தீபத் தூண் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி...!
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Women Incentive and Pongal Gift 2026, Puducherry Government: வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க ஒன்றரை மாதமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன.
Tamil Nadu Government: ஓய்வூதியத் திட்டம் + பொங்கல் பரிசு + லேப்டாப்
இது ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு பல நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வைத்தது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. இவை அனைத்தும் திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், 2026 தேர்தலை ஒட்டி இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Puducherry Government: குடிநீர் திட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தேர்தலை முன்னிட்டு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியின் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில், வில்லியனூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்வரும் 50 ஆண்டுகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வில்லியனூர் பரசுராமபுரத்தில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் உந்து நிலையம், நகர் முழுவதும் புதிய குடிநீர் குழாய் அமைத்தல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை பரசுராமபுரத்தில் நடைபெற்றது.
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளையும் தொடங்கி வைத்தார்.
Puducherry Government: ஜனவரி 12இல் ரூ.2,500 உதவித்தொகை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் அதன் பயனாளர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என தெரிவித்தார். மேலும் போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
Puducherry Government: பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு விரைவில்
இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு பரிசுத் தொகை என அறிவிக்கப்படவில்லை, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இதுவரை புதுச்சேரியில் உள்ள 3.47 லட்சம் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூ.750 மதிப்பில் 4 கிலோ அரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சன்பிளவர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணியும் நேற்று (ஜன. 7) தொடங்கியது.
மேலும் படிக்க | Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு நிறுத்தம்! மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!
மேலும் படிக்க | இவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு: முதல்வர் முக்கிய அறிவிப்பு!
மேலும் படிக்க | மாத உதவித்தொகை உயர்வு... பெட்ரோல், அரிசி பணமும் அதிகரிப்பு - அரசு அதிரடி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Tamil Nadu Congress Latest News Updates: கோவையில் பிரவீன் சக்ரவர்த்தியிடம், விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "விஜய் பேரணியில் பங்கேற்க மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை ஒரு நடிகராக அவர்கள் பார்க்க வரவில்லை, அவரை அரசியல்வாதியாகவே பார்க்க வருகிறார்கள். விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறி உள்ளார், அதை யாராலும் மறுக்கவே முடியாது" என்றார்.
பிரவீன் சக்ரவர்த்தி மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது இல்லை. அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் பலவீனமாகவே போய்கொண்டிருக்கிறது. இதைப் பலப்படுத்த நேரம் வந்துவிட்டது; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்காக தொண்டர்கள் இந்த கோரிக்கையை வைக்கின்றனர்" என்றார். கூட்டணிப் பொருத்தவரையும் காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும் என்று பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களது கோரிக்கை வைக்கலாம் என்றும் அதனுடைய கடைசி முடிவு காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என்றும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பிசிசிஐயின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு எந்தவித நிதி இழப்பீடும் வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளால் போட்டி போடு ஏலம் கேட்கப்பட்டார். இறுதியில் கொல்கத்தா அணி அவரை ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது ஒரு பங்களாதேஷ் வீரருக்கு ஐபிஎல் வரலாற்றில் கிடைத்த மிக உயர்ந்த ஒப்பந்த மதிப்பாகும்.
மேலும் படிக்க: CSK அணியின் இம்பேக்ட் வீரர் யார்? தோனியாக இருக்க வாய்ப்பா? முழு விவரம்!

பிசிசிஐ உத்தரவு
பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடந்த சமீபத்திய வன்முறைகளை அடுத்து, அந்த பகுதியில் பிரச்சனை நிலவியது. இதனால் பிசிசிஐ வங்கதேச வீரரான முஸ்தபிசூர் ரகுமானின் ஐபிஎல் ஒப்பந்தங்களை நீக்க உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை. மாறாக சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மட்டுமே தெரிவித்தது. ஐபிஎல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, கொல்கத்தா அணி முஸ்தபிசூருக்கு எந்த தொகையும் செலுத்த சட்டரீதியான கடமை இல்லை என்றும், காயம் அல்லது கிரிக்கெட் தொடர்பான காரணங்களால் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

காப்பீட்டு கொள்கை
வழக்கமாக அசாதாரண சூழ்நிலைகளில் 50 சதவீதம் வரை காப்பீட்டிலிருந்து செலுத்தப்படுகிறது. இந்தியாவின் காயமடைந்த மத்திய ஒப்பந்த வீரர்களுக்கு இது உதவுகிறது. இருப்பினும் முஸ்தபிசூர் ரகுமானின் காப்பீட்டு உரிமை கோரல் விஷயத்தில், இந்த சூழ்நிலை உள்ளடக்கப்படவில்லை. எனவே கோலாத அணி ஒரு பைசா கூட செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முஸ்தபிசூர் ரகுமான் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. காரணம் ஐபிஎல் இந்திய சட்டத்தின் அதிகார வரம்பில் வருகிறது. இருப்பினும் எந்த ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் இந்த முடிவை எடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
NOC ரத்து
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் முடிவால், முஸ்தபிசூரின் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்-ஐ ரத்து செய்துள்ளது. முஸ்தபிசூர் தானாக ஐபிஎல் லீக்கிலிருந்து வெளியேறவில்லை மற்றும் எந்த தவறான நடத்தைக்கும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதால், இந்த சம்பவம் வீரர் உரிமைகள் குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது. தற்போதுள்ள காப்பீட்டு கட்டமைப்பு அவருக்கு குறைந்தபட்ச ஆதரவை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, தேவைப்பட்டால் கொல்கத்தா அணி மாற்று வீரரை தேர்வு செய்ய அனுமதிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒப்பந்த உறுதிப்பாடு பற்றிய கேள்விகளை எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை: முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்? முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூரில் விஜய் பரப்புரையை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேலும் படிக்க | இலவச லேப்டாப், புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? அமைச்சர் சக்கரபாணி அப்டேட்

சிபிஐ விசாரணை
இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து விஜய் இடமும் சிபிஐ விசாரணை செய்யலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அரசியல் எதிரியை திமுகவாகவும், கொள்கை எதிரியை பாஜகவாகவும் அறிவித்துள்ள விஜய் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
#BreakingNews | சம்மன்#ZeeTamilNews | #Vijay | #TVK | #KarurStampede | #Karur | #CBI pic.twitter.com/WOBFmbDQth
— Zee Tamil News (@ZeeTamilNews) January 6, 2026

ஜனநாயகன் கடைசி படம்
தமிழ்நாட்டில் உச்ச நடிகராக உள்ள விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், தற்போது விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அரசு விஜய்க்கு தேவையில்லாத அழுத்தங்களை கொடுப்பதாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் எப்போது சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப்... இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Rohit Sharma: தற்போது 355 ஒருநாள் போட்டி சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஹித், 400 சிக்ஸர்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவரால் எட்ட முடியும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2025ல் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடைசியாக விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து கடந்த ஆண்டை வெற்றிகரகாம முடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாடும் ரோஹித் சர்மா 2026ம் ஆண்டு பல்வேறு சாதனைகளை எட்ட உள்ளார். தற்போது 11,516 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், 9வது இடத்தில் உள்ளார் ரோஹித். 12,000 ரன்களை எட்ட ரோஹித் சர்மாவிற்கு இன்னும் வெறும் 484 ரன்கள் மட்டுமே தேவை. நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்கள் உட்பட 2026ல் குறைந்தபட்சம் 18 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்த சாதனையை எளிதாக அடைய முடியும். இந்த சாதனையை அடையும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை எட்டும் 6வது வீரர் ஆவார்.

ஒருநாள் போட்டி சிக்ஸர்கள்
தற்போது 355 ஒருநாள் போட்டி சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஹித், 400 சிக்ஸர்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவரால் எட்ட முடியும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், ராஞ்சியில் நடந்த முதல் போட்டியின் போது ஷாஹித் அஃப்ரிடியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா. 2013ல் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து தனது சிக்ஸர் அடிக்கும் திறனை வெளிப்படுத்தி இருந்தார் ரோஹித். அப்போதிருந்து 27.35 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் என்ற சராசரியை பராமரித்து வருகிறார்.
அரைசதங்கள்
தற்போது 94 அரைசதங்கள் (சதங்கள் உட்பட) அடித்துள்ள ரோஹித், 2026ல் மேலும் 6 அரைசதம் அடித்தால் 100 என்ற சாதனை நம்பரை அடைய முடியும். இதனை செய்யும் பட்சத்தில் உலகளவில் 6வது வீரராக ரோஹித் சர்மா இருப்பார். ராகுல் ட்ராவிட், சனத் ஜெயசூர்யா மற்றும் மகேலா ஜெயவர்த்தனே ஆகியோரையும் முந்துவார். சமீபத்திய போட்டியில் சிறப்பான ஃபார்மில் உள்ள ரோஹித் சர்மா, 2025ல் 14 இன்னிங்ஸ்களில் 650 ரன்கள் அடித்துள்ளார். மேலும் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ரோஹித், எட்டாவது இடத்தில் உள்ள ஜாக்குஸ் கலிஸை (11,579 ரன்கள்) முந்த வெறும் 224 ரன்கள் மட்டுமே தேவை. அதே போல இன்ஸமாம்-உல்-ஹக்கை (11,739 ரன்கள்) முந்தவும் வாய்ப்பு உள்ளது.

சர்வதேச சதங்கள்
தற்போது 50 சர்வதேச சதங்கள் நடித்துள்ள ரோஹித், 2026ல் ஐந்து சதங்கள் அடித்தால் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹாஷிம் அம்லாவின் சாதனையை சமன் செய்வார். மேலும் பிரையன் லாரா மற்றும் மகேலா ஜெயவர்த்தனே போன்ற தலைசிறந்த வீரர்களையும் முந்த உதவும். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டி20யில் இருந்தும், மே 2025ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோஹித், இப்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரில் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2027ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Chennai Electric Train Timing Changes: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. குறிப்பாக, மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். விரைவாக செல்வதால் தினந்தோறும் மக்கள் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர்.
சென்னை மின்சார ரயில்
பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது தெற்கு ரயில்வே சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் பயணிகளுக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனவரி 5ஆம் தேதியான இன்று முதல் ஏசி மின்சார ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டள்ளது.
அதாவது, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு செங்கல்பட்டுக்கு ரயில் புறப்பட்டு செல்லும். தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு செல்கிறது. செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் சேவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. செங்கல்பட்டில் இருந்து வரும் ஏசி மின்சார ரயில் மாலை 5 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடைகிறது.
மாலை 5.55 மணிக்கு கடற்கரைக்கு வந்தடையும். தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.28 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், பிற்பகல் 3.23 மணிக்கு கடற்கரை செல்கிறது. இதில் கோட்டையில் 3.11 மணிக்கும், எழும்பூரில் 3.08 மணிக்கும், சேத்துபட்டில் 3.05 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் 3.02 மணிக்கும், சைதாப்பேட்டையில் 2.55 மணிக்கும், கிண்டியில் 2.52 மணிக்கும், பரங்கிமலையில் 2.49 மணிக்கும், பழவந்தாங்கலில் 2.46 மணிக்கும், மீனம்பாக்கத்தில் 2.43 மணிக்கும், திரிசூலத்தில் 2.41 மணிக்கும், பல்லாவரத்தில் 2.8 மணிக்கும், குரோம்பேட்டையில் 2.35 மணிக்கு, தாம்பரத்திற்கு 2.28 மணிக்கு சென்றடையும்.
பயண நேரத்தில் மாற்றம்
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை ரயில் (49006) தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மாலை 5:55 மணிக்கு கடற்கரையை அடையும். பிற ஏசி இமு ரயில் சேவைகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏசி இமு சேவைகள் 49001, 49002, 49007 மற்றும் 49008 ஆகியவற்றுக்கு ஊரப்பாக்கத்தில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏசி சேவைகளின் நேரங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 9 மின்சார ரயில்களின் நேரங்களும் திருத்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, பயணிகள் இந்த நேரத்தை நோட் செய்து கொண்டு பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கைநிறைய சம்பளம்! பெண்களுக்கு அரசு வேலை... விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
மேலும் படிக்க: இலவச விடியல் பயணம் விரிவாக்கம் முக்கிய அப்டேட்! மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்
Parandur Airport Latest News Updates: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை போல், இரண்டாவது பிரம்மாண்ட விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்துள்ள பரந்தூரில் அமைய இருக்கிறது. அந்த வகையில், பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லைத் தமிழ்நாடு அரசு எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Parandur Airport: 59% நிலம் அரசின் வசம்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஏகனாபுரத்தில் போராட்டம் தொடர்கிறது. பரந்தூர் விமான நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிலம் எடுப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதுகுறித்த லேட்டஸ்ட் தகவலை இங்கு விரிவாக காணலாம்.
பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்கு மொத்தம் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தேவைப்படும் மொத்த நிலத்தில் சுமார் 59 சதவீத நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கும் மேற்பட்ட நிலம் தற்போது வெற்றிகரமாக அரசின் வசம் வந்துள்ளதாக தெரிகிறது.
Parandur Airport: இன்னும் எத்தனை ஏக்கர் நிலம் தேவை?
இன்னும் சுமார் 3,774 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட தேவை உள்ளது. இதில் பெரும்பாலான நிலங்களை எடுப்பதற்கான அறிவிப்புகள் (Notifications) வெளியிடப்பட்டு, இழப்பீடு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்குத் தேவையான அரசு புறம்போக்கு நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO-விடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. நிலம் கொடுக்கும் மக்களுக்குச் சந்தை விலையை விட கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாற்று இடம் வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
Parandur Airport: ஏன் அரசு அவசரம் காட்டுகிறது?
தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தனது முழுத் திறனை ஏற்கெனவே எட்டிவிட்டது. 2028ஆம் ஆண்டில் இருந்து 2030ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்திற்குள் புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. அதனால்தான், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும் அரசு இந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Parandur Airport: ஆசியாவின் முக்கிய ஏர்போர்ட்
நிலம் எடுப்புப் பணிகள் 80 சதவீதத்தைத் தாண்டியவுடனேயே விமான நிலையக் கட்டுமானத்திற்கான டெண்டர் (Tender) கோரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், ஒரே நேரத்தில் 10 கோடி பயணிகளைக் கையாளும் வசதி கொண்ட ஆசியாவின் முக்கிய விமான நிலையமாக இது உருமாறும். பரந்தூர் விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து சார்ந்த வசதி மட்டுமல்ல, காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு திட்டமாகும்.
மேலும் படிக்க | ஓசூர் விமான நிலையம்... மகிழ்ச்சியூட்டும் மெகா அப்டேட்!
மேலும் படிக்க | பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கடந்த தொடரில் காயம் காரணமாக விலகிய ஷுப்மன் கில் தொடர்ந்து கேப்டனாக தொடர்கிறார். அதே நேரம் துணை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது காயம் அடைந்த ஸ்ரேயஸ் ஐயர், சென்ட்ரல் ஆஃப் எக்ஸலன்ஸ் தகுதி சான்றிதழுக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக காயத்தில் இருந்து குணமாகி, தொடர் பயிற்சியில் ஈடுபட்ட ஐயர் போட்டி தகுதியை இன்னும் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | IPL: முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு எழும் கடும் எதிர்ப்பு... அவரது சொத்து மதிப்பு என்ன?
News
— BCCI (@BCCI) January 3, 2026
India’s squad for @IDFCFIRSTBank ODI series against New Zealand announced.
Details https://t.co/Qpn22XBAPq#TeamIndia | #INDvNZ pic.twitter.com/8Qp2WXPS5P
ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்!
ஜனவரி 6 அன்று இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு பிறகு இறுதி தகுதி பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 11ல் தொடங்குவதற்கு முன்பு சில போட்டிகளில் விளையாட இது ஐயருக்கு போதுமான நேரத்தை வழங்கும். மேலும் மொஹமது சிராஜ் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். கடந்த சில தொடர்களில் இடம் பெறாத அவர், உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். கில், ஐயர் மற்றும் சிராஜ் வருகையால் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அணியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பும்ரா ஓய்வு!
ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பான சதம் அடித்தும், இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை. காயம் காரணமாக வெளியேறிய ஐயருக்கு வழிவிட வேண்டிய நிலை ருதுராஜ்க்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் BCCI CoE ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

அணி விவரம்
ஸ்பின் தாக்குதலில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர், அதே நேரம் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக இடம் பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதீஷ் குமார் ரெட்டி சீம் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விருப்பமாக சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்று வடோதராவில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி 14 மற்றும் 18 தேதிகளில் ராஜ்கோட் மற்றும் இந்தூரில் நடைபெறுகிறது.
15 பேர் கொண்ட இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, மொஹமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யசஸ்வி ஜெய்ஸ்வால்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ