\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","url":"https://pinewz.com/tamil/story/gujarat/vadodara-virat-missed-a-century-india-39-s-stunning-victory-new-zealand-showed-fear-1768149814617","datePublished":"2026-01-11T16:46:11+05:30","dateModified":"2026-01-11T16:46:11+05:30"}\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","keywords":"news by pincode, pin news,local news, treading news, latest news, hyperlocal news sites, hyperlocal news app, best news app, local news in hindi, zee newz, ram mandir","image":{"@type":"ImageObject","url":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2026/01/11/560110-team-vik.png?itok=suwEUAbV","height":900,"width":1200},"datePublished":"2026-01-11T16:46:11+05:30","dateModified":"2026-01-11T16:46:11+05:30","author":{"@type":"Person","name":"Sudharsan G"},"publisher":{"@type":"Organization","name":"Hyper local PWA","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":600,"height":60}}}\r\n\r\n

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

\r\n\r\n

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

\r\n\r\n

முகநூல் - @ZEETamilNews

\r\n\r\n

ட்விட்டர் - @ZeeTamilNews

\r\n\r\n

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

\r\n\r\n

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

\r\n\r\n

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

\r\n\r\n

Android Link: https://bit.ly/3AIMb22

\r\n\r\n

Apple Link: https://apple.co/3yEataJ

\r\n","thumbnailUrl":"https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_700x400/public/2026/01/11/560110-team-vik.png?itok=suwEUAbV","uploadDate":"2026-01-11T16:43:34+05:30","dateModified":"2026-01-11T16:46:11+05:30","datePublished":"2026-01-11T16:46:11+05:30","contentUrl":"NOT AVAILABLE","url":"https://pinewz.com/tamil/story/gujarat/vadodara-virat-missed-a-century-india-39-s-stunning-victory-new-zealand-showed-fear-1768149814617","isFamilyFriendly":"http://schema.org/True","requiresSubscription":"http://schema.org/False","inLanguage":"en-hi","publisher":{"@type":"Organization","name":"pinewz","url":"https://pinewz.com/","logo":{"@type":"ImageObject","url":"https://images2.pinewz.com/images/logo-big.png","width":"512","height":"512"}}}
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Vadodara391510
சதத்தை தவறவிட்ட விராட்... இந்தியா அசத்தல் வெற்றி - பயம்காட்டிய நியூசிலாந்து!
SGSudharsan G
Jan 11, 2026 16:46:11
Kotambi, Gujarat

IND vs NZ 1st ODI Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGSudharsan G
Mar 17, 2026 11:25:15
Viluppuram, Kalamarudur, Tamil Nadu:

சி.வி. சண்முகம் நடிகை சர்ச்சை முழு விவரம்: திமுக ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கண்டனப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 17) நடைபெற்றது.

சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு 

இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து போராட்டத்தில் உரையாற்றியபோது, நடிகை ஒருவரது பெயரை குறிப்பிட்டு சர்ச்சையான முறையில் பேசினார்.

சி.வி. சண்முகம் பேசியது என்ன?

அதாவது, "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே போய், அனைவரின் கனவை சொல்லுங்கள் என சொல்கிறார், இவர் நிறைவேற்றி தருகிறாராம். எனக்கு நயன்தாரா வேண்டும், இவர் நிறைவேற்றி தருவாரா...?" என சி.வி. சண்முகம் பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பாலபாரதி கண்டனம்

மகளிர் பாதுகாப்பு குறித்து நடைபெறும் போராட்டத்தில், நடிகையை கண்ணியமின்றி அருவருக்கத்தக்க வகையில் மாநிலங்களவை உறுப்பினரே பேசுவதே கண்டனத்திற்குரியது என மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலபாரதி,"நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது கண்டனத்திற்குரியது. சி.வி. சண்முகம் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என பேசியிருந்தார்.

சி.வி. சண்முகம் கண்டனம்

இந்நிலையில், சி.வி.சண்முகம் தற்போது, "விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து கண்டனப் போராட்டத்தின் போது, 'ஸ்டாலினின் கனவு கூறுங்கள்' என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம்" என்றார்.

மேலும் படிக்க | 2026 தேர்தல்: யாருக்கு வெற்றி? விஜய் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் - மூத்த பத்திரிகையாளர் கணிப்பு!

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் விசிகவிற்கு எத்தனை தொகுதிகள்? முக்கிய வேட்பாளர் யார்?

மேலும் படிக்க | தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1005
comment0
Report
SGSudharsan G
Mar 17, 2026 07:25:18
Chennai, Tamil Nadu:

Rajinikanth Condemns TVK Aadhav Arjuna: ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்" என ஆதவ்வின் பேச்சை முற்றிலும் மறுத்துள்ளார். 

மேலும் ஆதவ்வின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்திற்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், அரசியல் ஆளுமைகள், திரையுலகினர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

அந்த அறிக்கையில், "அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள்; அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார். 

ரஜினிகாந்தின் பஞ்ச் பதிலடி: காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

சென்னையில் சில நாள்களுக்கு முன் நடந்த தவெக ஆர்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் பல்வேறு மிரட்டல்களை திமுக கொடுத்தது என பேசியிருந்தார். அப்போது பேசிய ஆதவ், "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்-க்கு பிறகு ஒரு பிரபலமான அரசியல் தலைவராக வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், இதே திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ரஜினி இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார், இதை நான் அவர் மீது விமர்சனமாக சொல்லவில்லை. ஆனால், மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை நம் தலைவரிடம் (விஜய்) உள்ளது" என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | ரஜினி அரசியலுக்கு வராதது ஏன் தெரியுமா? - திருமா சொன்ன முக்கிய மேட்டர்... தவெகவுக்கு பதிலடி!

மேலும் படிக்க | தவெக-வின் சகுனி.. ’ஸ்லீப்பர் செல்’ ஆக செயல்படும் ஆதவ் அர்ஜுனா.. விஜய்யை எச்சரிக்கும் உறவினர்!

மேலும் படிக்க | திமுகவிடம் இருந்து விலகியது ஏன்? முதல் முறையாக சொன்ன ஆதவ் அர்ஜுனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

999
comment0
Report
RSRK Spark
Mar 17, 2026 00:56:54
Hyderabad, Telangana:

ஐபிஎல் 2026 வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இந்த போட்டிக்கான முதல் பாதி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளனர். முதல் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளிலும் வெளிநாட்டு வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமே. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: ராஜஸ்தான் அணியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்... சிக்கலை தரும் இந்த 3 வீரர்கள்!

பாட் கம்மின்ஸ் காயம் 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவருமான பாட் கம்மின்ஸ் கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச தொடரின் போது அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பல்வேறு சர்வதேச போட்டிகளை தவறவிட்டார். குறிப்பாக ஆஷஸ் போன்ற முக்கிய தொடர்களிலும் அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் அவர் முழுமையாக விலகினார். பாட் கம்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி லீக் போட்டியிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. சமீபத்தில் தனது காயம் பற்றி பேசிய பாட் கம்மின்ஸ், "அடுத்து சில வாரங்களில் மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்க உள்ளேன். மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன்" என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் 2026ன் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 

இஷான் கிசான் புதிய கேப்டன்?

பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அடுத்ததாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற யோசனையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறங்கியுள்ளது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இருந்தாலும் ஒரு இந்திய வீரருக்கு கேப்டன்சி வழங்க வேண்டும் என்று சன்ரைசஸ் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா போன்ற தொடக்க வீரர் மற்றும் நிதிஸ் குமார் ரெட்டி போன்ற ஆல் ரவுண்டர் இருந்தாலும், அவர்களுக்கு பெரிதாக கேப்டன்சி அனுபவம் இல்லை. எனவே சமீபத்தில் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்த இஷான் கிஷனுக்கு கேப்டன்சி பொறுப்பை வழங்கலாமா என்று சன்ரைசஸ் நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் இஷான் கிசான். குறிப்பாக தனது சொந்த மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட இஷான் கிஷான் அந்த அணிக்கு முதல் முறையாக கோப்பை வென்று தனது கேப்டன்சி திறமையும் நிரூபித்துள்ளார். குறிப்பாக பைனலில் 49 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். இது போன்ற சாதனைகள் காரணமாக தான் அவருக்கு தற்போது கேப்டன்சி பதவி தேடி வந்துள்ளது. 

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் எதிர்பார்ப்பு என்ன?

கடந்த சில சீசனங்களாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற டார்கெட்டை வைத்து அதிரடியாக விளையாடி வருகிறது. இன்று அனைத்து அணிகளும் பவர் பிளேயில் கூடுதல் அதிரடியாக ஆடுவதற்கு அடித்தளம் போட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்று சொல்லலாம். குறிப்பாக அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டணி பௌலர்களை நாலா புறமும் சிதறடித்து வருகின்றனர். இதனால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த முறை முதல் போட்டியிலேயே கடந்த ஆண்டு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சன்ரைசஸ் விளையாட உள்ளது. அதுவும் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் சிக்ஸர் மழைகளை எதிர் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பாட் கம்மின்ஸ் முழுமையாக குணமடைந்து மீண்டும் அணியில் இணையும் வரை, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை இஷான் கிஷன் எவ்வாறு வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சன்ரைஸ் ஹைதராபாத் அணி விவரம்!

பாட் கம்மின்ஸ், இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேல், கமிந்து மெண்டிஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஈஷான் மலிங்கா, ஷிவம் மாவி, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஸீஷன் அன்சாரி, ஆர். ஸ்மரன், சலீல் அரோரா, ஷிவாங் குமார், சாகிப் உசேன், ஓம்கார் தர்மேல், க்ரெய்ன்ஸ் புலேத்ரா, பிரபுல் ஹிங்கே, அமித் குமார்.

மேலும் படிக்க: இந்த ஆண்டும் CSK கோப்பை ஜெயிக்காது? பிளே ஆஃப் சுற்றுக்கும் வாய்ப்பில்லை! அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

951
comment0
Report
SMShiva Murugesan
Mar 16, 2026 08:10:03
Kolkata, West Bengal:

மேற்கு வங்கம் தேர்தல் செய்திகள்: மேற்கு வங்க அரசியல் களம் இப்போது அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது! தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக முதல்வர் மம்தா பானர்ஜி ஆடிய 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. ஒட்டுமொத்த டெல்லி வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது. இதைப்பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

தேர்தல் தேதிக்கு முன் 'தக் லைஃப்' செய்த மம்தா: அதிர்ச்சியில் பாஜக!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக, மம்தா பானர்ஜி வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்புதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது./

மேற்கு வங்க தேர்தல் 2026 மம்தா பானர்ஜி DA அறிவிப்பு விவரம்

மத்திய அரசுக்கும் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் மம்தா, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால கோரிக்கையான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை அதிரடியாக விடுவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி வழங்கிய DA நிலுவைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பஞ்சாயத்து, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

மம்தா பானர்ஜி DA அறிவிப்பு எப்போது அமல்?

2009-ம் ஆண்டின் 'ROPA' விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை, வரும் 2026 மார்ச் மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணை (GO) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏன் இது மோடி அரசுக்கு பின்னடைவு

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்த பிறகு இத்தகைய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அதைத் துல்லியமாக கணித்த மம்தா, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கோப்பில் கையெழுத்திட்டு அரசாணையை வெளியிட்டுவிட்டார்.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகம் வகுத்திருந்த பாஜகவுக்கு, மம்தாவின் இந்த 'பழைய ஓய்வூதியத் திட்ட' (OPS) பாணி அணுகுமுறையும், அகவிலைப்படி அறிவிப்பும் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ட்விட்டர் அதிரடி

இது குறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். நிதித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா? 

தேர்தல் களத்தில் இந்த ஒரு அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடியை மோடி தலைமையிலான பாஜக எப்படிச் சமாளிக்கப் போகிறது? மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

மேற்கு வங்க தேர்தல் அட்டவணை 2026

தேர்தல் விவரம் முதற்கட்டம் இரண்டாம் கட்டம்
தேர்தல் நடைபெறும் தொகுதிகள் தொகுதிகள் 142 தொகுதிகள்
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 6, 2026 ஏப்ரல் 9, 2026
வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 23, 2026 ஏப்ரல் 29, 2026
வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 மே 4, 2026

மேற்கு வங்க தேர்தல் நடத்தை விதிகள்

இந்த முறை மேற்கு வங்கத்தில் கடந்த காலத்தைப் போல 8 கட்டங்களாக இல்லாமல், வெறும் 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதனால் இனி புதிய சலுகைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிக்க முடியாது.

மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் வன்முறையைத் தவிர்க்க இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் சுமார் 1.4 லட்சம் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் (1,500 கம்பெனிகள்) குவிக்கப்பட உள்ளனர்.

மேற்கு வங்க மாநில வாக்காளர் விவரம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி இளைஞர்கள் (20-29 வயது) வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பார்க்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க - இவர்களுக்கு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு - தேர்தல் அறிவிப்புக்கு முன் மாநில அரசு அதிரடி

மேலும் படிக்க - 2021ல் 8 கட்டம்... 2026ல் 2 கட்டம்... மேற்கு வங்க தேர்தலில் இந்த மாற்றம் ஏன்?

மேலும் படிக்க - Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

193
comment0
Report
SGSudharsan G
Mar 16, 2026 07:25:06
Ghaziabad, Uttar Pradesh:

Harish Rana Euthanasia: உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் தங்கி இருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அன்று முதல் கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமாவில் நினைவின்றி இருந்துள்ளார். அதாவது, உயிர் இருந்தாலும் உடலில் ஒரு அசைவு கூட இன்றி இருந்துள்ளார்.

ஹரிஷ் ராணாவின் இறுதி நிமிடங்கள்...

2013ஆம் ஆண்டில் இருந்து ஹரிஷ் ராணா உயிர் காக்கும் கருவிகளை பயன்படுத்தி வந்தார். சுவாசிப்பதற்கு டிரக்கியோஸ்டமி குழாய், உணவை உட்கொள்வதற்கு காஸ்ட்ரோஜெஜுனோஸ்டமி குழாய் ஆகியவை அவருக்கு உதவின. படுத்த படுக்கையாகிவிட்ட ஹரிஷ் ராணா, பல வருடங்களாக மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இது பயனளிக்காது என்பதை அறிந்த பின்னரே பெற்றோர் கருணை கொலை முடிவை எடுத்தனர். 

தங்களால் இனி தங்களது மகனை கவனித்துக் கொள்ள இயலாது என்று கூறி, ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், நாட்டில் முதல்முறையாக உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதன்படி ஹரிஷ் ராணாவின் உயிர் காக்கும் மருத்துவ இணைப்புகளை மருத்துவர்கள் துண்டித்தனர். அவரது தாயார் பிரியா விடை கொடுத்த சம்பவம் இணையவாசிகளை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

22 விநாடி வீடியோ வைரல்

மனதை உருக்கும் 22 விநாடி வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர், அவரின் கடைசி நிமிடங்களில் அவருடன் இருக்கும் தருணத்தை வீடியோவில் காண முடிகிறது. தீராத வலியில் இருந்து விடுதலையாகும் தனது மகனின் முகத்தை பார்த்து, ஹரிஷ் ராணாவின் பின்னால் அமர்ந்திருக்கும் அவரது தாயார் உணர்ச்சிவசப்படுவதை வீடியோவில் காண முடிகிறது. 

சமூக கலாச்சார தன்னார்வ அமைப்பான பிரம்ம குமாரி அமைப்பினர் தொடர்ந்து ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்த அமைப்பினர்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்துகொடுத்து உச்ச நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு சட்டப்போராட்டம் நடத்த உதவினர். இன்று வெளியான வீடியோவில் பிரம்ம குமாரி அமைப்பைச் சேர்ந்த பெண், ஹரிஷ் ராணாவின் நெற்றியில் திலகமிடுவதை பார்க்க முடிகிறது. "அனைவரையும் மன்னியுங்கள், எல்லோரிடமும் மன்னிப்பு கேள். இப்போது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது..." என அந்த பெண் திலகமிடும்போது ஹரிஷ் ராணாவிடம் சொல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

அருணா ஷான்பாக் கருணைக் கொலை வழக்கு

சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான செவிலியர் அருணா ஷான்பாக் என்பவருக்கு 'உயிர் நீக்கம்' உரிமையை உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.

அவரை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்காத சூழலில், அவர் சுமார் 40 ஆண்டுகள் கோமா நிலையிலேயே இருந்தார். கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் பின்னர் கருணைக்கொலையை நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், செயலில் இருப்பவரை கருணைக்கொலை செய்வதை இறுதியில் மறுத்தது. தொடர்ந்து அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2015இல் நிமோனியாவால் அவர் உயிரிழந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

ஆனால், தற்போது ஹரிஷ் ராணாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணை கொலை செய்ய அனுமதி அளித்திருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. மேலும், பெற்றோரை பாராட்டியது. நீதிபதிகள் அவர்களின் தீர்ப்பில், "ஒருவரை நேசிப்பது என்பது மகிழ்ச்சியான நேரங்களில் மட்டுமல்ல, அவர்களின் சோகமான மற்றும் கஷ்ட காலத்திலும் அவர்களுடன் இருப்பதும் அரவணைப்புதான்" என குறிப்பிட்டனர். மேலும், பெற்றோர் ஆழ்ந்த சோகத்தால் வாடியிருப்பதையும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தனர். 

"கடந்த 13 ஆண்டுகளாக, வழக்கு தொடுத்தவர் (ஹரிஷ் ராணா) வலியாலும், துன்பத்தாலும் நிரம்பிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நம்மில் பெரும்பாலானோர் போல் இன்றி, அவரது வேதனைக்கு குரல் கொடுக்கும் திறன் கூட அவருக்கு இல்லாமல் போனதால், அந்த வலியும் துன்பமும் இன்னும் கொடூரமானது. வழக்கு தொடுத்தவரின் பெற்றோரம், உடன்பிறந்தவர்களும் ஆதரவு தூண்களாக நிற்பது மிகுந்த மரியாதையுடன் கவனிக்கின்றோம். அவரை பராமரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அவர்களை சோர்வடைய வைத்துள்ளன. இருந்தாலும் அதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மேலும் கருணை கொலைக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, இந்த உத்தரவு மரணத்தை தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல என்றும் மாறாக செயற்கையாக ஆயுளை நீட்டிக்க வேண்டாம் என்பதை பற்றியது என குறிப்பிட்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

255
comment0
Report
RSRK Spark
Mar 16, 2026 06:40:37
Chennai, Tamil Nadu:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மொத்தமும் விஜய்யை சுற்றி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் யாருடன் கூட்டணிக்கு செல்வார் அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளார் என்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்பட உள்ளதாகவும் பேசப்பட்ட வந்தது. இருப்பினும் இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரக்பூர்வ அறிவிப்பும் இல்லை, மறுப்போம் இல்லை. இதனால் பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதானா என்ற சந்தேகமும் எழுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. 

மேலும் படிக்க: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு! முழு விவரம்

விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி!

தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு 80 சீட்டுகள் தருவதாகவும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடமும், துணை முதலமைச்சர் பதவியும் தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் விஜய் தரப்பில் எங்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் பாஜகவும், அதிமுக தரப்பும் விஜய்யுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற குழப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் கூட்டணி தொடர்பான குழப்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

CTR. நிர்மல் குமார் பதவு!

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார், "வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் எந்தவிதமான  பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச் செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு  தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஐடி விங்

மேலும் தமிழக வெற்றிக் கழக ஐடி விங் சார்பில் வெளியான அறிக்கையில், " கல்லாப் பெட்டி கனவுகளும்... கற்பனைப் போர் வீரர்களும்! தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி "உண்மைக்குப் புறம்பான" செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னர் இதேபோல் திரு. பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. "அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்" என்று “வாடகை வியாபாரி” ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், "நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது" என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது. 

மீண்டும் அதே ‘பழைய ஸ்கிரிப்ட்டை’ அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில "கல்லாப் பெட்டி" முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை.. தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும். போட்டிக்கு என்று சில "Virtual Warriors" உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே "ஜோசியம்" பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

162
comment0
Report
SGSudharsan G
Mar 16, 2026 06:00:45
:

Bab El-Mandeb Strait: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் காரணமாக ஏற்கெனவே கிழக்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் சர்வதேச அளவில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது. உலக நாடுகளுக்கான 20% கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதை தொடர்ந்து எரிபொருள் தட்டுபாடு மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் எகிறியிருக்கிறது. 

இது அமெரிக்காவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை தடை செய்தால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதையும் தாண்டி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க, ஜலசந்திக்கு போர் கப்பல்களை அனுப்பும்படி சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. 

சிக்கல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், தற்போது ஏமன் நாட்டில் இயங்கிவரும் ஹவுத்தி கிளர்ச்சி படையினர், ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு பால் எல்-மண்டேப் ஜலசந்தியையும் மூடுவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும், ஈரானுக்கு உதவும் வகையிலும், பால் எல்-மண்டேய் ஜலசந்தியை மூட இருப்பதாக, ஹவுத்திகளின் மூத்த தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த பிப். 28ஆம் தேதி இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானைச் சேர்ந்த Fars News, ஹவுத்திகளும், மற்ற கிளர்ச்சி படையினரும் தயாராக இருப்பதாகவும், அவர்கள் தற்போதைய போரில் எப்போது வேண்டுமானாலும் ஈரான் படையுடன் கைக்கோர்க்கலாம் என்றும் செய்தி வெளியிடப்ட்டுள்ளது. ஒருவேளை இந்த நடந்தால், ஏமன் அருகே இருக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி முற்றிலும் மூடப்படும் அபாயம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாப் எல்-மண்டேப் ஜலசந்தி என்பது அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. மேலும் இது குறுகிய கடல் பாதையாகும். இது செங்கடலில் இருந்து சூயஸ் கால்வாய் நோக்கி பயணிக்கும் எண்ணெய் கப்பல்களுக்கான முக்கிய பாதையாக உள்ளது. ஒருவேளை இந்த பாதையும் முடங்கினால், சூயஸ் கால்வாயை எண்ணெய் கப்பல்களால் போக முடியாது.

எனவே, எண்ணெய் கப்பல்கள் ஆப்பிரிக்க தென் முனையை கடந்து, வேறு பாதையை எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. மாற்று பாதையை தேர்வு செய்தால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் எண்ணெய் கப்பல்களுக்கு ஏற்படும். எண்ணெய் கப்பல்கள் நீண்ட தூரம் பயணித்தால், அதன் எரிபொருள் செலவு அதிகமாகும். இது மேலும் கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள்களின் விலையை சர்வதேச சந்தையில் அதிகப்படுத்தும் அபாயம் உள்ளது.

368
comment0
Report
SMShiva Murugesan
Mar 16, 2026 03:44:58
Cuttack, Odisha:

ஒடிசா கட்டாக் தீ விபத்து செய்திகள்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவமனையின் டிரௌமா கேர் ஐசியூ பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயமடைந்தனர். முதல்வர் மோகன் சரண் மாஜி நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கட்டாக் எஸ்சிபி மருத்துவமனையில் நேரிட்ட இந்தத் துயரம் உண்மையிலேயே நெஞ்சைப் பதறவைக்கிறது. ஒரு உயிர் காக்கும் இடத்தில் இப்படி ஒரு விபத்து நடப்பது என்பது ஜீரணிக்கவே முடியாத ஒன்று. இந்தச் சம்பவம் குறித்த தற்போதைய நிலவரத்தை அறிந்துக்கொள்ளுவோம்.

ஒடிசா மருத்துவமனை தீ விபத்து

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள புகழ்பெற்ற எஸ்சிபி (SCB) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா கட்டாக் தீ விபத்து: என்ன நடந்தது?

திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.30 முதல் 3.00 மணி அளவில், மருத்துவமனையின் டிரௌமா கேர் ஐசியூ (Trauma Care ICU) பிரிவில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஒடிசா கட்டாக் தீ விபத்து: எத்தனை உயிரிழப்புகள்?

தீ விபத்தின் போது மற்றும் வார்டுகளை மாற்றும் போது ஏற்பட்ட பதற்றத்தில் மொத்தம் 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

ஒடிசா கட்டாக் தீ விபத்து: தீக்காயங்கள் நிலவரம் 

நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற போது 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஒடிசா கட்டாக் தீ விபத்து: மீட்பு பணி நிலவரம்

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. சுமார் 23 நோயாளிகள் உடனடியாக மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

ஒடிசா கட்டாக் தீ விபத்து: அரசின் நடவடிக்கைகள்:

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

"இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். மேலும், விபத்து குறித்து விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

தீ தடுப்பு நெறிமுறைகள் அவசியம் ஏன்?

மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தீ தடுப்பு நெறிமுறைகள் (Fire Safety Protocols) எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.

175
comment0
Report
SGSudharsan G
Mar 15, 2026 13:11:12
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Politics Latest News Updates: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று (மார்ச் 15) ஆலோசனை மேற்கொண்டார். 

ஆலோசனைக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், கூட்டணி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 

அதில் அவர், "திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம்; அதுகுறித்து திமுகவிடம் இருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லை; முக்கிய பிரச்னைகள் குறித்து 10 கோரிக்கைகள் கொடுத்திருந்தோம்... அதற்கும் பதில் இல்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். 

திமுகவின் பதிலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். முடிவு எடுக்க கட்சியில் எனக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

153
comment0
Report
SGSudharsan G
Mar 15, 2026 11:13:06
Chennai, Tamil Nadu:

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அட்டவணையை, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

5 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 2.18 வாக்குச்சாவடிகள் உள்ளன. 25 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தலுக்கு ஒப்பானது இந்த 5 மாநில தேர்தல் என தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். 

திருப்புமுனை தேர்தல்

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான இருமுனைப் போட்டி என்பது மாறி, இம்முறை மும்முனை அல்லது சதுரங்கப் போட்டியாக தேர்தல் களம் காட்சியளிக்கிறது.

மொத்த சட்டப்பேரவை தொகுதிகள்: தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரை, 38 மாவட்டங்களில் மொத்தம் 234 உள்ளன. தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் சேர்ந்து 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முழு அட்டவணை 

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி: மார்ச் 30

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: ஏப்ரல் 6

வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் தேதி: ஏப்ரல் 7

வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 9

வாக்குப்பதிவு நடைபெறும் தேதி: ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி:  மே 4

நான்கு முனை போட்டி

நேரடிப் போட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கும். தற்போது நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்து உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தொடர்ந்து வெல்லுமா திமுக?

திமுக கூட்டணி விவரம் (DMK Allliance): முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த அணி தேர்தலைச் சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் (28 இடங்கள்), விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, தேமுதிக மற்றும் பிற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 1971ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை பிடிக்க திமுக முனைப்பு காட்டுகிறது.

'திராவிட மாடல்' சாதனைகளை முன்வைத்து இவர்கள் களம் காண்கின்றனர். காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகிவிட்ட நிலையில் விசிக, சிபிஐ, சிபிஎம், தவாக உள்ளிட்ட பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

முட்டிமோதும் அதிமுக - பாஜக

அதிமுக கூட்டணி விவரம் (AIADMK Allliance): எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக களம் இறங்குகிறது. 2024 மக்களவை தேர்தலில் முறிந்த பாஜக உடனான உறவு, தற்போது இந்த தேர்தலில் மீண்டும் இணைந்துள்ளது. அதிமுக கடந்த முறை இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அமமுக, பாமக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன. 

கேம் சேஞ்சர் விஜய்

தமிழக வெற்றி கழகம் (TVK): நடிகர் விஜய் தொடங்கி உள்ள இந்தப் புதிய கட்சி, 2026 தேர்தலில் ஒரு 'கேம் சேஞ்சராக' பார்க்கப்படுகிறது. "திமுகதான் எங்களது அரசியல் எதிரி" என நேரடியாக அறிவித்து, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். இது இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டை பிரிக்கும் நாதக

நாம் தமிழர் கட்சி (NTK): வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி நிலைப்பாடு என்பது வாக்கு சதவிகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பிரிக்கும். சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்

மேலும் படிக்க | புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு! முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

170
comment0
Report
RSRK Spark
Mar 15, 2026 05:27:47
Chennai, Tamil Nadu:

சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது. 

ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம்

இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசிங் அடையாளங்கள் ஒன்றிணைந்துள்ளன என்றும், மகிந்திராவின் மின்சார மோட்டார்ஸ்போர்ட் பிரிவுடன் அஜித்தின் நல்லுறவையும் இது வலுப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் அஜித் குமார் முன்னணி நடிகராக இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம் பெற்றவர். ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல ரேஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், தனது சொந்த அணியான அஜித் குமார் ரேசிங் மூலம் சர்வதேச ரேசிங் அரங்கிற்கு வெற்றிகரமாக திரும்பினார். அதாவது, 2025 துபாய் 24H எண்ட்யூரன்ஸ் போட்டியில் 991 பிரிவில் P3 இடத்தையும், கிரெவென்டிக் 24 ஹவர்ஸ் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில் முகெல்லோ சுற்றில் P3 மற்றும் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றில் P2 இடத்தையும் பெற்றார்.

பிஈ 6 ஃபார்முலா எடிஷன்

பிஈ 6 ஃபார்முலா எடிஷன் உலகின் முதல் ஃபார்முலா ஈ தழுவிய சிறப்பு பதிப்பு எஸ்யுவி ஆகும். எஃப்ஐஏ ஃபார்முலா ஈ உலக சாம்பியன்ஷிப்பில் மகிந்திரா பங்கேற்ற பன்னிரண்டு சீசன்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 282 bhp திறன் கொண்ட ரியர் டிரைவ் மின்சார மோட்டார் மற்றும் 380 Nm டார்க் திறனுடன், இந்த எஸ்யுவி 0–100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் சென்றடையும். ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு டிராக், பிரீமியம் சூட் லெதரெட் உள் அலங்காரம், 79 kWh பேட்டரி மற்றும் 180 kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றுடன் உயர் செயல்திறன் மற்றும் சிறந்த மின்சார இயக்க அனுபவத்தை இந்த வாகனம் வழங்குகிறது.

 

மேலும் படிக்க | தாய் கிழவி படத்தை அடுத்து..சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் இயக்குநர்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | ஜனநாயகன் படத்திற்கு அமேசான் வைத்த ஆப்பு! ஓடிடியிலும் வெளியாகாதா? என்ன விவரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

167
comment0
Report
RSRK Spark
Mar 15, 2026 05:26:32
Chennai, Tamil Nadu:

குளிர்காலம் முடிந்து தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகரங்களை தாண்டி கிராம பகுதிகளிலும் குடிநீருக்காக 20 லிட்டர் தண்ணீர் கேன்களை வாங்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மூலம் குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் 20 லிட்டர் தண்ணீர் கேன்களின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்தான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க: வாடகைக்கு வீடு விடுபவர்கள் கவனத்திற்கு! இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

அழுக்கு கேன்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும்! 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு இன்றி தண்ணீர் கேன்கள் விநியோகிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாசி பிடித்த மற்றும் அழுக்கான கேன்களில் தண்ணீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பாசிப்பிடித்த, அசுத்தமான மற்றும் தரமற்ற முறையில் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உடனடியாக ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கேன்களில் கட்டாயம் இருக்க வேண்டியவை 

20 லிட்டர் தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு தண்ணீர் கேன்களிலும் சில குறிப்பிட்ட தகவல்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அந்த தண்ணீர் கேன்களில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, FSSAI உரிமை எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஒரு குடிநீர் கேன்களை அதிக பட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த வரம்பை மீறி பழைய கேன்களை பயன்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குடிநீரின் தரம் மற்றும் தாதுக்கள் 

பொதுமக்கள் குடிக்கும் பாதுகாப்பான குடிநீரில் குறிப்பிட்ட அளவு தாதுக்கள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதன்படி விற்கப்படும் 20 லிட்டர் கேன்களில் கால்சியம் அளவு லிட்டருக்கு 10 முதல் 75 மில்லி கிராம் வரையும், மக்னீசியம் அளவு லிட்டருக்கு ஐந்து முதல் 30 மில்லி கிராம் வரையும் சரியான விகிதத்தில் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஒன்றாக செயல்பட்டு குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. 

அரசு நிர்ணயத்துள்ள விதிகள் 

அரசு நிர்ணயத்துள்ள விதிகளையும், முறையான தரச் சான்றிதழ்கள் மற்றும் எந்தவித அனுமதியும் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீதும் சட்டவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை மட்டும் இன்றி அந்த குறிப்பிட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஹரித்வார் - ரிஷிகேஷ் டூர்.! கம்மி விலையில் ஐஆர்சிடிசி புதிய பேக்கேஜ்

மேலும் படிக்க | ரயில்வேயின் ஆன்மீக பேக்கேஜ் ரெடி! குறைந்த செலவில் ஒரு ராயல் பயணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

153
comment0
Report
SGSudharsan G
Mar 14, 2026 14:20:37
Chennai, Tamil Nadu:

DMK Rajiv Gandhi, Fact Check: திமுகவின் முக்கிய பேச்சாளராக அறியப்படும் ராஜீவ் காந்தி கடந்த ஒரு சில நாள்களாக இணையத்தில் சர்ச்சையில் சிக்கியிருந்தார். அவருக்கு திடீரென பதவி மாற்றம் செய்யப்பட்டதையும், இந்த சர்ச்சையையும் சேர்த்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ராஜீவ் காந்தியும் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

ராஜீவ் காந்தியின் வளர்ச்சியும், பொறுப்பு மாற்றமும்...

ராஜீவ் காந்தியின் வளர்ச்சி: நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். வழக்கறிஞரான இவர், திமுகவில் உதயநிதி ஸ்டாலினுடன் அதிகம் நெருக்கம்காட்டி வந்த நிலையில், இணையத்திலும் திமுகவுக்காக தொடர்ந்து களமாடி அதிக கவனத்தை ஈர்த்த ராஜீவ் காந்தியின் வளர்ச்சி, கட்சியில் உதயநிதியின் வளர்ச்சியை விட வேகமாக இருப்பதாக பேசப்பட்டது. குறிப்பாக, கடந்த 2025ஆம் ஆண்டில் திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பை பெற்றார். 

பதவி மாற்றம்: இந்தச் சூழலில், கடந்த மார்ச் 13ஆம் தேதி ராஜீவ் காந்தியை, மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியில் முன்பை விட அவருக்கு சற்றே குறைந்த முக்கியத்துவம் கொண்ட பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தியோ அப்பொறுப்பை வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

ராஜீவ் காந்தி மீதான குற்றச்சாட்டுகள்

ஆபாச சேட்டிங் குற்றச்சாட்டு: மறுபக்கம், பெண் நிர்வாகிகளுடன் ராஜீவ் காந்தி ஆபாசமான முறையில் மெசேஜ் செய்து வந்ததாகவும், அதனாலேயே அவரை மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, முக்கியத்துவம் குறைந்த பொறுப்பை வழங்கியதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவின. செந்தில்பாலாஜி உள்ளிட்டோருடன் மோதல் போக்கை அவர் கடைபிடிப்பதாலும் அவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

திமுக தலைமை மீதும் சாடல்: ராஜீவ் காந்தி, திமுகவின் பெண் நிர்வாகி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமாக பேசியதாக  கூறப்பட்ட மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பகிரப்பட்டன. எதிர்க்கட்சிகளும் இந்த ஸ்கிரீன்ஷாட்களை அதிகம் பகிர்ந்து, ராஜீவ் காந்தியை கடுமையாக சாடின. மேலும், பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய நபரை கட்சியை விட்டு நீக்காமல், வேறு பொறுப்பை மாற்றிக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என திமுகவின் தலைமை மீதும் சாடினர்.

போலி ஸ்கிரீன்ஷாட்கள்

ராஜீவ் காந்தி மறுப்பு: தொடர்ந்து, ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகிய நிலையில், ராஜீவ் காந்தி இவை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு ராஜீவ் காந்தி மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, இணையத்தில் வலம் வரும் ஸ்கிரீன்ஷாட்கள் அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டவை என குறிப்பிட்டுள்ளார். மேலும் Fake Details என்ற போலி பக்கத்தை உருவாக்கும் இணையதளத்தை அவரது X பதிவுடன் இணைத்து, இதன்மூலமே அந்த ஸ்கிரீன்ஷாட்களை உருவாக்கி உள்ளதாகவும் ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் X பதிவு: "அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?" என அவரது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல என்றும் யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் என்றும் ராஜீவ் காந்தி பதிவிட்டிருக்கிறார்.  தொடர்ந்து அவர், "பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது. இதை எல்லாம் வைத்து யார் பேசிய மாதிரியும் உருவாக்கலாம். நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம். இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்" என குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

செய்தி சுருக்கம்

குற்றச்சாட்டு: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜீவ் காந்தி, பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார். சேட் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரல்

மறுப்பும் விளக்கமும்: இதற்கு ராஜீவ் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். போலியாக ஸ்கிரீன்ஷாட் உருவாக்கப்பட்டுள்ளது என கூறி, அதன் இணையதளத்தையும் குறிப்பிட்டுள்ளார். 

உண்மை என்ன?: தற்போது ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஸ்கிரீன்ஷாட் நம்பத்தகுந்த ஆதராமாகவும் கருதப்படவில்லை. இதுவரை எவ்வித வழக்கோ, புகாரோ நேரடியாக ராஜீவ் காந்தி மீது பதியப்படவில்லை.

மேலும் படிக்க | பாஜக இல்லை! அதிமுகவுடன் நேரடி கூட்டணி? தவெக எடுத்த முடிவு என்ன?

மேலும் படிக்க | NDA பக்கம் ஒதுங்கும் TVK? பாஜக போடும் பெரிய பிளான்... யோசிக்கும் விஜய் - யாருக்கு லாபம்?

மேலும் படிக்க | "ரஜினியை மிரட்ட முடியாது.. அடிபணிய மாட்டார்" ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

184
comment0
Report
SGSudharsan G
Mar 14, 2026 10:16:42
Chennai, Tamil Nadu:

TNCA President Srinivasaraj Exclusive Interview: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் புதுப்பொலிவை பெற்றிருக்கிறது. இங்கு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் 7 போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது. 

அனைத்து போட்டிகளையும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதுவும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இத்தொடரில் அதிக ரன்களை குவித்ததும் (256 ரன்கள்) இந்த மைதானத்தில்தான்... 

'சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது சேப்பாக்கம்' என்ற பொது கருத்தை உடைத்து, பேட்டிங், வேகப்பந்துவீச்சு என அனைத்திற்கும் சம வாய்ப்பை வழங்கியிருந்தது நமது சேப்பாக்கம் மைதானம். ஐசிசி டி20 உலகக் கோப்பை நிறைவடைந்து சேப்பாக்கம் மைதானம், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறது.  

அந்த வகையில், சேப்பாக்கம் மைதானத்தின் மறுசீரமைப்பு, தமிழ்நாட்டின் கிரிக்கெட் உட்கட்டமைப்பு, மாவட்ட அளவிலான வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஸ்ரீனிவாசராஜ், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் அளித்த நேர்காணலில் விரிவாக பேசியிருந்தார்.

மொத்தமாக மாறிய சேப்பாக்கம் மைதானம் 

"சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் Outfield 10-12 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியிருக்கிறோம். இன்னும் 10-12 ஆண்டுகளுக்கு இது நன்றாக இருக்கும். மழைநீர் வடிக்கால் அமைப்பை தரம் உயர்த்தியிருக்கிறோம். முன்னர் மழை பெய்து போட்டி தொடங்க குறைந்தபட்சம் 1 மணிநேரம் ஆகும், ஆனால் இனிமேல் 20-30 நிமிடத்தில் மழை நீர் வடிந்துவிடும், ஆட்டத்தை விரைவாகவே தொடங்கலாம்.

ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

ஆடுகளமும் சிறப்பாக மாறியிருக்கிறது. பேட்டிங்கிற்கும், பந்துவீச்சிற்கும் சம அளவில் இந்த ஆடுகளம் வாய்ப்பளிக்கும். யார் அன்றைய தினம் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு இந்த ஆடுகளம் சாதகமாக இருக்கும்" என பேசியிருந்தார். அவர் கூறியது போலவே டி20 உலகக் கோப்பை தொடரில் பகல் போட்டியிலும், இரவு போட்டியிலும் சேப்பாக்கம் மைதானத்தில் ரன் மழை பொழிந்ததை பார்க்க முடிந்தது.

உட்கட்டமைப்பை பலப்படுத்தியிருக்கிறோம்!

தமிழ்நாடு கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து பேசிய அவர், "டி20 பார்மட்டுக்கு நாம் TNPL நடத்தியிருக்கிறோம். இதன்மூலம் பல திறமையான வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இங்கிருந்து பலரும் ஐபிஎல் தொடருக்கும், இந்திய அணிக்கும் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அனைத்து வசதிகளையும் TNCA செய்து தருகிறது. இன்னும் பல தமிழக வீரர்களை உருவாக்கி, ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும், இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பதே TNCA-வின் நோக்கம்.

சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் உட்கட்டமைப்பை பலப்படுத்தியிருக்கிறோம். ரூ.150 கோடியில் மைதானத்தை சீர்செய்திருக்கிறோம். ஒருமுறை உட்கட்டமைப்பை பலப்படுத்திவிட்டால், இதை பயன்படுத்தி பல வீரர்களை உருவாக்கலாம். 

ஜூனியர் கிரிக்கெட்டில் மிரட்டும் தமிழ்நாடு

ஜூனியர் கிரிக்கெட்டில் - U16, U19, U23 இப்போது தமிழ்நாடு அணிக்கு சிறப்பாக இருக்கிறது. இவர்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம். இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றால்  TNPL, IPL, இந்திய அணியில் இவர்கள் எதிர்காலத்தில் விளையாடவார்கள்" என நம்பிக்கையுடன் பேசினார். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 11ஆம் தேதி அன்று கர்னல் சி.கே. நாயுடு கோப்பை தொடரில் U23 தமிழ்நாடு ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று, அவரது நம்பிக்கையை பலமாக்கியிருக்கிறது.

TNPL இந்தாண்டு சென்னையில் நடக்குமா? 

மற்ற மாவட்டத்திற்கு கிரிக்கெட்டை கொண்டுசெல்ல இதை வாய்ப்பாக பார்க்கிறோம். அப்போதுதான் கிரிக்கெட் பார்க்கவும், கிரிக்கெட்டை விளையாடவும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். தமிழ்நாடு அணியில் தற்போது பல மாவட்ட வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால்தான் TNPL தொடரை சென்னைக்கு வெளியே நடத்துகிறோம். சென்னையிலும் போட்டிகள் நடைபெறும்.

எந்தெந்த மாவட்டங்களில் Satellite சென்டர்கள்?

மாவட்ட அளவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல Satellite சென்டர்களை தொடங்கியிருக்கிறோம். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீரர்கள் அங்கு பயிற்சி பெற வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திரு்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் Satellite சென்டர்கள் இருக்கிறது. இது நமது அனைத்து தமிழ்நாட்டு அணி வீரர்கள் வெவ்வேறு சூழல்களில் விளையாடுவதற்காக ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. 

இதுவே மாவட்ட அளவிலான வீரர்களுக்காகவும் பயன்படுத்தும்போது இன்னும் பல திறமையான வீரர்களை கண்டடையலாம் என நினைக்கிறோம். நாட்டிலேயே இதேபோல் மாவட்டங்களில் இதுபோல் நிறைய Satellite சென்டர்களை தொடங்கியது வேறு எங்கும் இல்லை" என்றார். 

மேலும் படிக்க | IPL 2026: சிஎஸ்கே, ஆர்சிபி-க்கு செக்! பிசிசிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிகள்!

மேலும் படிக்க | தோனி பேட்டிங் இடத்தை மாற்றுமா CSK? கீழ் வரிசையில் இறங்குவது சரியில்லை!

மேலும் படிக்க | IPL 2026 அட்டவணை வெளியீடு.. ஆனா ஒரு ட்விஸ்ட்! CSK எந்தெந்த அணிகளுடன் மோதுகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

116
comment0
Report
SGSudharsan G
Mar 14, 2026 08:36:29
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government Electricity Subsidy For Hotels: வணிக ரீதியான LPG தட்டுபாடு காரணமாக, அனைத்து வகை உணவகங்கள், டீக்கடைகள் மின்சார பயன்பாட்டுக்கு மாறினால், கூடுதலாக பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

134
comment0
Report
Advertisement
Back to top