Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
சென்னை வாசிகளே அலர்ட்! மாறும் போக்குவரத்து.. பிராட்வே பேருந்து நிலையம் கிடையாது!
UKUmabarkavi K
Jan 04, 2026 04:34:03
Chennai, Tamil Nadu

Chennai Broadway Bus Stand Change: தலைநகர் சென்னையில்  மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அதற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் தேவைப்படுகிறது. மேலும், சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் முக்கிய போக்குவரத்து மையமான பிராட்வே பேருந்த நிலையம் புனரமைக்கப்பட உள்ளது. 

பிராட்வே பேருந்து நிலையம்

அதாவது, தற்போது உள்ள பிராட்வே பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றப்பட உள்ளது. ரூ.566 கோடி மதிப்பில் பிராட்வே பேருந்து நிலையம் புனரமைக்கப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் மாற்றப்பட உள்ளது.  இதனால், பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 7ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவுத் திடல் தற்காலிக பேருந்து முனையங்களுக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து எந்தெந்த பேருந்துகள் இயக்கப்படும் என விவரங்களையும் வெளியிட்டுளளது. 

ராயபுரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்

அண்ணாசாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தட பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது North Fort சாலையில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

அதே போல் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலை வலதுபுறம் திரும்பி Esplanade சாலையில் இராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் தடங்களை பொறுத்தவரை 6, 13, 60E, 102, 109, 1020, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET ஆகும். மேலும்,  அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 11, 21, 26, 52, 54, 60, 10E, 116, 11M. 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B ஆகியவை அடங்கும்.

தீவுத்திடல் பேருந்து நிலையம்

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, இராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி TNPSC சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி, TNPSC சாலை மற்றும் Evening Bazaar வழியாக, மீண்டும் ஈ.வே.ரா. சாலை வந்தடைந்து முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

வேப்பேரி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 42C, 42D, 42M, 64C, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET ஆகும்.  மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F, ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150 ஆகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: "விடியல் நாயகனுக்கு நன்றி" முதலமைச்சர் அறிவிப்பால் ஜாக்டோ ஜியோ உற்சாகம்.. போராட்டம் ரத்து!

 

 

 

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGSudharsan G
Jan 04, 2026 10:41:35
Parandur, Tamil Nadu:

Parandur Airport Latest News Updates: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை போல், இரண்டாவது பிரம்மாண்ட விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்துள்ள பரந்தூரில் அமைய இருக்கிறது. அந்த வகையில், பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லைத் தமிழ்நாடு அரசு எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Parandur Airport: 59% நிலம் அரசின் வசம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஏகனாபுரத்தில் போராட்டம் தொடர்கிறது. பரந்தூர் விமான நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிலம் எடுப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதுகுறித்த லேட்டஸ்ட் தகவலை இங்கு விரிவாக காணலாம்.

பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்கு மொத்தம் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தேவைப்படும் மொத்த நிலத்தில் சுமார் 59 சதவீத நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கும் மேற்பட்ட நிலம் தற்போது வெற்றிகரமாக அரசின் வசம் வந்துள்ளதாக தெரிகிறது.

Parandur Airport: இன்னும் எத்தனை ஏக்கர் நிலம் தேவை?

இன்னும் சுமார் 3,774 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட தேவை உள்ளது. இதில் பெரும்பாலான நிலங்களை எடுப்பதற்கான அறிவிப்புகள் (Notifications) வெளியிடப்பட்டு, இழப்பீடு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்குத் தேவையான அரசு புறம்போக்கு நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO-விடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. நிலம் கொடுக்கும் மக்களுக்குச் சந்தை விலையை விட கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாற்று இடம் வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

Parandur Airport: ஏன் அரசு அவசரம் காட்டுகிறது?

தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தனது முழுத் திறனை ஏற்கெனவே எட்டிவிட்டது. 2028ஆம் ஆண்டில் இருந்து 2030ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்திற்குள் புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. அதனால்தான், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும் அரசு இந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Parandur Airport: ஆசியாவின் முக்கிய ஏர்போர்ட்

நிலம் எடுப்புப் பணிகள் 80 சதவீதத்தைத் தாண்டியவுடனேயே விமான நிலையக் கட்டுமானத்திற்கான டெண்டர் (Tender) கோரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், ஒரே நேரத்தில் 10 கோடி பயணிகளைக் கையாளும் வசதி கொண்ட ஆசியாவின் முக்கிய விமான நிலையமாக இது உருமாறும். பரந்தூர் விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து சார்ந்த வசதி மட்டுமல்ல, காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு திட்டமாகும்.

மேலும் படிக்க | ஓசூர் விமான நிலையம்... மகிழ்ச்சியூட்டும் மெகா அப்டேட்!

மேலும் படிக்க | ஓசூர் சர்வதேச விமான நிலையம்... தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் - புது அப்டேட்

மேலும் படிக்க | பெங்களூரு ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Jan 03, 2026 12:12:16
Mumbai, Maharashtra:

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கடந்த தொடரில் காயம் காரணமாக விலகிய ஷுப்மன் கில் தொடர்ந்து கேப்டனாக தொடர்கிறார். அதே நேரம் துணை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது காயம் அடைந்த ஸ்ரேயஸ் ஐயர், சென்ட்ரல் ஆஃப் எக்ஸலன்ஸ் தகுதி சான்றிதழுக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக காயத்தில் இருந்து குணமாகி, தொடர் பயிற்சியில் ஈடுபட்ட ஐயர் போட்டி தகுதியை இன்னும் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | IPL: முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு எழும் கடும் எதிர்ப்பு... அவரது சொத்து மதிப்பு என்ன?

ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்!

ஜனவரி 6 அன்று இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு பிறகு இறுதி தகுதி பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 11ல் தொடங்குவதற்கு முன்பு சில போட்டிகளில் விளையாட இது ஐயருக்கு போதுமான நேரத்தை வழங்கும். மேலும் மொஹமது சிராஜ் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். கடந்த சில தொடர்களில் இடம் பெறாத அவர், உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். கில், ஐயர் மற்றும் சிராஜ் வருகையால் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அணியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பும்ரா ஓய்வு!

ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பான சதம் அடித்தும், இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை. காயம் காரணமாக வெளியேறிய ஐயருக்கு வழிவிட வேண்டிய நிலை ருதுராஜ்க்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் BCCI CoE ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. 

அணி விவரம்

ஸ்பின் தாக்குதலில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர், அதே நேரம் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக இடம் பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதீஷ் குமார் ரெட்டி சீம் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விருப்பமாக சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்று வடோதராவில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி 14 மற்றும் 18 தேதிகளில் ராஜ்கோட் மற்றும் இந்தூரில் நடைபெறுகிறது.

15 பேர் கொண்ட இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, மொஹமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யசஸ்வி ஜெய்ஸ்வால்.

மேலும் படிக்க | KKR வீரருக்கு ஐபிஎல்லில் விளையாட தடை? சிக்கலில் கொல்கத்தா.. தப்பித்த CSK - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Jan 03, 2026 08:35:39
Chennai, Tamil Nadu:

சென்னை மெரினா கடற்கரையில் உணவு பொருட்கள், பொம்மைகள் மற்றும் பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த விதமான கடைகளையும் அமைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையை வணிக வளாகமாக மாற்றும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, டிசம்பர் 22 அன்று மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். கடலோர பகுதியில் நிரந்தர தன்மையிலான பல கடைகள் அமைந்திருப்பதால் கடற்கரையின் அழகு மறைக்கப்படுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் படிக்க | குட் நியூஸ்! பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது? முழு விவரம்

நீலக்கொடி சான்றிதழ் பகுதிகளில் தடை

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவின் ஒரு பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட பின்புறப் பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலக்கொடி சான்றிதழ் பெற்ற அல்லது பெறும் அனைத்து பகுதிகளிலும் எந்த கடைகளையும் அமைக்க கூடாது என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

நிரந்தர கடைகள் அகற்றம்

உழைப்பாளர் சிலையின் பின்புறத்தில் உள்ள நிரந்தர கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கடைகள் கடற்கரையின் பார்வையை மறைப்பதாகவும், பொதுமக்களின் ரசனைக்கு இடையூறாக உள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சென்னை மாநகராட்சி முன்மொழிந்த 1,417 கடைகளை அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். "மக்கள் ரசிக்கவே கடற்கரை இருப்பதாகவும், அதனை ஷாப்பிங் மால்களாக அல்லது பஜார்களாக மாற்ற முடியாது" என்று நீதிபதிகள் வலுவான கருத்து தெரிவித்தனர். கடற்கரை என்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிப்பதற்கான இடம் என்றும், வணிக நடவடிக்கைகள் மக்களின் அனுபவத்திற்கு தடையாக இருக்க கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மாநகராட்சிக்கு அவகாசம்

குறைக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கையுடன் புதிய திட்டத்தை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2019ல் மாநகராட்சி 900 வியாபாரிகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருந்தது. அப்போது 1,962 கடைகள் அடையாளம் காணப்பட்டன, அதில் 808 வியாபாரிகளுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மெரினா கடற்கரை சமீபத்தில் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளது, இது சுற்றுச்சூழல் மேலாண்மை, நீர் தரம், பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பான கடுமையான தரநிலைகளை பூர்த்தி செய்ததை குறிக்கிறது. இந்த சர்வதேச அங்கீகாரம் சென்னையின் சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மெரினா கடற்கரையின் இயற்கை அழகையும் சுற்றுச்சூழல் தரத்தையும் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்! தேதி குறித்த தமிழக அரசு.. வாங்க மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 03, 2026 07:46:49
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Assured Pension Scheme Benefits: தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான 'தமிழ்நாடு உறுதி ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS)' செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 03, 2026 01:40:58
Mumbai, Maharashtra:

Bizarre Crime News: வழக்கமாக காதலர்கள், தம்பதிகள் இணைந்து டிசம்பர் 31ஆம் தேதி இரவில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்வார்கள். புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் ஒருவரை ஒருவரை ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள். புத்தாண்டில் இருவருக்கு இடையே இருக்கும் உறவு இன்னும் பலமாக வேண்டும் என வேண்டிக்கொள்வார்கள். 

அப்படியிருக்க, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் புத்தாண்டு கொண்டாடத்தின்போது ஒரு பயங்கர சம்பவம் ஒரு காதல் ஜோடிக்கு மத்தியில் நடந்துள்ளது. மும்பையில் நடந்த அந்த குற்றச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக இங்கு காணலாம்.

Bizarre Crime News: பெண் தலைமறைவு

25 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது 44 வயதான காதலரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வர வைத்துள்ளார். அந்த காதலருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. புத்தாண்டின் போது இனிப்பு கொடுப்பதற்காக அந்த பெண் தனது காதலரை வீட்டுக்கு வரவைத்துள்ளார். வீட்டுக்கு வந்த காதலருக்கு, இனிப்பு கிடைத்ததோ இல்லையோ வலி தாங்க முடியாத அளவுக்கு பெரிய காயம் ஏற்பட்டது. 

அந்த பெண் தனது காதலனின் பிறப்புறுப்பை கத்தியை வைத்து வெட்டியதால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஸியோன் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.

Bizarre Crime News: 6-7 ஆண்டுகள் நீண்ட தகாத உறவு 

முதற்கட்ட விசாரணையில் இருவருமே உறவினர்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரியின் மைத்துனிதான், அவரை கத்தியால் வெட்டிய பெண். அந்த பெண்ணுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் சுமார் 6-7 ஆண்டுகளாக திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது.

அந்த காதலி தனது காதலினிடம் அவருடைய மனைவியை விட்டு பிரிந்துவந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இது இவர்களுக்கு இடையே கடும் பிரச்னையை உண்டாக்கி உள்ளது. இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் அந்த காதலன் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் பீகாரில் சென்றுவிட்டார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் மும்பையில் உள்ள சாண்டா குரூஸ் ஈஸ்ட் பகுதியில் வசித்துவந்தவர் ஆவார், பிரச்னையின் காரணமாக அவர் பீகார் சென்றுள்ளார். பீகார் சென்ற பின்னரும் கூட, அந்த பெண் விடாமல் அவரை அச்சுறுத்தி வந்துள்ளார் என கூறப்படுகிறது.

Bizarre Crime News: புத்தாண்டில் வீட்டுக்கு அழைத்த காதலி

தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி அன்று அந்த காதலன் மும்பைக்கு வந்துள்ளார். மும்பை வந்தாலும் அந்த பெண்ணிடம் நெருக்கம் காட்டாமல், தொடர்ந்து அவரை புறக்கணித்தே வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு புத்தாண்டுக்கு இனிப்பு கொடுப்பதாகவும், அதை வந்து வாங்கும்படி காதலனை அழைத்துள்ளார். அந்த நேரத்தில், அந்த பெண்ணின் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 

அப்போது அந்த பெண், தனது காதலனிடம் பேண்டை கழட்டும்படி சொல்லியிருக்கிறார், அவரும் பேண்டை கழட்டியிருக்கிறார். தொடர்ந்து, சமையலறைக்கு சென்ற அந்த காதலி, காய்கறி வெட்டுவதற்காக வைத்திருக்கும் கத்தியை மறைத்துவைத்து கொண்டுவந்துள்ளார். திடீரென காதலனின் பிறப்புறப்பில் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால், அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகம் வெளியேறியிருக்கிறது. 

தொடர்ந்து, தனது வீட்டுக்குச் சென்ற அந்த நபர் அவரின் மகன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் விஎன் தேசாய் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் ஸியான் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். தற்போது சிகிச்சையில் இருந்து வரும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காயம் சற்று ஆழமாக இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | சித்தப்பா உடன் உறவு... திட்டிய கணவரை திட்டம்போட்டு கொன்ற மனைவி - கோவை அருகே பகீர்!

மேலும் படிக்க | கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி! தூங்கியவருக்கு நேர்ந்த கதி.. கோவையில் ஷாக்

மேலும் படிக்க |  அந்தரங்க உறுப்பை காண்பித்து அத்துமீறிய ஆசிரியை...? அதிர்ந்த மாணவன் - பகீர் சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 02, 2026 15:05:52
Chennai, Tamil Nadu:

JCD Prabhakar In TVK: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இன்று (ஜனவரி 2)  இணைந்துக்கொண்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏவான ஜே.சி.டி பிரபாகர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Jan 02, 2026 08:11:44
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government, Old Pension Scheme:  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SSSripriya Sambathkumar
Jan 01, 2026 11:59:02
Thiruparankundram, Tamil Nadu:

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் வருகை தந்த நடிகை கஸ்தூரி செய்துயாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தை காசி விசுவநாதர் கோவிலில் இருந்து தொடங்க இருக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கும் வெளிநாட்டில் இருந்து புலம்பெயரும் மக்களும் அனைவருக்கும் நல்ல காலத்தையும் உண்மையான வெளிச்சத்தையும் விடையும் கொடு என சாமி தரிசனம் செய்யப் போகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் எப்படி தீபம் எறிய போகின்றதோ அதேபோல் எங்களது வாழ்விலும் வெளிச்சம் வர வேண்டும் என திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விசுவநாதரிடம் வேண்டிக் கொள்வதற்காக செல்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. மு க ஸ்டாலின் சொன்ன சொல் தவறக் கூடாது என்பதற்காக விடியல் தர போறாரு என்று தான் சொன்னார்கள் விடியல் தந்துவிட்டால்  தவறாக இருக்கும் என்பதால் எதிர்காலமாகவே வைத்துள்ளனர்.

இது ஒரு நாள் சம்பவம் அல்ல....

குடும்ப கஷ்டத்தின் காரணமாக வட இந்தியர்கள் தமிழகத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் மீது கஞ்சா  போதைகளால் தாக்குதல் நடத்தப்படுகிறது, இஸ்லாமிய முதியவர் அடித்து கொலை செய்யப்படுகிறார். திருத்தணியில் நடைபெற்றது ஒரு நாள் சம்பவம் கிடையாது. பல்வேறு செய்திகள் வெளியே வராமலேயே சென்று உள்ளது.

விஷத்தை பரப்பி வைத்துள்ளார்கள்...

ஒரு சமூகத்தினரை முதலில் இவர்கள் நம்மாள்கள் இல்லை வந்தேறிகள் என தமிழர்களாகிய பிராமணர்களை கூறினார்கள். பின்னர் ஹிந்தி காரர்களை கூறினார்கள், அதன் பிறகு பாஜக தமிழகத்தில் வந்துவிடும் வந்துவிடும் என மிரட்டினார்கள். வடக்கன் பீடா வாயன், பானி பூரி என அமைச்சர்களே வட இந்தியர்களை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் இங்கு உள்ளவர்கள் விஷத்தை பரப்பி வைத்துள்ளார்கள்.

மூலைக்கு மூலை சாராயம் போதை பொருள்...

தமிழகத்தின் மூலைக்கு மூலை சாராயம் போதை பொருள் கிடைக்கிறது. இதனை கேட்டால் இரும்பு கரம் என கூறுகிறார்கள். திமுகவிற்கு வாக்களித்தவர்களே அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்து வருகின்றனர். திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அடுத்த தேர்தலே வர உள்ளது. எப்போது தான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்?

தமிழகத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுவிலக்கு துறையில் மட்டும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அவர்களை மது போதையிலேயே அரசு வைத்துள்ளது. ரஜினி ஒரு முறை கடவுள் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று சொன்னார். அவர் இன்று என்ன சொல்வார் என்று நான் கேட்க விரும்புகிறேன்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான்...

என் அப்பன்  சுப்ரமணிய சுவாமி மட்டும் தான் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும் என்று வந்துவிட்டேன். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயர் ரக கஞ்சா ஓ ஜி என்ற வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான். ஆனால் கேஜி கேஜியாக ஓஜியை காவல்துறை கைப்பற்றி உள்ளனர். அந்த ஓ ஜி வகை கஞ்சாவைத்தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஓ என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் போல். செடினா அங்க ஒன்னு இங்க ஒன்னு வளர தான் செய்யும், போதை நா அங்க ஒன்னு இங்க ஒன்னு போட தான் செய்வாங்க, அங்க ஒன்னு இங்க ஒன்னு வெட்டி சாய்க்க தான் செய்வாங்க என்று அமைச்சர் பெருமக்கள் பேசுகிறார்கள். தமிழகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்து அச்சமாக உள்ளது. அதனால் கடவுளை பார்த்து கெஞ்ச போகிறேன்.’ என்று கூறினார்.

பொறாமைப்படுகிறார் உதயநிதி...

தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை கூறுவதை தமிழகத்தில் அதிமுக செய்வதாக உதயநிதி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ‘பாஜக அதிமுக இணக்கமாக செயல்படுவதை பார்த்து பொறாமைப்படுகிறார் உதயநிதி. அவர் சொல்வது பாராட்டு. அப்படியே டுவிஸ்ட் பண்ணி சொல்கிறார். எல்லோரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. மைனாரிட்டி வோட்டில் தான் திமுக மேதப்பாக உள்ளது.’ என தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் குறித்து தவறான பார்வை...

ஆர் எஸ் எஸ் அமைப்பு குறித்து எம்பி மாணிக் தாகூர் பேசியது குறித்த கேள்விக்கு, ‘நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உதயசூரியன் சின்னத்தை தாண்டி வேறு சின்னத்தை எண்ணி கூட பார்க்காத குடும்பத்தைச் சேர்ந்த பூர்ண சந்திரன் உயிரிழந்தது குறித்து திமுகவினர் யாரும் இன்றுவரை இரங்கல் தெரிவிக்க வரவில்லை.  உண்மையான சேவையும் உதவியும் செய்யக்கூடிய இயக்கங்களை இப்படித்தான் குற்றச்சாட்டை முன் வைப்பார்கள்.  மஞ்சள் காமாலை காரருக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாக தெரிவது போல் தான் இவர்கள் ஆர் எஸ் எஸ் குறித்து தவறான பார்வையில் உள்ளனர்.’ என்று கஸ்தூரி தெரிவித்தார்.

மேலும் படிக்க | சித்தப்பா உடன் உறவு... திட்டிய கணவரை திட்டம்போட்டு கொன்ற மனைவி - கோவை அருகே பகீர்!

மேலும் படிக்க | பொங்கல் பரிசு டோக்கன் அரசியல் கட்சியினர் கொடுக்ககூடாது - அரசு எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Dec 31, 2025 11:51:50
Chennai, Tamil Nadu:

TN Ministers Discussions In Secretariat About OPS Scheme: ஜனவரி 6 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவலானது கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளரும் பங்கேற்றிருக்கிறார்கள். ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளதாகத் தகவல். அதன் விவரங்களை பார்ப்போம்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவு?

ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) அமைப்பினர் ஜனவரி 6 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்றைய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) குறித்து முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜாக்டோ ஜியோ பேச்சுவாரத்தை தோல்வி

ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வு திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO), தங்களுடன் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இருதரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை

இதற்காக வரக்கூடிய ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் கூடி ஆலோசனையும் நடத்த இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

சகன்தீப் சிங் பேடி குழு அறிக்கை

மறுபுறம் வரக்கூடிய ஜனவரி 6 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதேநேரம் நேற்று (டிசம்பர் 30) பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சகன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தங்கள் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். 

தமிழக அரசு தீவிர ஆலோசனை

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் அந்த நடைபெறுவதற்கு முன்னதாகவே தமிழக அரசு ஏதாவது ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு?

குறிப்பாக ஜனவரி 3 ஆம் தேதி அல்லது 4 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசுதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜனவரி 6 என்ன நடக்கும்?

இதன்மூலம் மிக விரைவில் இந்த மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இல்லையென்றால் திட்டமிட்டப்படி ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) அமைப்பினர் ஜனவரி 6 ஆம் தேதி முதல் பங்கேற்கவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்  தமிழக அரசு நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எட்ன்ர அச்சம் நிலவி வருகிறது.

மேலும் படிக்க - பேச்சுவார்த்தை தோல்வி: ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு.. அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!

மேலும் படிக்க - பழைய ஓய்வூதியத் திட்டம்: 'வாய்ப்பில்ல ராஜா' நிதி அமைச்சகம் திட்டவட்டம், அரசு ஊழியர்களுக்கு ஷாக்

மேலும் படிக்க - பொங்கல் பரிசு 2026: இலவச வேட்டி சேலை, டோக்கன் விநியோகம் 5 முக்கிய அப்டேட்டுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 31, 2025 10:08:34
Faridabad, Haryana:

Delhi Faridabad Gang Rape Case: டெல்லி அருகே உள்ள பரிதாபாத் நகரில், ஓடும் வேனில் 28 வயது இளம்பெண் ஒரு கொடூர கும்பலால், கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் அந்த பெண் மீதான வன்முறை தொடர்ந்துள்ளது. அதன்பின், பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த கொடூர கும்பல் சாலையில் தூக்கிச் சென்றிருக்கிறது.

திங்கட்கிழமை பின்னிரவு, செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Dec 31, 2025 05:50:22
Tamil Nadu:

TN Govt Announcements 2026: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்களும், புதிய திட்டங்களும் அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாகத் தேர்தல் ஆண்டைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் மிக முக்கியமான 10 அறிவிப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

1. சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026

தமிழக சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இது தேர்தல் ஆண்டு என்பதால், ஆளுநர் உரையில் மக்கள் கவரும் வகையிலான பல்வேறு புதிய நலத்திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு, ஜனவரி 6, 2026 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.

3. பொங்கல் பரிசுத் தொகுப்பு 2026

தமிழகத்தில் உள்ள 2.2 2 கோடி அரிசி குழும்பு அட்டைதாரர்களுக்கு 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த முறை ரொக்க பணமாக ரூபாய் 3000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான டோக்கன்கள் ஜனவரி முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும். 

4. மீண்டும் பள்ளிகள் திறப்பு

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 5, 2026 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5. TNPSC 2026 வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி தனது 2026-ம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக குரூப் 4 தேர்வு டிசம்பர் 20 2026 அன்றும் குரூப் 1 தேர்வு செப்டம்பர் 6 2026 அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

6. மின்சார பேருந்துகள் அறிமுகம்

சுற்றுசூழல் பாதுகாப்பை கருதி சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக 1125 மின்சார பேருந்துகளை இயக்கும் பணிகளை தமிழக போக்குவரத்து துறை வரும் புத்தாண்டு முதல் படிப்படியாக தொடங்குகிறது. 

7. இருப்பிடச் சான்றிதழ்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்காக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் கைப்பட இருப்பிட சான்றிதழை பெற்று கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆன்லைன் கட்டணமான ரூபாய் 60 தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

8. மகளிர் சொத்துரிமை (நன்னிலம் திட்டம்)

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் இத்திட்டத்திற்கு ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. திருவான்மையூர், பாலவாக்கம் உள்ளிட்ட 6 கடற்கரைகளைச் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த ரூபாய் 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. புற்றுநோய் தடுப்பூசி (HPV): 

14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 'ஹெச்.பி.வி' (HPV) தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசுப் பள்ளிகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம் விரிவுபடுத்தப்படுகிறது.

10. ஜனவரி விடுமுறைப் பட்டியல்

ஜனவரி மாதத்தில் வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. ஜனவரி 15 பொங்கல் ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் ஜனவரி 17 உழவர் தினம். இதை தொடர்ந்து வரும் வார இறுதியுடன் சேர்த்து ஐந்து நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க - ஜனவரி மாதம் மட்டும் 15 நாட்கள் விடுமுறை - எந்த எந்த தேதி தெரியுமா?

மேலும் படிக்க - ரேஷன் கார்டு : புதிய கார்டு வாங்குவது எப்படி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

மேலும் படிக்க - Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
Advertisement
Back to top