\r\n\r\n

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் 

\r\n\r\n

இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே  அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

\r\n\r\n

மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","url":"https://pinewz.com/tamil/story/tamil-nadu/chennai-ind-vs-sa-result-hardik-pandya-39-s-action-this-player-has-no-chance-anymore-1765298913020","datePublished":"2025-12-09T16:48:34+05:30","dateModified":"2025-12-09T16:48:34+05:30"}\r\n\r\n

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் 

\r\n\r\n

இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே  அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

\r\n\r\n

மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","keywords":"news by pincode, pin news,local news, treading news, latest news, hyperlocal news sites, hyperlocal news app, best news app, local news in hindi, zee newz, ram mandir","image":{"@type":"ImageObject","url":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2025/12/09/553500-hardikpandya.jpg?itok=X2cxQDbs","height":900,"width":1200},"datePublished":"2025-12-09T16:48:34+05:30","dateModified":"2025-12-09T16:48:34+05:30","author":{"@type":"Person","name":"RK Spark"},"publisher":{"@type":"Organization","name":"Hyper local PWA","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":600,"height":60}}}\r\n\r\n

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் 

\r\n\r\n

இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே  அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

\r\n\r\n

மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","thumbnailUrl":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2025/12/09/553500-hardikpandya.jpg?itok=X2cxQDbs","uploadDate":"2025-12-09T16:48:33+05:30","dateModified":"2025-12-09T16:48:34+05:30","datePublished":"2025-12-09T16:48:34+05:30","contentUrl":"NOT AVAILABLE","url":"https://pinewz.com/tamil/story/tamil-nadu/chennai-ind-vs-sa-result-hardik-pandya-39-s-action-this-player-has-no-chance-anymore-1765298913020","isFamilyFriendly":"http://schema.org/True","requiresSubscription":"http://schema.org/False","inLanguage":"en-hi","publisher":{"@type":"Organization","name":"pinewz","url":"https://pinewz.com/","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":"512","height":"512"}}}
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
IND vs SA Result: ஹர்திக் பாண்டியாவின் அதிரடி! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லை!
RSRK Spark
Dec 09, 2025 16:48:34
Chennai, Tamil Nadu

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தும் விதமாக இந்த தொடர் அமைந்துள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறவில்லை. 

மேலும் படிக்க | கோலிக்கு இடத்தில் இவரா? பிசிசிஐ கூட்டத்தில் பேசிய கம்பீர் - முக்கிய தகவல்! 

இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங் 

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து பவர் பிளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. சும்மன் கில் 4 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்பு நிதானமாக விளையாடினர் திலக் வர்மா மற்றும் அக்சர் படேல். இருப்பினும் இருவரும் 26 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 

ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 

காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். வெறும் 28 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. தென்னாபிரிக்கா அணியின் தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கட்டுகளையும், சிபம்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 176 ரன்கள் அடித்தால் வெற்றியின் நிலையில் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. 

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் 

இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே  அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RSRK Spark
Dec 09, 2025 14:47:38
Erode, Tamil Nadu:

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மீண்டும் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார். இன்று பாண்டிச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பின் தொடர்ச்சியாக, ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், தற்போது டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்.. வைரல் வீடியோ

மாற்றத்திற்கான காரணம் என்ன?

முதலில், ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திடலில் டிசம்பர் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியைக் கோரி, கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை கையாள்வதற்கு போதிய இடவசதி இல்லை என்றும், வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுமதி மறுத்துவிட்டனர். 

குறிப்பாக, அந்த 7 ஏக்கர் நிலப்பரப்பு, விஜய்யை காண வரும் 70,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை கொள்ளும் அளவுக்கு போதுமானதாக இருக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வேறு ஒரு பாதுகாப்பான மற்றும் விசாலமான இடத்தை தேர்வு செய்யவும், காவல்துறை அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் கொண்டும் கூட்டம் டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய இடம் தேர்வு

காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, தற்போது ஈரோட்டில் வேறு ஒரு விசாலமான தனியார் இடத்தை தவெக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். இதற்கான புதிய அனுமதி கோரும் மனுவையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். புதிய இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் தீவிர ஏற்பாடு

இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முன்னாள் அமைச்சரும், தவெக மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது அவரது சொந்த மாவட்டம் என்பதால், விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார். "அரசு விதிமுறைகள் மற்றும் காவல்துறை வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் இந்த கூட்டம் நடத்தப்படும்," என்று அவர் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, விஜய்யின் இந்த ஈரோடு பயணம் கொங்கு மண்டல அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - புதுச்சேரி விஜய் கூட்டம்! துப்பாக்கியுடன் வந்த நபர்? உண்மையில் யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

136
comment0
Report
RSRK Spark
Dec 09, 2025 10:12:41
Mumbai, Maharashtra:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மகிஹா ஷர்மா (Mahieka Sharma) குறித்து பத்திரிகையாளர்கள் எடுத்த கண்ணியமற்ற புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டு கொதித்தெழுந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஹர்திக் பாண்டியாவின் காதலியான மகிஹா ஷர்மா சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வரும்போது, அவர் படிக்கட்டுகளில் இறங்கி வந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த சில போட்டோகிராபர்கள், அவர் நடந்து வருவதைக் கீழ் கோணத்தில் இருந்து மிகவும் ஆபாசமாக தெரியும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல் என்று ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | T20 Worldcup: ரசிகர்களுக்கு அதிர்ச்சி! Hotstarல் டி20 உலக கோப்பை இல்லை!

ஹர்திக் பாண்டியாவின் ஆவேச பதிவு

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ஹர்திக், "நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன்; அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்," என்று சாடியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை; இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன், எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை," என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காதலை உறுதி செய்த ஹர்திக்

ஹர்திக் பாண்டியா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா இருவரும் காதலிப்பதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார். மகிஹா ஷர்மா ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் மாடல் ஆவார். ஏற்கனவே நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்து விவாகரத்து பெற்ற ஹர்திக் பாண்டியா, தற்போது தனது கிரிக்கெட், மகன் அகஸ்தியா மற்றும் காதலி மகிஹா ஆகிய மூன்றும் தனது வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கில் விளையாடுகிறாரா? சஞ்சு சாம்சன் தொடக்க வீரரா? சூர்யகுமார் யாதவ் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

147
comment0
Report
RSRK Spark
Dec 09, 2025 08:23:38
Chennai, Tamil Nadu:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது X தளத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், சிறிது நேரம் குழப்பத்திலும் ஆழ்த்தியது. பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தையும், ஒரு தெருவின் படத்தையும் பகிர்ந்திருந்தார்.

மேலும் படிக்க: இந்தியாவின் டாப் 7 பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு எந்த இடம்?

என்ன அந்த புதிர்?

அஸ்வின் பகிர்ந்த படத்தில் ஒரு பக்கம் பிரபல நடிகை சன்னி லியோன், மறுபக்கம் ஒரு தெருவின் படத்தை பார்த்த ரசிகர்கள், "அஸ்வின் என்ன சொல்ல வருகிறார்?" என்று தலையை பிய்த்து கொண்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் அந்த புதிரை விடுவித்துவிட்டனர். சன்னி லியோனிலிருந்து 'சன்னி' (Sunny) + தெருவில் இருந்து 'சந்து' (Sadhu) = சன்னி சந்து (Sunny Sandhu). ஆம், அஸ்வின் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் ஆல்-ரவுண்டரான சன்னி சந்து (Sunny Sandhu) என்பவரை தான்.

யார் இந்த சன்னி சந்து?

தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் 22 வயதான இளம் வீரர் சன்னி சந்து. சமீபத்தில் அகமதாபாத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் களமிறங்கி ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 9 பந்துகளில் 30 ரன்கள் விளாசி, தமிழ்நாடு அணி 183 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார். சாய் சுதர்சனுடன் இணைந்து அவர் அமைத்த கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இவரது இந்த அதிரடி ஆட்டத்தை பாராட்டும் விதமாகத்தான், அஸ்வின் தனது பாணியில் ஒரு 'மீம்' போட்டு பாராட்டியுள்ளார். வழக்கமான பாராட்டுக்களை விட, இப்படி சற்றே வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் அஸ்வின் பாராட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா?

ஐபிஎல் மினி ஏலம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் அஸ்வின் சில சீக்ரட்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றார். அதேபோல சென்னை அணிக்கு ஒரு ஃபினிஷர் தேவைப்பட்டு வரும் நிலையில், ஒருவேளை சிஎஸ்கே அணி சன்னி சந்துவை ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டும் விதமாக தான் அஸ்வின் இவ்வாறு பகிர்ந்துள்ளார் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வீரர்களை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த இளம் வீரரையும் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க: IND vs SA T20: பிளேயிங் 11ல் குல்தீப் இல்லை? போட்டிப்போடும் இரண்டு வீரர்கள்.. முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

146
comment0
Report
RSRK Spark
Dec 08, 2025 15:45:28
Puducherry, Puducherry:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் தற்போது புதுச்சேரியை மையமாக கொண்டு தீவிரமடைந்துள்ளது. நாளை டிசம்பர் 9 புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். விஜய்யின் வருகையால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாதம் ரூ.50,000 சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

தனியார் பள்ளிக்கு விடுமுறை ஏன்?

விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த பகுதிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்திற்கு மிக அருகிலேயே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்பும்போதும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

ரோடு ஷோ ரத்து - பொதுக்கூட்டம் உறுதி

முன்னதாக, புதுச்சேரியில் வீதிவீதியாக சென்று மக்களை சந்திக்கும் 'ரோடு ஷோ' நடத்த தவெக திட்டமிட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியின் குறுகிய சாலைகள் மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. அதற்கு பதிலாக, உப்பளம் மைதானத்தில் கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, இந்த முறை காவல்துறை மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

  • கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • க்யூஆர் கோடு (QR Code) பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை; உள்ளூர்வாசிகள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே கூட்டம் நடைபெறும்.
  • விஜய் 45 நிமிடங்கள் உரையாற்றுவார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உப்பளம் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மரம், சுவர் போன்றவற்றின் மீது ஏறி நின்று பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு, புதுச்சேரியில் தவெக-வின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

194
comment0
Report
UKUmabarkavi K
Dec 08, 2025 12:48:28
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government Vidiyal Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட "விடியல் பயணம் திட்டம்" (மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம்) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான 'விடியல் பயணம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பெண்கள் எந்த வித கட்டணமுமின்றி சாதாரண பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 1000 வரை இலவசப் பயணத்தின் மூலம் சேமிக்க முடிகிறது. 

இத்திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, பிற மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே, சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதிலளித்திருந்தார்.  அதாவது, "ஆண்களுக்கு இலவச பயணம் திட்டம் தொடர்பான கோரிக்கை வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்ததால், பெரியார் கொள்கைகளுக்கு ஏற்ப பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. எனவே, அரசின் நிதிநிலை சீராகும் போது, ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்

அனைத்துத் தரப்பு ஆண்களுக்கும் இலவசப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஏற்படும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, அரசு ஒரு மாற்றுத் திட்டத்தை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்களின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் தேர்தலை ஒட்டி, ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அனைத்துத் தரப்பு ஆண்களுக்கும் இலவச பயணத் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்தே, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயணத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்” என்றனர். 

எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானால், அது ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: மாதம் ரூ.50,000 சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

மேலும் படிக்க:  மாணவ, மாணவிகளே மாதம் ரூ.50,000 + ரூ.12,000 வேண்டுமா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

170
comment0
Report
UKUmabarkavi K
Dec 08, 2025 08:57:42
Dharmapuri, Tamil Nadu:

TVK Functionary Biting Police Hand: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானம் பார் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகவும், குழந்தைகளுக்கு அவ்வழியாக செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும், இந்த மதுபான பாரை எடுக்க கூறியும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்​

எனவே, இந்த மதுபான பாரை அகற்ற கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டிசம்பர் 7ஆம் தேதியான நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட செயலாளர் தாபா தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் தாபா பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மதுபான பார் முன்பு தவெக தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால், போலீசாருக்கும், தவெக தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த தவெக தொண்டர் ஒருவர் போலீசாரின் கையை கடித்து குதறியுள்ளார். அவர் காவலரின் கையை ஒன்றிரண்டு முறை கடித்துள்ளார். இதனால், அவர்கள் போலீசாரும் வலியால் கத்தியுள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கிடையில், டிஎஸ்பி சுந்தர்ராஜ் தவெக தொண்டர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

என்ன நடந்தது?

ஆனால், அப்போது தவெக தொண்டர்கள் காவல்துறையினர் இடையே மோதல் நிக்காததால், தவெக தொண்டர்களை திருமண மண்டபத்தில் அடைத்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்தனர். ஆனால், தலைமை காவலர் அருள் என்பவரின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை அடுத்து, காவலரின் கையை கடித்த தவெக தொண்டரை போலீசார் கைது செய்தனர். அவர்க ஜெமினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், போலீசாரிடம் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

காவலரின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் குறித்து பலமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார். இருப்பினும், அதனை தவெக தொண்டர்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. போராட்டத்தின்போது தடுப்பின் மீது ஏறி நிற்பது, அதனை உடைப்பது, மரத்தின் மீது ஏறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது தவெக தொண்டர் காவலரின் கையை கடித்த சம்பவம், தொண்டர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை

இதற்கிடையில், நாளை (டிசம்பர் 8) புதுச்சேரி உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும். காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

167
comment0
Report
SMShiva Murugesan
Dec 08, 2025 06:23:18
Chennai, Tamil Nadu:

சென்னை: அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு மலிவான திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நீண்ட கால வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி டேட்டா நன்மைகளுடன் வரும் ஒரு சிறப்பான திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 1999 திட்டம்: 330 நாட்கள் வேலிடிட்டி!

BSNL-ன் ரூ. 1999 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 330 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, சுமார் 11 மாதங்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதுமானது. இதனால், அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவில் இருந்து விடுபடலாம். மேலும், இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • வேலிடிட்டி: 330 நாட்கள்

  • அழைப்புகள்: எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகள்

  • SMS: தினமும் 100 இலவச SMS

  • டேட்டா: தினமும் 1.5GB அதிவேக டேட்டா

  • கூடுதல் சலுகை: BiTV செயலிக்கான அடிப்படை சந்தாவும் இதில் அடங்கும்.

யாருக்கெல்லாம் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்?

நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடுபவர்களுக்கும், குறைந்த அளவிலான டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கும் இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும். வெறும் ரூ. 2000-க்கும் குறைவான விலையில், ஒரு வருடத்திற்கு உங்கள் மொபைல் எண்ணை ஆக்டிவாக வைத்திருப்பதுடன், அழைப்புகள் மற்றும் டேட்டா நன்மைகளையும் பெறலாம்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், BSNL-ன் இந்த வருடாந்திர திட்டம் மிகவும் மலிவானதாக கருதப்படுகிறது. குறைந்த செலவில் அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் பிற நன்மைகளை விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.

மேலும் படிக்க - 50 நாட்கள் மாஸ் ரீசார்ஜ்! ₹350-க்குள் 100GB + அன்லிமிடெட் கால்ஸ்

மேலும் படிக்க - BSNL அசத்தல் ரீசார்ஜ் பிளான்.. ரூ.1 இருந்தால் போதும், 30 நாட்கள் 2GB டேட்டா

மேலும் படிக்க - ஒரு முறை ரீசார்ஜ்... ஒரு வருடத்திற்கும் மேல் நிம்மதி! BSNL-ன் பம்பர் பிளான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

186
comment0
Report
RSRK Spark
Dec 07, 2025 10:53:57
Kanchipuram, Tamil Nadu:

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் 'மண்' (பிருத்வி) ஸ்தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, நாளை காலை 5.45 மணியளவில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. இனி ஒரு ரூபாய் செலவு இல்ல!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இந்த ஆன்மீக நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெறும் விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்கள் இவ்விழாவில் பங்கேற்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு நாளை டிசம்பர் 8 ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.29 கோடியில் பிரம்மாண்ட திருப்பணிகள்

இந்த உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) பிறப்பித்துள்ளார். இருப்பினும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதேனும் சிறப்பு வகுப்புகள் இருந்தால் அது குறித்த அறிவிப்புகளை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நேரடி பார்வையில், கடந்த சில மாதங்களாகவே கோயில் திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திருப்பணிகளில், 12 கோடி ரூபாய் அரசு நிதியாகவும், மீதமுள்ள தொகை உபயதாரர்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. ராஜகோபுரம் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், பிரகாரங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து கோயில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

விழா ஏற்பாடுகள் மற்றும் யாகசாலை பூஜைகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாகவே கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கலசங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 5.30 மணி முதல் 7.00 மணிக்குள், மீன லக்னத்தில் விமானங்களுக்கும், மூலவர் ஏகாம்பரநாதருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகம், காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | டிசம்பர் இன்னும் முடியல.. உருவாகும் இன்னொரு புயல்? சென்னை மக்களே.. வெதர்மேன் அலர்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

182
comment0
Report
SGSudharsan G
Dec 07, 2025 08:59:27
Chennai, Tamil Nadu:

Smriti Mandhana Marriage Officially Called Off: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு, பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையேயான திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. அதற்கு பல்வேறு காரணங்களும் இணையத்தில் வலம் வந்தன.

இந்தச் சூழலில், நீண்ட காலம் மௌனம் காத்து வந்த ஸ்மிருதி மந்தனா தற்போது அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏராளமான ஊகங்கள் எழுந்த. எனவே, இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் அனைத்து விஷயங்களையும் பொதுவெளியில் பேசும் நபர் அல்ல, எனவே அதுகுறித்து எதுவும் சொல்லாமல் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.

இந்த விஷயத்தை இங்கேயே முடித்துவிடுகிறேன், நீங்கள அனைவரும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்கள் சொந்த விஷயத்தில் செயல்படவும் முன்னேறவும் இடமளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம்மை எல்லாம் இயக்கும் ஒரு உயர்ந்த நோக்கம் ஒன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது என்னைப் பொருத்தவரையில், எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதுதான். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதில்தான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது" என அதில் குறிப்பிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், அனைவரும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

93
comment0
Report
SMShiva Murugesan
Dec 07, 2025 04:30:21
New Delhi, Delhi:

Reserve Bank of India Latest News: ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று பொதுவாக அழைக்கப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (Basic Savings Bank Deposit - BSBD) குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிக முக்கியமான மற்றும் விரிவான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகள், ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பல இலவச சேவைகளையும், சாதாரண சேமிப்புக் கணக்குக்கு இணையான வசதிகளையும் வழங்குவதை உறுதி செய்கின்றன. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (BSBD) குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.

முக்கிய மாற்றங்களும் சலுகைகளும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, BSBD கணக்குகளுக்குக் கிடைக்கவுள்ள முக்கிய இலவச சேவைகள் மற்றும் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வசதி பழைய நிலை புதிய RBI விதி (ஏப்ரல் 1, 2026 முதல்)
குறைந்தபட்ச இருப்பு ஜீரோ பேலன்ஸ் கட்டாயம் எப்போதும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) தேவையில்லை.
கட்டணமில்லா டெபாசிட் வங்கிகள் நிர்ணயித்திருக்கலாம் ரொக்கப் பணம் டெபாசிட் செய்வது, மின்னணு (NEFT/RTGS) அல்லது காசோலை மூலம் பணம் பெறுவது ஆகியவற்றுக்கு மட்டுமில்லை.
ATM/டெபிட் கார்டு கட்டணம் சில வங்கிகளில் ஆண்டு கட்டணம் உண்டு எந்தவித ஆண்டு கட்டணமும் இல்லாமல் ATM அல்லது ATM-cum-டெபிட் கார்டு வழங்கப்படும்.
காசோலைப் புத்தகம் (Cheque Book) சில வங்கிகளில் கட்டணம் உண்டு ஒரு வருடத்துக்கு குறைந்தது 25 இலைகள் (leaves) கொண்ட காசோலைப் புத்தகம் இலவசமாகக் கிடைக்கும்.
இன்டர்நெட் & மொபைல் பேங்கிங் சில அம்சங்கள் கட்டுப்படுத்தப்படலாம் இலவச இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி வழங்கப்படும்.
பணம் எடுக்கும் வரம்பு மாதம் 4 முறை இலவசம் (அனைத்து பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்) மாதம் குறைந்தது 4 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம். ஆனால், UPI, NEFT, RTGS, IMPS மற்றும் PoS பரிவர்த்தனைகள் இந்த 4 பரிவர்த்தனைகள் வரம்பில் சேர்க்கப்படாது (அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்).
கணக்கு மாற்றம் கடினமான நடைமுறை வாடிக்கையாளர் எழுத்து மூலமாகவோ அல்லது டிஜிட்டல் மூலமாகவோ கோரினால், சாதாரண சேமிப்புக் கணக்கை 7 வேலை நாட்களுக்குள் BSBD கணக்காக மாற்ற வங்கிகள் உத்தரவிடப்பட்டுள்ளது.

RBI-யின் முக்கிய நோக்கம் என்ன?

சமத்துவம்: BSBD கணக்குகளை சாதாரண சேமிப்புக் கணக்குகளைப் போலவே நடத்த வேண்டும்; இதை ஒரு 'குறைவான' மாற்றுத் தேர்வாகப் பார்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நிதி உள்ளடக்கம்: குறைந்த வருமானம் கொண்ட மக்களும், முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்குபவர்களும் கூடுதல் கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் வங்கிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

செயல்படாத கணக்குகள் (Inoperative Accounts) குறித்த புதிய விதி:

ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் உட்பட, நீண்ட காலமாகப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.

பரிவர்த்தனை அவசியம்: வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைச் செயலில் வைத்திருக்க அவ்வப்போது சிறிய பரிவர்த்தனைகளையாவது செய்வது அவசியம்.

அரசுப் பயன் பெறுவோர்: கல்வி உதவித்தொகை அல்லது நேரடிப் பலன்களைப் (Direct Benefits) பெறுவதற்காகத் திறக்கப்பட்ட கணக்குகள் இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவற்றைச் செயல்படாத கணக்குகள் என்று உடனடியாக வங்கிகள் வகைப்படுத்த முடியாது என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க - 2026 முதல் வங்கி விதிகளில் மாற்றம்: RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க - RBI அளித்த குட் நியூஸ், ரெப்போ ரேட் 25 bps குறைந்தது: கடன் EMI குறையும்

மேலும் படிக்க - ICICI, SBI, HDFC வங்கிகளில் கணக்கு இருக்கிறதா? உங்களுக்கு வெளியான முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

186
comment0
Report
SMShiva Murugesan
Dec 07, 2025 04:25:49
Chennai, Tamil Nadu:

DMK Pension Promise (Chennai): தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வரும் மிக முக்கியமான பிரச்சினை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme - CPS). இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme - OPS) நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய நிலையும்:

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தான் நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்து, தொடர் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று திட்டங்கள், ஒரே குழப்பம்:

ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு ஒரு புதிய திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டபோதுகூட கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS), மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என மூன்று திட்டங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதால், இதில் எந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவெடுப்பதில் அரசுக்குப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

ககன்தீப் சிங் பேடி குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பு

இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும், பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் சாதக பாதகங்களை ஆய்வு செய்யவும், கடந்த பிப்ரவரி மாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

பணி: பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, ஊழியர் சங்கங்களுடன் பேசி, ஒரு விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிப்பது.

காலக்கெடு: இக்குழு செப்டம்பர் மாதத்திற்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலை: ஆனால், குழுவினர் இதுவரையில் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்துள்ள நிலையில், முழுமையான இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை.

அழுத்தத்தில் தமிழக அரசு

அரசு ஊழியர்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதும் அரசுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்படி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவுக்கு தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன், தமிழக அரசு ஓய்வூதியத் திட்டம் குறித்து மிக முக்கியமான முடிவை அறிவிக்கவுள்ளது. அந்த முடிவு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) செயல்படுத்துவதாக இருக்குமா என்பதே தற்போது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு ஊழியர்களின் ஆதரவு என்பது தேர்தலில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு முரணான புதிய திட்டத்தை அரசு அறிவித்தால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவை இழக்க வழிவகுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் vs பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

ஓய்வூதியத் திட்டம்_1: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

அறிமுகம்: 2004-க்கு முன்,

சிறப்பம்சம்: ஓய்வூதியத் தொகை கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். பணிக்கொடை (Gratuity) உண்டு. ஊழியர்கள் பங்களிப்பு செய்யத் தேவையில்லை.

ஓய்வூதியத் திட்டம்_2: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS)

அறிமுகம்: 2004-க்கு பின்,

சிறப்பம்சம்: ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பங்களிக்க வேண்டும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும். ஓய்வூதியத் தொகை, முதலீட்டின் சந்தை மதிப்பைப் பொறுத்து மாறும்.

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் குறையவுள்ளதா? மத்திய அரசு அளித்த முக்கிய விளக்கம்

மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!

மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

158
comment0
Report
RSRK Spark
Dec 07, 2025 04:12:56
Chennai, Tamil Nadu:

சென்னை மணலியில், சென்னை வடகிழக்கு மாவட்ட திருவெற்றியூர் மத்திய பகுதி பொறியாளர் அணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 501 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் உதயராஜ் ஏற்பாட்டில் மத்திய பகுதிச் செயலாளரும் மண்டலக்குழு தலைவருமான ஏவி ஆறுமுகம் முன்னிலையில், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு 5  பெண்களுக்கு கிரைண்டர் உள்பட 501 நபர்களுக்கு ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!

அதிமுக டூ திமுக

முன்னதாக அதிமுகவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு திருச்சி சிவா எம் பி கழக இரு வண்ணத்துண்டை அணிவித்து வரவேற்றார். பின்னர் மேடையில் பேசிய கழக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம் பி, அறிஞர் அண்ணாவுக்கு பின்னால் எப்படி கலைஞரோ அப்படி கலைஞருக்கு பின்னால் இன்று தளபதி இந்தியாவிலேயே  சிறந்த தலைவராக சிறந்த முதல்வர் என்ற பேரை நிலை நாட்டியிருக்கிறார். ஒரு இயக்கத்தின் பணி என்பதும் தொடர்ச்சி என்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களின் வரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். திமுகவை போல இளைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.

அதிகமான இளைஞர்கள்

இந்தியா தான் உலகத்திலேயே அதிகமான அளவில் இளைஞர்களை மக்கள் தொகையில் கொண்ட ஒரு நாடு. 140 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் 65 விழுக்காடு இளைஞர்கள். அதே போல் இந்த இயக்கத்தில் எப்படி மூத்தவர்கள் இருக்கிறோமோ அதே போல் இளைஞர்களும் நிறைய வந்து சேர்ந்து விட்டார்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு சக்தியாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். தலைவன் என்பது யார் அடையாளம் காட்டப்படுபவர்கள் எல்லாம் அல்ல, முன்னிலைப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் அல்ல, தங்கள் தோள்களிலே சவாரி செய்கின்றவர்கள் சில பேர் என்பதற்கல்ல ஒரு பெரும் கூட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவர்களை ஒரு இலக்கை நோக்கி நடக்க வைக்கிறவன் தான் தலைவன் என்பதற்கு இலக்கணமாக எப்படி தளபதி கிளம்பினாரோ, அப்படி உதயநிதி ஸ்டாலின் பின்னால் இந்த இளைய தலைமுறை அணிவகுக்கிறது என்பதால் என் பூரிப்பாக இருக்கிறது.

திமுக 

திமுக என்று சொன்னாலே எதை செய்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆட்சி நடத்துகிறோமோ அது உங்களுக்காக கட்சி நடத்துகிறோமோ இந்த மண்ணுக்காக மொழிக்காக மானத்திற்காக அந்த வகையில் இன்று தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னணியில் நிற்கிறது. டெல்லியில் மாநிலங்களவையில் பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் தங்களிடம் பேசும் பொழுது உங்கள் தலைவர் மு க ஸ்டாலின் போல் எங்களுக்கு ஒருவர் வேண்டுமென்று ஏக்கம் அடிக்கடிக்கு பிறக்கிறது என்பார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு பெரும் பிரச்சனை அந்த பிரச்சனை எழுப்பியது திமுக.

திருப்பரங்குன்றம் 

தமிழ்நாட்டில் மதுரையில் திருப்பரங்குன்றம் என்ற இடத்தில் காலங்காலமாக தொடர்ந்து பின்பற்றுகின்ற ஒருமுறை. ஆங்கே கார்த்திகேயன் போது தீபம் ஏற்றப்படும் அது எல்லோரும் எல்லா ஊர்களும் மலைகளில் இருக்கின்ற செய்வது வழக்கம் அந்த மலையில் ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா ஒன்று இருக்கிறது. அந்த இடத்தில் இருவருக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை தீர்க்கப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள் தீபம் ஏற்றுள்ள கொள்ளலாம் நீங்கள் வழிபாட்டுத்தலமாக வெற்றி கொள்ளும் என்று முடிவெடுக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு பின்பற்றி வருகின்றோம். இந்தாண்டு அப்படித்தான் 2016 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற சென்றபோது 2017 இல் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் அங்கு இருக்கின்ற உச்சிப்பிள்ளையர் கருத்துணியில் தீபம் ஏற்றுக்கொள்ளலாம் வேரிடத்தில் ஏற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

முக ஸ்டாலின்

முதலமைச்சரை பொறுத்தவரை அவர் மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் நடுநிலையாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால்தான் ஆயிரக்கணக்கான கோயில்கள் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. பயன்படாமல் இருந்த ஆலயங்கள் புதைக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகின்றன. ஒரு வேலை விளக்கு கூட எரிய முடியாத கோயில்கள் இன்று விழாக்களும் பூஜைகளும் நடைபெறுகிறது. அதனை பணியாற்றுகின்ற பணியாளர்கள் மட்டுமில்லாமல் அர்ச்சகர்கள் கூடும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கென்று வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக இந்துக்களின் உணர்வுகளை எப்படி பாதுகாக்கின்றோமோ அப்படி எல்லோருடைய உணர்வுகளையும் பாதுகாப்போம்.

தமிழ்நாட்டில் இன்றும் அமைதி பூங்காவாக இருக்கிறது காரணம். நடைபெறுகின்ற ஆட்சி அதனுடைய முதலமைச்சர். இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன தேவையோ அதை தேடி தேடி செய்கிறார் யாரும் எதையும் கேட்டு அவர் செய்வதில்லை. சிவபெருமானை சொல்வார்கள் தாயினும் சால புரிந்து இறைவன் தாயை விட அதிகமாக யார் என்ன யாருக்கு என்ன வேண்டும் என்று கேலி செய்வார் என்று பாடுவார்கள் அதற்கு பல கதைகள் உண்டு. அதைப்போல அந்த சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு தாயினும் சால புரிந்து என்பதைப் போல தாயுமானவன் என்று சொல்வதைப் போல ஒரு தாயாக மாறி இந்த நாட்டில் வாழுகின்ற பெண்கள் தாய்மார்கள் இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் யார் யாருக்கு என்னென்ன தேவையோ யாரும் கேட்காமல் தானாகவே செய்கின்ற ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார்.

நாங்கள் நாட்டைக் காப்பாற்ற முனைகிறோம் என்றால் துணை நிற்கின்ற கடமை தாய்மார்களுக்கு இருக்கிறது பல பேர் படையெடுத்து வரலாம் எத்தனை பேர் நல முயற்சி செய்யலாம். திருப்பரங்குன்றத்தில் செய்வதை  போல சதி வேலை செய்யலாம் சட்ட ஒழுங்கை எடுக்க முயற்சிக்கலாம் ஆனால் மக்கள் சக்தி எங்கள் பின்னால் இருந்தால் நாங்கள் உங்களுக்காக  எதையும் செய்ய தயாராக இருப்போம் உயர்ந்த தியாகத்தின் ஏற்க தயாராக இருப்போம் என்று பேசினார்.

மேலும் படிக்க: குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்

128
comment0
Report
Advertisement
Back to top