Delhi Water Quality: சமீபத்தில் இந்தூரில் அசுத்தமான குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடிநீர் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது. டெல்லி மக்கள் தற்போது பருகும் நிலத்தடி நீர் குடிக்கத் தகுதியற்றது என்றும், அது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசின் தலைமை தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி மக்களின் உயிருக்கு ஆபத்து?
டெல்லி ஜல் போர்டு (DJB) மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த தணிக்கையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்று, பரிசோதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை குடிப்பதற்கு தகுதியற்றவை என்பதுதான். CAG அறிக்கை என்பது தேசிய தலைநகரப் பகுதியில் வசிக்கும் மக்களின் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி உள்ளது. இது பாஜக அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றன என சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிஏஜி (CAG) அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
55% நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றது
CAG அறிக்கையின்படி, டெல்லி முழுவதும் மொத்தம் எடுக்கப்பட்ட 16,234 நிலத்தடி நீர் மாதிரிகளில், 55% மாதிரிகள் (8,933) தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளது. இவை குடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றவை. டெல்லிக்குத் தேவையான குடிநீரில் தற்போது 25% பற்றாக்குறை நிலவுகிறது. டெல்லி ஜல் போர்டு (DJB) ஆய்வகங்களில் போதுமான ஊழியர்களும், நவீன உபகரணங்களும் இல்லை. இதனால் குடிநீர் தரம் சரியாகப் பரிசோதிக்கப்படுவதில்லை.
சுத்திகரிக்கப்படாத நச்சு நீர்
தண்ணீர் பரிசோதனையானது பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards - BIS) நிர்ணயித்த தரநிலைகளின்படி நடத்தப்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளில் இருந்து நாளொன்றுக்கு 80 முதல் 90 மில்லியன் கேலன் தண்ணீர் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது.
தடைசெய்யப்பட்ட இரசாயனங்களின் பயன்பாடு?
தடைசெய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் பாலிஎலக்ட்ரோலைட்டுகளை தனியார் நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையங்கள் தொடர்ந்து பயன்படுத்ட்ஜ்ஹி வருகிறது. அதாவது அவற்றின் பயன்பாட்டை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும் இரசாயனங்கள் பயன்படுத்துவதாக தணிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும் நிலத்தடி நீர்?
இந்த அசுத்தமான நீரைப் பருகுவதால் டெல்லி மக்களுக்குக் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என சிஏஜி எச்சரித்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், தோல் நோய்கள் உட்பட சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று CAG திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி அரசுக்கு மக்கள் நல அமைப்புகள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
இந்த விவகாரத்தில் 'ஜன் ஸ்வஸ்திய அபியான் இந்தியா' (JSAI) அமைப்பு தலையிட்டு, டெல்லி அரசு மற்றும் டெல்லி ஜல் போர்டு ஆகியவற்றுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
- சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீர் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- பி.ஐ.எஸ் (BIS) தரநிலைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
- தண்ணீர் பரிசோதனை ஆய்வகங்களை நவீனப்படுத்தி, போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
- ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
- குடிநீர் தரம் குறித்த தரவுகளைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது ஒரு அடிப்படை உரிமை, இதை உறுதி செய்வதில் தொடர்ச்சியான அரசின் தோல்வி, பொது நம்பிக்கையையும் பொது சுகாதாரப் பொறுப்பையும் கடுமையாக மீறுவதாகும் என JSAI அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
டெல்லி அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தலைநகர் டெல்லியில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்காதது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க - நெய்யை ரயிலில் கொண்டுபோக கட்டுப்பாடு... ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
TN Assembly News: தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சபாநாயகர் அவர்கள் விரிவான விளக்கமளித்தார். இந்த ஆண்டுக்கான (202) தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழக சட்டபேரவை கூட்டம் தொடங்கியதும் முதலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்டது. இதனையடுத்து 'தேசிய கீதம்' இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் ஆளுநர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் இசைக்கப்படும், தேசிய கீதம் இசைக்கப்படும் மரபு இல்லை என பதிலளித்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், " ஆர்.என்.ரவி வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மட்டுமில்லை, தொடர்ந்து கடந்த 4 வருடமாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் புறக்கணித்து வெளியேறி வருகிறார் என்பது குரிப்பிடத்தக்கது.
ஆளுநர் வெளிநடப்பு குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன?
சட்டமன்ற மரபுகளின்படி, அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் கடமை. அந்த உரையை இந்தச் சபையில் அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதை விடுத்து, சொந்தக் கருத்துகளைப் பேசவோ அல்லது உரையை வாசிக்க மறுக்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை.
சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்கள் மட்டுமே தங்களின் கருத்துகளைப் பதிய முடியும். ஆளுநர் உரையை வாசிக்கத் தவறியபோது, "தயவுசெய்து உங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று ஒரு பணிவான வேண்டுகோளைத்தான் விடுத்தோமே தவிர, எந்த இடத்திலும் அநாகரிகமான வார்த்தைகளையோ அல்லது அவை நாகரிகமற்ற முறையையோ கையாளவில்லை.
நிதி நெருக்கடி: தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கும் மோடி அரசு
நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் மக்கள் நலத்திட்டங்கள் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய பல்வேறு நிதி நிலுவைகள் குறித்துச் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி எவ்வளவு நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும்
1. ஜல் ஜீவன் திட்டம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ₹312 கோடி வரவில்லை.
2. இயற்கைப் பேரிடர் நிவாரணம் ₹37,000 கோடி கோரப்பட்ட நிலையில், உரிய நிதி இன்னும் கிடைக்கவில்லை.
3. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய சுமார் ₹6,000 கோடி நிலுவையில் உள்ளது.
4. அதாவது மொத்தமாக சுமார் ₹35,483 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது.
5. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
6. குறிப்பாக, 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை எனப் பல திட்டங்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு, தற்போதுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) தொடர்பான நலத்திட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது.
ஆளுநருக்கான மரியாதை குறித்து அப்பாவு விளக்கம்
"ஆளுநரை நேரில் சென்று அழைத்தோம். சபாநாயகர் என்ற முறையில் நானும், செயலாளரும் முறைப்படி அழைப்பு விடுத்தோம். இதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆளுநரின் மாண்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மாண்பும் எங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது," என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தேசிய கீதம் மற்றும் சட்டமன்ற மரபுகள் -அப்பாவு
சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படுவது ஒரு தொடர் மரபு. இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
எதிர்கட்சிகளுக்கு பயந்து இந்த அரசு இயங்காது -அப்பாவு
எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "யாருக்கும் பயந்து இந்த அரசோ அல்லது சட்டமன்றமோ இயங்காது. மக்கள் நலனே இந்த அரசின் முக்கிய நோக்கம்," என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் படிக்க - Live | சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு; ஜனநாயகன் வழக்கு விசாரணை - அப்டேட்ஸ்
மேலும் படிக்க - 'மைக் ஆஃப்...' சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது ஏன்...? - ஆளுநர் மாளிகை விளக்கம்
மேலும் படிக்க - சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Tamil Nadu Assembly Session 2026, Governor RN Ravi Walkout: 2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் இசைக்கப்படும், தேசிய கீதம் முதலில் இசைக்கப்படும் மரபு இல்லை என சபாநாயகர் பதிலளித்தார். இதனால், சபாநாயகர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரையை தொடர்ந்து 4வது ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்.
Governor RN Ravi Walkout: அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்
இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் சபையை, அதன் மாட்சிமையை ஆளுநர் ஆர்.என். ரவி அவமதித்துள்ளார். ஆளுநர் ஏற்கெனவே நடந்துகொண்டதைப் போலவே மீண்டும் இன்று நடந்துகொண்டுள்ளார். ஆளுநர் வேண்டுமென்ற அரசமைப்பு சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இந்த சபையை அவமதிக்கும் செயல் என்றே கருதுகிறேன்.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறினார். அந்த பதவி உள்ளவரை அதற்கான மரியாதையை கொடுக்க அவர் தவறியதில்லை. சட்டமன்றம் என்பது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மாமன்றம். அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு தருபவராக ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக ஆளுநர் இருக்க வேண்டும். பொதுமேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருகிறார்.
Governor RN Ravi Walkout: அரசியலமைப்பில் சட்டத்திருத்தம்
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில்,"...ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து் அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல், ஆளுநர் சென்றதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம், இப்பேரவையில் ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது.
ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும் அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் வாடிக்கையாக இருப்பது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடையூறாக இருந்து இப்படி செயல்படுவது என்பது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதனை ஒருநாள் செய்தியாக கடந்துவிட முடியாது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெறும் என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பொதுவாக தங்களின் உண்மையான பெயர்களை மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த நடைமுறை அந்த காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே பெயரில் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால், தனியாக ஒரு அடையாளம் கிடைக்காது என்பதற்காக இவ்வாறு பெயர்களை மாற்றிக்கொள்வார்கள். ஒரு சிலர் தங்களின் முதல் படத்தின் பெயரை தங்களது பெயருடன் சேர்த்துக் கொள்வார்கள். அதுவே அவர்களின் அடையாளமாக கூட மாறும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் யார் யார் தங்களின் உண்மையான பெயரை படத்திற்காக மாற்றி உள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஜனநாயகன் பட ரிலீஸ்.. இந்த 3 தேதிகள்தான் டார்கெட்? தேர்தல் வேற வருதே!

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெயிக்வாட். கர்நாடக மாநிலத்தில் மராத்தி குடும்பத்தில் பிறந்த அவருக்கு, மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவாக தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சினிமாவிற்குள் அறிமுகமானபோது ஏற்கனவே சிவாஜி கணேசன் என்ற நடிகர் இருந்ததால், கே. பாலச்சந்திரன் தான் அவருக்கு ரஜினிகாந்த் என்று அவரது பெயரை மாற்றியுள்ளார். இன்று தமிழ்நாட்டில் ரஜினி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான்.
தனுஷ்
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் தனுஷ். அவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்தவர். தனுஷ் தமிழ் சினிமாவிற்கு நுழையும் முன் ஏற்கனவே பிரபுதேவா மற்றும் பிரபு போன்ற சீனியர் நடிகர்கள் இருந்தனர். இதனால் அவரது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குருதிப்புனல் படத்தில் ஆபரேஷன் தனுஷ் என்ற பெயர் பிடித்துப் போகவே அவருக்கு தனுஷ் என்று பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கேரளாவில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், பிறகு இந்து மாதத்திற்கு மாறி உள்ளார் என்று கூறப்படுகிறது. சினிமாவில் அறிமுகமாகும், முன்பு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். நயன்தாரா என்ற பெயருக்கு விண்மீன் போன்ற கண்கள் உடையவள் என்ற மற்றொரு பொருளும் உண்டு.

சூர்யா
நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் ஆகும். சூர்யா சினிமாவில் அறிமுகமான சமயத்தில் சரவணன் என்ற ஒரு நடிகர் ஏற்கனவே இருந்தார். இதன் காரணமாக அவருக்கு சூர்யா என்று பெயரை மாற்றி வைத்துள்ளனர். சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் தான் என்பது பலருக்கும் தெரியாது.
விக்ரம்
விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். சினிமாவிற்கு வருவதற்கு பின்பு தனது பெயரை மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார் விக்ரம். அதன் படி தனது உண்மையான பெயரில் இருந்து ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக் கொண்டு விக்ரம் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டுள்ளார். இன்று ரசிகர்கள் மத்தியில் சியான் விக்ரம் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
விஜய்
ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய். அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பிரபல இயக்குனர் என்பதால், தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தும் முன்பு விஜய் என்ற பெயரை வைத்துள்ளார். பொதுவாக சினிமாவில் மூன்றெழுத்தில் உள்ள நடிகர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது தந்தை ஜோசப் விஜய் என்ற பெயரை விஜய் என மாற்றி உள்ளார்.
மேலும் படிக்க | Bigg Boss Tamil 9: பிக் பாஸ் 9 மகுடத்தை வென்ற திவ்யா கணேசன் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Telangana 500 Stray Dogs Murders: தெரு நாய்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நாட்டில் கடந்த சில காலமாக தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் பெரும் கவனத்தை செலுத்தி ஒரு தீர்வை கண்டடைய தீவிரமாக முயற்சித்து வருகிறது எனலாம்.
Telangana Dogs Murders: 14 நாள்களில் 500 நாய்கள் கொலை
தெருநாய்கள் குழந்தைகள் உள்பட பலரையும் தாக்குவதாலும், கடிப்பதாலும் பலரும் கடுமையான நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதேவேளையில், தெருநாய்களை கொல்வது, அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. 2026ஆம் ஆண்டு பிறந்து சுமார் 2 வாரங்களே ஆகியிருக்கும் சூழலில், இந்த 14 நாள்களில் மட்டும் தெலங்கானாவில் சுமார் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையொட்டி போலீசார் கடும் விசாரணையை மேற்கொண்டு முதற்கட்டமாக 15 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஹனம்கொண்டா மற்றும் கம்மாரெட்டி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 7 பேரும் அடக்கம்.
Telangana Dogs Murders: தேர்தல் வாக்குறுதி...!!
கிராமத்தில் தெருநாய் தொல்லையே இல்லாமல் செய்துவிடுகிறோம் என உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் வாக்குறுதி கொடுத்தது மட்டுமின்றி, நாய்களை கொல்லும் சம்பவத்திலும் ஈடுபட்டதாக கூறி இவர்கள் கைதாகி உள்ளனர். சமீபத்தில் இங்கு கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் தெருநாய்கள் தாக்கி கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, நாய்களே இல்லாத கிராமத்தை அளிப்போம் என சில வேட்பாளர்கள் வெளிப்படையாகவே வாக்குறுதி அளித்துள்ளனர். அந்த வகையில், தற்போது வெறும் 14 நாள்களில் 500 நாய்கள் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் சட்டவிரோதமான இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இவர்கள் கடுமையான நாய் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
Telangana Dogs Murders: பரபரப்பை கிளப்பிய வீடியோ
நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அதை கொலை செய்துள்ளனர். விஷ ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே தெரு நாய்கள் துடிதுடித்து உயிரிழந்துள்ளன. ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சியில் நாய்க்கு ஒருவர் விஷ ஊசி செலுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. விஷ ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே நாய் மயங்கி விழுந்தது. மேலும் அதிர்ச்சிகரமான அந்த வீடியோவில், தெருவில் வேறு இரண்டு நாய்களின் சடலத்தையும் காண முடிகிறது. தர்மபுரி நகராட்சியில் இருந்து மட்டும் கடந்த 2 வாரங்களில் சுமார் 50 நாய்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Telangana Dogs Murders: 15 பேர் கைது
ஹனம்கொண்டா மாவட்டத்தில் ஷயம்பேட்டா பகுதியில் சுமார் 110 நாய்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உயிரிழந்ததின் பின்னணி குறித்து உடற்கூராய்வுக்கு பின்னர் உண்மை தெரியவரும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாய்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் 15 முக்கிய நபர்கள் போலீசாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஷயம்பேட்டை, அரேபள்ளி, பல்வஞ்சா பகுதி உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்ற ஏழு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மீது நாய்களை கொல்ல அனுமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாய்களை கொல்ல போக்குவரத்தை ஏற்பாடு செய்து கொடுத்த, தொழில்முறை நாய் பிடிப்பவர்களை நியமித்த கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் ஊழியர்களும் கைதாகி உள்ளனர். கைதான 15 பேர் மீதும் பிஎன்எஸ் பிரிவு 325 (விலங்குகளைக் கொல்வது அல்லது விஷம் வைத்தல்) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தெருநாய்களுக்கு சுப்ரீம் கோர்டின் புதிய விதிகள்! முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க!
மேலும் படிக்க | துரத்தி துரத்தி கடிக்குதே அதுக்கு என்ன சொல்றீங்க? நாய் லவ்வர்களை விளாசிய வழக்கறிஞர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் பன்னி வாஸ் (Bunny Vas) உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Blessed with the best @alluarjun #AALoki
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026
Looking forward to kicking off this journey with you sir
Let's make it a massive blast
Once again with my brother @anirudhofficial #AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t
இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர். அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ்
தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
மேலும் படிக்க | வா வாத்தியார் எப்படிப்பட்ட படம்? நடிகர் கார்த்தி சொன்ன விஷயம்!
மேலும் படிக்க | பொங்கலுக்கு zee5ல் வெளியாகும் புது படங்கள்.. சிறை மட்டுமல்ல!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Kilambakkam Railway Station Latest Update: சென்னையில் மக்கள் தொகை என்பது பெருகி கொண்டே இருக்கிறது. சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசலும் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம். சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது. பயணிகளுக்காக நகரத்திற்குள் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து சேவைகள் அடிக்கடி இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில், மின்சார ரயில்களிலும் மக்கள் பயணிகின்றனர். வண்டலூரில் இருந்து இறங்கி அங்கிருந்து ஆட்டோ, பேருந்து மூலம் கிளாம்பாக்கத்திற்கு செல்கின்றனர். இப்படியாக பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளை 2024 நவம்பர் மாதத்திற்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டப்பட்டது. ஆனால், மழை காரணமாக, பணிகளை சிறிது தொய்வு ஏற்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பணிகள் வேகமெடுத்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரயில் பணிகளை முடிக்க மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, 2026 ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால், இன்னும் பணிகள் நடந்து வருகிறது.
எப்போது திறப்பு?
எனவே, ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என தகவலை ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், "கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. நடைமேடையில் மேற்கூரை அமைப்பதற்கான பணிகளும் 80 சதவீதம் முடிந்துள்ளது. இதில் கூடுதலாக 100 மீட்டருக்கு நடைமேடை அமைக்கும் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு, பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் உள்ளே வருவதற்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. எனவே, நடைமேம்பாலம் பணிகள் முடிந்ததும், அதில் இருந்து எஞ்சிய பணிகளை ரயில்வே மேற்கொள்ளும். அனைத்து பணிகள் முடிவடைந்த பின்பு, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும். உறுதியான மாதத்தை தற்போது செல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இன்று பொங்கல் பரிசு ரூ.3000 வாங்க முடியுமா? முடியாதா? முக்கிய தகவல்!
மேலும் படிக்க: பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரூ.5000 மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 49 வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். ஹர்ஷித் ராணா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் பங்களித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார்.
மேலும் படிக்க: ஐபிஎல் 2026: RCBக்கு அதிர்ச்சி.. 4 முக்கிய வீரர்கள் விலகல்? முழு விவரம்
JUST IN
— Cricbuzz (@cricbuzz) January 12, 2026
Ayush Badoni has received a maiden call-up to the India ODI squad, coming in as a replacement for Washington Sundar.
He will link up with the squad in Rajkot, the venue for the second ODI.#INDvNZ pic.twitter.com/pR5OkMO5YU
வாஷிங்டன் சுந்தருக்கு காயம்
முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங் செய்து கொண்டிருந்தபோது வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பு பகுதியில் திடீரென கடினமான வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் போட்டியில் தொடர்ந்து பந்து வீசவில்லை. பேட்டிங்கில் வேறு வழியில்லாமல் களமிறங்கிய அவரால் ஓட கூட முடியவில்லை. இருப்பினும் அணிக்காக சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு அவருக்கு மருத்துவ குழுவினரின் சோதனை நடைபெற்றது. இதில் அவரது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மீதமுள்ள போட்டிகளிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக லக்னோ அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆயுஷ் பதோனி
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார் வாஷிங்டன் சுந்தர். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் சமீபத்திய ஒருநாள் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரும் காயின் காரணமாக விலகி உள்ளது இந்திய அணி ரசிகர்ளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அணியில் இணைந்துள்ள ஆயுஷ் பதோனி சமீபத்திய சையத் முஸ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவர் தற்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த்திற்கு பதிலாக ஏற்கனவே துருவ் ஜூரில் அணியில் இணைந்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி இணைந்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடாத ஆயுஷ் பதோனிக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியிலும் பல்வேறு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அணியிலும் அதிக இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Chennai Kilpauk Hospital Rowdy Murder: தலைநகர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இநத் மருத்துவமனை எப்போதுதே பரப்பாகவே இருக்கும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வெளி நோயாளிகளும் அடிக்கடி கீழ்ப்பர்க்கம் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று (ஜனவரி 12) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து ஒரு கும்பல் ரவுடியை படுகொலை செய்துள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதிர்ச்சி
கொலை செய்யப்பட்டது ஆதி என தெரியவந்துள்ளது. ரவுடி ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குறிப்பாக ஒரு கொலை வழக்கில் முக்கிய நபராக இருந்து போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சுசித்ரா என்பவரின் குழந்தை கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது.
இதையடுத்து, சுசித்ராவுக்கு ஆறுதல் கூறும் நோக்கில் நேற்று இரவு ரவுடி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மருத்துவமனை அலுவலக வளாகம் அருகே மறைந்திருந்து காத்திருந்த மூன்று மர்ம நபர்கள், ஆதியை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவுடி ஆதி, ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டிற்குள் ஓடி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை போன்ற பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அதுவும் இரவு நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி வெட்டிக் கொலை
தகவல் கிடைத்ததும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த ரத்தக்கறைகள், ஆயுத தடயங்கள் மற்றும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தினார்களா? சுசித்ராவைச் சுற்றிய தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொலை நடந்ததா? முன் விரோதம் அல்லது பகை காரணமாக வேறு கும்பல் தாக்குதல் நடத்தியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுசித்ராவின் உறவினர்களான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் அவர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மழை வெளுக்கும்! டெல்டா, சென்னையில் இன்று கனமழை பெய்யும்.. வெதர்மேன் முக்கிய அலர்ட்
மேலும் படிக்க: சென்னையில் இருந்து தனி விமானம்.. டெல்லிக்கு பறந்த விஜய்! சிபிஐ முன் இன்று ஆஜார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
IND vs NZ 1st ODI Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
1ST ODI. India Won by 4 Wicket(s) https://t.co/pX6HYz772x #TeamIndia #INDvNZ #1stODI @IDFCfirstbank
— BCCI (@BCCI) January 11, 2026
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Chennai Corporation Latest News: சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, சுகாதாரமாக இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் பொழுதுப்போக்கு இடங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்
குறிப்பாக மெரினா கடற்கரையை சர்வதேச தரத்தில் சென்னை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இதனால், மெரினான கடற்கரையை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவித கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை மெரினாவில் மட்டும் ஒருநாளைக்கு 4 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள் குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், ஆங்காங்கே போடுகின்றனர். குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருவதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதனால், சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மிது உரிய சட்ட விதிகளின்படி ரூ.5,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். பொங்கல் விடுமுறையில் மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இதனை தெரிந்து வைக்க வேண்டும்.
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
இதற்கிடையில், மற்றொரு உத்தரவையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2026 ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றுதல், கிளைகளை கத்தரித்தல், நடவு செய்தல் மற்றும் உலர்ந்த அல்லது ஆபத்தான மரங்களை அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான விண்ணப்பங்கள் இனி வனத்துறை மூலம் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளம் அல்லது நம்ம சென்னை செயலி மூலம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியின்றி கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணிகளை அடித்தல், விளம்பர பலகைகளை பொருத்துதல் அல்லது பொது இடங்களில் மரங்களைச் சுற்றி அலங்கார விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தற்போது பொங்கல் விடுமுறை வர இருக்கும் நிலையில், பொதுமக்கள் இதனை தெரிந்து கொள்வது அவசியம்.
மேலும் படிக்க: அரசு லேப்டாப்பில் இதை செய்யவே செய்யாதீங்க... வாரண்டியில் சிக்கல் வரும் - பெரிய அலர்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Tamil Nadu Government Free Laptop: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 'உலகம் உங்கள் கையில்' என்ற பெயரில் 20 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா லேப்டாப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த ஜன. 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.
TN Free Laptop: ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை பயிலும் உயர்க்கல்வி மாணவர்களுக்கும் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் கட்டணமில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்காக 2025-26 நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே தமிழ்நாடு அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
TN Free Laptop: லேப்டாப் உள்ள சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு அரசு வழங்கிய கட்டணமில்லா லேப்டாப்பில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், 128 MB VRAM வழங்கப்பட்டுள்ளது. Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. MS Office 365 மென்பொருளும் வழங்கப்பட்டது. Perplexity Pro செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் ஆறு மாத சந்தாவும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது வழங்கப்படுகிறது.
இதில் 720p HD கேமரா திரையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5.0 Bluetooth, 2.5 Ghz Wi-Fi இணைப்பு உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் திரையின் அளவு 14 இன்ச் அல்லது 15.6 இன்ச் ஆகும். 40 வாட்ஸ் பேட்டரியுடன் லேப்டாப் வழங்கப்படுகிறது. Windows Defender Protection ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. Dell, Acer, HP உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு லேப்டாப்பை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் லேப்டாப் பேக் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
TN Free Laptop: புகைப்படங்களை சேதப்படுத்தினால் சிக்கல்...
தயாரிப்பு நிறுவனங்கள், லேப்டாப்பிற்கு 1 வருட உத்தரவாதத்தையும், 3 வருடம் சர்வீஸ்-ம் செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் சார்ந்து ஏதும் மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் 18005999000 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், மாணவர்கள் தற்போது லேப்டாப்பில் இயல்பாக போடப்பட்டுள்ள OS அமைப்பை மாற்றினால் வாரண்டி கேட்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், லேப்டாப்பிற்கு மேற்புறத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களில் ஏதும் சேதப்படுத்தினால் வாரண்டி கோரப்படும்போது சிக்கல் எழலாம் என எல்காட் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேப்டாப் வழங்கப்பட்ட பின்னர் பலரும் லேப்டாப்பில் உள்ள புகைப்படங்களை சேதப்படுத்தும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்ட நிலையில், மாணவர்களுக்கு இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு: டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? அரசின் செம்ம அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய டி20 அணியின் முக்கிய வீரரான திலக் வர்மாவிற்கு, திடீர் என ஏற்பட்ட காயத்தால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். மேலும் டி20 உலக கோப்பை அணியில் இருந்தும், அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திலக் வர்மாவிற்கு பதிலகா சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்கோட்டில் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கொண்டிருந்த திலக் வர்மா, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
Tilak Varma has just undergone a ‘Testicular Torsion’ surgery. Recovery may be 2-4 weeks - and the T20 World Cup starts in 4 weeks.
— Praveen Kumar (@RigidDemocracy) January 8, 2026
Testicular torsion is a medical emergency where the spermatic cord twists, cutting off blood supply to the testicle, causing sudden, severe pain,… pic.twitter.com/dzqeR0GmXI
உடனடி சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சையில் டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற தீவிர நிலை இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு நேற்று ஜனவரி 7 அன்று உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், குணமடைய 3-4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 21 முதல் 31 வரை இந்தியாவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி டி20 தொடரில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிப்ரவரி 7 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது.
Tilak Varma's T20 World Cup participation uncertain
— Cricbuzz (@cricbuzz) January 8, 2026
He underwent surgery for Testicular Torsion in Rajkot on Wednesday (January 7)
Officials say the surgery requires 3 to 4 weeks for full recovery pic.twitter.com/G9hitupnbl
சுப்மன் கில் இடம் பெறுவாரா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்வுக் குழு சுப்மன் கில்லை அணியில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை அணியில் எடுத்து, அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை பெஞ்சில் உட்கார வைக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், திலக் வர்மா முதல் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியாமல் போகலாம் என்றும், அதற்குள் குணமடைந்து திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாற்று வீரர் தேவைப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கில் ஏன் இல்லை?
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் அசத்திய கில், ஆகஸ்ட் 2025ல் ஆசிய கோப்பைக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், டி20 வடிவத்தில் அவரது பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 15 இன்னிங்ஸ்களில் 24.25 சராசரியுடனும், 137.26 ஸ்டிரைக் ரேட்டுடனும் வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. இதனால் தேர்வு குழு அதிர்ச்சியளிக்கும் வகையில் கில்லை டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கியது. நியூசிலாந்து தொடரில் ரியான் பராக் திலக் வர்மாவிற்கு பதிலாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரும் சில காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரியான் பராக் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடவில்லை, கடைசியாக டிசம்பர் 6ல் சையது முஷ்தாக் அலி டிராபியில் விளையாடினார்.
திலக் வர்மாவிற்கு மாற்று வீரர்கள் யார் யார்?
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஷ்ரேயஸ் ஐயர்
ருதுராஜ் கெய்க்வாட்
தேவ்தத் படிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ