'வா வாத்தியார்' படத்திற்கு தடை நீடிக்கிறது...!
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகளை அக்கட்சி அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உத்தேச பட்டியலை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளார். பாஜக தயார் செய்துள்ள பட்டியலில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. அதில் 50 தொகுதிகள் பாஜக நேரடியாக போட்டியிட விரும்பும் இடங்கள். 15 தொகுதிகள் தனது கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள்.

சென்னையில் 8 இடங்கள்! - பாஜகவின் புதிய குறி
இந்த 50 தொகுதிகளில் 35 தொகுதிகள், கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமுள்ள இடங்கள் சாதிவாரி கணக்குகள் மற்றும் கட்சி வளர்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் கட்சியை வளர்க்கும் நோக்கில், பட்டியலில் 8 தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகியவை இதில் அடங்கும். கடந்த தேர்தலில் இங்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 27% வாக்குகள் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளியது பாஜகவிற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கன்னியாகுமரியில் குளச்சல், கிள்ளியூர், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. அதேபோல, கோயம்புத்தூரில் கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 6 தொகுதிகளைக் குறிவைத்துள்ளது. 2024 தேர்தலில் அண்ணாமலை கோவையில் 33% வாக்குகள் பெற்றது இதற்கு முக்கியக் காரணம். அமித் ஷா இந்த மாதம் தமிழகம் வரும்போது, இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேளச்சேரியில் நிலவும் போட்டி
சென்னை வேளச்சேரி தொகுதியில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் இளைஞரணி தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி தொகுதியில் திமுக சார்பில், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், பாஜகவில் வேட்பாளர் தேர்வில் போட்டி நிலவுகிறது. வேளச்சேரி தொகுதியில் போட்டியிட பாஜகவின் மூத்த நிர்வாகியான டால்பின் ஸ்ரீதர் நீண்ட நாட்களாக விருப்பம் தெரிவித்து வருகிறார்.

இந்த சூழலில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா வேளச்சேரியை குறிவைத்து தனது காய்களை நகர்த்தி வருகிறார். சமூக வாக்குகள் மற்றும் பொதுவான இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க சூர்யாவால் முடியும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் மூத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மூலம் தனது வேட்புமனுவை சூர்யா ஏறக்குறைய உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் கிரீன் சிக்னல்
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நாகேந்திர சேதுபதி இல்ல திருமண விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், எஸ்.ஜி. சூர்யாவும் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து இருவரும் ஒரே விமானத்தில் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தனிப்பட்ட பயணத்தின்போது, வேளச்சேரி தொகுதி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சூர்யாவிற்கு நயினார் நாகேந்திரன் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாநிலத் தலைவருடன் சூர்யா காட்டும் இந்த திடீர் நெருக்கம், வேட்பாளர் தேர்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க - OPS திரும்புமா? 8-வது ஊதியக் குழுவில் மாற்றம் கோரி PM மோடிக்கு ஊழியர் சங்கம் கடிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
VB G RAM G Full Form: மக்களவையில் நேற்று (டிச. 17) நள்ளிரவு வரை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கடுமையாக சம்பாதித்திருக்கிறது, VB G RAM G மசோதா. கடும் எதிர்ப்புகளையும் தாண்டி இன்று காலையில் VB G RAM G மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்கா காந்தி, திமுக உறுப்பினர் டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் ஆகியோர் மக்களவையில் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், VB G RAM G என்பதன் விரிவாக்கம் என்ன?, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGA) இருந்து VB G RAM G மசோதா எந்தளவிற்கு வேறுபடுகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
VB G RAM G Full Form: விபி ஜி ராம் ஜி விரிவாக்கம் என்ன?
VB G RAM G மசோதா நிறைவேறியதில் இருந்து பலரும் கூகுள் தேடு தளத்தில், இதன் விரிவாக்கத்தை அதிகமாக தேடி வருகின்றனர். அந்த வகையில், அதன் விரிவாக்கத்தையும் தமிழ் விளக்கத்தையும் இங்கு முதலில் பார்ப்போம். VB G RAM G - Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) மசோதா, 2025 என்பதுதான் இதன் முழு நீள பெயராகும்.
VB G RAM G: விபி ஜி ராம் ஜி மசோதா
2047ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா'-வை (Viksit Bharat) உருவாக்குவோம் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வதார திட்டம் என்பதை விவரிக்க இவ்வாறு பெயரிட்டுள்ளனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, பெயரையும் மாற்றி உள்ளார்கள். பெயர் மாற்றம் மற்றும் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்திற்காகவே எதிர்க்கட்சிகள் இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
MGNREGA திட்டம் டூ VB G RAM G மசோதா: முக்கிய மாற்றங்கள்
- 100 நாள் வேலை என்பது புதிய மசோதாவில் 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
- முன்னர், திட்டத்தின் நிதி 90% மத்திய அரசாலும், 10% மாநில அரசாலும் வழங்கப்படும். ஆனால், புதிய மசோதாவின்படி 60% நிதி மத்திய அரசாலும், 40% நிதி மாநில அரசாலும் வழங்கப்படும்.
- விதை நடவு காலம் தொடங்கி விவசாய நிலத்தில் அதிக வேலை இருக்கும் காலகட்டத்தில் இத்திட்டத்தில் வேலை அளிக்கப்படாது.
- முன்னர் 15 நாள்களுக்கு ஒரு முறை சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது வாரம் ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது.
VB G RAM G: எதிர்ப்பும், ஆதரவும்
- மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட MGRNEGA திட்டத்தை மாற்றம் செய்து, அதன் பெயரையும் மாற்றுவதன் மூலம் மகாத்மா காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்கிறது பாஜக அரசு என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள், திட்டத்தின் பெயரை மாற்றுவதில் பாஜகவுக்கு 'வெறி' இருப்பதாக பிரியங்கா காந்தி பேசியிருந்தார். ஆனால், காங்கிரஸ் நேருவின் பெயரில் மட்டுமே திட்டங்களுக்கு பெயர் சூட்டின என்று மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாடியுள்ளார்.
- மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், ஊதியமும் உயர்த்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை" என சாடினார். இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே. 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பாஜக ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. 125 நாள்கள் வேலை என்பது காகித அளவிலேயே இருக்கும்" என பதில் அளித்துள்ளார்.
- புதிய VB G RAM G மசோதாவின்படி, 40% நிதி மாநிலங்கள் வழங்க வேண்டும் என்பதால், மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
- விவசாய நிலங்களில் அதிக வேலை இருக்கும் காலகட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் தற்காலிகமாக பணிகள் ஏதும் அளிக்கப்படாது என புதிய மசோதாவில் சொல்லப்படுகிறது. இதன்மூலம், விவசாய வேலைகளில் நிலவுவதாக கூறப்படும் ஆள் பற்றாக்குறைவு பிரச்னை நீக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதன்பின், மீண்டும் குறைந்த தொகையில் விவசாய வேலைக்கு போக கட்டாயப்படுத்தும்படி உள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் ஒருவேளை விவசாய வேலை இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.
VB G RAM G Bill: மத்திய அரசு சொல்வது என்ன?
மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "MGNREGA சுமார் 20 கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதமான கூலி, வேலைவாய்ப்பை வெற்றிகரமாக வழங்கி வருகிறது. இருப்பினும், சமூகப் பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் முக்கிய அரசாங்கத் திட்டங்களின் நிறைவு ஆகியவற்றால் உந்தப்பட்டு, 'கிராமப்புறங்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, MGRNEGA திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகியுள்ளது" என்றார்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, நாளைக்குள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், அடுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசு தலைவர் அதை ஏற்கும்பட்சத்தில் மசோதா சட்டமாகும்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளே உஷார்! லக்கேஜ் அளவுக்கு மேல் இருந்தால் 1.5 மடங்கு அபராதம் -முழுவிவரம்
மேலும் படிக்க | விருதை இந்திய மக்கள் சார்பாக ஏற்கிறேன் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
மேலும் படிக்க | 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்..! தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!
மேலும் படிக்க | ஓசூர் To கேரளா: தினமும் பறக்கும் 2 லட்சம் ரோஜாக்கள்! விவசாயிகள் படுகுஷி
மேலும் படிக்க | மதுரையில் LIC அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. பெண் பலி! அதிர்ச்சி
மேலும் படிக்க | ஜனவரி 9இல் புதுக்கோட்டை வருகிறாரா பிரதமர்? - நயினார் நாகேந்திரன் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
VB G RAM G Bill Passed In Lok Sabha: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பதிலாக (MGNREGA), பாஜக கொண்டுவந்த விபி ஜி ராம் ஜி (VB G RAM G) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று (டிசம்பர் 18) நிறைவேறியது. நேற்று நள்ளிரவு வரை இந்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று மசோதாவை நிறைவேற்றி, நாள் முழுவதும் மக்களவையை ஒத்திவைத்தார், மக்கள் சபாநாயகர் ஓம் பிர்லா. இதன்மூலம், நாளை (டிசம்பர் 19) காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.
மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது, மகாத்மாக காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இருப்பினும், தற்போது மக்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, 81 நாட்கள் இடைவெளிவிட்டு அவர் பொதுவெளியில் தோன்றிய முதல் கூட்டம் இது. இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் தனி அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் சிறிய அளவில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெரிய அளவில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
Thank you Erode pic.twitter.com/897ADrZtA4
— Vijay (@actorvijay) December 18, 2025
ஈரோட்டில் விஜய் பேசிய 10 முக்கிய விஷயங்கள்!
வள்ளுவர்கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டாதது ஏன்?
திமுக கவர்ன்மெண்ட் நடத்துறாங்களா? இல்லை கண்காட்சி நடத்துறாங்களா ?
தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லாத போது அதனை பார்த்து பயந்து கதறுவது ஏன்?
மாறுவேசத்தில் மரு வைத்து கொண்டு மீடியாவுல உங்கள் ஆட்களை வைத்து பேசுவது மக்களுக்கு தெரியும்!
திமுகவுக்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு துணை என்றால்... எனக்கு என்மீது எல்லையில்லாத பாசம் வைத்திருக்கும் மக்கள் தான் துணை.
பெரியார் பெயரை பயன்படுத்தி கொண்டு கொள்ளையடிப்பவர்கள் தான் நம் அரசியல் எதிரிகள்.
எதிரிகள் யார் என்பதை சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அவர்களை மட்டுமே எதிர்ப்போம்.
களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்க முடியாது.
நான் எத்தனை நிமிடங்கள் பேசினால், எப்படி பேசினால் உங்களுக்கு என்ன? அதில் இருக்கும் விசயத்தை மட்டும் பாருங்கள்?
தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு நன்றாகவே வரும். வேண்டாம் என விட்டுவைத்துள்ளேன்.
மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என சொல்கிறீர்கள்?
மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான். விஜய் மக்கள் பக்கம், மக்களும் என் பக்கம் தான்.
நாங்கள் வாயிலேயே வடை சுடுவதற்கு திமுக அல்ல. நாங்க தவெக.
அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ட்ராமா வேற நடத்துகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சமரமே இருக்காது. மக்கள் தைரியமாக இருக்கலாம்.
எம்ஜிஆரும், மேடம் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி திமுகவை காலி செய்ததை போல நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி.
செங்கோட்டையனை போலவே இன்னும் பலர் தவெகவில் இணைய உள்ளார்கள்.
எப்போது பார்த்தாலும் நான் பேசுவதை சினிமா டயலாக் போல இருப்பதாக சொன்னார்கள்.
ஆனால் முதலமைச்சர் அண்மையில் பேசிய என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என பேசியது சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததா?
மேலும் படிக்க: 'திமுக ஒரு தீய சக்தி... தவெக ஒரு தூய சக்தி' - ஈரோட்டில் விஜய் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரில் ஒரு புதிய காற்று வீசதொடங்கியுள்ளது. ஐபிஎல் 2026 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்துள்ள மாற்றங்கள் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளன. குறிப்பாக, நீண்ட கால கேப்டனான சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழி அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் போன்ற ஆல்-ரவுண்டர்களை டிரேட் செய்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: CSK வீரரை வாங்க துடித்த ரிஷப் பண்ட்.. யார் தெரியுமா? சுவாரஸ்யம் பகிர்ந்த LSG ஓனர்!

ஏலத்தில் ராஜஸ்தானின் அணுகுமுறை
அபுதாபியில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு செல்லும்போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 16.05 கோடி என்ற குறைவான பட்ஜெட்டே இருந்தது. 9 இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர்கள், பெரிய அளவில் பணத்தை வாரி இறைக்காமல், தங்களின் தேவையை மட்டும் குறிவைத்து செயல்பட்டனர். அணியின் முக்கிய தேவையாக இருந்த ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரை வாங்குவதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
புதிய வரவுகள்
ராஜஸ்தான் அணியின் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவரை ரூ. 7.2 கோடி கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்லலாம். கூக்ளி பந்துகளை வீசுவதில் வல்லவரான பிஷ்னோய், ஜெய்ப்பூர் போன்ற மைதானங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். ஏலத்திற்கு முன்பே ராஜஸ்தான் அணி சில துணிச்சலான முடிவுகளை எடுத்தது. அணியின் முகமாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை வாங்கியது. ஜடேஜாவின் அனுபவமும், சாம் கரனின் ஆல்-ரவுண்டர் திறமையும் அணிக்கு கூடுதல் பலம்.

மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரீராவை வாங்கியுள்ளது, பினிஷிங் ரோலுக்கு உதவும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் போன்ற இளம் இந்திய பட்டாளத்தை ராஜஸ்தான் தக்கவைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்களில் ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியின் முக்கிய தூண்கள். ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சு இம்முறை மிரட்டலாக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா என ஒரு தென்னாப்பிரிக்க - இங்கிலாந்து வேக கூட்டணி அமைந்துள்ளது. இவர்களுக்குத் துணையாக இந்திய சூழலில் சிறப்பாக செயல்படும் சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஜடேஜா கூட்டணி எதிரணியை திணறடிக்க காத்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (WK), ஷிம்ரோன் ஹெட்மையர், சுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டோனோவன் ஃபெரீரா (WK), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, யுத்வீர் சிங் சரக், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.
சஞ்சு சாம்சன் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், ஜடேஜா மற்றும் சாம் கரன் வருகை அணிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. புதிய கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2026 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 2026 சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க: டாஸ் கூட போடாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TN Pongal Gift News: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை (Pongal Festival 2026) என்றாலே பொதுமக்களின் எதிர்பார்ப்பு "பொங்கல் பரிசுத் தொகுப்பு" (TN Pongal Gift) மீதுதான் இருக்கும். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா, இல்லையா என்ற பட்டிமன்றமே சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ரேஷன் கார்டு குடும்பத்திற்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு (1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு) வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே பொங்கல் பரிசு (TN Pongal Gift) மற்றும் ரொக்க பணம் (TN Pongal Cash) குறித்து ஆளும் திமுக அரசின் திட்டம் என்ன?, பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு எப்பொழுது வரும்?, அதற்கான முன்னேற்பாடுகள் என்ன? போன்ற விவரங்களை பற்றி பாப்போம்.
ரூ.3,000 பொங்கல் ரொக்கப் பரிசு: அதிகாரப்பூர்வ முடிவு?
பொங்கல் பரிசு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடும் வகையில் இந்த திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. அதேநேரம் பொங்கலுக்கு ரூபாய் 5,000 வழங்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதால், அரசாங்கத்தின் முடிவு முக்கியமாக பார்க்கப்படுகிறத. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டு, அப்போதைய ஆளும் அரசு அதிமுக பொங்கலுக்கு 21 பொருட்கள் (பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், மஞ்சள் பை, முழு கரும்பு) மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கியது. அதேபோல அடுத்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பொங்கலுக்கு ரொக்கப் பரிசு ரூ.3,000 வழங்க தற்போதைய ஆளும் திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.
2.25 கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்
தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தச் சலுகை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வது மற்றும் இதர பொருட்களைத் தயார் நிலையில் வைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு பணம் எப்படி வழங்கப்படும்?
பொங்கல் பரிசு: இந்த முறை பொங்கல் பரிசுப் பணத்தை விநியோகிப்பதில் ஒரு புதிய முறையை அரசு கையாளப்போவதாகக் கூறப்படுகிறது.
நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT): வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ள கார்டுதாரர்களுக்கு, பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.
ரேஷன் கடைகள்: வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தொழில்நுட்ப சிக்கல் உள்ளவர்கள் நேரடியாக ரேஷன் கடைகளில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொருட்கள்: அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை எப்போதும் போல ரேஷன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் " பொங்கல் பரிசு மழை"
வரும் காலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பொங்கல் பரிசு அரசுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை திமுக அரசு ரூ. 3,000 வழங்கத் திட்டமிட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 4,000: மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பணம்
மேலும், ஜனவரி மாதத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகையுடன், இந்த ரூ.3,000 பொங்கல் பரிசும் சேரும் என்பதால், இல்லத்தரசிகள் இந்த பொங்கலை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
2026 பொங்கல் பரிசின் முக்கிய அம்சங்கள்
- பொங்கல் பரிசு திட்டம் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமானது
- ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க திட்டம்.
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- பணம் நேரடியாக வங்கி கணக்குக்கு டிடிபி முறையில் வழங்கப்படும்; இல்லையெனில் ரேஷன் கடையில் பெறலாம்.
- தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும்.
- பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படலாம்.
- தேர்தல் காலத்திற்காக இந்த பரிசு திட்டம் முக்கிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
- எதிர்கட்சிகள் அதிக தொகை வழங்க கோரிக்கை; அரசாங்கத்தின் முடிவு என்ன என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர் எந்த தகவலும் உறுதி செய்யக்கூடாது;
முக்கிய குறிப்பு
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வந்த பிறகே இது இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - புதிய ரேஷன் கார்டு + பொங்கல் பரிசு கிடைக்குமா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்
மேலும் படிக்க - பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!
மேலும் படிக்க - பொங்கல் பரிசு 2026: ரூ.5000 உறுதி? அரசின் சூப்பர் பிளான்.. 10 முக்கிய விசியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Pongal Gift 2026, 10 Key Expectations: பொங்கல் பரிசு 2026 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை. பொதுவாக, பொங்கல் பரிசுத் திட்டம் குறித்த விவரங்கள் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும். தமிழக அரசின் முன்னேற்பாடுகள் மற்றும் டோக்கன் விநியோகம் குறித்த முழு தகவல் மற்றும் பரிசுத் தொகை எவ்வளவு இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு பற்றி பாப்போம்.
தற்போதுள்ள தகவல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் 2026 பொங்கல் பரிசு குறித்த 10 முக்கிய விசியங்கள், தமிழக அரசின் முன்னேற்பாடுகள் மற்றும் டோக்கன் விநியோகம் பற்றிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
பொங்கல் பரிசு 2026: 10 முக்கிய அம்சங்கள் (எதிர்பார்ப்புகள்)
1. பணப் பரிசு அதிகரிப்பு: 2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், இந்த முறை ரொக்கப் பரிசுத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 அல்லது ரூ.5,000 வரை உயர்த்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
2. பரிசுப் பொருட்கள்: ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை முக்கியப் பொருட்களாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு: பொங்கல் பரிசுத் திட்டத்தின் இறுதி முடிவு மற்றும் விவரங்கள் வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
4. பயனாளிகள்: தமிழகத்தில் உள்ள சுமார் 2.20 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
5. இலவச வேட்டி-சேலை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
6. சந்தைப்படுத்துதல்: பரிசுப் பொருட்களைக் கொள்முதல் செய்வது, விநியோகத்திற்குத் தயாராக வைப்பது போன்ற பணிகள் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மேற்கொள்ளப்படும்.
7. மக்களின் எதிர்பார்ப்பு: கடந்த ஆண்டில் ரொக்கப் பரிசு வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியைக் கருத்தில் கொண்டு, இந்த முறை ரொக்கப் பணம் வழங்குவது உறுதியாக இருக்கும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
8. நிதிச் சுமை: ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டால், அரசுக்கு சுமார் ரூ.11,000 கோடி கூடுதல் நிதி தேவைப்படும். நிதிநிலை சவால்களை எதிர்கொண்டு அரசு எவ்வளவு தொகையை ஒதுக்கும் என்பது முக்கிய விசியமாக உள்ளது.
9. தரக் கட்டுப்பாடு: கடந்த காலங்களில் பரிசுப் பொருட்களின் தரம் குறித்த புகார்களைத் தவிர்க்க, இந்த முறை தரக் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10. அரசியல் முக்கியத்துவம்: 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு, இந்த பொங்கல் பரிசுத் திட்டம் ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் முன்னேற்பாடுகள் என்ன?
நிதிநிலை ஆலோசனை: பரிசுத் தொகுப்பிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் ரொக்கப் பரிசுத் தொகை எவ்வளவு வழங்குவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நிதித் துறை மற்றும் உணவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொருட்கள் கொள்முதல்: பரிசுத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்புள்ள அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மற்றும் கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகின்றன.
டோக்கன் அச்சிடுதல்: பரிசு விநியோகத்தை நெரிசல் இல்லாமல் சீராக நடத்தத் தேவைப்படும் டோக்கன்கள் அச்சிடும் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.
வேட்டி-சேலை விநியோகம்: இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கான விநியோகப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி, பொங்கலுக்கு முன்பே பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது.
பொங்கல் பரிசு டோக்கன் எப்பொழுது விநியோகிக்கப்படும்?
பொதுவாக, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் (தோராயமாக ஜனவரி 3 முதல் 9 வரை) தொடங்கும்.
விநியோக முறை: ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
விவரங்கள்: ஒவ்வொரு டோக்கனிலும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். இது ரேஷன் கடைகளில் கூட்டத்தைக் குறைத்து, மக்கள் சிரமமின்றி பரிசுப் பொருட்களைப் பெற உதவும்.
முக்கியக்குறிப்பு:
மேலே உள்ள அனைத்துத் தகவல்களும் தற்போதுள்ள ஊகங்கள் மற்றும் கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையிலானது. 2026 பொங்கல் பரிசு குறித்த இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்களுக்காக தமிழக அரசின் அறிவிப்புக்காகக் காத்திருப்பது அவசியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TVK Vijay Erode Speech: ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் இருந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதிக்கு சாலை மார்க்கமாகவே காரில் விஜய் வந்தடைந்தார். தவெக தலைவர் பேசுவற்கு முன்னர், அக்கட்சியின் மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பேசினர்.
தவெக தலைவர் விஜய் பேசுகையில், "களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். களத்திலேயே இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க வேண்டியதில்லை" என்றார். திமுகவையும், பாஜகவையும் கண்டித்த விஜய் அதிமுகவை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை, கண்டிக்கவில்லை. அப்படியிருக்க அதிமுக களத்திலேயே இல்லை என விஜய் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Chennai Super Kings, IPL 2026: ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று முன்தினம் (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வலைவீசி பிடித்தன எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கே கழட்டிவிட்ட வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை மதீஷா பதிரானா, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரண், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆன்ட்ரே சித்தார்த் என 12 வீரர்களை விடுவித்தது. மேலும், ரூ.43.4 கோடி பர்ஸ் தொகையுடன் ஏலத்திற்கு வந்த சிஎஸ்கே அணிக்கு 9 வீரர்கள் மொத்தம் தேவைப்பட்டது. அதில் 4 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம்.
Chennai Super Kings: சிஎஸ்கே எடுத்த 9 வீரர்கள்
அந்த வகையில், சிஎஸ்கே அணி கேம்ரூன் கிரீனுக்கு ரூ.25 கோடி வரை ஏலம் கேட்டாலும் கேகேஆர் பக்கம் (ரூ.25.20 கோடி) தள்ளிவிட்டது. அதேபோல், பதிரானாவுக்கு சிஎஸ்கே ஏலம் கேட்கவே இல்லை. கேகேஆர் அவரை ரூ.18 கோடிக்கு எடுத்தது. மேலும், ரவி பிஷ்னோய்க்கு ரூ.6 கோடிக்கு மேல் ஏலம் கேட்கவில்லை, அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.20 கோடிக்கு எடுத்துவிட்டது.
இந்தச் சூழலில் சிஎஸ்கே அணி அகேல் ஹொசைன் (ரூ.2 கோடி), மேட் ஹென்றி (ரூ.2 கோடி), மேத்யூ ஷார்ட் (ரூ.1.50 கோடி) ஜாக் ஃபோல்க்ஸ் (ரூ.75 லட்சம்) ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்ததுவிட்டது. Uncapped வீரர்களான பிரசாந்த் வீர் (ரூ.14.20 கோடி), கார்த்திக் சர்மா (ரூ.14.20 கோடி) ஆகியோருக்கு அதிக தொகையை ஒதுக்கியது. பர்ஸ் தொகையில் பாதிக்கு மேல் இவர்கள் மீது முதலீடு செய்தது. சர்ஃபராஸ் கான் (ரூ.75 லட்சம்), அமான் கான் (ரூ.40 லட்சம்) ஆகியோரையும் எடுத்திருக்கிறது. முதலில் ராகுல் சஹாருக்கு ஆர்வம் காட்டாத சிஎஸ்கே, Acclerated செட்டில் அவரை ரூ.5.20 கோடிக்கு எடுத்தது.
Chennai Super Kings: யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு
ஜடேஜாவுக்கு மாற்றாக பிரசாந்த் வீரை சிஎஸ்கே எடுத்திருக்கிறது. இதன்மூலம், பின்வரிசையில் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்ட பிரசாந்த் வீருக்கு நேரடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும், அவரின் இடது கை சுழற்பந்துவீச்சும் சிஎஸ்கேவுக்கு உதவிகரமாக இருக்கும். பிளேயிங் லெவனில் தோனி இருக்கும்பட்சத்தில் கார்த்திக் சர்மாவுக்கான வாய்ப்பு குறைவு எனலாம். மேத்யூ ஷார்ட், சர்பராஸ் கான் பேக்-அப் பேட்டர் ஆவார். பிரசாந்த் வீர் இருப்பதால் அகேல் ஹொசைனுக்கான வாய்ப்பு குறைகிறது. அமான் கான் பேக்-அப் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க மேட் ஹென்றி மற்றும் நேதன் எல்லிஸ் ஆகியோருக்கு இடையே போட்டி இருக்கும்.
Chennai Super Kings: சிஎஸ்கே அணி செய்த பெரிய தவறு
ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு பல வீரர்கள் இருக்கும் வேளையில், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாதது பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு ஜேமி ஓவர்டன் மட்டுமே இருக்கிறார். கேம்ரூன் கிரீனை எடுக்காதபட்சத்தில் ஜேசன் ஹோல்டரை சிஎஸ்கே அணி எடுத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6.80 கோடி வரை குஜராத் அணியிடம் முட்டிமோதி சிஎஸ்கே பின்வாங்கிவிட்டது. இதனால், ரூ.7 கோடிக்கு குஜராத் அணி எடுத்தது. இதுதான் சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் செய்த பெரிய தவறு எனலாம்.
Chennai Super Kings: ஜேசன் ஹோல்டர் ஏன் முக்கியம்?
ஜேசன் ஹோல்டரை தவறவிட்ட பிறகே, ராகுல் சஹாரை ரூ.5.20 கோடிக்கு எடுத்தது. ஒரு வெளிநாட்டு வீரரை எடுக்கலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. தற்போது சிஎஸ்கேவிடம் ரூ.2.40 கோடி மிச்சம் இருக்கிறது. ஜேசன் ஹோல்டருக்கு நிச்சயம் ரூ.10 கோடிக்கும் மேல் சென்றிருக்க வேண்டும். ஜேசன் ஹோல்டர் ஏலத்திற்கு வந்தபோது சிஎஸ்கே இன்னும் 6 வீரர்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கையில் ரூ.13 கோடி இருந்தது. குஜராத் அணிக்கு 4 வீரர்கள் எடுக்க வேண்டும், கையில் ரூ.12 கோடி இருந்தது. ஜேசன் ஹோல்டரை ரூ.10 கோடி வரை சென்றிருந்தால் சிஎஸ்கேவின் காம்பினேஷன் பக்காவாக அமைந்திருக்கும்.
ஜேசன் ஹோல்டர் உங்களுக்கு டெத் ஓவர்களில் கைக்கொடுப்பார். பின்வரிசை பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார். பிரெவிஸ் - ஹோல்டர் - நூர் அகமது - நேதன் எல்லிஸ் (அ) மேட் ஹென்றி என்ற வெளிநாட்டு காம்பினேஷனில் சிஎஸ்கே பலமாக இருந்திருக்கும். இப்போதைய சூழலில் பவர்பிளேவில் பந்துவீசக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள், டெத் ஓவருக்கு எல்லிஸை மட்டும் நம்ப வேண்டிய சழல் இருக்கிறது. கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் டெத் ஓவர்களில் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டதில்லை. ஜேசன் ஹோல்டர் 2025ஆம் ஆண்டில் பல டி20 லீக்கில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | CSK வீரரை வாங்க துடித்த ரிஷப் பண்ட்.. யார் தெரியுமா? சுவாரஸ்யம் பகிர்ந்த LSG ஓனர்!
மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் 35 வயதிற்கு மேல் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
மேலும் படிக்க | IPL: ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன 9 Uncapped வீரர்கள்
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா வெளியிட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை முதல் டெல்லியில் உள்ள எந்தவொரு பெட்ரோல் பங்கிலும், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் வாகனத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் எரிபொருள் நிரப்ப முடியாது. இதை சரிசெய்ய வாகன ஓட்டிகளுக்கு இன்று புதன்கிழமை ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
மேலும் படிக்க | பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்... வலுக்கும் சர்ச்சை - வீடியோ வைரல்

பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை
மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நொய்டா, குர்கான், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக தனியார் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரநிலையை பூர்த்தி செய்யாத வெளிமாநில வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் அனுமதிக்கப்படாது. மீறி உள்ளே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெட்ரோல் பங்குகளிலும், எல்லைகளிலும் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரக் கருவிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். வாகனங்களின் பிஎஸ் வகை மற்றும் பியூசி சான்றிதழ் ஆகியவை முறையாக சரிபார்க்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே GRAP 3 மற்றும் 4-ன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் டெல்லியில் அமலில் உள்ளன.
- பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்கு தடை தொடர்கிறது.
- அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத பிஎஸ்-4 ரக நடுத்தர சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லி-என்சிஆர் பகுதியில் இயங்க தடை நீடிக்கிறது.
அரசின் பிற நடவடிக்கைகள்
- வாகன கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, மாசுபாட்டை குறைக்க பிற துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
- மின்சாரப் பேருந்துகள்: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த இதுவரை 3,427 மின்சார பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 2026 டிசம்பருக்குள் 7,500 இ-பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தொழிற்சாலைகள் கண்காணிப்பு: மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, சுமார் ரூ. 9.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 280 ஆலைகளில் ஆன்லைன் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
- குப்பை கிடங்குகள்: குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அழிக்கும் பணிகள் நாள் ஒன்றுக்கு 35,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 45 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற காடுகள் வளர்க்கப்படுகின்றன.
- ஹீட்டர்கள் விநியோகம்: குளிர்காலத்தில் பாதுகாவலர்கள் வெப்பத்திற்காக விறகு அல்லது குப்பைகளை எரிப்பதை தடுக்க, 10,000 எலக்ட்ரிக் ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் ஜெனரேட்டர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் சாடல்
காற்று மாசு என்பது டெல்லி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு "நோய்" என்று குறிப்பிட்ட அமைச்சர் சிர்சா, இதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காற்று மாசு பிரச்சனையில் மௌனம் சாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார். புதிய விதிமுறைகள் சிரமமாக இருந்தாலும், டெல்லியின் காற்றை சுத்தப்படுத்த இவை அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் உடனடியாக தங்கள் வாகனங்களுக்கான பியூசி சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | சிக்கன் தந்தூரிக்கு தடை! Non Veg பிரியர்களுக்கு அதிர்ச்சி உத்தரவு.. ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஐபிஎல் 2026 மினி ஏலம் நேற்று அபுதாபியில் உள்ள எத்திஹாத் அரினாவில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் பல இளம் வீரர்கள் கோடிகளில் புரண்டாலும், சில முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு இது ஒரு சோகமான ஏலமாகவே அமைந்தது. கேமரூன் கிரீன், பிரசாந்த் வீர் போன்றோர் மிகப்பெரிய தொகையை பெற்று கொண்டாடி வரும் வேளையில், கடந்த சீசனில் கோடிகளில் சம்பளம் வாங்கிய பல வீரர்கள், இம்முறை மிகக்குறைந்த தொகைக்கே ஏலம் போயுள்ளனர். மொத்தம் 369 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், 10 அணிகளும் சேர்ந்து வெறும் 77 இடங்களை மட்டுமே நிரப்பின. கடந்த 2025 சீசனில் மோசமான ஆட்டம், அணியின் புதிய வியூகங்கள் மற்றும் வீரர்களின் உடற்தகுதி போன்ற காரணங்களால் பல வீரர்களின் சந்தை மதிப்பு இம்முறை அதிரடியாக குறைந்துள்ளது. அப்படி சம்பளத்தில் பெரும் சரிவைச் சந்தித்த 5 முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | 14.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கிய கார்த்திக் சர்மா! இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லையா?

வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer)
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். கடந்த 2025 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை நம்பி ரூ. 23.75 கோடி என்ற இமாலய தொகையை கொடுத்து வாங்கியது. ஆனால், அவர் அந்த நம்பிக்கையை காப்பாற்றத் தவறினார். 7 இன்னிங்ஸ்களில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கேகேஆர் அணி அவரை விடுவித்தது. ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் வந்த அவரை வாங்க அணிகள் முதலில் தயங்கின. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு அவரை வாங்கியது. இது கடந்த முறையை விட சுமார் 16.75 கோடி ரூபாய் குறைவு.
ஆகாஷ் தீப் (Akash Deep)
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், லக்னோ அணியால் கடந்த முறை அதிக விலைக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 12.05 என்ற மிக அதிகமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் லக்னோ அணி அவரை கழட்டிவிட்டது. இந்த முறை ஏலத்தின் ஆரம்ப சுற்றுகளில் யாரும் அவரை வாங்க முன்வரவில்லை. பின்னர் Accelerated சுற்றில் கொல்கத்தா அணி அவரை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு வாங்கியது.
ஆன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje)
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்ஜே, காயம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். காயங்கள் காரணமாக கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இவரால் விளையாட முடிந்தது. இது அவரது சந்தை மதிப்பை வெகுவாக பாதித்தது. இம்முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.
வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவும் இந்த பட்டியலில் இணைகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்தாததால் விடுவிக்கப்பட்டார். இம்முறை லக்னோ அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
டேவிட் மில்லர் (David Miller)
தென்னாப்பிரிக்காவின் அனுபவ அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் சம்பள குறைப்பிலிருந்து தப்பவில்லை. கடந்த சீசனில் ரூ. 7.5 கோடிக்கு விளையாடிய இவர், இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வயது மற்றும் ஃபார்ம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஐபிஎல் ஏலம் என்பது ஒரு சூதாட்டம் போன்றது. ஒரு சீசனில் உச்சத்தில் இருக்கும் வீரர், அடுத்த சீசனில் அதலபாதாளத்திற்கு செல்லலாம் என்பதற்கு வெங்கடேஷ் ஐயர் ஒரு சிறந்த உதாரணம். அணிகள் இப்போது பெயருக்காக பணத்தை செலவழிக்காமல், தற்போதைய ஃபார்ம் மற்றும் அணியின் தேவைக்கேற்பவே செலவு செய்கின்றன என்பது இந்த ஏலத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.
மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Bihar CM Nitish Kumar Hijab Row: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்த இழுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Nitish Kumar Hijab Row: சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ
பீகாரில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அரசு விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஆணையை வழங்கியபோது, அந்த பெண்ணின் ஹிஜாப்பை முகத்தில் இருந்து வேகமாக கீழே இறக்கிவிட்டார். இது அங்கு சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அதிகளவில் மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயல் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
Nitish Kumar Hijab Row: நிதிஷ் குமார் மீது புகார்
நிதிஷ் குமாரின் இந்த சர்ச்சையான செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் செயல் பொருத்தமற்றது என்றும் அவமானகரமானது என்றும் கண்டித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் பெண் நிர்வாகி சுமையா ராணா, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் ஆகியோர் மீது கைசர்பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
Nitish Kumar Hijab Row: புகார் அளித்ததன் காரணம் என்ன?
புகார் அளித்த பின்னர் சுமையா ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் ஹிஜாப்பை கழற்றுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்துகொள்வது, அவர் தனது தொண்டர்களும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையும்," என்று அவர் சாடினார்.
சஞ்சய் நிஷாத் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் சுமையா ராணா எதிர்த்தார். 'பர்தாவை கழற்றியது குறித்து ஏன் இவ்வளவு சர்ச்சை? அவரது கைகள் அந்த பெண்ணின் முகத்தை மட்டுமே தொட்டன' என்று கூறுகிறார். அப்படியென்றால், கை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடக்கும்?. இதனால்தான், நான் புகார் அளித்தேன்" என்றார், சுமையா ராணா.
Nitish Kumar Hijab Row: 'வழக்குப்பதிவு செய்யலாம்'
சுமையா ராணா உடன் வந்த வழக்கறிஞர் மிஷாம் ஜைதி கூறுகையில், "இந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த கருத்துக்களும் கடுமையான தண்டனைக்குரிய பிரிவுகளுக்கு கீழ் வரும் பிரச்னையாகும். அவர் ஒரு பெண்ணின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளார். சஞ்சய் நிஷாத் செய்தது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உள்ளது. இது பிரிவு 153A இன் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம்.
ஏனெனில் நீங்கள் தெரிந்தே கலவரங்களைத் தூண்டக்கூடிய, அமைதியின்மையை உருவாக்கக்கூடிய, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்" என்றார். ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்காக நிதிஷ் குமாருக்கு நேரடியாகப் பிரிவு 354 பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | பாஜகவில் தேசிய 'செயல்' தலைவர் பதவி... நிதின் நபின் நியமனம் - யார் இவர்?
மேலும் படிக்க | இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!
மேலும் படிக்க | பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சம்பளம் + ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ