Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
சென்னை வாசிகளே அலர்ட்! ரூ.5000 அபராதம் - தப்பித் தவறியும் இதை பண்ணாதீங்க!
UKUmabarkavi K
Jan 11, 2026 07:00:48
Chennai, Tamil Nadu

Chennai Corporation Latest News: சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, சுகாதாரமாக இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் பொழுதுப்போக்கு இடங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்

குறிப்பாக மெரினா கடற்கரையை சர்வதேச தரத்தில் சென்னை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இதனால், மெரினான கடற்கரையை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவித கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.  

இருப்பினும், சென்னை மெரினாவில்  மட்டும் ஒருநாளைக்கு  4 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள் குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், ஆங்காங்கே போடுகின்றனர்.  குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருவதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதனால், சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது, சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மிது உரிய சட்ட விதிகளின்படி ரூ.5,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். பொங்கல் விடுமுறையில் மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இதனை தெரிந்து வைக்க வேண்டும்.

மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்

இதற்கிடையில், மற்றொரு உத்தரவையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2026 ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றுதல், கிளைகளை கத்தரித்தல், நடவு செய்தல் மற்றும் உலர்ந்த அல்லது ஆபத்தான மரங்களை அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான விண்ணப்பங்கள் இனி வனத்துறை மூலம் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது.  

சென்னை மாநகராட்சி இணையதளம் அல்லது நம்ம சென்னை செயலி மூலம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.  அனுமதியின்றி கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணிகளை அடித்தல், விளம்பர பலகைகளை பொருத்துதல் அல்லது பொது இடங்களில் மரங்களைச் சுற்றி அலங்கார விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.  சென்னை மாநகராட்சியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தற்போது பொங்கல் விடுமுறை வர இருக்கும் நிலையில், பொதுமக்கள் இதனை தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க: அரசு லேப்டாப்பில் இதை செய்யவே செய்யாதீங்க... வாரண்டியில் சிக்கல் வரும் - பெரிய அலர்ட்

மேலும் படிக்க:  அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGSudharsan G
Jan 11, 2026 16:46:11
Kotambi, Gujarat:

IND vs NZ 1st ODI Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 10, 2026 14:43:22
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government Free Laptop: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 'உலகம் உங்கள் கையில்' என்ற பெயரில் 20 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா லேப்டாப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த ஜன. 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.

TN Free Laptop: ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை பயிலும் உயர்க்கல்வி மாணவர்களுக்கும் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் கட்டணமில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்காக 2025-26 நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே தமிழ்நாடு அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

TN Free Laptop: லேப்டாப் உள்ள சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு அரசு வழங்கிய கட்டணமில்லா லேப்டாப்பில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், 128 MB VRAM வழங்கப்பட்டுள்ளது. Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. MS Office 365 மென்பொருளும் வழங்கப்பட்டது. Perplexity Pro செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் ஆறு மாத சந்தாவும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது வழங்கப்படுகிறது.

இதில் 720p HD கேமரா திரையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5.0 Bluetooth, 2.5 Ghz Wi-Fi இணைப்பு உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் திரையின் அளவு 14 இன்ச் அல்லது 15.6 இன்ச் ஆகும். 40 வாட்ஸ் பேட்டரியுடன் லேப்டாப் வழங்கப்படுகிறது. Windows Defender Protection ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. Dell, Acer, HP உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு லேப்டாப்பை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் லேப்டாப் பேக் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

TN Free Laptop: புகைப்படங்களை சேதப்படுத்தினால் சிக்கல்...

தயாரிப்பு நிறுவனங்கள், லேப்டாப்பிற்கு 1 வருட உத்தரவாதத்தையும், 3 வருடம் சர்வீஸ்-ம் செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் சார்ந்து ஏதும் மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் 18005999000 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், மாணவர்கள் தற்போது லேப்டாப்பில் இயல்பாக போடப்பட்டுள்ள OS அமைப்பை மாற்றினால் வாரண்டி கேட்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், லேப்டாப்பிற்கு மேற்புறத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களில் ஏதும் சேதப்படுத்தினால் வாரண்டி கோரப்படும்போது சிக்கல் எழலாம் என எல்காட் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லேப்டாப் வழங்கப்பட்ட பின்னர் பலரும் லேப்டாப்பில் உள்ள புகைப்படங்களை சேதப்படுத்தும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்ட நிலையில், மாணவர்களுக்கு இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | பொங்கல் பரிசு: டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? அரசின் செம்ம அப்டேட்!

மேலும் படிக்க | வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Jan 08, 2026 13:06:18
Chennai, Tamil Nadu:

இந்திய டி20 அணியின் முக்கிய வீரரான திலக் வர்மாவிற்கு, திடீர் என ஏற்பட்ட காயத்தால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். மேலும் டி20 உலக கோப்பை அணியில் இருந்தும், அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திலக் வர்மாவிற்கு பதிலகா சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்கோட்டில் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கொண்டிருந்த திலக் வர்மா, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க | விலகும் திலக் வர்மா... இந்திய அணியில் இந்த 3 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு - சரியான மாற்று யார்?

உடனடி சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சையில் டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற தீவிர நிலை இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு நேற்று ஜனவரி 7 அன்று உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், குணமடைய 3-4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 21 முதல் 31 வரை இந்தியாவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி டி20 தொடரில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிப்ரவரி 7 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது.

சுப்மன் கில் இடம் பெறுவாரா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்வுக் குழு சுப்மன் கில்லை அணியில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை அணியில் எடுத்து, அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை பெஞ்சில் உட்கார வைக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், திலக் வர்மா முதல் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியாமல் போகலாம் என்றும், அதற்குள் குணமடைந்து திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாற்று வீரர் தேவைப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

கில் ஏன் இல்லை?

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் அசத்திய கில், ஆகஸ்ட் 2025ல் ஆசிய கோப்பைக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், டி20 வடிவத்தில் அவரது பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 15 இன்னிங்ஸ்களில் 24.25 சராசரியுடனும், 137.26 ஸ்டிரைக் ரேட்டுடனும் வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. இதனால் தேர்வு குழு அதிர்ச்சியளிக்கும் வகையில் கில்லை டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கியது. நியூசிலாந்து தொடரில் ரியான் பராக் திலக் வர்மாவிற்கு பதிலாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரும் சில காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரியான் பராக் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடவில்லை, கடைசியாக டிசம்பர் 6ல் சையது முஷ்தாக் அலி டிராபியில் விளையாடினார்.

திலக் வர்மாவிற்கு மாற்று வீரர்கள் யார் யார்?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஷ்ரேயஸ் ஐயர்
ருதுராஜ் கெய்க்வாட்
தேவ்தத் படிக்கல்

மேலும் படிக்க | முக்கிய வீரருக்கு ஆப்ரேஷன்... இந்திய அணிக்கு ஷாக் - டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
PPINEWZ
Jan 08, 2026 11:19:24
Kolkata, West Bengal:

ED Raid On I-PAC Office, Mamata Banerjee: தேர்தல் வியூகங்களை வகுக்கும் முன்னணி நிறுவனம், I-PAC. அந்த வகையில், மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வியூகங்களை I-PAC நிறுவனமே மேற்பார்வையிடுகிறது. 

இது ஒருபுறம், கொல்கத்தாவில் உள்ள I-PAC அலுவலகத்தில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் மம்தா பானர்ஜி, I-PAC அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தின் போது மம்தா பானர்ஜியின் கையில் பச்சை நிற கோப்புகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.  

இந்நிலையில், I-PAC அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வந்தபோது, ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களை மம்தா பானர்ஜி வலுக்கட்டாயமாக அகற்றியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 08, 2026 09:01:26
Mumbai, Maharashtra:

Anil Agarwal Son Agnivesh Agarwal Death: பெருந்தொழிலதிபரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வாலின் (71) மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) நேற்று (ஜனவரி 7)உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Anil Agarwal: மாரடைப்பால் மரணம் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்தபோதே நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

Anil Agarwal: வாழ்வில் கருப்பு தினம்

மகனின் மறைவால் அனில் அகர்வால் கடும் பெரும் துயரில் வாடியுள்ளார். பிள்ளைகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையிலேயே கருப்பு தினம் இதுதான் என்றும் அவர் மனம் வருந்தினார். ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாகப் பிரிந்து செல்லக்கூடாது என்றும் அவரது அறிக்கையில் மன வேதனையை பதிவு செய்திருந்தார்.

Anil Agarwal: மகன் மட்டுமில்லை...

பீகார் தலைநகர் பாட்னாவில் 1976ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பிறந்தவர் அகனிவேஷ். இவர் ராஜஸ்தானில் உள்ள மயோ கல்லூரியில் படித்த இவர், Fujeirah Gold என்ற நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து Hindustan Zinc நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். விளையாட்டு, இசை ஆகியவற்றிலும் ஆர்வங்கொண்டவர் ஆவார். "எனக்கு, அவர் மகன் மட்டுமில்லை. அவர் எனது நண்பர், எனது பெரும், எனது உலகம்" என்றார். எனவே அவரது பிரிவில் இருந்து மீண்டு வர தானும், தனது மனைவி கிரணும் கடினமாக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

Anil Agarwal: மகனின் கனவு 

மகனின் மறைவைக்கு பின்னர், பல மனிதநேயச் செயல்பாடுகளுக்கு தன்னை அர்பணித்துக்கொள்ள உள்ளதாகவும் அனில் அகர்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவரது அறிக்கையில், "நம் நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் தூங்கக்கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் அர்த்தமுள்ள வேலை இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கனவை நானும் எனது மகனும் பகிர்ந்து கொண்டோம்.

Anil Agarwal: சொத்தில் 75% மக்களுக்கு...

அந்த வகையில், எங்கள் சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அக்னிக்கு நான் அளித்திருந்தேன்" என குறிப்பிட்டுள்ளார். இன்று நான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானித்துள்ளேன் என்றார். இந்தியா மீதும் அக்னிவேஷ் பெரும் நம்பிக்கையையும், கனவையும் வைத்திருந்தார் என அனில் பகிர்ந்துள்ளார். 'அப்பா, ஒரு தேசமாக நமக்கு எதுவும் குறைவு இல்லை. நாம் ஏன் பின்தங்கியிருக்க வேண்டும்?' என்று என்னிடம் கேட்பார்" என்று தனது மகன் குறித்து அவர் நினைவுக்கூர்ந்தார்.

இறுதியாக அவரது மகனுக்கான அஞ்சலி குறிப்பில், "நீ இல்லாமல் இந்தப் பாதையில் எப்படி நடப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்கள் கனவை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன்" என்றார். 

மேலும் படிக்க | பாஜக - காங்கிரஸ் கூட்டணி... வரலாற்றில் முதல்முறை - இது எப்படி நடந்துச்சு?

மேலும் படிக்க | மசூதி அருகே ஆக்கிரமிப்பு... இடிக்க வந்த அதிகாரிகள் மீது கல்வீச்சு... நள்ளிரவில் நடந்தது என்ன?

மேலும் படிக்க | போர்டு எக்ஸாம் வருதுன்னு பயமா இருக்கா? கவலை விடுங்க... இதோ CBSE-யின் சூப்பர் சேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 07, 2026 15:02:00
Puducherry, Puducherry:

Women Incentive and Pongal Gift 2026, Puducherry Government: வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க ஒன்றரை மாதமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன.

Tamil Nadu Government: ஓய்வூதியத் திட்டம் + பொங்கல் பரிசு + லேப்டாப்

இது ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு பல நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வைத்தது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. இவை அனைத்தும் திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், 2026 தேர்தலை ஒட்டி இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Puducherry Government: குடிநீர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தேர்தலை முன்னிட்டு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியின் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில், வில்லியனூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்வரும் 50 ஆண்டுகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வில்லியனூர் பரசுராமபுரத்தில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் உந்து நிலையம், நகர் முழுவதும் புதிய குடிநீர் குழாய் அமைத்தல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை பரசுராமபுரத்தில் நடைபெற்றது.

வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளையும் தொடங்கி வைத்தார்.

Puducherry Government: ஜனவரி 12இல் ரூ.2,500 உதவித்தொகை

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப‌ அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் அதன் பயனாளர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என தெரிவித்தார். மேலும் போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Puducherry Government: பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு விரைவில்

இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு பரிசுத் தொகை என அறிவிக்கப்படவில்லை, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இதுவரை புதுச்சேரியில் உள்ள 3.47 லட்சம் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூ.750 மதிப்பில் 4 கிலோ அரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சன்பிளவர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணியும் நேற்று (ஜன. 7) தொடங்கியது.

மேலும் படிக்க | Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு நிறுத்தம்! மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

மேலும் படிக்க | இவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | மாத உதவித்தொகை உயர்வு... பெட்ரோல், அரிசி பணமும் அதிகரிப்பு - அரசு அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 07, 2026 06:28:17
Coimbatore, Tamil Nadu:

Tamil Nadu Congress Latest News Updates: கோவையில் பிரவீன் சக்ரவர்த்தியிடம், விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "விஜய் பேரணியில் பங்கேற்க மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை ஒரு நடிகராக அவர்கள் பார்க்க வரவில்லை, அவரை அரசியல்வாதியாகவே பார்க்க வருகிறார்கள். விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறி உள்ளார், அதை யாராலும் மறுக்கவே முடியாது" என்றார். 

பிரவீன் சக்ரவர்த்தி மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது இல்லை. அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் பலவீனமாகவே  போய்கொண்டிருக்கிறது. இதைப் பலப்படுத்த நேரம் வந்துவிட்டது; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்காக தொண்டர்கள் இந்த கோரிக்கையை வைக்கின்றனர்" என்றார். கூட்டணிப் பொருத்தவரையும் காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும் என்று பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களது கோரிக்கை வைக்கலாம் என்றும் அதனுடைய கடைசி முடிவு காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என்றும் கூறினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
RSRK Spark
Jan 06, 2026 11:05:19
Chennai, Tamil Nadu:

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பிசிசிஐயின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு எந்தவித நிதி இழப்பீடும் வழங்க  வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளால் போட்டி போடு ஏலம் கேட்கப்பட்டார். இறுதியில் கொல்கத்தா அணி அவரை ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது ஒரு பங்களாதேஷ் வீரருக்கு ஐபிஎல் வரலாற்றில் கிடைத்த மிக உயர்ந்த ஒப்பந்த மதிப்பாகும்.

மேலும் படிக்க: CSK அணியின் இம்பேக்ட் வீரர் யார்? தோனியாக இருக்க வாய்ப்பா? முழு விவரம்!

பிசிசிஐ உத்தரவு

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடந்த சமீபத்திய வன்முறைகளை அடுத்து, அந்த பகுதியில் பிரச்சனை நிலவியது. இதனால் பிசிசிஐ வங்கதேச வீரரான முஸ்தபிசூர் ரகுமானின் ஐபிஎல் ஒப்பந்தங்களை நீக்க உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை. மாறாக சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மட்டுமே தெரிவித்தது. ஐபிஎல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, கொல்கத்தா அணி முஸ்தபிசூருக்கு எந்த தொகையும் செலுத்த சட்டரீதியான கடமை இல்லை என்றும், காயம் அல்லது கிரிக்கெட் தொடர்பான காரணங்களால் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

காப்பீட்டு கொள்கை

வழக்கமாக அசாதாரண சூழ்நிலைகளில் 50 சதவீதம் வரை காப்பீட்டிலிருந்து செலுத்தப்படுகிறது. இந்தியாவின் காயமடைந்த மத்திய ஒப்பந்த வீரர்களுக்கு இது உதவுகிறது. இருப்பினும் முஸ்தபிசூர் ரகுமானின் காப்பீட்டு உரிமை கோரல் விஷயத்தில், இந்த சூழ்நிலை உள்ளடக்கப்படவில்லை. எனவே கோலாத அணி ஒரு பைசா கூட செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முஸ்தபிசூர் ரகுமான் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. காரணம் ஐபிஎல் இந்திய சட்டத்தின் அதிகார வரம்பில் வருகிறது. இருப்பினும் எந்த ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் இந்த முடிவை எடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

NOC ரத்து

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் முடிவால், முஸ்தபிசூரின் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்-ஐ ரத்து செய்துள்ளது. முஸ்தபிசூர் தானாக ஐபிஎல் லீக்கிலிருந்து வெளியேறவில்லை மற்றும் எந்த தவறான நடத்தைக்கும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதால், இந்த சம்பவம் வீரர் உரிமைகள் குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது. தற்போதுள்ள காப்பீட்டு கட்டமைப்பு அவருக்கு குறைந்தபட்ச ஆதரவை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, தேவைப்பட்டால் கொல்கத்தா அணி மாற்று வீரரை தேர்வு செய்ய அனுமதிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒப்பந்த உறுதிப்பாடு பற்றிய கேள்விகளை எழுப்பி உள்ளது. 

மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை: முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்? முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Jan 06, 2026 08:44:30
Chennai, Tamil Nadu:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூரில் விஜய் பரப்புரையை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | இலவச லேப்டாப், புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? அமைச்சர் சக்கரபாணி அப்டேட்

சிபிஐ விசாரணை 

இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து விஜய் இடமும் சிபிஐ விசாரணை செய்யலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அரசியல் எதிரியை திமுகவாகவும், கொள்கை எதிரியை பாஜகவாகவும் அறிவித்துள்ள விஜய் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். 

ஜனநாயகன் கடைசி படம் 

தமிழ்நாட்டில் உச்ச நடிகராக உள்ள விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், தற்போது விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அரசு விஜய்க்கு தேவையில்லாத அழுத்தங்களை கொடுப்பதாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் எப்போது சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப்... இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
Advertisement
Back to top