\r\n\r\n

இந்தியாவின் நெக்ஸ்ட் பிளான்

\r\n\r\n

உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்துதான் அதன் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பெரும்பாலும் கத்தாரில் இருந்துதான் இந்தியா பெறுகிறது, இதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும்.

\r\n\r\n

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்துதான் அடுத்து கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றாக வேண்டும். ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவதால், இந்தியா தனது தட்டுப்பாட்டை குறைக்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - இஸ்ரேல் போர்: ரூ.25,000 வரை எகிறும் தங்கம் விலை.. ஆனந்த சீனிவாசன் அதிர்ச்சி தகவல்

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை!

\r\n\r\n

மேலும் படிக்க | ₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","url":"https://pinewz.com/tamil/story/delhi/north-west-delhi-will-petrol-and-diesel-prices-increase-how-much-is-the-crude-oil-reserve-latest-update-1772542800443","datePublished":"2026-03-03T13:00:01+05:30","dateModified":"2026-03-03T13:00:01+05:30"}\r\n\r\n

இந்தியாவின் நெக்ஸ்ட் பிளான்

\r\n\r\n

உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்துதான் அதன் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பெரும்பாலும் கத்தாரில் இருந்துதான் இந்தியா பெறுகிறது, இதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும்.

\r\n\r\n

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்துதான் அடுத்து கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றாக வேண்டும். ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவதால், இந்தியா தனது தட்டுப்பாட்டை குறைக்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - இஸ்ரேல் போர்: ரூ.25,000 வரை எகிறும் தங்கம் விலை.. ஆனந்த சீனிவாசன் அதிர்ச்சி தகவல்

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை!

\r\n\r\n

மேலும் படிக்க | ₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","keywords":"news by pincode, pin news,local news, treading news, latest news, hyperlocal news sites, hyperlocal news app, best news app, local news in hindi, zee newz, ram mandir","image":{"@type":"ImageObject","url":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2026/03/03/570177-petrool-diesela.png?itok=yd9jb3jA","height":900,"width":1200},"datePublished":"2026-03-03T13:00:01+05:30","dateModified":"2026-03-03T13:00:01+05:30","author":{"@type":"Person","name":"Sudharsan G"},"publisher":{"@type":"Organization","name":"Hyper local PWA","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":600,"height":60}}}\r\n\r\n

இந்தியாவின் நெக்ஸ்ட் பிளான்

\r\n\r\n

உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்துதான் அதன் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பெரும்பாலும் கத்தாரில் இருந்துதான் இந்தியா பெறுகிறது, இதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும்.

\r\n\r\n

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்துதான் அடுத்து கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றாக வேண்டும். ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவதால், இந்தியா தனது தட்டுப்பாட்டை குறைக்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - இஸ்ரேல் போர்: ரூ.25,000 வரை எகிறும் தங்கம் விலை.. ஆனந்த சீனிவாசன் அதிர்ச்சி தகவல்

\r\n\r\n

மேலும் படிக்க | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை!

\r\n\r\n

மேலும் படிக்க | ₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","thumbnailUrl":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2026/03/03/570177-petrool-diesela.png?itok=yd9jb3jA","uploadDate":"2026-03-03T13:00:00+05:30","dateModified":"2026-03-03T13:00:01+05:30","datePublished":"2026-03-03T13:00:01+05:30","contentUrl":"NOT AVAILABLE","url":"https://pinewz.com/tamil/story/delhi/north-west-delhi-will-petrol-and-diesel-prices-increase-how-much-is-the-crude-oil-reserve-latest-update-1772542800443","isFamilyFriendly":"http://schema.org/True","requiresSubscription":"http://schema.org/False","inLanguage":"en-hi","publisher":{"@type":"Organization","name":"pinewz","url":"https://pinewz.com/","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":"512","height":"512"}}}
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North West Delhi110085
பெட்ரோல், டீசல் விலை உயருமா...? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? - லேட்டஸ்ட் அப்டேட்
SGSudharsan G
Mar 03, 2026 13:00:01
Pista, Delhi

Petrol Diesel Price Updates: இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

கிழக்காசியாவில் பதற்றம்

ஈரான் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை குறிவைத்தும் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக், ஜோர்டன், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் மீது டிரோன்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதனால், கடந்த 5 நாள்களாகவே மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களும், சுமார் 16 லட்சம் தமிழர்களும் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஈரானில் சுமார் 4,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இஸ்ரேலிலும் இந்தியர்கள் கணிசமாக பணியாற்றி வருகின்றனர்.

அடைக்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தி 

இந்தியா உள்பட உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கப்பல்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன.  தற்போது போர் பதற்றம் காரணமாகவும், ஈரான் தாக்கியதாலும் அந்த பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தட்டுப்பாடு ஏற்படுமா?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீத பங்கை இறக்குமதியே செய்கிறது. கச்சா எண்ணெய் மூலமே பெட்ரோல் மற்றும் டீசல் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 50% அளவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வருகிறது. அதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகதான் கொண்டுவரப்படும். தற்போதைய போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

உயரும் கச்சா எண்ணெய் விலை

கிழக்காசியாவில் போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலிலும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. ஒரே பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு விற்பனையாகி வருகிறது, இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு பின் சுமார் 10 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமானால், இது 100 அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும்  என்றும் அஞ்சப்படுகிறது. 

ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக...

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும். கடல் வழியான கச்சா எண்ணெய் ஏற்றுமதி சுமார் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கும், எல்பிஜி ஏற்றுமதியில் 20 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன.

கச்சா எண்ணெய் இருப்பு

இந்நிலையில், கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தும் இந்திய அரசு தரப்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயருமா? 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டாலும் தற்சமயத்திற்கு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி இறக்குமதி செய்வதற்கான மாற்று ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்தியாவின் நெக்ஸ்ட் பிளான்

உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்துதான் அதன் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பெரும்பாலும் கத்தாரில் இருந்துதான் இந்தியா பெறுகிறது, இதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்துதான் அடுத்து கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றாக வேண்டும். ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவதால், இந்தியா தனது தட்டுப்பாட்டை குறைக்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ஈரான் - இஸ்ரேல் போர்: ரூ.25,000 வரை எகிறும் தங்கம் விலை.. ஆனந்த சீனிவாசன் அதிர்ச்சி தகவல்

மேலும் படிக்க | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை!

மேலும் படிக்க | ₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGSudharsan G
Mar 13, 2026 13:15:40
New Delhi, Delhi:

Petroleum Ministry On LPG Issue: பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வீடுகளுக்கு வழக்கம்போல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் திட்டவட்டம். நாடு முழுவதும் LPG சிலிண்டர்கள் விநியோகத்தில் தேக்கமோ, தட்பாடோ ஏதும் இல்லை. சிலிண்டர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

ரிசர்வேஷன் அதிகரிப்பு

தேவையற்ற அச்சத்தால் வரிசையில் நிற்க வேண்டாம். LPG விற்பனையாளரிடமும் LPG தட்டுபாடு ஏதுமில்லை. பெட்ரோல், டீசலை வாங்க பெட்ரோல் பங்கை முற்றுகையிடாதீர். போருக்கு முந்தைய காலகட்டத்தில் சராசரியாக 55.7 லட்சமாக இருந்த LPG முன்பதிவுகள், தற்போது 75.7 லட்சமாக உயர்ந்துள்ளது. அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது... LPG-ஐ பொறுத்தவரை, கவலையளிக்கும் விஷயமாகவே அது இல்லை, என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் கடுமையான சூழ்நிலை இருந்தபோதிலும், நமது 25,000 விநியோகஸ்தர்களிடம் தட்டுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம், பீதியில் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என பேசினார். 

நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம்...

மேலும் அவர், "கச்சா எண்ணெய்யை பொருத்தவரை, நம்மிடம் 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறந் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். இதன் விளைவாக, இந்த எரிபொருள்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. நமது அனைத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது 100% திறனில் அல்லது அதற்கும் அதிகமான திறனில் இயங்குகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமான அளவு கச்சா எண்ணெய் வைத்திருக்கின்றன. விநியோகமும் தொடர்ந்து சீராக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

அதிகரித்த LPG உற்பத்தி

வீட்டு உபயோகத்திற்கு LPG தடையற்ற விநியோகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் LPG விநியோகம் வழங்கப்படுகிறது. உள்நாட்டு LPG உற்பத்தியும் 30% இன்று அதிகரித்துள்ளது. மார்ச் 5ஆம் தேதியுடன் ஒப்பிட்டால், நமது சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது 30% அதிக LPG-ஐ. வணிக சிலிண்டரை பொறுத்தவரை, முன்னுரிமை விநியோகத்தை எளிதாக்க அவை மாநில அரசுகளின் வசம் வைக்கப்பட்டுள்ளன. முன்னுரிமை அளவுகோல்களை நிர்ணயித்து, இந்த வணிக ரீதியான நுகர்வோரை திறம்பட சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பீதி வேண்டாம்

உள்நாட்டில் நுகர்வோருக்கு PNG (குழாய் இயற்கை எரிவாயு) மற்றும் CNG (அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு) உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் எந்தவித தடங்களும், தட்டுபாடும் இல்லாமல் உறுதிசெய்யப்படுகிறது. இந்தச் சூழலில், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. மேலும், முக்கிய நகரங்கள் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், வணிக ரீதியான நுகர்வோர் பலர் தற்போது LPG விநியோகங்களை நம்பியிருப்பதால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வணிக நுகர்வோர் கவனத்திற்கு...

மத்திய அரசு அவர்களின் கவலைகளை போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அத்தகைய அனைத்து வணிக நுகர்வோரும் PNG இணைப்பை பெற தங்களின் உள்ளூர் நகர எரிவாயு விநியோக நெட்வோர்க்கின் வழங்குநரையோ அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட டீலரை தொடர்புகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார். வணிக ரீதியான சிலிண்டருக்கே தற்போது தட்டுப்பாடு நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிந்தால் PNG-க்கு மாறிவிடுங்கள்...

மேலும் கூறிய அவர், "LNG விநியோகங்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. LPG பற்றாக்குறையும் இல்லை. அனைத்து நுகர்வோரிடமும் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன். LPG-ல் இருந்து PNG-க்கு மாறக்கூடியவர்கள் உடனடியாக மாறலாம். உங்களிடம் நான் குறிப்பிட்டது போல், உடனடியாக PNG-க்கு மாறுவதற்கு 6 கோடி குடும்பங்கள் உள்ளன. இந்த நேரத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வீட்டு உபயோகத்திற்கான LPG-ஐ எங்களால் வழங்க முடியுமா...? இல்லையா...? என்பதுதான். அதற்கு பதில், ஆம் முடியும் என்பதே..." என்றார்.

மேலும் படிக்க | LPG Cylinder: இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் டாப் 6 நாடுகள்!

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்கள்தான், அதற்குமேல் தாங்காது! சேலத்தில் உணவகங்கள் மூடப்படும் நிலை

மேலும் படிக்க | LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டெல்லியில் ரூ.2,500 கொடுத்தும் கிடைக்காத நிலை.. தடுமாறும் தலைநகரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

346
comment0
Report
RSRK Spark
Mar 11, 2026 06:35:33
Chennai, Tamil Nadu:

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து நிற்க உள்ள நிலையில், திமுக 20க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்குகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஒரு வழியாக இறுதி செய்யப்பட்டது. திமுக தலைமை காங்கிரஸிற்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களாக இழுபறிகளில் இருந்த இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இருப்பினும் 28 தொகுதிகளை தேர்வு செய்வதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மனக்கசப்பு உருவாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு : 8 முக்கிய அப்டேட்டுகள்

காங்கிரஸ் கேட்கும் 28 தொகுதி?

கடந்த இரண்டு, மூன்று தேர்தலாக சுமுகமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் இந்த முறை கிட்டத்தட்ட வெளியேறியது என்று சொல்லலாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 தொகுதி வரை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் திமுக தரப்பு 25 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணி உடையலாம் என்ற பரபரப்புகளும் இருந்தது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல்வர் மு க ஸ்டாலினை நேரடியாக சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக முதல்வர் ஒப்புக்கொண்டதால் இந்த கூட்டணி தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

தொகுதிகளில் தொடங்கிய பிரச்சினை!

28 தொகுதி என்பது முடிவு செய்யப்பட்டாலும், அது எந்தெந்த தொகுதிகள் என்பது இழுபறியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை திமுக தேர்தல் குழு ஒதுக்க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது திமுக தோல்வியடைந்த 40 தொகுதிகளில் இருந்து, வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள 20 தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முக்கிய தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்?

காங்கிரஸ் குறி வைக்கும் தொகுதிகள் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிற்கு சாதகமாகவும், கட்சியில் உள்ள சீனியர்கள் நிற்கும் தொகுதியாக இருப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் அவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ள கன்னியாகுமரி, தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதல் சீட்டுகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவில் கூட்டணி கட்சிகள் அதிகம் இருப்பதால், காங்கிரஸ் கேட்கும் குறிப்பிட்ட தொகுதிகளை அப்படியே விட்டுக் கொடுக்க முடியாது என்று திமுக தொகுதி பங்கீடு குழு திட்டவட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கிய தொகுதிகளை குறிப்பாக திமுகவிற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவே தக்க வைத்துக் கொள்ள விரும்புதல் எந்தெந்த தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பதில் இரு தரப்பும் கடுமையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் பனிப்போர் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. 

எப்போதும் திமுக கொடுக்கும் தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டு செல்லும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் வந்துள்ளதால் அவர்களை வைத்து பேரம் பேசி கூடுதல் சீட்டுகளை வாங்கியுள்ளது என்றும், நாங்கள் கேட்கும் தொகுதி கொடுக்காவிட்டால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு சென்று விடுவோம் என்று கூறியே காங்கிரஸ் கட்சி மூன்று சீட்டுகளை கூடுதலாக வாங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் கடைசி நேரத்தில் சீனியர் தலைவர்களின் பேச்சு வார்த்தையில் தற்போது இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டு, இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சுமூகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: பாஜகவின் திரிசூல மிரட்டல்.. பி- டீமாக செயல்படும் விஜய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
SGSudharsan G
Mar 10, 2026 12:15:02
Madurai, Tamil Nadu:

International Status For Madurai Airport: மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று (மார்ச் 10) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீட்டிக்கப்படும் மற்றும் புதிய முனையமும் அமைக்கப்படும்.

பல ஆண்டுகால கோரிக்கை

தமிழ்நாட்டின் 'தூங்கா நகரம்' மற்றும்'கோயில் நகரம்' என பொதுவாக அழைக்கப்படும் மதுரைக்கு மற்றுமொரு சிறப்பாக,அதன் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது மதுரை மக்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்த சூழலில், இன்று அமைச்சரவையில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் என்ன பயன்?

தமிழ்நாட்டின் பழைமையான விமான நிலையங்களில் மதுரையும் ஒன்றாகும். தென் தமிழகத்தின் முக்கிய நகரமாகவும், முக்கிய சுற்றுலா நகரவாகவும் விளங்கும் மதுரைக்கு, இந்த அந்தஸ்தை வழங்குவது, அதன் சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். மேலும் அப்பகுதியில் ஒன்றிணைந்த வளர்ச்சியையும் இது கொடுக்கும்.

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவதன் மூலம், இது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் ஆன்மீகச் சுற்றுலா வரும் பயணிகளையும், வணிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் வளர்ச்சியை கொண்டுவரும்.

சு.வெங்கடேசன் கருத்து  

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது X பக்கத்தில், "எங்களின் இடைவிடாத போராட்டம் வெற்றிபெற்றது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கொள்கை முடிவு இன்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தென் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் இம்முடிவுக்காக நீண்ட காலம், இடைவிடாது போராடி வந்தோம். எங்களின் போராட்டம் வெற்றி பெற்றது. இனி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கானப் பணிகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மதுரையை வட்டமிடும் அரசியல் கழுகுகள்

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சத்தில் உள்ளது. இம்முறை திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமின்றி மதுரையில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளும் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்து முன்னணி இங்கு முருகப் பக்தர்கள் மாநாட்டை நடத்தியது, தவெக இங்கு 2வது மாநில மாநாட்டை நடத்தியது, திமுக சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இணையும் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தியிருந்தது. கடந்த மார்ச் 1ஆம் தேதி அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார்.

மார்ச் 1இல் மதுரை வந்த பிரதமர் மோடி

கடந்த மார்ச் 1ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மட்டுமின்றி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனத்தையும் மேற்கொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயிரிழந்த முருகப் பக்தரான பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாஜகவும், அதிமுகவும் மதுரையை கைப்பற்ற பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், நீண்ட கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கான சர்வதேச அந்தஸ்தை மத்திய பாஜக அரசு தற்போது கொள்கை ரீதியில் நிறைவேற்றியிருக்கிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
YYuvashree
Mar 10, 2026 10:00:51
Coimbatore, Tamil Nadu:

No Dosa Omelette In Hotels Cylinder Price Hike : மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இந்தியாவில் சிலிண்டரின் விலை அதிகரித்திருக்கிறது. இதையடுத்து, எரிவாயு பற்றாக்குறை நிலவும் சூழலும் உருவாகி வருகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருக்கும் ஹோட்டல்கள், தோசை மற்றும் ஆம்லெட் போடுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

போர் சூழல்..

ஈரான் - இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில், பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அவ்வழியே ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலையும் உயர்கிறது. குறிப்பாக, எரி பொருள் தயாரிக்க உதவும் கச்சா எண்ணெயை முன்பு போல ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பெரிய கொள்முதல் வாடிக்கையாளராக இருக்கும் இந்தியாவிற்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழல் காரணமாக, இந்தியாவில் ஒரே நாளில், வீட்டு உபயோக LPG கேஸ் சிலிண்டர்களின் விலை, ரூ.60 வரை அதிகரித்தது. இதையடுத்து இன்றைய நாளில் சுமார் ரூ.930 வரை விற்கப்படுகிறது.

தோசை-ஆம்லெட் கிடையாது!

கோயம்புத்தூரில் சில ஹோட்டல்களில், தோசை - ஆம்லெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தோசை அல்லது ஆம்லெட் போடுவதற்கு, தோசைக்கல்லை அதிக தீயில் வைக்க வேண்டும். இதற்கு எரிவாயு அதிகமாக தேவைப்படும். இதனால், கோயம்புத்தூரில் இருக்கும் சில உணவகங்கள், தோசை மற்றும் ஆம்லெட் வேண்டாமென முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

அதே சமயத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோயம்புத்தூரை சேர்ந்த பல ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் 100 வகையான உணவுகள் மட்டுமே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காளிஃபிளவர் ரோஸ்ட், தந்தூரி போன்ற உணவுகளுக்கு கேஸ் செலவாகும் என்பதால், அதன் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலை இழக்கும் அபாயம்!

ஈரான் போர் எதிரொலி இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு - கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 5000 ஹோட்டல்கள் சமையல் கேஸ் சிலிண்டர் இல்லாமல் மூடும் அபாய நிலை - சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ஷாஜகான் வேதனை தெரிவித்து உள்ளார்.

மத்திய மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்து உள்ளதால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது . கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி உட்பட மாவட்டம் முழுவதும் பெரிய மற்றும் சிரிய ஹோட்டல்கள் என சுமார் 5 ஆயிரம் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. சமையல் கேஸ் சிலிண்டர்கள் இன்னமும் 3 நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் ஏஜெண்டுகளிடம் இருந்து வருவது நிறுத்தப்பட்டு விட்டது... இதனால் சமையல் கேஸ் சிலிண்டர்கள் இல்லாமல் உணவகங்கள் மூடும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது - இதனால் சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டு உள்ளதாக குமரி மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ஷாஜகான் வேதனை தெரிவித்தார் - மத்திய மாநில அரசுகள் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இல்லேயேல் நாடு ஸ்தம்பித்து விடும் என்றும் கவலை தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் என்ன?

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டினை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இதனை கூறினார். இதையடுத்து, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நாளை இது குறித்த ஆலோசனை கூட்டம், ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கவலையை விடுங்க, இதோ 5 சிறந்த மாற்றுகள்

மேலும் படிக்க | ஷாக் அடிக்கும் LPG லிண்டர் விலை! சென்னையில் இவ்வளவு ரூபாய்க்கு விற்பனையா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Mar 10, 2026 07:54:24
Tamil Nadu:

தமிழ்நாடு அரசு GBM 2.0 அப்டேட்: தமிழ்நாடு அரசு கருவூலத் துறை மூலம் ஜிபிஎம் 2.0 (GBM 2.0 - Global Beneficiary Master) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 11 இலக்கத் தனித்துவ ஐடி உருவாக்கப்படுகிறது. IFHRMS போர்ட்டலில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் PF விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது குறித்த முழுமையான வழிகாட்டி பற்றி பார்ப்போம். 

ஜிபிஎம் 2.0 (GBM 2.0) என்றால் என்ன?

ஜிபிஎம் 2.0 என்பதன் முழு வடிவம் Global Beneficiary Master என்பதாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட தரவுத் தொகுப்பு (Personal Data). உங்கள் வங்கி கணக்கு எண் (Bank Account), ஆதார் (Aadhaar), பான் கார்டு  (PAN Card), மொபைல் எண் (Mobile) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரி போன்றவை உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும். ஒரு ஊழியரின் தரவு மற்ற ஊழியரோடு எந்த இடத்திலும் மேட்ச் ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த Data Cleansing பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எனத் தனியாக 11 இலக்க GBM ID உருவாக்கப்படும்.

உங்களுடைய GBM ID மற்றும் தரவுகளைச் சரிபார்ப்பது எப்படி?

உங்களுக்கு GBM ID உருவாகிவிட்டதா அல்லது உங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் (Errors) உள்ளதா என்பதை அறிய கீழ்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்.

  • IFHRMS போர்ட்டலில் Initiator Login செய்யவும்.
  • Other Application என்பதற்குச் சென்று, அதில் GBM 2 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து Beneficiary -> DTO Beneficiary Details என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உள்ள Know Your Option பகுதிக்குச் செல்லுங்கள்.
  • உங்கள் பெயர், GBM ID, ஆக்டிவ் ஸ்டேட்டஸ் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.

உங்களுடைய GBM ID-ல் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா எப்படி பார்ப்பது?

  1. E-Service -> Human Resource -> GBM Report Viewer மூலம் ஒரு எக்செல் (Excel) கோப்பைத் தரவிறக்கம் செய்யவும்.
  2. அதில் Exception Value மற்றும் Exception Remark என்ற பகுதியில் உங்கள் தரவுகளில் உள்ள பிழைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

உங்களுடைய GBM ID-ல் எப்படி திருத்தம் செய்வது? 

அரசு தரப்பில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெயர் மற்றும் பிறந்த தேதி

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பணிப் பதிவேடு (SR), IFHRMS ப்ரொபைல், மற்றும் CPS/GPF அக்கவுண்ட் ஸ்லிப் ஆகிய மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயரின் இனிஷியல் (Initial) எப்போதும் பெயருக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) இருக்க வேண்டும்; நடுவில் புள்ளி (Full Stop) வைக்கக்கூடாது.

பணியேற்ற தேதி (DOJ)

உங்கள் SR புத்தகத்தில் உள்ள பணியேற்ற தேதியும், IFHRMS மற்றும் CPS/GPF ஸ்லிப்பில் உள்ள தேதியும் சரியாகப் பொருந்த வேண்டும்.

PF வகை (PF Type)

சிலருக்கு CPS/GPF ஆப்ஷன் செலக்ட் செய்ய முடியாமல் மறைந்திருக்கும் (Hide). இதற்கு ஒரு சிறிய ட்ரிக் உள்ளது: Employee Category-க்குச் சென்று 'Government Servant' என்பதை மாற்றிவிட்டு, மீண்டும் 'TN Government' எனத் தேர்ந்தெடுங்கள். இப்போது அந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும்.

மொபைல் எண்

கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், இருவருக்கும் தனித்தனி மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒரே எண்ணைப் பகிரக்கூடாது.

GBM ID திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன? 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் உரிய ஆதாரங்களை 1 MB அளவிற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • பெயர் / பிறந்த தேதி மாற்றம் (SR புத்தகத்தின் முதல் பக்கம்)
  • பணியேற்ற தேதி மாற்றம் (SR புத்தகத்தின் 58-வது பக்கம்)
  • தந்தை பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு நகல் அவசியம்
  • CPS / GPF எண் திருத்தம் (அலாட்மெண்ட் நம்பர் (Allotment Number) நகல்)

இந்த விவரங்கள் அனைத்தையும் சரியாகப் புதுப்பித்துவிட்டால், உங்களுக்கு வர வேண்டிய சம்பளம் மற்றும் இதர பணப் பலன்கள் எந்தத் தடையுமின்றி உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இல்லையெனில், அவை நிறுத்தி வைக்கப்பட (Hold) வாய்ப்புள்ளது. எனவே இந்த GBM 2.0 பணிகளை விரைந்து முடியுங்கள்.

மேலும் படிக்க - பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்: டிஆர்பி தேர்வில் 15 சிறப்பு மதிப்பெண்கள்

மேலும் படிக்க - பத்திரப்பதிவு : தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

மேலும் படிக்க - வெறும் 10,000 ரூபாயில் பீச் வெட்டிங்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. காதலர்களுக்கு குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 10, 2026 07:37:51
New Delhi, Delhi:

Union Government Invokes ESMA: இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்து வருவதாலும், ஈரான் அதற்கு பதிலடி கொடுப்பதாலும், மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் நிலவுகிறது.

எஸ்மாவை செயல்படுத்திய மத்திய அரசு

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து அதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, தற்போது பாதிப்பை சந்திக்க தொடங்கியிருக்கிறது. போர் பதற்றம் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதிசெய்யும் பொருட்டு, 1955ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள்  சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த சட்டம் பொதுவாக எஸ்மா (ESMA) என்றழைக்கப்படுகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள  அறிவிப்பில், "இயற்கை எரிவாயு விநியோகத்தை முன்னுரிமை ஒதுக்கீடாகக் கருத வேண்டும். மேலும் அவர்களின் சராசரி கடந்த 6 மாத சராசரி எரிவாயு நுகர்வை கணக்கிட்டு, 100% அளவிற்கு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்மா என்றால் என்ன?

விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பதுக்கலைத் தடுக்கும் நோக்கில் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீது ESMA சட்டம் அமலானது. பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இச்சட்டத்தின்கழ், அபராதம் விதிக்கப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கிய அத்தியாவசிய சேவைகளின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்வதற்காகவே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் பட்டியலிடப்பட்டிருக்கும். மேலும் மாநில அரசுகளும் தேவையான சேவைகளை சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

கடைசியாக எஸ்மா அமலானது எப்போது?

இதற்கு முன், ரஷ்யா - உக்ரைன் போரின் போது கச்சா எண்ணெய் துறையில் ESMA விதிகளை மத்திய அறசு செயல்படுத்தியத. அபபோது, உள்நாட்டில் எரிபொருள் தட்டுபான்றி கிடைப்பது சுத்திகரிப்பு நிலையங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிக லாபம் கிடைக்கிறது என்பதற்காக ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

நம் நாட்டில் சுமார் 33.08 கோடி எல்பிஜி சிலிண்டர் பயனாள்ரகள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி எல்பிஜி சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், வீட்டு உபயோகத்தை தாண்டி ஹோட்டல்களிலோ அல்லது வணிக ரீதியிலோ பயன்படுத்தாமல் தடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க | சென்னை ஹோட்டல்களும் முடங்குமா? வணிக கேஸ் சிலிண்டர் டெலிவரி நிறுத்தம், பிரதமருக்கு பறந்த கடிதம்

மேலும் படிக்க | Free Gas Cylinder: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

மேலும் படிக்க | ஷாக் அடிக்கும் LPG லிண்டர் விலை! சென்னையில் இவ்வளவு ரூபாய்க்கு விற்பனையா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Mar 10, 2026 04:33:40
Mumbai, Maharashtra:

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்பாடுகளை தாண்டி அவர்களின் தனிப்பட்ட காதல் வாழ்க்கை எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் காதல் கதை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டி20 உலக கோப்பை முடிந்த பிறகு இது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இஷான் கிசனுடன் அவரது காதலி அதிதி ஹுண்டியா இருந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இஷான் கிஷனின் காதலி யார்? இருவருக்கும் இடையே தொடர்பு எப்படி வந்தது? மற்றும் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க: இந்திய அணிக்கு அடிச்சது லக்... எகிறிய பரிசுத்தொகை... காரணம் டிரம்ப் - ஏன் தெரியுமா?

மைதானத்தில் நடந்த கொண்டாட்டம்!

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த இறுதி போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனை மைதானத்தில் இருந்து அவரது காதலி அதிதி ஹுண்டியா ரசித்துக் கொண்டிருந்தார். உலக கோப்பையை வென்றவுடன் அனைத்து வீரர்களும் தங்களது குடும்பத்துடன் மைதானத்தில் வலம் வந்தனர். அப்போது இஷான் கிஷனும் அவரது காதலியான அதிதி ஹுண்டியாவுடன் நேரத்தை செலவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வயது வித்தியாசம் எவ்வளவு?

இஷான் கிஷன் மற்றும் அவரது காதலி அதிதி ஹுண்டியா இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இஷான் கிசன் 1998 ஆம் ஆண்டு பிறந்தார், ஆனால் அவரது காதலி அதிதி ஹுண்டியா 1997 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஒரு வருடம் ஆகும். இந்நிலையில் தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பலரும் தங்களை விட வயதில் மூத்த பெண்ணை தான் கரம் பிடித்துள்ளனர். தற்போது இஷான் கிஷனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். 

யார் இந்த அதிதி ஹுண்டியா?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அதிதி ஹுண்டியா. பிரபலமான மாடல் மற்றும் தொழில் முனைவராக உள்ள அதிதி ஹுண்டியா ஜெய்பூரில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாடலிங் மற்றும் பேஷன் ஷோக்களில் கலந்து பிரபலமானார். 2017ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை முன்னேறி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார் அதிதி ஹுண்டியா. அதன் பிறகு, 2018ம் ஆண்டில் மிஸ் திவா சூப்ரநேஷனல் பட்டத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் 2019ல் நடைபெற்ற சர்வதேச மிஸ் சூப்ரநேஷனல் அழகி போட்டியிலும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். தற்போது ஃபேஷன் மாடலிங் உலகில் கொடிகட்டி பறக்கும் அதிதி ஹுண்டியா, சொந்தமாக தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் இஷான் கிஷனுக்கு நேரில் வந்து ஆதரவளிப்பதை அதிதி பல வருடங்களாகவே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இஷான் கிஷன்!

இந்திய அணி 2026 டி20 உலக கோப்பைக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டது. தொடக்கத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பெறாத இஷான் கிஷன் டி20 உலக கோப்பைக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தான் அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். இந்த டி20 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியமான ஒரு காரணமாகவும் இஷான் கிஷன் இருந்துள்ளார். சில பிரச்சனைகளால் பிசிசிஐயின் வருடாந்திர சம்பளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவர் தன்னுடைய திறமையால் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவை பார்த்து வயித்தெரிச்சல் படும் பாகிஸ்தான்.. வெற்றிக்கு பின் கதறல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 09, 2026 15:01:00
New Delhi, Delhi:

Israel Iran War, LPG Demand In India: இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரானின் மீது சுமார் 10 நாள்களாக தாக்குதல் தொடுத்து வருகின்றன. அந்நாட்டின் ராணுவ மற்றும் விமானப்படை தளவாடங்களையும், ராணுவ கட்டமைப்புகளையும், கடற்படை தளங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றன.

ஈரான் கடுமையான பின்னடைவு 

ஈரானின் எண்ணெய் கிடங்கை குறிவைத்தும் இஸ்ரேல் நேற்று தாக்குதல் தொடுத்தது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட தலைவர்களும்; ராணுவ அதிகாரிகளும் இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். 

ஈரான் கடுமையான பின்னடைவை சந்தித்து வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன, அமெரிக்க அதிபர் டிரம்பும் அதையே கூறி வருகிறார். ஈரானும் ஒருபுறம் தனது ஆட்சியையும் இறையாண்மையையும் கட்டிக்காக்க போராடி வருகிறது, தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெய், LPG, LNG போன்ற எரிபொருள்களை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றன. சௌதி அரேபியா, கத்தார் நாடுகளில் இருந்துதான் இந்தியா அதிகமாக LPG-ஐ பெற்று வருகிறது. தற்போது ஈரான் அருகே இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியிலும் பெரும் பிரச்னை நிலவுகிறது. 20% உலக கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகவே நடக்கிறது.

சிலிண்டர் விலை உயர்வு

ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியிருக்கிறது, சௌதி அரேபியாவில் எண்ணெய் கிடங்குகள் மூடப்பட்டன, கத்தாரின் LNG ஏற்றுமதியும் தடைப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை சந்தையில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் உள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும், வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளன. மேலும் ஈரான் - இஸ்ரேல் போர் தொடரும் என்பதால் LPG தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) நாட்டில் LPG சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் சிலிண்டர் விலை ரூ.50 அளவுக்கு உயர்ந்தது. ஓராண்டு காலத்தில் ரூ.110 அளவிற்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், விலை உயர்வு இருந்தபோதும், நேபாள், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை காட்டிலும் இந்தியாவில் LPG மலிவாக உள்ளது.

காத்திருப்பு காலம் அதிகரிப்பு 

இந்நிலையில், LPG தட்டுப்பாட்டை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. LPG புக்கிங் காலம், 21 நாள்களில் இருந்து 25 நாள்கள் வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பயனர்கள் சிலிண்டரை வாங்கிவிட்டு அடுத்த சிலிண்டரை வாங்க 25 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும். உடனடியாக சிலிண்டரை வாங்க இயலாது.

விற்பனை செய்ய முன்வரும் நாடுகள்

LPG சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், LPG உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு LPG நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை LPG சிலிண்டரை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?

மேலும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - தெளிவாக விளக்கிய மத்திய அரசு

மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை உயருமா...? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? - லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 09, 2026 10:59:07
New Delhi, Delhi:

EAM Jaishankar On West Asia Conflict: இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 9) தொடங்கியது. இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தற்போது ஈரான் மீது கடந்த ஒரு வாரக்காலமாக தாக்குதல் தொடுப்பதாலும், ஈரானின் பதிலடி தாக்குதலாலும் மேற்காசியாவில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.

ஜெய்சங்கர் பேசியது என்ன?

அந்த வகையில், மேற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கி உள்ளார். அதில், இந்தியா அமைதி, பேச்சுவார்த்தை, தூதரக செயல்பாடுகளையே இந்தியா விரும்புகிறது என்றார். மேலும், போர் பதற்றத்தை தணிப்பது, நிலைமை கட்டுப்படுதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றில் இந்தியா உடன்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இன்று மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில், ஜெய்சங்கர் மாநிலங்களவையில் ஆற்றிய உரையில், "அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்க பயன்படுத்தப்பட வேண்டும்" என்றும் இந்திய அரசு தொடர்ந்து நம்புகிறது. மேற்கு ஆசியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டிய அவசியம்" என்றார்.

உற்று கவனிக்கும் பிரதமர்

பிரதமர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார் என்றும் மேற்கு ஆசிய பிராந்தியம் நிலையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர் என்றும் அவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும் கூறினார்.

இந்திய மக்களின் நலனே முக்கியம்

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வளைகுடா பிராந்தியத்தில் பணிபுரியும் இந்தியர்களின் வாழ்க்கையிலும், உலகளாவிய எரிபொருள் விலைகளிலும் போரின் தாக்கம் பேசினார்.  மேலும் ஜெய்சங்கர், இந்த போரில் ஈரானின் தலைமைத்துவ மட்டத்தில் உட்பட ஏராளமான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக கூறினார். பேச்சுவார்த்தை மட்டுமே போர் பதற்றத்தை குறைப்பதற்கான ஒரே வழி என்றார். 

மேலும், மார்ச் 1ஆம் தேதி இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமைச்சரவை பாதுகாப்பு குழு கூடியதாக தெரிவித்தார். "மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இந்திய மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை பாதுகாப்பு குழு கவலை கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம், வணிக நடவடிக்கைகளுக்கான தாக்கங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்றார்.

2 இந்தியர்கள் உயிரிழப்பு 

மேலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு அளிக்கும் பங்களிப்பு  குறித்து பேசிய அவர், "வளைகுடா ஒரு முக்கியமான வர்த்தாக கூட்டாளி. ஆண்டுதோறும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான வணிகம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்" என்றார். இந்தியா               வின் கடற்படையினரை இழந்துள்ளோம் என்றும் மேலும் ஒருவரை காணவில்லை என்றும் பேசினார். 

கடந்த ஜனவரி 5ஆம் தேதி அன்று, ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது. அங்கு வசிப்பவர்கள் தூதரகத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய எச்சரிக்கையுடன் இருக்கவும், தூதரகத்தின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது" என்றார்.

மூன்று முக்கிய வழிகாட்டுதல்கள்

இந்தியாவின் அணுகுமுறையில் மூன்று முக்கிய விஷயங்களை அவர் எடுத்துரைத்தார். அவை:

1. இந்தியா அமைதியை விரும்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக செயல்பாட்டை தொடர வலியுறுத்துகிறது. போர் பதற்றத்தை குறைப்பது, நிலைமையை கட்டுக்குள் வைத்தல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். 

2. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள இந்திய மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை. அந்த நோக்கத்திற்காக அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். 

3. எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் உட்டப தேசிய நலனே எப்போதும் மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 09, 2026 03:57:38
Chennai, Tamil Nadu:

Sanju Samson: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது, தொடர்ச்சியாக 2 முறை வென்று கோப்பையை தக்கவைத்திருக்கிறது. 

சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருக்கிறது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது, தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்றார். நிச்சயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் சஞ்சு சாம்சனுக்கான தொடராகவே அமைந்துவிட்டது.

46 ரன்களை மட்டும் அடித்த சஞ்சு

கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் சஞ்சு சாம்சன் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் கூட அவரால் சோபிக்க முடியவில்லை. 5 இன்னிங்ஸில் 46 ரன்களை மட்டுமே சுப்மான் கில் அடித்தார். மோசமான பார்ம் காரணமாக, டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே ஓபனிங்கில் களமிறங்கினர்.

சஞ்சுவுக்கு கிடைத்த வாய்ப்பு

நமீபியாவுக்கு எதிரான 2வது போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. இதனால், அந்த போட்டியில் சஞ்சுவுக்கு இடம்கிடைத்தது. அதிலும் அவர் சொதப்ப, மீண்டும் 3வது போட்டியில் அபிஷேக் உள்ளே வந்ததும், சஞ்சுவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்த பின்னரும், அபிஷேக் சர்மாவின் தொடர்ச்சியான சொதப்பல் காரணமாகவும் இந்திய அணி ஓபனிங்கில் வலது - இடது காம்பினேஷனை கொண்டுவர நினைத்தது. இதனால், சஞ்சுவுக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதிலும் சொதப்பினார்.

சஞ்சு சாம்சனின் எழுச்சி 

கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வென்றால்தான் அரையிறுதி போக என்ற சூழலும், அழுத்தமும் இந்திய அணிக்கு இருந்தது. ஈடன் கார்டன்ஸில் அன்றைய தினம் இந்திய அணி 196 ரன்களை சேஸ் செய்து அரையிறுதியில் அடி எடுத்து வைத்தது. அதற்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார், 97 நாட் அவுட்... 

தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி 253 ரன்களை குவிக்க, அப்போது சஞ்சு சாம்சன் 89 ரன்களை அடித்திரு்தார்; நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் 89 ரன்களை அடித்து இந்திய அணி 255 ரன்களை அடிக்க முக்கிய பங்காற்றினார். அழுத்தம் நிறைந்த மூன்று நாக்-அவுட் போட்டிகளிலும், அசால்ட்டாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை உறுதி செய்து கொடுத்தார். வெறும் 5 இன்னிங்ஸில் 321 ரன்களை அடித்து மட்டுமின்றி அவரது ஸ்ட்ரைக் ரேட் 199 ஆகவும் இருந்தது.

சஞ்சு சாம்சன் சொன்னது என்ன?

இந்தச் சூழலில், டி20 உலகக் கோப்பையின் ஆரம்பத்தில் அணியில் இடம் கிடைக்காததை சஞ்சு சாம்சன் எப்படி கடந்து சென்றார் என்பது குறித்தும், அடுத்த வாய்ப்புக்காக தன்னை எப்படி தயார் படுத்திக்கொண்டார் என்பதையும் அவரே சொல்லியிருக்கிறார். நேற்றைய போட்டிக்கு பின், தொடர் நாயகன் விருதையும் பெற்றதும் பேசிய சஞ்சு சாம்சன், நியூசிலாந்து தொடரில் தனது மோசமான ஆட்டத்தால், டி20 உலகக் கோப்பை கனவுகள் சுக்குநூறாக உடைந்தது என்றும்; மூத்த வீரர்களின் வழிகாட்டுதலும், பரிந்துரையும்தான் தனக்கு உதவியதாகவும் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையைச் சொல்லப் போனால், மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய வழிகாட்டுதல்களும், பரிந்துரைகளும் கிடைத்தன. பல முன்னாள் வீரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு உதவ முன்வந்தனர், குறிப்பாக கடந்த 2 மாதங்களாக... அதை இங்கே பகிர்ந்தகொள்ள விரும்புகிறேன்.

சஞ்சுவுக்கு வழிகாட்டிய சச்சின்

சச்சின் டெண்டுல்கருடன் நான் தொடர்ந்து உரையாடி வந்தேன். நான் ஆஸ்திரேலிய தொடரில் (அக்டோபரில் நடந்த டி20ஐ தொடர்) வாய்ப்பில்லாமல் வெளியே இருந்தேன், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என யோசித்தேன். எனவே, நான் சச்சின் டெண்டுல்கரை தொடர்புகொண்டு அவருடன் நீண்ட உரையாடலை நடத்தினேன். நேற்று (அதாவது, சனிக்கிழமை - மார்ச் 7) கூட அவரிடம் பேசினேன். நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை அறிய அவர் என்னை அழைத்து பேசினார். அவரைப் போன்ற ஒருவரிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெற்றேன். அந்த தெளிவு, விளையாட்டுக்கான முன்தயாரிப்பு, ஆட்டத்தின் மீதான விழிப்புணர்வு, விளையாட்டின் மீதான உணர்வு அனைத்தையும் பெற்றேன். எனக்கு ஆதரவளதித் அனைவருக்கும் நன்றி" என பேசியிருந்தார்.

கனவு காணும் அளவுக்கு துணிவுடன் இருந்தேன்...

முன்னதாக சஞ்சு சாம்சன், "நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் உடைந்து போனேன். நான் முற்றிலும் மனதை தொலைத்துவிட்டேன். என் கனவுகள் சுக்குநூறாகின. 'சரி வேறு என்ன செய்யலாம்' என யோசித்தேன், கடவுள் வேறு ஒரு யோசனையில் இருந்தார். எனக்கு முக்கிய போட்டியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்தேன். அதைப் பற்றி கனவு காணும் அளவுக்கு நான் துணிவுடன் இருந்ததை நினைத்து மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். மேலும், அனைத்தும் எனக்கு நன்றாக மாறிவிட்டது. நான் நன்றி கடன் பட்டிருப்பதாக நினைக்கிறேன்" என பேசியிருந்தார்.

கனவு காண அஞ்சாதீர்கள்...

தொடர்ந்து தனது கனவு குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், "உண்மையைச் சொல்வதானால், இந்த செயல்முறை 2 ஆண்டுகளுக்கு முன், மேற்கு இந்திய தீவுகளில் நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரின்போதே தொடங்கிவிட்டது. அங்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் தொடர்ந்து கனவு கண்டேன், நடக்க வேண்டியவற்றை மனதில் காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தேன். தொடர்ந்து வேலை செய்தேன். இதைதான் நான் அப்போது செய்ய விரும்பினேன், நான் நினைத்ததை செய்வதற்கு கடினமான உழைப்பை செலுத்த வேண்டும் என நினைத்தேன். கடவுளின் கருணையால் அனைத்தும் தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது" என்றார். 

மேலும் படிக்க | T20 Worldcup: கோப்பையை வென்றதும் சூர்யகுமார் யாதவ் சொன்ன முக்கிய தகவல்!

மேலும் படிக்க | IND vs NZ: நியூசிலாந்து பவுலர்களை பந்தாடிய இந்தியா! பவர் பிளேயில் அசத்தல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 08, 2026 13:56:58
Ahmedabad, Gujarat:

IND vs NZ Final 2026 Free Live Scorecard: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் கடந்த பிப். 7ஆம் தேதி தொடங்கியது. 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் குரூப் சுற்றோடு ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் வெளியேறின.

இந்தியா - நியூசிலாந்து மோதல்

சூப்பர் 8 சுற்றில் எட்டு அணிகள் தகுதிபெற்றன. தொடர்ந்து, இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. பாகிஸ்தான், ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை உள்ளிட்ட அணிகள் அரையிறுதியோடு வெளியேறின. அரையிறுதி சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

முதல் கோப்பைக்கு காத்திருக்கும் நியூசிலாந்து

சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். மிட்செல் சான்டனர் தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதே இல்லை, எனவே முதல்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடும்.

சாதனை படைக்குமா இந்திய அணி? 

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாகவும் விளங்குகிறது. இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியனாகி டி20 உலகக் கோப்பையை தக்கவைத்தது இல்லை. மேலும், இதுவரை டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எந்த அணியும் அந்த தொடரில் கோப்பையை வென்றதில்லை. மேலும், இதுவரை 3 முறை எந்த அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், கோப்பையை வெல்வது மட்டுமின்றி பல்வேறு உலக சாதனைகளை படைக்கப்படும்.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் ஆடுகளம் என்பது, நடப்பு தொடரில் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா - கனடா அணிகள் மோதிய போட்டி இதே ஆடுகளத்தில்தான் விளையாடப்பட்டது. 

இரவு போட்டியான அதில் தென்னாப்பிரிக்கா 213 ரன்களை குவித்தது, கத்துக்குட்டியான கனடா 8 விக்கெட்டை இழந்து வெறும் 156 ரன்களை மட்டுமே அடித்தது. அந்த போட்டியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. லுங்கி இங்கிடியின் ஸ்லோயர் பந்துகள் அங்கு பெரிதாக கைக்கொடுத்தன. அவர் 4 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

டாஸ் ஜெயித்தால்...

அன்றைய போட்டியை போல, இன்று பேட்டிங்கிற்கும், பந்துவீச்சிற்கும் சமஅளவில் கைக்கொடுக்கும் ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளத்தை போன்று நிச்சயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200, 220 ரன்களுக்கு மேல் குவிக்க நினைக்கும். 

அதைவிட குறைவாக அடிக்கும்பட்சத்தில் எளிதாக சேஸ் செய்யப்படலாம். ஆனால் இதுவரை இங்கு நடந்த 10 டி20ஐ போட்டிகளில் 7இல் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது. பனிப்பொழிவு பெரிதாக இல்லாதபட்சத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய திட்டமிடலாம்.

பிளேயிங் லெவன் விவரம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் 11 உடன் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. இந்தியா - நியூசிலாந்து பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.

இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி: பின் ஆலன், டிம் சைபர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன்.

நேரலையை காண்பது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நீங்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். இருப்பினும் இவற்றில் நீங்கள் போட்டியை நேரலையில் பார்க்க சந்தா செலுத்த வேண்டும். சந்தா செலுத்த வாய்ப்பில்லாதவர்களுக்கு நமது ஜீ தமிழ் நியூஸ் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

இலவச லைவ் ஸ்கோர்கார்டு + தமிழ் கமெண்டரி

இந்தியா - நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டு உடன் தமிழ் கமெண்டரியை நீங்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம். லைவ் ஸ்கோர்கார்டு என்றால் ஸ்கோர் மட்டுமின்றி, ஒவ்வொரு பந்தின் அப்டேட், பேட்டர்களின் ரன்கள், பந்துவீச்சாளரின் விவரம் உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் திரையை பார்த்தே தெரிந்துகொள்ளலாம். 

மேலும் பின்னணியில் நமது கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள் ஒவ்வொரு பந்தையும், அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக விவரிப்பார்கள். போட்டியை உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் எங்களின் வர்ணனையை கேட்டாலே போட்டியை பார்த்த உணர்வும் உங்களுக்கு கிடைக்கும். ஜீ தமிழ் நியூஸின் லைவ் ஸ்கோர்கார்டு மற்றும் தமிழ் கமெண்டரியை யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் நேரலையில் காணலாம். 

மேலும் படிக்க | இந்திய அணி பைனலில் வெற்றிபெற... இந்த 3 பெரிய தவறுகளை செய்யவே கூடாது!

மேலும் படிக்க | வருணுக்கு பதில் குல்தீப் வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி

மேலும் படிக்க | அகமதாபாத் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்திய அணிக்கு சாதகமான பிட்ச்? - கணிப்புகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Mar 08, 2026 12:16:52
Manancheri, Tamil Nadu:

Organ Donation Awareness: டாக்டர் நிஷா வரதராஜன் சென்னையில் கடந்த 27 ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர். வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டில் நின்றபடி எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். எத்தனையோ குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், சில நேரங்களில் ஆறாத் துயரத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒருநாள் அதே திரைச்சீலைக்கு மறுபக்கம் தனது குடும்பமே நிற்கும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

யார் இந்த அரவிந்த்?

நிஷாவின் கணவர் அரவிந்த் ஒரு சிவில் இன்ஜினியர். அதிகம் பேசாதவர், ஆனால் செயலில் வல்லவர். பாலங்களைக் கட்டி ஊர்களை இணைப்பதில் அவருக்கு அலாதி பிரியம். ஒரு செப்டம்பர் மாலை, ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கார் விபத்து எல்லாவற்றையும் மாற்றியது.

அரவிந்த் மனைவி நிஷா மருத்துவர்

நிஷா பணிபுரியும் அதே மருத்துவமனைக்கு அரவிந்த் கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில் அவரது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. ஒரு மருத்துவராக அந்த எக்ஸ்-ரேக்களைப் பார்த்ததுமே நிஷாவுக்கு உண்மை புரிந்துவிட்டது. ஆனால் ஒரு மனைவியாக அவர் மனம் அதை ஏற்கவில்லை.

உறுப்பு தானம் vs மூளைச் சாவு

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் 'மூளைச் சாவு' (Brain Death) என உறுதி செய்தனர். அந்த அறை முழுவதும் ஒரு கனத்த மௌனம் நிலவியது. அப்போதுதான் அந்தத் தகவல் வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தபோது, உறுப்பு தானம் செய்ய முன்வந்து கையெழுத்திட்டிருந்தார்.

அரவிந்த் ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னது நிஷாவின் நினைவுக்கு வந்தது, "நிஷா, நான் போன பிறகு கூட யாருக்காவது பயனுள்ளவனாக இருப்பேன் பார்!"

அவரது மகள் மீனாள், தன் தந்தையின் பழைய நாட்குறிப்பை எடுத்து வந்தாள். அதில் ஒரு பக்கத்தில் அவர் எழுதியிருந்தார், 

"எனக்கு ஏதாவது நேர்ந்தால், அதன் மூலம் மற்றவர்களுக்கு நன்மை கிடைக்கட்டும். பாலங்கள் எப்போதும் இணைக்க வேண்டும்... மரணத்திற்குப் பிறகும் கூட."

அந்த ஒரு வரி எல்லாவற்றையும் மாற்றியது.

உயிர் கொடுத்த பாலம்

அரவிந்தின் அந்த ஒரு முடிவு தென்னிந்தியா முழுவதும் பலரது வாழ்வில் ஒளியேற்றியது. அரவிந்த் கட்டிய பாலங்கள் சிமெண்டால் ஆனவை அல்ல, அவை ரத்தத்தாலும் சதையாலும் ஆனவை.

பெங்களூருவில் கவிராஜ்: கல்லீரல் செயலிழப்பால் மரணத்தின் விளிம்பில் இருந்த 25 வயது இளைஞனுக்கு மறுவாழ்வு கிடைத்தது.

ஹைதராபாத்தில் திவித்: பிறவியிலேயே இதயக் கோளாறு இருந்த அந்த 8 வயது சிறுவன், இப்போது கிரிக்கெட் விளையாடத் தயாராகிவிட்டான்.

கொச்சியில் லீலம்மா: 5 ஆண்டுகளாகப் பார்வை இழந்திருந்த அந்த ஆசிரியையின் கண்களில் இன்று வெளிச்சம்.

உறுப்பு தானம்: ஒரு புதிய பார்வை

காலம் ஓடியது. அரவிந்த் இல்லாத அந்த வீடு இன்றும் அமைதியாகவே இருக்கிறது. ஆனால், நிஷா இப்போது நோயாளிகளிடம் பேசும் விதம் மாறிவிட்டது. அவர் இப்போது வெறும் மருந்துகளை மட்டும் பரிந்துரைப்பதில்லை, அன்பையும் நம்பிக்கையையும் பகிர்கிறார். மூளைச் சாவு பற்றி விளக்கும்போது, அதை ஒரு முடிவாகப் பார்க்காமல், மற்றொருவரின் வாழ்விற்கான 'பாலம்' என்று சொல்கிறார்.

அரவிந்தின் மகள் மீனாள் இப்போது பொதுச் சுகாதாரம் (Public Health) பயில்கிறாள். தந்தையின் அந்தச் சிறிய நாட்குறிப்பு அவளுக்குப் பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

சிந்திப்போம்: ஏன் உறுப்பு தானம் அவசியம்?

இந்தியாவில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இன்றும் குறைவாகவே உள்ளது. மூடநம்பிக்கைகளும், தேவையற்ற பயமுமே இதற்கு முக்கியக் காரணம். ஆனால் அரவிந்தின் கதை நமக்குச் சொல்வது ஒன்றுதான், நாம் உயிருடன் இருக்கும்போதே இதற்கான முடிவை எடுத்து நம் குடும்பத்தினரிடம் சொல்லி வைப்பது, அந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

மூளைச் சாவு என்பது முடிவு அல்ல: அது மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கும் ஒரு வாய்ப்பு.

உயிரோடிருக்கும் நினைவுகள்: நம் அன்புக்குரியவர்கள் மறைந்தாலும், அவர்கள் கொடுத்த உறுப்புகள் மூலம் அவர்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் துயரத்தைக் குறைக்கும்.

உறுப்பு தானம் குறித்த விவரங்கள்

மூளைச் சாவு (Brain Death): இது மீள முடியாத நிலை. ஆனால், இதயம் துடித்துக்கொண்டிருக்கும் அந்தச் சில மணிநேரங்களில் எடுக்கப்படும் முடிவு, 8 பேரின் உயிரைக் காப்பாற்றும்.

யார் தானம் செய்யலாம்?: 18 வயது பூர்த்தியான எவரும் பதிவு செய்யலாம். வயது முதிர்ந்தவர்களும் தங்களின் கண்கள் மற்றும் சில உறுப்புகளைத் தானம் செய்ய முடியும்.

குடும்பத்தின் பங்கு: நீங்கள் பதிவு செய்திருந்தாலும், உங்கள் மறைவிற்குப் பிறகு குடும்பத்தின் சம்மதம் மிக முக்கியம். எனவே, உங்கள் விருப்பத்தை இன்றே உங்கள் குடும்பத்தாரிடம் பகிருங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது..

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் உறுப்பு தானம் செய்ய முன்வரலாம். NOTTO (National Organ & Tissue Transplant Organisation) இணையதளத்தில் notto.abdm.gov.in நேரடியாகப் பதிவு செய்யலாம்.

"பாலங்கள் இணைப்பதற்காகவே கட்டப்படுகின்றன. அரவிந்த் கட்டிய கடைசிப் பாலம், சாவை வென்று வாழ்வைத் தொடர்கிறது."

மேலும் படிக்க - தானம் அளிக்கப்பட்ட நுரையீரல்... 21 நிமிடங்களில் கொண்டுசென்ற சென்னை மெட்ரோ - குவியும் பாராட்டு

மேலும் படிக்க - உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு... இந்தியாவில் முதல்முறை!

மேலும் படிக்க - விபத்தில் சிதைந்த மூளை, மகனின் 9 உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்: நெகிழ்ச்சி சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 08, 2026 12:14:26
Manamadurai, Tamil Nadu:

Sivagangai Manamadurai Prisoner Death Allegation: சிவகங்கை மாவட்டத்தில் சீயோன் நகரில் இருவரை, இரண்டு மர்ம நபர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் நேற்று முன்தினம் (மார்ச் 6) நடைபெற்றன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 

இருவர் கைது

இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில், சிவகங்கை மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26), குணா(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆகாஷ் டெலிசனுக்கு காலில் காயம்?

இந்த வழக்கில் ஆகாஷ் டெலிசனை போலீசார் பிடிக்க முற்பட்டபோது, பாலத்தில் இருந்து அவர் குதித்ததாகவும், இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால், ஆகாஷ் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

நீதிமன்ற காவல்

இதையடுத்து நேற்று (மார்ச் 7) மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மூச்சு திணறி உயிரிழந்தார்

இதையடுத்து ஆகாஷ் டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (மார்ச் 8) அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ் டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத பெற்றோர்

இது குறித்து பேசிய ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன் மற்றும் தாயார் ஆனந்தி பேசியதாவது," 'உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்'-னு சொன்னாங்க, இப்ப கொன்னுட்டாங்க" என காவல் துறையினர் தனது மகனை அடித்துகொலை செய்துவிட்டதாக கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தந்தை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

தொடர்ந்து பேசிய தந்தை ராஜேஷ் கண்ணன், "எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும் என் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்துக்கொண்டனர். பின்னர் எனது மகன் கிடைத்துவிட்டதாக கூறி எங்களை அனுப்பினர். இதையடுத்து எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறி மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர். அப்போது எனது மனைவி நேரில் சென்று பார்த்தபோது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார்.

திருமாவளவன் நேரில் வர வேண்டும்...

இந்த நிலையில் திடீரென இன்று காலை காவல்துறையினர் போன் செய்து எனது மகன் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு  அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கி உள்ளனர். என் மகன் மீது காவல்துறையினர் சாதிய ரீதியாக குறிப்பிட்டு  பேசி, தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அதனால் என் மகன் உயிரிழந்திருக்கிறான், என் மகன் தவறு செய்திருந்தால் அதற்கு தூக்கு தண்டனை கூட கொடுத்திருக்கலாம். இதுபோன்று அடித்து கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் திருமாவளவன் நேரடியாக வரவேண்டும் அதுவரை நாங்கள் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

பெற்றோரிடம் பேச்சுவார்த்தை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, ஆகாஷின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை சம்பவம் நடைபெற்று தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அதே மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | "பாவம் உங்களை சும்மா விடாது" ஓபிஎஸ்-க்கு சாபம் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

மேலும் படிக்க | கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி.. தண்டனை என்ன? நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் படிக்க | கோவை மாணவி பாலியல் வழக்கு: அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி பாராட்டு... முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 08, 2026 06:00:15
Chennai, Tamil Nadu:

Women's Day 2026, Notable Indian Young Women Athletes: மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், இந்த வருடம் விளையாட்டு உலகில் கவனிக்க வேண்டிய 7 இளம் இந்திய வீராங்கனைகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

அனுபாமா ராமசந்திரன்

சென்னை சேர்ந்த இந்த 23 வயது வீராங்கனை கடந்த நவம்பரில் நடந்த 2025 IBSF உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்று முறை சாம்பியனான ஹாங்காங் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி அடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அனுபாமா பெற்றார். இந்தியாவில் பல பெண்களை ஸ்னூக்கர் நோக்கி திரும்ப வைத்திருக்கிறார், அனுபாமா. 

ஷீத்தல் தேவி

மாற்றுத்திறனாளியான ஷீத்தல் தேவி, கடந்த 2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்றார். Mixed Compound வில்வித்தை பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார், இதை வெல்லும் போது அவருக்கு வயது 17. கை கால்கள் பாதிக்கப்பட்டு, பிறவியிலேயே ஏற்பட்ட அரிய நோயுடன் பிறந்தவர் இவர். தனது தோள்கள், கால்கள், வாயை பயன்படுத்தி வில்வித்தையை கற்றுக்கொண்டார். இவர் உலக மகளிருக்கு ஊக்கம் கொடுக்கும் ஆளுமையாக திகழ்கிறார். 

ஜோதி யர்ராஜி

இந்தியாவின் முன்னணி தடை ஓட்டப்பந்தய வீராங்கனை ஜோதி யர்ராஜி கடந்த 2025ஆம் ஆண்டில் 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் இரண்டு முறை தேசிய சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்தார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடம் பிடித்தார். தொடர்ந்து, தடகள போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவருக்கு வயது 26 என்பதால் நிச்சயம் எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனாட்சி ஹூடா

2025 உலக சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பெரியளவில் கவனம் ஈர்த்தார். இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற இவரும் முக்கிய பங்காற்றினார். இவர் 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானின் நாசிம் கைசைபேவை வென்று தங்கம் பதக்கம் வென்று மிரட்டினார். இவருக்கு வயது 24 ஆகும். இவரும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Mar 07, 2026 13:06:10
Mahabalipuram, Tamil Nadu:

TVK Vijay About Sangeetha Divorce Issue: தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தவெகவின் ஏராளமான பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இதில் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்வில், மகளிருக்கான தவெகவின் வாக்குறுதிகளை விஜய் மேடையில் அறிவித்தார்.  அதில் முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.

பாஜக முக்கிய வாக்குறுதிகள்

மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில், மகளிருக்கு மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும். 60 வயது வரையிலான பெண்களுக்கு மட்டும் இந்த உரிமை தொகை வழங்கப்படும். அதேநேரத்தில், மத்திய, மாநில ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. 

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் என்ற பெயரில் கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும் என்றும் அவை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். 

அண்ணன் சீர் என்ற திட்டத்தின்கீழ், திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 8 கிராம் (1 பவுன்) மற்றும் தரமான பட்டுப்புடவை வழங்கப்படும். தாய்மாமன் சீர் வழங்கும் திட்டம் வழங்கப்படுகிறது. கூடவே பேபி வெல்கம் டு வழங்கப்படும். 

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.  

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம். 

காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின்கீழ் கல்வி இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதற்காக பொருளாதார குறைபாடு உள்ள மாணவியின் தாய்க்கும், பாதுகாவலருக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் பொருளாதார உதவி செய்து தரப்படும். உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து குறித்து விஜய் பேச்சு

மேலும், சங்கீதா விவாகரத்து குறித்தும் விஜய் முதல்முறையாக வாய்திறந்தார். ஆனால், பெயர் குறிப்பிடாமல் விஜய் பேசினார். அதில் அவர், "சமீபத்திய நிறைய பிரச்னைகளில், ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அல்லவா...(விவாகரத்து பிரச்னை), அதற்கெல்லாம் போராடி காயப்படுவதை நான் பார்த்தேன், அதையெல்லாம் பார்க்க எனக்கு மனது காயப்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நாம் எல்லோரும் இணைந்து மக்களின் பிரச்னைகளுக்காக போராடுவோம். நீங்கள் காயப்படாதீர்கள், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது" என்றார்.

சமீபத்தில், விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தொடர்ந்து, விஜய், நடிகை திரிஷா உடன் திருமண நிகழ்வில் பங்கேற்றதும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த வகையில், இதுவரை இதுகுறித்து விஜய் பேசாத நிலையில், இந்த விவகாரம் குறித்து விஜய் தற்போது பேசி உள்ளார். 

மேலும் படிக்க | வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. நீலாங்கரை வீடு வேணும் - விஜயிடம் டிமாண்ட் வைக்கும் சங்கீதா!

மேலும் படிக்க | "என்னை நல்லா புரிஞ்சவங்க..." சங்கீதா குறித்து விஜய் சொன்ன 3 விஷயங்கள்! அப்புறம் ஏன் விவாகரத்து?

மேலும் படிக்க | கள்ள உறவில் இருப்பது தான் தூயசக்தியா? - கோடங்கி ஆவேசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
Advertisement
Back to top