இஷான் கிஷன் காதலி அதிதி ஹுண்டியா! இவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு?
Mumbai, Maharashtra:இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்பாடுகளை தாண்டி அவர்களின் தனிப்பட்ட காதல் வாழ்க்கை எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் காதல் கதை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டி20 உலக கோப்பை முடிந்த பிறகு இது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இஷான் கிசனுடன் அவரது காதலி அதிதி ஹுண்டியா இருந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இஷான் கிஷனின் காதலி யார்? இருவருக்கும் இடையே தொடர்பு எப்படி வந்தது? மற்றும் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: இந்திய அணிக்கு அடிச்சது லக்... எகிறிய பரிசுத்தொகை... காரணம் டிரம்ப் - ஏன் தெரியுமா?
लो ना उधर'' pic.twitter.com/KcopnCRKVa
— Magadh Updates (@magadh_updates) March 9, 2026
மைதானத்தில் நடந்த கொண்டாட்டம்!
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த இறுதி போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனை மைதானத்தில் இருந்து அவரது காதலி அதிதி ஹுண்டியா ரசித்துக் கொண்டிருந்தார். உலக கோப்பையை வென்றவுடன் அனைத்து வீரர்களும் தங்களது குடும்பத்துடன் மைதானத்தில் வலம் வந்தனர். அப்போது இஷான் கிஷனும் அவரது காதலியான அதிதி ஹுண்டியாவுடன் நேரத்தை செலவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வயது வித்தியாசம் எவ்வளவு?
இஷான் கிஷன் மற்றும் அவரது காதலி அதிதி ஹுண்டியா இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இஷான் கிசன் 1998 ஆம் ஆண்டு பிறந்தார், ஆனால் அவரது காதலி அதிதி ஹுண்டியா 1997 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஒரு வருடம் ஆகும். இந்நிலையில் தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பலரும் தங்களை விட வயதில் மூத்த பெண்ணை தான் கரம் பிடித்துள்ளனர். தற்போது இஷான் கிஷனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
யார் இந்த அதிதி ஹுண்டியா?
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அதிதி ஹுண்டியா. பிரபலமான மாடல் மற்றும் தொழில் முனைவராக உள்ள அதிதி ஹுண்டியா ஜெய்பூரில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாடலிங் மற்றும் பேஷன் ஷோக்களில் கலந்து பிரபலமானார். 2017ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை முன்னேறி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார் அதிதி ஹுண்டியா. அதன் பிறகு, 2018ம் ஆண்டில் மிஸ் திவா சூப்ரநேஷனல் பட்டத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் 2019ல் நடைபெற்ற சர்வதேச மிஸ் சூப்ரநேஷனல் அழகி போட்டியிலும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். தற்போது ஃபேஷன் மாடலிங் உலகில் கொடிகட்டி பறக்கும் அதிதி ஹுண்டியா, சொந்தமாக தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் இஷான் கிஷனுக்கு நேரில் வந்து ஆதரவளிப்பதை அதிதி பல வருடங்களாகவே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இஷான் கிஷன்!
இந்திய அணி 2026 டி20 உலக கோப்பைக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டது. தொடக்கத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பெறாத இஷான் கிஷன் டி20 உலக கோப்பைக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தான் அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். இந்த டி20 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியமான ஒரு காரணமாகவும் இஷான் கிஷன் இருந்துள்ளார். சில பிரச்சனைகளால் பிசிசிஐயின் வருடாந்திர சம்பளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவர் தன்னுடைய திறமையால் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: இந்தியாவை பார்த்து வயித்தெரிச்சல் படும் பாகிஸ்தான்.. வெற்றிக்கு பின் கதறல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
அரசுப் பள்ளியில் வைத்தே... பெண் ஆசிரியர் வெட்டிக்கொலை - நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
Omalur, Tamil Nadu:Salem Crime News Updates: சேலம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளியை வளாகத்தில் வைத்த பெண் ஆசிரியர் ஸ்ரீவித்யா என்பவரை அவரது கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்னையில் ஆசிரியை ஸ்ரீவித்யாவை அவரது கணவர் விஜய்முருகன் வெட்டிக்கொலை செய்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இளம் பௌலர்களால் ஆட்டம் கண்ட RR... SRH முதல் தோல்வி - ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே
Hyderabad, Telangana:IPL 2026, SRH vs RR: ஐபிஎல் 2026 சீசனின் 21வது லீக் போட்டி இன்று (ஏப். 13) நடைபெற்றது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி, அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டனஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பெரிய அணிகளை வீழ்த்தி, வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது.
அதிரடி வீரர் சூர்யவன்ஷி
அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றதாக இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதுவும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பும்ரா, ஹேசில்வுட், சிராஜ், ரபாடா என உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களாலேயே கட்டுப்படுத்த இயலவில்லை. இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 452 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதம், 1 சதம் அடக்கம். இந்த தொடரில் 4 போட்டிகளில் 200 ரன்களை அடித்திருக்கிறார்.
முதல் ஓவரிலேயே 3 விக்கெட்
இப்படியிருக்க, இந்த போட்டியில் அவர் முதல்முறையாக டக்அவுட்டானார். அவரை வீழ்த்தியது தனது அறிமுக போட்டியை விளையாடும் பிரபுல் ஹிங்கே எனும் 24 வயது வீரர் ஆவார். தொடர்ந்து ஜூரேல், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோரையும் அதே முதல் ஓவரில் டக்அவுட்டாகினார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையையும் படைத்தார்.
பவர்பிளேவில் 5 விக்கெட்
பிரபுல் ஹிங்கேவை போல் மற்றொரு அறிமுகமாக வீரரான சகிப் ஹூசைனும் மிரட்டலாக பந்துவீசினார். போட்டியின் 2வது ஓவரிலேயே அவர் ஜெய்ஸ்வாலை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த 3வது ஓவரில் பிரபுல் ஹிங்கே கேப்டன் பராக்கை 4 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 9 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.
72 ரன்கள் பார்ட்னர்ஷிப்
அங்கிருந்து ஜடேஜா - ஃபெரேரா ஜோடி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது, ராஜஸ்தானுக்கு ஆறுதல் அளித்தது. பவர்பிளே முடிவில் 40 ரன்களை ராஜஸ்தான் அடித்தது. இந்த ஜோடி மொத்தம் 9 ஓவர்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 72 ரன்கள் அடித்தது.
ஃபெரேரா 44 பந்துகளில் 7 பவுண்டரி, 3 விக்கெட் என 69 ரன்களை எடுத்து சக்கிப் ஹூசைன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ஜடேஜா இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களை சேர்த்தார். அடுத்து ஆர்ச்சர் 2, பிஷ்னோய் 0 சக்கிப் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
தேஷ்பாண்டே 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினாலும் கடைசியில் அவரும் அவுட்டாக 19 ஓவர்களில் 159 ரன்களை மட்டும் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்-அவுட்டானது. அந்த வகையில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.
if you just had a dream #TATAIPL d
— IndianPremierLeague (@IPL) April 13, 2026
Match Highl https://t.co/SzC9XEXWRj #KhelBindaas | #SRHvRR | @SunRisers pic.twitter.com/OIRT84MhL6
மிரட்டிய பிரபுல் ஹிங்கே, சக்கிப் ஹூசைன்
பிரபுல் ஹிங்கே 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார், முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். சக்கிப் ஹூசைன் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். இஷான் மலிங்கா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
217 ரன்கள் இலக்கு
முன்னதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா முதல் பந்தில் டக்அவுட்டானார். பவர்பிளேவில் 51 ரன்களை ஹைதராபாத் அணி அடித்தது. டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். கிளாசெனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இஷான் கிஷன் 91 ரன்கள்
இஷான் கிஷன் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 91 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். கிளான் 40(26), நிதிஷ் குமார் 28(13), சலீல் அரோரா 24(13) ரன்களை அடித்தனர். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை அடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 2 விக்கெட், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
புள்ளிப்பட்டியல் அப்டேட்
புள்ளிப்பட்டியலை பொருத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகளில் 2இல் வென்று 4 புள்ளிகளுடன் (நெட் ரன்ரேட் +0.576) 4வது இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 4இல் வென்று, 1இல் தோற்று 8 புள்ளிகளுடன் (நெட் ரன்ரேட் +0.889) முதலிடத்தில் நீடிக்கிறது.
மேலும் படிக்க | CSK அணியின் 2 போட்டிகள் திடீர் இடமாற்றம்... பிசிசிஐ சொல்லும் காரணம் என்ன?
மேலும் படிக்க | அதிர்ஷ்டமில்லாத 6 CSK வீரர்கள்... ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார்கள்!
மேலும் படிக்க | கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி! சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு? ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சூர்யவன்ஷி டக்அவுட்... ஒரே ஓவரில் 3 விக்கெட் - யார் இந்த பிரபுல் ஹிங்கே?
Hyderabad, Telangana:Who is Praful Hinge?, SRH vs RR 2026: ஐபிஎல் தொடரில் 21வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் இஷான் கிஷன் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 91 ரன்களை அடித்தார். கிளாசென் 40, நிதிஷ் குமார் ரெட்டி 28, சலீல் அரோரா 24 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் மட்டும் 2 விக்கெட்டை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து, 217 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துரத்தியது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் அனைவரின் கவனமும் இருந்தது. அவர் கடந்த 4 போட்டிகளில் 200 ரன்களை அடித்திருந்தார். அப்படியிருக்க முதல் ஓவரை பிரபுல் ஹிங்கே என்ற அறிமுக பௌலர் வீச வந்தார். யாரும் இவரை பெரிதாக எண்ணவில்லை. முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் அடிக்க, 2வது பந்தில் சூர்யவன்ஷி தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டக்அவுட்டானார். அவரை இதுவரை ஐபிஎல் தொடரில் யாரும் டக்அவுட்டாக்கியதே இல்லை.
இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்த நிலையில், அடுத்து, துருவ் ஜூரேல் 0, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 0 என ஓரே ஓவரில் பிரபுல் ஹிங்கே 3 விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால், மற்றொரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர் சாகிப் ஹூசைனிடம் 1 ரன்னில் வீழ்ந்தார். அடுத்த 3வது ஓவரில் பிரபுல் ஹிங்கேவிடம் கேப்டன் ரியான் பராக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது. ஜடேஜா - டோனோவன் ஃபெரேரா ஆகியோர் ராஜஸ்தானை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.
அப்படியிருக்க, இப்போது எங்கு பார்த்தாலும் யார் இந்த பிரபுல் ஹிங்கே? என்ற கேள்விதான் சுற்றி சுற்றி வருகிறது. இதுவரை 19 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அறிமுக பந்துவீச்சாளரும் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டை எடுத்ததே இல்லை. மணிக்கு 140+ மேல் வீசும் இந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் நாக்பூரை சேர்ந்தவர்.
24 வயதான இவர் உள்நாட்டு தொடர்களில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 10 முதல் தர போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டை எடுத்துள்ளார். குறைந்த அளவிலான டி20 போட்டிகளிலேயே விளையாடியிருக்கிறார். இவரை இந்த மினி ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது.
நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் பிரபுல் ஹிங்கே. இவரது தந்தை மகாராஷ்டிராவின் அரசு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருபவர். ஆரம்பத்தில் பேட்டிங்கில் கவனம் செலுத்திய பிரபுல் ஹிங்கேவை, வேகப்பந்துவீச்சாளராக மாற்றியதே அவரது தந்தை தான். ஆரம்பத்தில் அவர் விதிமுறைகளுக்கு ஏற்ப பந்துவீசவில்லையாம். தொடர்ச்சியான பயிற்சி மூலம் சிறப்பான பந்துவீச்சு ஆக்ஷனை அவர் கண்டுபிடித்துக்கொண்டார். அவரது 16 வயதிலேயே விதர்பா கிரிக்கெட் சங்க அகாடாமியில் இணைந்து, பயிற்சியாளர் சஞ்சீவிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து சென்னையில் மிகப் பிரபலமான MRF Pace Foundation எனும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். அங்கு பட்டைத்தீட்டப்பட்ட வைரம் தான் பிரபுல் ஹிங்கே. MRF Pace Foundation-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுடன் அதிக தொடர்புகள் உண்டு. அப்படியிருக்க இவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள புபா தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். ஹசில்வுட், ஹை ரிச்சர்ட்சன் போன்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.
MRF Pace Foundation உடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கும் இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன், தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார், அவரால் தான் பிரபுல் ஹிங்கேவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூட அங்கு இருப்பது பிரபுல் ஹிங்கேவுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் பல திறமையான இந்திய பேட்டர்களை பார்க்கும்போது, அரிதாகவே திறமையான இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை பார்க்க முடியும். அதில் பிரபுல் ஹிங்கேவும் ஒருவர்.
Vaibhav Sooryavan
— IndianPremierLeague (@IPL) April 13, 2026
Praful Hin
Lhuan-dre Preto
A dream start for Praful Hinge on his #TATAIPL deb
https://t.co/xGTDdKbXpY#KhelBindaas | #SRHvRR | @SunRisers pic.twitter.com/RKGW3NxM5y
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?
Chennai, Tamil Nadu:MK Stalin vs Nirmala Sitharaman, Paddy Incentive Full Details: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், வரும் ஏப்ரல் 21ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவுபெறும்.
எனவே, ஒரு வாரக்காலம் மட்டுமே தேர்தல் பரப்புரைக்கு நேரம் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வாக்காளர்களை குறிவைத்து வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.
நெல் சாகுபடி ஊக்கத்தொகை: ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன்
இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து பெரும் வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.
ஸ்டாலின் - நிர்மலா சீதாராமன் இடையே தொடர்ச்சியாக பதிலடிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், இந்த விவகாரத்தில் ஆதி முதல் தற்போதைய அப்டேட்டை வரை விரிவாக இங்கு காணலாம்.
1. விவாதத்தின் தொடக்க புள்ளி
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியதுதான் இந்த பிரச்னையின் ஆதி ஊற்று. தஞ்சாவூரில் அவர் பேசியபோது, "ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றை அதிகாரிகள் தன்னிடம் கொடுத்தனர். அதில், நெல் சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக நெல் உற்பத்தி பெருகிவிட்டதாம். அப்படி பெருகுவதால் பல பிரச்னைகள் வருகிறதாம்.
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக pic.twitter.com/vK7cJQZXjm
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 10, 2026
எனவே, தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.
இபிஎஸ்-க்கு கேள்வி: தன்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் நிர்மலா சீதாராமனின் நிதி அமைச்சகம் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறது என்றும் எனவே, தமிழர் என்ற உணர்வு இருந்தால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டிப்பாரா என்றும் எச்சரித்திருந்தார். மேலும், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பாஜகவை கண்டிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஊக்கத்தொகையை அதிகரித்த ஸ்டாலின்: 2021 தேர்தல் வாக்குறுதியின்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 திமுக வழங்கியது என்றும் 2026 வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
2. நிதி அமைச்சர் கொடுத்த முதல் பதிலடி
உண்மைக்கு புறம்பானது: மு.க. ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது X பக்கத்தில் நேற்று (ஏப். 12) மாலை 6.05 மணிக்கு, நீண்ட பதிவு ஒன்றை போட்டு பதிலடி கொடுத்தார்.
அதில்,"நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது" என குறிப்பிட்டிருந்தார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும்…
— Nirmala Sitharaman (@nsitharaman) April 12, 2026
ஆலோசனை மட்டும்தான்: மேலும், அதில், "தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்" என விளக்கம் அளித்திருந்தார். அதாவது, அது ஆலோசனை மட்டும்தான் என்றும் அது உத்தரவு இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
மாநில அதிகாரத்தை பறிக்கவில்லை: தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது என்றும், மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது என்றும் திமுக அரசு மீது நிர்மலா சீதாராமன் சாடினார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை என்றும் ஸ்டாலினுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
சுயநல அரசியல்: முதல்வர் ஸ்டாலின் தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல என்றும் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார்.
பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவே: மத்திய அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ள இந்த ஆலோசனை என்பது பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வை என நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் நிலைபாட்டை விளக்கினார். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும் என்றார்.
3. கடிதத்தை ரிலீஸ் செய்ய சொன்ன ஸ்டாலின்
நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு இன்று (ஏப்ரல் 13) காலை 6.45 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் X பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்' எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே,
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.… https://t.co/R9UqWMO0CU
முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய முதல்வர்: "எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்" என ஸ்டாலின் நிர்மலா சீதாராமனின் பதிவில் இருந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே, தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? எனவும் நிர்மலா சீதாராமனை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார்.
4. கடிதத்தை வெளியிட்டு நிதி அமைச்சர் விளக்கம்
தயக்கம் ஏதுமில்லை: இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கேட்டபடி, நிதி அமைச்சகத்தின் கடிதத்தை நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.16 மணிக்கு X பக்கத்தில் வெளியிட்டார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என கூறி அந்த கடிதத்துடன் நீண்ட விளக்கத்தையும் வெளியிட்டிருந்தார்.
உத்திசார்ந்த தேவை: அதன்படி, "அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும்… pic.twitter.com/W7avdTg8mU
— Nirmala Sitharaman (@nsitharaman) April 13, 2026
தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.
இந்தியாவின் இலக்கு: பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது" என நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பல மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன: மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும் என்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்றும் சாடியிருக்கிறார்.
"நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் (நெல், கரும்பு) பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.
வெளிநாட்டு நலனுக்கு முக்கியத்துவமா?: மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" என நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஸ்டாலினின் வெற்று வீரம்: "அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார்" என ஸ்டாலின் மீது அட்டாக்கை தொடர்ந்தார்.
ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு: இறுதியாக, "தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார். ஏனெனில், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்" என்றும் திமுக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
5. பிரச்சனையின் லேட்டஸ்ட் அப்டேட்
நிர்மலா சீதாராமனும், ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி கடிதத்தை வெளியிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பதிலடியை வழங்கி உள்ளார்.
குட்டு அம்பலமாகிவிட்டது: இன்று மாலை 5.04 மணிக்கு வெளியிட்ட பதிவில், "தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது" என சாடி உள்ளார்.
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே,
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026
தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.
அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும்,… https://t.co/EAnfLIeztK pic.twitter.com/vmXlHDPki5
அதாவது, நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அதன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டுதான் குட்டு அம்பலமாகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் சாடியிருக்கிறார்.
அதேபோல், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரமன் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயனின் பதிவு: அதற்கு, கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே சாட்சி என அந்த பதிவின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
பினராயி விஜயன் கடந்த பிப். 8ஆம் தேதி போட்ட அந்த பதிவில், "கேரள அரசால் வழங்கப்பட்டு வரும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.6.31 என்ற போனஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையையும், உணவு உற்பத்தியை ஒரு சுமை என்று முத்திரை குத்துவதும் நமது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.
சந்தையை திறந்துவிடுகிறதா ஒன்றிய அரசு: கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், நமக்கு உணவளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறிய ஊக்கத்தொகை சுமையாகக் கருதப்படுவது. இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான நமது இந்திய சந்தைகளை திறப்பதற்கான முதல் படி இதுவா?
எனவே, தனது விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் கேரளாவைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டு, எங்களுக்கு நிலுவையில் உள்ள கொள்முதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
ஸ்டாலினுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பெரும் வார்த்தை போரை ஏற்படுத்திய அதே கடிதத்தை குறிப்பிட்டுதான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் மத்திய அரசை கண்டித்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய நிதி அமைச்சகம் அனுப்பிய அந்த கடிதம், கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - ஆழமான உரையாடல்
நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் வெற்று அரசியல் விவாதமாக மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் விவசாயக் கொள்கை குறித்த ஆழமான உரையாடலாக மாறியுள்ளது.
பயிர் மாற்றத்தை மத்திய அரசு வலியுறுத்தினாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி மாநில உரிமைகளுக்காகத் தமிழக அரசு போராடுவதையே ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் இடையேயான இந்த வார்த்தைப் போர் பிரதிபலிக்கிறது.
மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
மேலும் படிக்க | நெல் ஊக்கத்தொகை விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திமுகவில் இணைய முக்கிய காரணம் இது தானா? அஜிதாவின் மாஸ்டர் பிளான்!
Thoothukudi, Tamil Nadu:2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கட்சி தாவல்களும், குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட அஜிதா, அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். நடிகர் விஜய்யின் தீவிர ஆதரவாளரான இவர், திடீரென ஆளுங்கட்சியான திமுகவில் ஐக்கியமாகியுள்ளது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ajitha has joined the DMK. pic.twitter.com/8aVIYL4Ylv
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) April 12, 2026
யார் இந்த அஜிதா?
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக அவரது மக்கள் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா. விஜய்யின் மீது கொண்ட தீவிர பற்றின் காரணமாக, அப்பகுதியில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த இவர், கடந்த 2024ம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபோது, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்ற இவர், தூத்துக்குடி முழுவதும் தவெக-வின் அடித்தளத்தை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வந்தார்.
ஏமாற்றமும், பனையூர் போராட்டமும்
கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்ததால், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தனக்கே கிடைக்கும் என அஜிதா மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த பதவியை சாமுவேல் என்பவருக்கு வழங்கி தவெக தலைமை உத்தரவிட்டது. இது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தங்களுக்கான நியாயத்தை கேட்பதற்காக, அஜிதா தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், தேர்தல் பணிகளுக்காக புறப்பட்ட நடிகர் விஜய்யின் காரை வழிமறித்து அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். நிலைமை கைமீறி போவதை கண்ட தவெக-வின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர், அஜிதாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த உள்கட்சி பூசல் அப்போதே ஊடகங்களில் வெளியாகி தவெக-வில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
தற்கொலை முயற்சியும், எம்.எல்.ஏ சீட் ஏமாற்றமும்
கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஜிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், "நான் ஒருபோதும் என் தலைவர் விஜய்யை விட்டு விலக மாட்டேன், அவருக்காகத் தொடர்ந்து உழைப்பேன்" என உருக்கமாகப் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அஜிதா பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், கட்சியின் தலைவர் விஜய் அந்த தொகுதியைத் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் என்பவருக்கு ஒதுக்கி அவரை வேட்பாளராக களமிறக்கினார். மாவட்ட செயலாளர் பதவியை தொடர்ந்து, எம்.எல்.ஏ சீட்டும் மறுக்கப்பட்டதால் அஜிதாவின் பொறுமை எல்லையை மீறியது. அவரது ஆதரவாளர்களும் இனி தவெக-வில் நீடிப்பதில் எந்த பலனும் இல்லை என அவருக்குக் கடும் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
கனிமொழி முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
தவெக-வில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலை சரியாக பயன்படுத்திக்கொண்ட திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அஜிதாவை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக காய் நகர்த்தின. இதில் இறுதியாக ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றது. இன்று தூத்துக்குடியில், எம்.பி கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்த அஜிதா, தன்னை முறைப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா, "கட்சியில் பெண்களுக்கு உரிய வாய்ப்புகளும், மரியாதையும் அளிக்கப்படாத ஒரே காரணத்தினால் தான் நான் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மாஸ்டர் பிளான்
அஜிதாவின் இந்த திடீர் கட்சி மாற்றத்தின் பின்னணியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மிக முக்கிய அரசியல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவ சமூக மக்களின் வாக்குகளை கணிசமாக பெறுவதற்கு, அப்பகுதியில் செல்வாக்கு மிக்க அஜிதாவின் வரவு திமுகவிற்கு பெரிதும் கைகொடுக்கும் என அமைச்சர் கணக்கு போட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே அஜிதாவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த இணைப்பு அரங்கேறியுள்ளது. மேலும், அஜிதாவின் சகோதரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஏற்கனவே திமுகவில் தீவிரமாக பயணித்து வருவதால் தான், தவெக தலைமை அவருக்கு பொறுப்புகளையும், தேர்தல் வாய்ப்பையும் வழங்க தயங்கியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஜனநாயகன் படம் லீக் ஆனது குறித்து பேசிய முக ஸ்டாலின்! என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திடீரென மயங்கிய ராமதாஸ்... மருத்துவமனையில் அனுமதி - சேலத்தில் திடீர் பரபரப்பு
Salem, Tamil Nadu:Ramadoss Health Update Latest News: பாமக (ராமதாஸ்) - பாமக (அன்புமணி) என பாட்டாளி மக்கள் கட்சி உடைந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் களத்தில் பாமக (அன்புமணி) தேசிய ஜனநாயக கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மறுமுனையில், பாமக (ராமதாஸ்) திமுக, அதிமுக, தவெக என முன்னணி கட்சிகளுடன் கூட்டணி சேராமல் சசிகலாவின் அஇபுதமமுக உடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். சசிகலா - ராமதாஸ் கூட்டணி மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலாவின் அஇபுதமமுக 71 தொகுதிகளிலும், பாமக சார்பில் 38 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள பிற அமைப்புகள் 11 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இதில் சசிகலா தரப்பு 82 வேட்பாளர்கள் தென்னந்தோப்பு சின்னத்திலும், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் அருளை ஆதரித்து ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ராமதாஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள காவல் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குண்டுக்கட்டாக தூக்கி, ராமதாஸுக்கு முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.
சேலம் பள்ளப்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - மருத்துவமனையில் அனுமதி#ZeeTamilNews | #PMK | #Ramadoss | #Salem | #BreakingNews pic.twitter.com/M95vS4CxEJ
— Zee Tamil News (@ZeeTamilNews) April 12, 2026
தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ராமதாஸ் மயக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் 4,023 வேட்பாளர்கள்
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதியோடு பரப்புரை நிறைவடைகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற காலஅவகாசம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த முறை 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 5 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர்.
முக்கிய தலைவர்கள் போட்டி
இத்தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் - கொளத்தூர், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி - எடப்பாடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், ராமதாஸ், சசிகலா, அன்புமணி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.
ராமதாஸ் தேர்தல் பயணம்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்து போட்டியிடும் சூழலில், இன்றில் இருந்துதான் அவரின் பிரச்சார பயணத்தை தொடங்கினார். நாளை (ஏப். 13) தருமபுரியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்.16ஆம் தேதி கும்பகோணம்; ஏப். 17ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம்; ஏப். 18இல் விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி; ஏப். 19இல் செய்யாறு, போளூர், கலசப்பாக்கம்; ஏப். 20இல் விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் ராமதாஸ் பிரச்சாரம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் அவரது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தவெக + அஇபுதமமுக.. விஜய்யுடன் கூட்டணியா? சசிகலா பதில்!
மேலும் படிக்க | ராமதாஸ் பாமக + தவெக.. விஜய்யின் பிளான் என்ன? தைலாபுரம் செல்லும் செங்கோட்டையன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு பிளான்... கன்னியாகுமரியில் விஜய்... தவெகவின் அதிரடி வாக்குறுதி
Kanniyakumari, Tamil Nadu:Kanniyakumari TVK Vijay Speech: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். மகாதானபுரத்தில் பேசிய விஜய், "லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும்; அதற்கென அட்டை வழங்கப்படும். லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை. வீட்டு வாசலில் அரசாங்க திட்டங்கள் வரும். இது ஸ்டாலின் சார் விடும் கதை இல்லை; அறிவியல்பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன்" என்றார்.
தவெக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு சேவை உரிமைத் திட்டம் அமைக்கப்படும். வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். அனைத்து அரசு சேவைகளும் இனி மொபைலில் வந்துவிடும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பரம் ரகசியம்போல இருக்கிறது. அதை நாம் மாற்றுவோம். மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும். மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் மனுக்களை சட்டமன்றத்தில் சமர்பிக்க திட்டம். 5 லட்சம் மனுக்கள் சமர்பிக்கப்பட்டால் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஏஜி டிஜிட்டல் தலைநகரமாக மாறும். தமிழ்நாட்டின் முதல் முதல் ஏஐ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்...
Mumbai, Maharashtra:Asha Bhosle Passed Away: பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பையில் இன்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92. மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் நாளை (ஏப்ரல் 13) மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மறைந்த பாடகி ஆஷா போஸ்லேவின் மகன் ஆனந்த் போஸ்லே கூறுகையில், “தாயார் ஆஷா போஸ்லே இன்று மறைந்தார். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் நாளை (ஏப்ரல் 13) காலை 11 மணிக்கு இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். நாளை மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும்” என்றார். கடும் அயர்ச்சி மற்றும் மார்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பங்காற்றிய அவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரி ஆவார். இவர் திரைத்துறையினருக்கு நாட்டில் வழங்கப்படும் உச்சப்பட்ச விருதான தாதாசாகேப் பால்கே விருதை 2000ஆம் ஆண்டில் பெற்றார். 2008ஆம் ஆண்டு இந்தியாவின் 2வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் விருதை பெற்றார்.
தமிழ் திரையுலகில் செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), செப்டம்பர் மாதம் (அலைபாயுதா), கொஞ்ச நேரம் (சந்திரமுகி), நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹே ராம்) உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இன்று நடைபெறும் சிஎஸ்கே vs டெல்லி போட்டி! தோனி, பிரவீஸ் வாய்ப்பு?
Chennai, Tamil Nadu:ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சனிக்கிழமை நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை தனது சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள சென்னை அணிக்கு, இந்த ஆட்டம் வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோரின் உடற்தகுதி குறித்த மிக முக்கியமான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி? வெளியான முக்கிய தகவல்!

அணிக்கு திரும்பும் டிவால்ட் பிரேவிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக, அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவால்ட் பிரேவிஸ் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் மீண்டும் ஆடும் லெவனில் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. பக்கவாட்டு தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக வெறும் 6 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடிய பிரேவிஸ், 180 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்களை குவித்து அசத்தினார்; இதில் இரண்டு பிரம்மாண்டமான அரைசதங்களும் அடங்கும். அவரது இந்த அதிரடியான ஆட்டத்தின் காரணமாகவே ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே நிர்வாகம் அவரை அணியில் தக்கவைத்தது. தற்போது அவர் அணிக்கு திரும்பியுள்ளது, பலவீனமாக காணப்பட்ட சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எம்.எஸ். தோனியின் நிலை என்ன?
ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் உடல்நிலை குறித்தும் தெளிவான அப்டேட் கிடைத்துள்ளது. சீசன் தொடங்குவதற்கு முன்பாக கால் தசையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தோனி முதல் மூன்று போட்டிகளில் களமிறங்கவில்லை. தற்போதைய தகவலின்படி, தோனி காயத்திலிருந்து பெருமளவு மீண்டு முழு உடற்தகுதியை நெருங்கிவிட்டார். சமீபத்தில் அவர் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்த போது, எந்தவித வலியும் இன்றி மிகவும் இயல்பாக பந்துகளை எதிர்கொண்டார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான வெளியூர் போட்டிகளுக்கு அவர் அணியுடன் பயணிக்கவில்லை.
தோனிக்கு ஏற்கெனவே ஒரு கட்ட உடற்தகுதி பரிசோதனை நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் மற்றொரு இறுதி மதிப்பீட்டு சோதனை நடைபெற உள்ளது. எனவே, இன்று நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஆனால், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் எம்.எஸ். தோனி கம்பேக் கொடுப்பார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோனியின் வெற்றிடம்
தோனி ஆடும் லெவனில் இல்லாத காரணத்தால், விக்கெட் கீப்பிங் பொறுப்பை ராஜஸ்தான் அணியில் இருந்து டிரேடு மூலம் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் கவனித்து வருகிறார். தோனியின் இடத்தில் இளம் வீரரான கார்த்திக் சர்மாவிற்கு கடந்த மூன்று போட்டிகளிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், களத்தில் தோனியின் அந்த அமைதியான தலைமைப்பண்பு, இக்கட்டான சூழலில் பந்துவீச்சாளர்களுக்கு அவர் வழங்கும் வியூகங்கள் ஆகியவை இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதை கடந்த போட்டிகளின் முடிவுகள் அப்பட்டமாக காட்டியுள்ளன.
வெற்றிக் கணக்கை தொடங்குமா சென்னை?
நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கம் ஐந்து முறை சாம்பியனான சென்னை அணிக்கு பெரும் சொதப்பலாக அமைந்துள்ளது. முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடமும், பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவிய சிஎஸ்கே, தனது மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்தப்போட்டியில், ஆர்சிபி அணி நிர்ணயித்த 251 என்ற இமாலய இலக்கை துரத்திய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் சரிவை சந்தித்துள்ள சென்னை அணி, இன்று டிவால்ட் பிரேவிஸின் வருகையோடு பலம் பெற்று, டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சூர்யவன்ஷி புயலால்... ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி - ஆர்சிபிக்கு முதல் தோல்வி!
Guwahati, Assam:IPL 2026, RR vs RCB Highlights: ஐபிஎல் 2026 தொடரில் 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் இரவு 8.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதில் பிரிஜ்ஜேஷ் சர்மா அணிக்குள் வந்தார். ஆர்சிபி அணியில் ஜேக்கப் டஃபிக்கு பதில் ஜாஷ் ஹேசில்வுட் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.
பட்டிதார் அடித்த அரைசதம்
பில் சால்ட் 0, படிக்கல் 14, விராட் கோலி 32, குர்னால் பாண்டியா 1, ஜித்தேஷ் சர்மா 5, டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெப்பர்ட் 22 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் பட்டிதார் சற்று நிலைத்து நின்று விளையாடினார். 14 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்களை எடுத்திருந்தது. வெங்கடேஷ் ஐயர் இம்பாக்ட் வீரராக 9வது வீரராக உள்ளே வந்தார்.
இங்கிருந்து ரஜத் பட்டிதார் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தது. பட்டிதார் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸரை பறக்கவிட்டு 63 ரன்களை குவித்தார்.
202 ரன்கள் இலக்கு
கடைசி ஓவரில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் மொத்தம் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி 29 ரன்களை அடித்தார். இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை ஆர்சிபி குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜ்ஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டையும், சந்தீப் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் பெற்றனர்.
சூர்யவன்ஷி புயல்
தொடர்ந்து, 202 ரன்களை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் சீறிப்பாய்ந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், சூர்யவன்ஷி ஆர்சிபி பௌலர்களை புரட்டி எடுத்தார். ஹசில்வுட், புவனேஷ்குமார், அபிநந்தன் சிங் ஆகியோரை பவர்பிளேவில் வெளுத்தெடுத்தார். இதனால் பவர்பிளே முடிவில் 97 ரன்களை ராஜஸ்தான் எடுத்தது, ஒரு விக்கெட்தான் சரிந்திருந்தது.
குர்னால் பாண்டியா 9வது ஓவரை வீசினார். அதில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 78 ரன்களை அடித்தார். வந்த முதல் பந்திலேயே ஹெட்மயர் டக்அவுட்டானார். ரியான் பராக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 9.4 ஓவரில் 134/4 என ஸ்கோர் இருந்தது.
ஆட்டநாயகன் சூர்யவன்ஷி
அதன்பின்னர், ஜடேஜா - துருவ் ஜூரேல் ஜோடி 50 பந்துகளுக்கு 68 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது. 2 ஓவர்கள் மிச்சம்வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. துருவ் ஜூரேல் 43 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் என 81 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 25 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 24 ரன்களை எடுத்தார். ஆட்டநாயகனாக சூர்யவன்ஷி வென்றார்.
https://t.co/X76bJjmq1j#TATAIPL | #KhelBindaas | #RRvRCB | @rajasthanroyals pic.twitter.com/eNq8gglcrL
— IndianPremierLeague (@IPL) April 10, 2026
மேலும் படிக்க | கோடிகள் கொடுத்தும் வேஸ்ட்... சோபிக்காத இந்த 8 வீரர்கள் - லிஸ்ட் இதோ
மேலும் படிக்க | ஒரே டி20 போட்டியில் 549 ரன்கள்! இந்த ஐபிஎல் மேட்ச் ஞாபகம் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம்... புதிய சென்னை கமிஷனர் யார்...? தேர்தல் களத்தில் பரபரப்பு
Chennai, Tamil Nadu:Chennai Police Commissioner Transfer, Election Commission Latest News: தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து, சென்னை பெருநகர சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.
இதன்மூலம், அருண்குமார் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ், பெருநகர சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அபின் தினேஷ் மோடக் பணியில் இணைந்தது குறித்த பணி ஏற்பு அறிக்கையை வரும் ஏப்ரல் 11ஆம் அன்று காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி அருண் குமார், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணிகளிலும் அமர்த்தப்படக்கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அன்று சென்னை கமிஷ்னராக அருண் குமார் நியமிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்வது வாடிக்கைதான். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பதும், தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் பலமுறை நடந்துள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த முறை சற்று அதிரடியாக களமிறங்கியிருப்பதாக தெரிகிறது.
கடந்த புதன்கிழமை (ஏப். 8) அன்று, தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்திற்குப் பதிலாக, தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனமிக்கப்பட்டார். அதேபோல், தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக சந்தீப் மிட்டலை தேர்தல் ஆணையம் நியமித்தது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். தலைமை செயலாளர், டிஜிபி மாற்றம் குறித்து ஸ்டாலின் அவரது X பக்கத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது என்றும் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து அந்த பதிவில், "பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது" என பாஜகவை கடுமையாக சாடியிருந்தார். மேலும் அவரது பதிவில், "சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பாஜக அடங்கிய NDA கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்" என விமர்சித்திருந்தார்.
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் தெரிவித்திருந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், ஊடகப் பணியாளர்களுக்கு தொந்தரவு அளித்ததாகக் கூறி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
காங்கிரஸில் இருந்து விலகல்... மகளிரணி தலைவிக்கே இந்த நிலைமையா? - என்ன தான் நடக்கிறது?
Chennai, Tamil Nadu:Haseena Syed Left Congress: தமிழ்நாடு மகிளா (மகளிர்) காங்கிரஸ் தலைவரான ஹசீனா சையத்தை, பதவியில் இருந்து கட்சியின் தலைமை நீக்கிய சில நிமிடங்களிலேயே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் ஹசீனா சையத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஹசீனா சையத் நீக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கும், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்காததை தொடர்ந்து, கட்சியின் தலைமையின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹசீனா சையத் முன்வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஹசினா சையத் நீக்கப்பட்டார். கட்சியின் ஒழுங்கு மற்றும் உண்மைத்தன்மையை காக்க இந்த முடிவு என அகில் இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்திருந்தார்.
கடிதம் எழுதிய ஹசீனா
இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அல்கா லம்பா உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டு, ஹசீனா சையத் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் தேர்வின் செயல்முறையின்போது, தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் 2 பெண் வேட்பாளர்களையும் மட்டுமே காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. வெறும் 7.14% தான் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு இல்லை?
தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸின் மத்திய தேர்தல் குழுவின் (CEC) முடிவு மற்றும் தஙகளின் வலியுறுத்தல் இருந்தபோதிலும், இந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று ஹசீனா அந்த கடிதத்தில் ராகுல் காந்தியை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளர் தேர்வில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னை அவமானப்படுத்தியது மட்டுமின்றி கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் தங்களின் (ராகுல் காந்தி) கனவான 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு என்பது வெறும் பேச்சாகவே சுருங்கிவிட்டது என்றும் தன்னைப் போன்ற தகுதியுள்ள பெண்களுக்கும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். தங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை, மல்லிகார்ஜுன கார்கே மீது குற்றச்சாட்டு
மகளிர் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், தலைமை தனக்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க் அவர்களிடம் தீவிரமாக முறையிட்டேன் என்றும் தெரிவித்தார். ஆனால், வழக்கம்போல் அனைத்தும் வீணாகிவிட்டது என்றும் ஊழல் மலிந்த செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி., சுதா, வெளிநாடு வாழ் காங்கிரஸ் பிரிவு சாம் பிட்ரோடா உடன் தொடர்புடைய புஷ்பராஜ் மற்றும் தற்போதைய தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரின் உளநோக்கங்களுக்கே கார்கே துணை நிற்பதாக குற்றஞ்சாட்டினார்.
கட்சியில் இருந்து விலகல்
மகளிரணி நிர்வாகிகளுக்கு 33% மகளிர் இடஒதுக்கீட்டு உரிமையை என்னால் எவ்வாறு பெற்றுத் தர முடியும் என்றும் எனவே தன்னால் இப்பதவியில் நீடிக்க முடியாது என கருதி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதேநேரத்தில், காந்தி குடும்பத்தினர் மீதும், கட்சியின் மீதும் என்றும் அன்புடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு கேள்வி
அதேநேரத்தில், ராகுல் காந்தியை நோக்கி கேள்வியும் எழுப்பி உள்ளார், அதாவது தேசிய தலைவர், எப்படி மாநிலத் தலைவரின் ஊழல் முறைகேடுகளுக்கு இவ்வளவு தூரம் ஆதரவாக இருக்கிறார்...? இதனால் கட்சியின் உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு மிகவும் சீர் செய்ய முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மகளிருக்கு மாதம் ரூ.3,000... DA உயர்வு... பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை
Kolkata, West Bengal:BJP Election Manifesto For West Bengal Assembly Polls 2026: மேற்கு வங்கம் சட்டப்பேரவை களம் தற்போது சூடுபிடித்துள்ளது. மூன்று முறை ஆட்சியை பிடித்த திரிணாமுல் காங்கிரஸ், 4வது முறையாகும்; மத்தியில் ஆளும் பாஜக முதல்முறையாகும் ஆட்சியை பிடிக்க முட்டிமோதி வருகின்றன.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என இரு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் என நான்கு மாநிலங்களுடன், மேற்கு வங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் மே 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு பாஜக அதன் 'சங்கல்ப் பத்ரா'எனும் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, "மகளிரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதிக்குள் ரூ.3000 பாஜக செலுத்தும்" என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உறுதிசெய்யப்படும் என்றும் ஆட்சிக்கு வந்து வெறும் 45 நாள்களில் 7வது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
மேலும் அமித்ஷா கூறுகையில், "ஊடுருவல்காரர்கள் மீது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கொண்ட உத்தியுடன் எங்கள் அரசு முன்னேறும். அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உறுதிசெய்யப்படும். மேலும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வெறும் 45 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மகளரின் வங்கிக் கணக்கிலும் பாஜக அரசு ரூ.3000 செலுத்தும். ஆயுஷ்மான் பாரத் உட்பட அனைத்து பாஜக திட்டங்களையும் மேற்கு வங்கத்தில் நாங்கள் செயல்படுத்துவோம்" என்றார்.
மேலும் அவர், "பாஜகவின் இந்த தேர்தல் அரிக்கை, மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் விரக்தியில் இருந்து விடுதலை செய்து வெளியே கொண்டு வருவதற்கான ஒரு பாதையாகும். பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய வழியை காட்டும். பிரதமர் மோடி கனவு கண்ட வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான செயல்திட்டத்தை இந்த தேர்தல் அறிக்கை மேற்கு வங்க மக்கள் முன் வைக்கும். மக்கள் தற்போதைய ஆட்சியால் விரக்தியில் உள்ளனர். மக்கள் மனதார மாற்றத்தை விரும்புகிறார்கள். இன்று நாங்கள் மேற்கு வங்க சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயலாற்றி வருகிறோம்" என்றார்.
அகவிலைப்படியில் என்ன பிரச்னை?
பாஜக ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வராவிட்டாலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது இயல்புதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் அகவிலைப்படி என்பது ஒரு நீண்டகால சட்டப் போராட்டமாகும். இதில் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள், தங்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக அகவிலைப்படி விகிதங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள பாக்கியில் 25% வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது, இருப்பினும் ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சசிகலா காலில் விழுந்தது ஏன்...? உதயநிதிக்கு இபிஎஸ் சொன்ன பதில் - சென்னையில் பரபர பிரச்சாரம்
Chennai, Tamil Nadu:Edappadi Palanisamy, Chennai Royapuram Latest News Updates: சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயகுமாரை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் வாக்கு சேகரித்தார்.
கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்...
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "எனக்கு பொறுப்பும் பதவியும் கிடைத்ததால் அப்போது ஆசீர்வாதம் வாங்குவதற்கு, (சசிகலா) காலில் விழுந்தேன்" என தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், 2017ஆம் ஆண்டில் முதலமைச்சர் பதவி கிடைத்தபோது, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழும் புகைப்படத்தை மக்கள் மன்றத்தில் காண்பித்து வாக்கு சேகரித்து வந்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே தொடர்ந்து வார்த்தை போர் வெடித்தது.
திமுகவும் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலை கடந்த காலங்களிலும், தற்போது தேர்தல் காலத்திலும் பலமுறை விமர்சித்து பரப்புரை செய்து வருகிறது. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி இன்று திமுகவின் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்து உள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்றைய பரப்புரையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவுன்சிலர் ஆகக் கூட தகுதியில்லாதவர்கள் என விமர்சித்தார்.
நான் ஆளுநராக போகிறேனா...?
தொடர்ந்து பேசிய இபிஎஸ், "பிரச்சாரத்திற்கு கருணாநிதி குடும்பமே கிளம்பிவிட்டது. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என குடும்பமே தேர்தலில் இறங்கிவிட்டது. அந்த கட்சியில் குடும்பத்தைத் தவிர்த்து வேறு யாராவது நுழைய முடியுமா? தேர்தல் பிரசாரத்தில் கூட குடும்பம் தான் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
கனிமொழி நிறைய பேசியிருக்கிறார். ஓரம்கட்டி வைத்திருக்கும்போதே இந்த குதி குதிக்கிறாங்களே… உங்களை நன்றாக வேலை வாங்குகிறார்கள். ஏற்கெனவே அழகிரிக்கு ஆப்பு வைத்துவிட்டார். எப்படியோ தப்பித் தவறி கனிமொழி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறார், அவரை வைத்து என்னை விமர்சிக்கிறார்கள். உங்கள் அப்பாவையே பார்த்துவிட்டோம், உங்களை சமாளிப்பது ஒன்றும் சிரமம் அல்ல. அந்தம்மா கண்டுபிடுச்சுட்டாங்க எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிந்ததும் ஆளுநராகப் போவாராம். இதையெல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்து பேசுறீங்க, அது யார் என எனக்கு தெரியும்.
காலில் விழுந்ததா முக்கியம்?
அதிமுக தொண்டர் கூட பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தொண்டர்களால் கட்டிக்காப்பாற்றப்படும் கட்சி அதிமுக, எவராலும் எங்களை விலைக்கு வாங்க முடியாது. பி டீமெல்லாம் தானாக துடைத்தெறியப்பட்டது. எவ்வளவோ முயன்று வழக்கு போட்டு அவப்பெயர் உண்டாக்க பார்த்தீர்கள். அவையெல்லாம் தூள் தூளாக்கப்பட்டது.
எப்போது பார்த்தாலும் காலில் விழுவதைப் பற்றியே பேசுகிறார்கள், நாட்டில் அதுவா முக்கியம்? நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள், அதை விட்டுவிட்டு இபிஎஸ் காலை பிடித்தார் என்கிறார். நான் பதவி கிடைத்ததால் ஆசிர்வாதம் வாங்கினேன், பண்புள்ள குடும்பத்தில் பிறந்தால் தானே அது தெரியும். அதிமுக ஆட்சியில் தவறு என்றால் சொல்லுங்கள், பதில் சொல்லத் தயார்.
7 முறை சிறைக்குச் சென்றேன்
நாங்கள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் என்ன தவறு..? உங்க தாத்தா முதல்வர், உங்கள் அப்பா முதல்வர், உங்களுக்கு நல்லா வசதி இருக்கிறது. அதனால் எதைப் பற்றியும் கவலையில்லை. நான் கீழே இருந்து தலைவர்கள் பேச்சைக் கேட்டு இங்கு வந்தேன், அந்த வலி என்ன என்பது எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாது. செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஆணவத்தில் பேசுகிறார்கள். இந்த ஆணவம் இருக்கக்கூடாது. பதவி வருகின்ற போது பணிவு வர வேண்டும். அது எங்களிடம் உள்ளது. அதனால் தான் மக்கள் எங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் அது இல்லையென்பதால் தான் அப்பா, மகன், அத்தை எல்லோரும் ஊர் ஊராகப் போய் ஒப்பாரி வைக்கிறீர்கள்.
தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தேனாம், கனிமொழி அவர்களே… நான் 1974ல் கட்சியில் சேர்ந்தேன், கல்லூரியில் படித்தேன், 20 வயதில் இருந்து பிறழாமல் இந்த கட்சியில் சேர்ந்து உழைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பாடுபட்டிருக்கிறேன். கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன், தலைமை அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டு 7 முறை சிறைக்குச் சென்றேன். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள்..? ஊழல் செய்து சிறைக்குச் சென்றீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் அதுதான் வித்தியாசம், நாவடக்கம் தேவை.
அமித்ஷா என்ன பாகிஸ்தான்காரரா?
இன்று அதிமுக அமித்ஷா திமுகவாகி விட்டதாம். ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லோரும் இதையே தான் பேசுகிறார்கள், அமித்ஷா என்ன பாகிஸ்தான்காரரா? அவரை பார்ப்பது தவறா? பார்த்தால் பதறுகிறார்கள். ஊழலை போட்டுக்கொடுத்து தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது, கனிமொழி அவர்களே, உங்கள் வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்து பேசுங்கள்.
இன்னமும் முடியவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அவர்களை நம்பிப் பேசி மீண்டும் திகாருக்குப் போய்விடாதீர்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அடிமையா..? விரும்பினால் கூட்டணி வைப்போம். அதிமுகவுடன் இருந்தவர்கள் திமுகவுடன் இருக்கிறார்கள். மாறி மாறி கூட்டணி வைப்பது நடக்கிறது, நாம் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியுடன் கூட்டணி. வேறு என்ன பேச முடியும்?" என்றார்.
தொடர்ந்து ஒரு புகைப்படத்தை மக்களுக்கு காட்டினார், "இந்த படத்தில் கருணாநிதி வாஜ்பாயுடன் இருக்கிறார், இப்படியெல்லாம் காக்கா புடிச்சு ஆட்சி செய்த நீங்கள் பேசலாமா? 1999, 2001 தேர்தலில் திமுக கூட்டணி வைத்தார்களா, இல்லையா? அப்போதெல்லாம் மதவாதக் கட்சி என்பது தெரியாது, உங்க அரசியல் நாடகம் எடுபடாது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். பாஜக கொள்கை அப்போதும், இப்போதும் அப்படியே இருக்கிறது. நாம் கூட்டணி வைத்தால் மட்டும் திட்டமிட்டு மதவாதக் கட்சி என்று சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஸ்டாலின் நாடகம் போடுகிறார்" என்றார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி தமிழகம் வராதது ஏன்? சீக்ரெட்டை உடைத்த பாஜக.. பரபரப்பு மேட்டர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
முகுல் சௌத்ரி செய்த சம்பவம்... யார் இந்த 21 வயது தோனி? - LSG அணிக்கு திரில் வெற்றி
Kolkata, West Bengal:KKR vs LSG 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று (ஏப். 10) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தது.
கேகேஆர் அணியில் முசர்பானிக்கு பதில் சுனில் நரைன் அணிக்குள் வந்தார். வருண் சக்ரவர்த்தி காயத்தில் இருந்து மீண்டு வராததால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேம்ரூன் கிரீன் இன்று பந்துவீசினார். லக்னோ அணியில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை.
181 ரன்கள் குவிப்பு
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் ஓபனர் ஆலன் 9 ரன்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பவர்பிளேவில் 56 ரன்களை எடுத்து கேகேஆர் 1 விக்கெட்டை இழந்திருந்தது. தொடர்ந்து ரஹானே 41(24), அங்ரிஷ் ரகுவன்ஷி 45(33) என ஓரளவு கைக்கொடுத்தனர். ரிங்கு சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், கேம்ரூன் கிரீன் - ரோவ்மான் பாவெல் ஜோடி சுமார் 40 பந்துகளை இணைந்து விளையாடி 70 ரன்களை சேர்த்தது. இதனால், கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 181 ரன்களை எடுத்தது.
கேம்ரூன் கிரீன் 32(24), ரோவ்மான் பாவெல் 39(24) ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் ராத்தீ, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து 182 ரன்கள் இலக்கை லக்னோ அணி துரத்தியது.
ஆயுஷ் பதோனி அரைசதம்
லக்னோ அணிக்கு இந்த முறை பேட்டிங்கில் டாப் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. எய்டன் மார்க்ரம் 22, மிட்செல் மார்ஷ் 15, ரிஷப் பண்ட் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமத் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் ஆயுஷ் பதோனி மட்டும் நிலையாக நின்று 34 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 54 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 14.4 ஓவரின்போது ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களுக்கு 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது முகுல் சௌத்ரி 1(2), முகமது ஷமி 1(1) என்ற நிலையில் இருந்தனர். 16வது ஓவரை சுனில் நரைன் வீசி 1 ரன்னை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம், 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டன.
முகுல் சௌத்ரியின் வெறியாட்டம்
அடுத்து முகுல் சௌத்ரியுடன் ஆவேஷ் கான் ஜோடி சேர்ந்தார். ஆவேஷ் கான் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் முகுல் சௌத்ரி அதிரடி காட்டினார். வைபவ் அரோரா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து முகுல் சௌத்ரி மிரட்டினார். 18வது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார் 6,0,0,6,1,0 என 13 ரன்கள் வந்தது. 19வது ஓவரை கேம்ரூன் கிரீன் வீசினார், அந்த ஓவரில் 0,0,6,0,4,6 என முகுல் சௌத்ரி 16 ரன்களை குவித்தார்.
இதனால், கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டன, வைபவ் அரோரா வீசினார். ஆவேஷ் கான் முதல் பந்தில் சிங்கிள் எடுத்துக் கொடுக்க, 5 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 2வது பந்தில் சிக்ஸர் அடித்து 4 பந்துகளில் 7 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 3வது பந்திலும், 4வது பந்திலும் அருமையான யார்க்கரை வீசி ரன்னை அரோரா கொடுக்கவில்லை. ஆனால், 5வது பந்தில் ஸ்வீப்பர் கவர் திசையில் சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை சமன்செய்தார். கடைசி பந்தில், அடிக்கவில்லை என்றாலும் ஒரு ரன் ஓடி ஆட்டத்தை உறுதிசெய்தார், முகுல் சௌத்ரி.
5வது இடத்தில் LSG
இதன்மூலம், 3 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வென்றது. முகுல் சௌத்ரி 27 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரி பறக்கவிட்டு 54 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். வைபவ் அரோரா மற்றும அன்குல் ராய் தலா 2 விக்கெட்டையும், சுனில் நரைன், கார்த்திக் தியாகி, கேம்ரூன் கிரீன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். லக்னோ அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Brings out the Helicopter sh
— IndianPremierLeague (@IPL) April 9, 2026
Mukul Choudhary putting on a show
Will he take #LSG home with 30 runs needed in 12 del
Updathttps://t.co/ov5gAlAtPH #TATAIPL | #KhelBindaas | #KKRvLSG | @LucknowIPL pic.twitter.com/oJ5ysfnC6R
யார் இந்த முகுல் சௌத்ரி?
இன்று 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு, கேகேஆர் அணியையும், அதன் ரசிகர்களின் அவர்களின் சொந்த மண்ணிலேயே கதறவிட்டிருக்கிறார், முகுல் சௌத்ரி. சுனில் நரைனை அடிக்க முடியாமல் திணறினாலும், ஒரு ஸ்வீப் ஷாட் ஆடி மறுமுனைக்கு தப்பித்துக் கொண்ட லாவகமும்; ஆவேஷ் கானுக்கு சிங்கிள் ரன்னை கொடுக்க மறுத்ததும் என 21 வயதில் முகுல் சௌத்ரி சிறப்பான ஆட்ட நுண்ணுணர்வு அவரிடம் உள்ளது. ராஜஸ்தான் மாநில வீரரான இவர் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். இவரை மினி ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முட்டிமோதின. இறுதியாக இவரை ரூ.2.6 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட்டில் களமிறங்கினார். 4 போட்டிகளில் 103 ரன்களை குவித்தார். தொடர்ந்து 2023 அக்டோபரில் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கி, ஜார்க்கண்டு அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓபனராக களமிறங்கி 35 ரன்களை குவித்தார். தற்போது 7 டி20 போட்டிகளில் 226 ரன்களை 37.66 சராசரியுடன் அடித்துள்ளார். அதில் 62 நாட் அவுட் அதிகபட்ச ரன்களாகும். ஆரம்பத்தில் மீடியம் பேஸராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினாலும், பின்னர் விக்கெட் கீப்பராக மாறிவிட்டார். அதிரடிக்கு பெயர் பெற்றவர் இவர். 2025-26 சையத் முஷ்டாக் அலி தொடரில் 5 இன்னிங்ஸில் 173 ரன்களை குவித்தார், ஸ்ட்ரைக் ரேட் 198.85 ஆகும். இதனால்தான் மினி ஏலத்தில் முன்னணி அணிகள் இவருக்கு முட்டிமோதின.
இது தந்தையின் கனவு
மேலும், ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் முகுல் சௌத்ரி பேசுகையில், "எனது தந்தை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே, எனது பயணம் தொடங்கிவிட்டது. தன் மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பவது அவரது கனவாக இருந்துள்ளது. நான் வயது பிரிவு போட்டிகளில் விளையாட தொடங்கினேன். சிக்கிமில் நல்ல கிரிக்கெட் பயிற்சி மையங்கள் இல்லை. நான் டெல்லி மற்றும் குருகானில் போட்டிகளில் விளையாடினேன். அது எனக்கு உதவியது.
நான் உத்தர பிரதேசத்தின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடியபோது, அன்று குறைந்த ஸ்கோரே தேவைப்பட்டது, அதில் நான் பங்காற்றினேன். அன்றே எனக்கு தெரியும் நான் பெரியளவில் முன்னேறுவன் என்று.... இரவு நான் விளையாடியதில், எனக்கு அது 2வது போட்டிதான்... கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அழுத்தம் இருக்கலாம், ஆனால் இது எனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்பும் கூட கடைசி வரை பேட் செய்து என்ன நடக்கிறது என்று பார்ப்பதே என் நோக்கமாக இருந்தது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
