) அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். இவரது ஆல்-ரவுண்டர் திறமை ஜடேஜாவை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா இல்லாத குறையை போக்க, ஒரு தரமான இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை தேடி கொண்டிருந்த சிஎஸ்கே-வுக்கு, பிரசாந்த் வீர் ஒரு பொக்கிஷமாக கிடைத்துள்ளார். 

கார்த்திக் ஷர்மா

ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மா (Kartik Sharma), யாரும் எதிர்பாராத வகையில் ரூ. 14.20 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். பிரசாந்த் வீருக்கு அடுத்தபடியாக, சிஎஸ்கே இந்த ஏலத்தில் எடுத்த இரண்டாவது மிகப்பெரிய 'அன்கேப்ட்' (Uncapped) வீரர் இவர்தான். கார்த்திக் ஷர்மாவின் அடிப்படை விலை வெறும் ரூ. 30 லட்சம் மட்டுமே. சிஎஸ்கே இறுதியில் ரூ. 14.20 கோடிக்கு அவரை தட்டி தூக்கியது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஒரு வலது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கூச் பெஹார் ட்ராபியில் ஒரே போட்டியில் 17 சிக்சர்களை விளாசி 181 ரன்கள் குவித்தார். வினு மன்கட் ட்ராபியிலும் 22 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 164. இதுவரை 12 டி20 போட்டிகளில் 334 ரன்கள் குவித்துள்ளார். தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியிலேயே உத்தரகாண்ட் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.

சிஎஸ்கே அணியின் நிலை

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏற்கனவே சஞ்சு சாம்சனை ரூ. 18 கோடிக்கு டிரேட் மூலம் வாங்கியுள்ளது. தற்போது அகீல் ஹொசைன் மற்றும் பிரசாந்த் வீர் வருகை அணியின் சுழற்பந்து வீச்சு படையை மேலும் வலுப்படுத்தும். தோனியின் தலைமையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா எப்படி ஜொலிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 16, 2025 13:51:33
Eragudi North, Tamil Nadu:

தமிழ் சினிமாவின் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், தனது 71வது வயதிலும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உடல்வாகு கொண்டவர். சமீபத்தில் கூட Dude படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அடுத்ததாக, விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து 'கொம்பு சீவி' என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. வயதானாலும் அழகும், ஸ்டைலும் மாறாத சரத்குமார், தனது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ஃபிட்னஸ் ரகசியங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | படையப்பா ரீ-ரிலீஸ்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

சரத்குமாரின் உடற்பயிற்சி ரகசியம்

  • சரத்குமார் உடற்பயிற்சி செய்வதை ஒரு தவமாகவே மேற்கொள்கிறார். அவரது தினசரி உடற்பயிற்சி பழக்கங்கள் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.
  • காலை நேரப் பயிற்சி: இவருக்கு காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் மிகவும் பிடிக்குமாம். அதுவும் தனியாக செய்வதை விட, நண்பர்கள் அல்லது ட்ரைனர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டே பயிற்சி செய்வது இவருக்கு 'ஃபேவரைட்'.
  • ஸ்ட்ரெங்த் டிரைனிங்: கார்டியோ பயிற்சிகளை விட, உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
  • ஸ்குவாட்ஸ்: ஜிம்மில் அதிக எடை தூக்கும் 'டெட்லிஃப்ட்' பயிற்சியை விட, கால்களுக்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் 'ஸ்குவாட்ஸ்' பயிற்சியே தனக்கு பிடித்தமானது என்கிறார்.
  • முழு உடல் பயிற்சி: வெறும் மேல் உடலுக்கு மட்டும் பயிற்சி செய்யாமல், தலை முதல் கால் வரை மொத்த உடலுக்கும் வேலை கொடுக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

டயட் முறை

உடற்பயிற்சி மட்டும் போதாது, உணவிலும் கட்டுப்பாடு அவசியம் என்கிறார் சரத்குமார். இவரது தினசரி உணவு பழக்கம் வியக்க வைக்கிறது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பார். ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை உறுதி செய்கிறார். காலையில் நெய் சேர்க்கப்பட்ட Black Coffee with Ghee உடன் இவரது நாள் தொடங்குகிறது. பிறகு காலை உணவாக 4 முட்டையின் வெள்ளை பகுதிகளை சாப்பிடுகிறார். பிறகு 11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த 'ABC' ஜூஸ் எடுத்து கொள்கிறார். மதியம் வேகவைக்கப்பட்ட காய்கறிகளுடன், மிளகுத்தூள் மற்றும் உப்பு மட்டும் சேர்க்கப்பட்ட 2 சிக்கன் துண்டுகள் சாப்பிடுகிறார். மாலையில் வேர்க்கடலை கலந்த அவல் எடுத்துக்கொள்கிறார். இரவு சிக்கன் அல்லது மட்டன் சூப் உடன் முடித்து கொள்கிறார். எப்போதாவது டயட்டை மீறி சாப்பிட ஆசைப்பட்டால், இவரது சாய்ஸ் 'பிரியாணி' தானாம்!

சரத்குமாரின் அட்வைஸ்

தன்னைப்போல தீவிரமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ய முடியாதவர்களுக்கு சரத்குமார் ஒரு எளிய அறிவுரையை கூறுகிறார்.  "உங்களால் ஜிம்முக்கு சென்று கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டுமாவது செய்யுங்கள். இது அடிப்படை. இதுவே ரத்த ஓட்டத்தை சீராக்கி, உங்களைச் சுறுசுறுப்பாக வைக்கும்," என்கிறார். நடைப்பயிற்சி கூட செய்ய நேரம் இல்லாதவர்கள், நாள் முழுவதும் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உடலுக்கு வேலை கொடுக்கும்படியான சிறு சிறு வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கினாலே போதும், நோயின்றி வாழலாம் என்பது இவரது அறிவுரை.

மேலும் படிக்க | படையப்பா படம் வெளியான போது எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 16, 2025 09:45:36
Chennai, Tamil Nadu:

ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம் இன்று டிசம்பர் 16 அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (Cameron Green), எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மினி ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. ரூ.25.20 கோடிக்கு கிரீன் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் 18 கோடி தான் அவருக்கு கிடைக்கும். மீதமுள்ள பணத்தை பிசிசிஐ எடுத்துக்கொள்ளும்.

கேமரூன் கிரீன் ஏன் இந்த மவுசு?

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர், எந்த இடத்திலும் இறங்கி அதிரடியாக ஆடக்கூடியவர். 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 17.5 கோடிக்கு வாங்கப்பட்டார். பின்னர் 2024ல் பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டார். இதுவரை 29 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 153.70) குவித்துள்ளார். பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். நீண்ட நாட்களாக காயத்தில் இருந்தே கிரீன் தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேமரூன் கிரீன்.

விலைபோகாத வீரர்கள்

  • தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்
  • ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் ஃபெரேசர் மெக்கர்க் ஏலம் போகவில்லை
  • நியூசிலாந்து வீரர் டென் கான்வே மற்றும் இந்திய வீரர் பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை
  • SMAT தொடரில் அதிரடி காட்டி வரும் சர்பராஸ் கானும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

மேலும் படிக்க: 2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!

மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
RSRK Spark
Dec 10, 2025 10:16:38
Eragudi North, Tamil Nadu:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தற்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கட்டாக் டி20 போட்டியில் அபார வெற்றிக்கு பிறகு, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடனான உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க  | சிஎஸ்கே வீரரை குறிவைக்கும் டெல்லி! ஏலத்தில் தட்டி தூக்க மெகா திட்டம்! 

கட்டாக் போட்டியில் ஹர்திக் மாஸ்

செவ்வாய்க்கிழமை டிசம்பர் 9 கட்டாக்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமால வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஹர்திக் பாண்டியா. வெறும் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை விளாசிய சாதனையும் இந்த போட்டியில் அவர் படைத்தார்.

காயத்திற்குப் பிறகு கம்பேக்

ஆசிய கோப்பை தொடரின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த பாண்டியா, தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசிய அவர், தனது காயத்தை பற்றியும், அந்த கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் மனம் திறந்து பேசினார். அந்த வீடியோவில் ஹர்திக் பேசுகையில், "காயம் ஏற்படும் காலங்கள் ஒரு வீரருக்கு மிகவும் சோதனையானவை. அது மனரீதியாக பல சந்தேகங்களை நமக்குள்ளே எழுப்பும். ஆனால், இந்த நேரத்தில் எனக்கு துணையாக நின்ற என் அன்புக்குரியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்றார்.

மஹிகா சர்மா

தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக என் பார்ட்னரை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு, எல்லாமே நல்லபடியாக மாறிவிட்டது," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மஹிகா சர்மாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் யாரை சொல்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்தது. ஹர்திக் பாண்டியாவின் இந்த வீடியோவை பிசிசிஐ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தது. இதற்கு மஹிகா சர்மா ஒரு எமோஜியை கமெண்டாக பதிவிட்டுள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியாவும் அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில், "உன்னை மாதிரி யாரும் இல்லை ராஜா" (There is no one like you Raja) என்று பதிவிட்டுள்ளார். இது இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை உறுதி செய்வது போல அமைந்துள்ளது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுற்றி வருவதும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மஹிகா சர்மா?

24 வயதான மஹிகா சர்மா, டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல மாடல் ஆவார். பல முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களுக்காக இவர் ராம்ப் வாக் செய்துள்ளார். இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'மாடல் ஆஃப் தி இயர்' விருதை வென்றுள்ள இவரை, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபேஷன் ஐகானாக பல பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. படிப்பிலும் கெட்டிக்காரரான மஹிகா, பொருளாதார துறையில் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.  ஹர்திக் பாண்டியா, கடந்த 2020-ம் ஆண்டு மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார். நான்கு வருடத் திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஜூலை 2024ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹர்திக், தற்போது மஹிகா சர்மாவுடன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க  | இந்திய அணி ஜெயித்தாலும்... பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் தேவை - யாரை நீக்க வேண்டும்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 09, 2025 16:48:34
Chennai, Tamil Nadu:

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தும் விதமாக இந்த தொடர் அமைந்துள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறவில்லை. 

மேலும் படிக்க | கோலிக்கு இடத்தில் இவரா? பிசிசிஐ கூட்டத்தில் பேசிய கம்பீர் - முக்கிய தகவல்! 

இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங் 

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து பவர் பிளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. சும்மன் கில் 4 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்பு நிதானமாக விளையாடினர் திலக் வர்மா மற்றும் அக்சர் படேல். இருப்பினும் இருவரும் 26 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 

ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 

காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். வெறும் 28 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. தென்னாபிரிக்கா அணியின் தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கட்டுகளையும், சிபம்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 176 ரன்கள் அடித்தால் வெற்றியின் நிலையில் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. 

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் 

இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே  அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

165
comment0
Report
RSRK Spark
Dec 09, 2025 14:47:38
Erode, Tamil Nadu:

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மீண்டும் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார். இன்று பாண்டிச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பின் தொடர்ச்சியாக, ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், தற்போது டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்.. வைரல் வீடியோ

மாற்றத்திற்கான காரணம் என்ன?

முதலில், ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திடலில் டிசம்பர் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியைக் கோரி, கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை கையாள்வதற்கு போதிய இடவசதி இல்லை என்றும், வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுமதி மறுத்துவிட்டனர். 

குறிப்பாக, அந்த 7 ஏக்கர் நிலப்பரப்பு, விஜய்யை காண வரும் 70,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை கொள்ளும் அளவுக்கு போதுமானதாக இருக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வேறு ஒரு பாதுகாப்பான மற்றும் விசாலமான இடத்தை தேர்வு செய்யவும், காவல்துறை அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் கொண்டும் கூட்டம் டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய இடம் தேர்வு

காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, தற்போது ஈரோட்டில் வேறு ஒரு விசாலமான தனியார் இடத்தை தவெக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். இதற்கான புதிய அனுமதி கோரும் மனுவையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். புதிய இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் தீவிர ஏற்பாடு

இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முன்னாள் அமைச்சரும், தவெக மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது அவரது சொந்த மாவட்டம் என்பதால், விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார். "அரசு விதிமுறைகள் மற்றும் காவல்துறை வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் இந்த கூட்டம் நடத்தப்படும்," என்று அவர் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, விஜய்யின் இந்த ஈரோடு பயணம் கொங்கு மண்டல அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - புதுச்சேரி விஜய் கூட்டம்! துப்பாக்கியுடன் வந்த நபர்? உண்மையில் யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

136
comment0
Report
Advertisement
Back to top