Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
பியூஸ் கோயல் பேச்சு வார்த்தை! சென்னையில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்?
RSRK Spark
Dec 23, 2025 15:50:10
Chennai, Tamil Nadu

தமிழக அரசியல் களத்தில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி திடீரென முக்கியத்துவம் வாய்ந்த 'ஹாட் ஸ்பாட்'-ஆக மாறியுள்ளது. திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றன. குறிப்பாக, வேளச்சேரியில் ஒரு இளைஞரணி போர் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. சமீபத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மண்டல மாநாடு, கட்சியில் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படையாக பறைசாற்றியது. இந்த உற்சாகத்தின் தொடர்ச்சியாக, வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் முன்கூட்டியே வரும் தேர்தல்... தேதியை சொன்ன நயினார் நாகேந்திரன்

பாஜகவின் வியூகம்

இந்த வகையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜோயல் வேளச்சேரி பகுதியில் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருவதால், இம்முறை அவருக்கு சீட் உறுதி என்றே உடன்பிறப்புகள் பேசி வருகின்றனர். திமுகவின் இந்த வியூகத்தை முறியடிக்க, பாஜகவும் அதே பாணியில் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இன்று டிசம்பர் 23-ம் தேதி சென்னை வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், தமிழக பாஜக நிர்வாகிகள் இது குறித்து வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக சார்பில் ஜோயல் போட்டியிட்டால், அவருக்கு எதிராக வலுவான போட்டியை கொடுக்க பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யாவை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையிடமிருந்து சூர்யாவுக்கு ஏற்கனவே 'கிரீன் சிக்னல்' கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சூர்யா நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் யாத்திரையில் சூர்யா கலந்துகொண்டு, இளைஞரணியினரை திரட்டி மாஸ் காட்டியது மேலிடத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழிசையின் 'வேளச்சேரி கனவு' நிறைவேறுமா?

வேளச்சேரி தொகுதியில் போட்டியிட பாஜகவுக்குள்ளேயே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இத்தொகுதியின் மீது ஒரு கண் வைத்துள்ளார். தொடக்கத்தில் நாங்குநேரி தொகுதிக்கு அடிபோட்டு வந்த தமிழிசை, தற்போது தனது கவனத்தை வேளச்சேரி பக்கம் திருப்பியுள்ளார்.  வேளச்சேரி தொகுதி பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தனியார் நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகளை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித் ஷாவிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த தகவலறிந்த தமிழிசை, பாதுகாப்பான தொகுதியான வேளச்சேரியிலேயே போட்டியிடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

பாஜகவின் கணக்கு என்ன?

தமிழிசையின் விருப்பம் ஒருபுறம் இருக்க, பாஜக தலைமையோ வேறு கணக்கு போட்டு வருகிறது. இளைஞரணி VS இளைஞரணி என்ற அடிப்படையில் போட்டியை கட்டமைக்க திட்டமிடுகிறது. திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயலை எதிர்க்க, பாஜக இளைஞரணி தலைவர் சூர்யாவை களமிறக்குவது தான் சரியான போட்டியாக இருக்கும் என்று தலைமை கருதுவதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏற்கனவே 5 முறைக்கும் மேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டும் வெற்றி பெறாததால், இம்முறை அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகமே என்று பாஜக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது

மேலும் படிக்க - திமுக கவர்ச்சிகரமான வாக்குகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது - இபிஎஸ் குற்றச்சாட்டு!

.சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SMShiva Murugesan
Dec 23, 2025 13:36:42
Chennai, Tamil Nadu:

AIADMK-NDA Alliance In Tamil Nadu: திருப்பரங்குன்றம் விவகாரம், வரைவு வாக்காளர் பட்டியல் அரசு ஊழியர்கள் போராட்டம், பொங்கல் பரிசு மற்றும் புதிய வரவு தவெக என பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்த நிலையில், இன்று மதியம் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல்

இந்தநிலையில், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாக பியூஸ் கோயில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் எனவும் பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக- பாஜக கூட்டணி என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களாகவே அதிமுக- பாஜக கூட்டணியில், பாஜக சார்பில் 60 தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் அதிமுக- பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து இன்றைய சந்திப்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எழுந்துள்ளது.

அது உண்மை கிடையாது -டிடிவி தினகரன் பளிச்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றைய தினத்தில் சிவகங்கையில் பேசும் பொழுது கூட எங்களுக்கு ஆறு தொகுதி ஒதுக்க போறாங்க. ஏழு தொகுதி ஒதுக்க போறாங்க என செய்திகள் வருவதாகத் தான் கூறுகிறீர்கள். ஆனால் அதில் எல்லாம் உண்மை கிடையாது. உங்களுக்கு யார் தகவல் கொடுக்கிறார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும்? என்ற கருத்தை அவர் பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அவர் இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க மாட்டார் என்பதுதான். அதுவே அவர்களுடைய ஆதரவாளருடைய கருத்தாக இருக்கிறது. 

அமமுகவுக்கு (AMMK) எத்தனை தொகுதிகள்?

ஏனென்றால் டிடிவி தினகரனை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 20 தொகுதிகளாவது தங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக கடந்த 2021 தேர்தலின் போது கிட்டத்தட்ட 28 தொகுதிகளில் அதிமுகவினுடைய வெற்றியை அவர்கள் தான் பறித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் (அதிமுக) தோல்விக்கு அவர்கள் பிரித்த வாக்குகள் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது 20 தொகுதியாவது அவர்களுக்கு தர வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணமாக இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அவர்கள் இந்த ஆறு என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி? 

தேமுதிகவுக்கு (DMDK) எத்தனை தொகுதி

அதே நேரத்தில் தேமுதிகவை பொறுத்தவரைக்கும் அவர்களும் அந்த ஆறு தொகுதியை ஏற்க மறுப்பார்கள். ஏனென்றால் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கானது. இதை நாங்கள் தருகிறோம் என்று அதிமுக ஏற்கனவே ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தேமுகத்திவிற்கும் அந்த ஆறு தொகுதி என்பது அவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கும். 

இது வெறும் தகவல்கள் தான். அதிமுக தரப்பில் இத்தனை தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் எனக் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பட்டியலே தவிர, இது இறுதி பட்டியல் கிடையாது. அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் தான் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆக மொத்தத்தில் இது இறுதி பட்டியல் கிடையாது. 

NDA கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்?

அதேநேரம் இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமாக இருந்தது என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருப்பது, பாஜக எதிர்பார்த்த தொகுதிகள் கிட்டத்தட்ட கிடைத்துவிடும் எனவும் கூறப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீட்டுகளை அதிமுகவிடம் பெற்றுக்கொண்டு, அதிலிருத்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கும் தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை எனத்தான் கூறவேண்டும். 

கூட்டணி சம்பந்தமான முடிவெடுக்கிற அதிகாரத்தை யாரிடம்?

தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணி சம்பந்தமான முடிவெடுக்கிற அதிகாரத்தை யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ அவரிடம் தான் இருக்கும். அப்படி பார்த்தால், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுப்பார். அதாவது அவரின் தலைமையில் அமையும் குழு தான இறுதி முடிவு எடுக்கும். அந்த குழு பலகட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தும். அதன்பிறகு கூட்டணி இறுதியாகும் என்ற நிலை தான் உள்ளது. அதுவு தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு மாதங்கள் இருப்பதால், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதி முடிவு எடுப்பார்கள். 

ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை

எனவே இன்றைய  தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து என்பது ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைக்கான சம்பிரதாயமான ஒரு அலங்கார நிகழ்வுதானே தவிர அதை தாண்டி பெரிய முக்கியத்துவம் இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு உண்மையா?

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒதுக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல் என்பது உண்மையல்ல. இன்னும் காலம் இருக்கிறது. இறுதி முடிவு விரைவில் சில மாதங்களில் அறிவிக்கப்படும்.

அதிமுக: 170 தொகுதிகள்
பாஜக: 23 தொகுதிகள் 
பாமகவு: 23 தொகுதிகள்
தேமுதிக: 6 தொகுதிகள் 
அமமுக: 6 தொகுதிகள் 
ஒபிஎஸ் அணி: 3 தொகுதிகள் 
தமிழ் மாநில காங்கிரஸ்: 3 தொகுதிகள்

மேலும் படிக்க - பியூஷ் கோயல் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது: அமைச்சர் ரகுபதி

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் முன்கூட்டியே வரும் தேர்தல்... தேதியை சொன்ன நயினார் நாகேந்திரன்

மேலும் படிக்க - திமுக கவர்ச்சிகரமான வாக்குகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது - இபிஎஸ் குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 23, 2025 07:33:33
Puducherry, Puducherry:

Puducherry Welfare Schemes For Different Abled People: புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 23) நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கான மாத அரிசி விநியோகமும், மாதம் கொடுக்கப்படும் பெட்ரோலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "சமூக நலத்துறை மூலம் 21 ஆயிரத்து 539 மாற்றுதிறனாளிகள் பயன்பெறுகிறார்கள். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, இலவச வீட்டுமனை பட்டா, விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி என வழங்கப்படுகிறது. வாகனங்களுக்கான பெட்ரோல் மாதம் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி மொத்தம் 30 லிட்டராக விநியோகிக்கப்படும். 

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பயனாளர்களுக்கு ரூ. 3000 உதவித்தொகை வாங்குபவருக்கு ரூ. 3500 ஆகவும், ரூ. 4800 வாங்குவோருக்கு ரூ. 5500 ஆகவும் உயர்த்தப்படும். தற்போது மாதம் 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துகிறது. அடுத்து 20 கிலோ அரிசிக்கான பணம் வரவு வைக்கப்படும். தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ. 30 தருவதை, ரூ. 40 ஆக உயர்த்தி மாதம் ரூ. 800 அரிசி பணம் வழங்கப்படும். பண்டிகை காலத்தில் துணிகள் வாங்குவதற்கு ரூ. 500 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ. 750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும்" என அறிவித்தார்.

மேலும் படிக்க | புதுச்சேரியில் விஜய் பேச்சு - மக்களின் கருத்து என்ன?

மேலும் படிக்க | விஜய் பொதுக்கூட்டத்தில் சர்ச்சை: வாக்குவாதத்தில் ஈடுபட்ட புஸ்சி ஆனந்த்! எச்சரித்த பெண் காவலர்

மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்கும் நான் குரல் கொடுப்பேன் -விஜய் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 23, 2025 07:22:17
Chennai, Tamil Nadu:

IPL 2026, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மோசமான 2025 சீசனுக்கு பின் தற்போது பலம்பெற்று 2026 சீசனில் களமிறங்க உள்ளது. ஜடேஜா, சாம் கர்ரண், மதீஷா பதிரானா, ரவிசந்திரன் அஸ்வின், டெவான் கான்வே என தோனியின் படைவீரர்கள் பலரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்கள்.

Chennai Super Kings: சிஎஸ்கே காம்பினேஷன்

சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து பெற்றிருப்பதன் மூலம் டாப் ஆர்டரை பலமாக்கி உள்ளனர். இப்போது டாப் ஆர்டரில் உர்வில் பட்டேல் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆயுஷ் மாத்ரே அல்லது உர்வில் பட்டேல் இருவரில் ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் அதுவும் ஓபனிங்கில் விளையாட முடியும்.

மிடில் ஆர்டர் ஏற்கெனவே செட்டாகிவிட்டது. தற்போது ஏலத்தில் தலா ரூ.14.20 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ள பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோர் பின்வரிசை பேட்டர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. தோனி ஒருவேளை குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்றால் கார்த்திக் சர்மா மீதம் உள்ள போட்டிகளில் விளையாடுவார்.

Chennai Super Kings: சிஎஸ்கேவின் பந்துவீச்சு படை

வெளிநாட்டு ஆல்-ரவுண்டராக நம்பர் 8இல் ஜேமி ஓவர்டனை விளையாட வைக்க அதிக வாய்ப்புள்ளது, இவருக்கு ஜாக் ஃபௌல்க்ஸ் பேக்-அப்பாக இருப்பார். ஒருவேளை, பிரசாந்த் வீர் தேவைப்படாவிட்டால் பின்வரிசையில் வேறு பேட்டரை விளையாட வைத்துவிட்டு, நம்பர் 8இல் அகேல் ஹொசைனை விளையாடலாம். அகேல் ஹொசைன் இரண்டாம் ஆப்ஷன்தான். நூர் அகமது, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். கலீல் அகமதிற்கு பேக்-அப் குர்ஜப்னீத் சிங். மேட் ஹென்றி அல்லது நேதன் எல்லீஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும், டெத் ஓவர்களில் சிறப்பாக வீசுபவர் என்பதால் எல்லீஸுக்கு வாய்ப்பு உறுதி.

Chennai Super Kings: இந்த 4 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பே கிடையாது

சிஎஸ்கேவின் காம்பினேஷன் ஒரளவுக்கு இதுவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. நீண்ட பேட்டிங் உடன் கூடிய 6 பந்துவீச்சு ஆப்ஷன் இந்த ஸ்குவாடுக்கு கிடைக்கும். இந்தச் சூழலில், சிஎஸ்கேவின் இந்த 4 முக்கிய வீரர்கள், 2026 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெற மாட்டார்கள் என சமூக வலைதள கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்படுகிறது. அவர்கள் யார் யார்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம். 

Chennai Super Kings: சர்பராஸ் கான்

இவரை ரூ.75 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்திருக்கிறது. மிடில் ஆர்டரில் இந்திய வீரர்களுக்கான பேக்-அப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் உர்வில் பட்டேல், தோனியே ஆகியோரே பேட்டிங் வரிசையில் இடத்தை தேடிக்கொண்டிருக்கையில் இவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுவும் இவர் பேட்டர் மட்டுமே என்பதால் அவசர காலகட்டத்தில் நம்பர் 6இல் இறக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பும் மிக மிக குறைவு.

Chennai Super Kings: மேத்யூ ஷார்ட்

இவரை ரூ.1.50 கோடிக்கு அவரது அடிப்படைத் தொகையிலேயே சிஎஸ்கே எடுத்தது. தற்போதைய பிளேயிங் லெவனை பார்த்தால் பிரெவிஸ் மட்டுமே  அணி வெளிநாட்டு பேட்டராக இருப்பார். மேத்யூ ஷார்ட் பெரும்பாலான போட்டிகளில் டாப் ஆர்டரில் இறங்கி விளாசக்கூடியவர்கள். ஆனால் டாப் ஆர்டரிலேயே எக்கச்சக்க வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரெவிஸ் தொடர்ந்து சொதப்பினாலும் கூட சிஎஸ்கே அவரை தொடர்ந்து விளையாட வைக்கும். இதனால், ஷார்ட் சிஎஸ்கே ஜெர்ஸி அணியில் களமிறங்க 2026 சீசனில் வாய்ப்பில்லை.

Chennai Super Kings: ராகுல் சஹார்

இவரை ரூ.5.20 கோடிக்கு சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்தது. லெக் ஸ்பின்னர் அணியில் தேவை என்றாலும் சிஎஸ்கேவின் தற்போதைய காம்பினேஷனில் இவர் தேவையில்லை என்றுதான் கூற வேண்டும். பிரசாந்த் வீர், நூர் அகமது ஆகியோர் நிச்சயம் 8 ஓவர்கள் வீசுவார்கள் என்றால் ராகுல் சஹாருக்கான வாய்ப்பு குறைவு. இவரது பார்மும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை இம்பாக்ட் ஆப்ஷனில் இவரை வைத்துக்கொள்ளலாம் என்றாலும், சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் தராத ருதுராஜ் கெய்க்வாட் இவரை பிளேயிங் லெவனில் எடுக்கும் வாய்ப்பு குறைவாகும்.

Chennai Super Kings: ஷ்ரேயாஸ் கோபால்

இவர் கடந்த சீசனிலேயே அணியில் இருந்தார். உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் சிஎஸ்கேவில் கடந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை, வரும் 2026 சீசனிலும் கிடைக்கவாய்ப்பில்லை. சிஎஸ்கே லெக் ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் விளையாடாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அசாதாரண கட்டங்களில் இவர் விளையாடலாம். ஆனால் அதேநேரத்தில் ராகுல் சஹாரா, ஷ்ரேயாஸ் கோபாலா என கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஷ்ரேயாஸை தேர்வு செய்யலாம். பேட்டிங்கிலும் ஓரளவு கைக்கொடுப்பார். இருப்பினும், 2021இல் கிருஷ்ணப்பா கௌதமுக்கு என்ன நடந்ததோ, அதுதான் ராகுல் சஹார் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் நிலையாகும். லெக் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கௌதம் ரூ.9.5 கோடிக்கு சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டு ஒருமுறை கூட விளையாடவில்லை.

மேலும் படிக்க | CSK-வின் பிளேயிங் 12... லிஸ்ட் போட்ட அஸ்வின் - தோனி இருக்காரா இல்லையா?

மேலும் படிக்க | தோனி ஓய்வு.. சஞ்சு சாம்சனை வாங்கியது ஏன்? CSK பிளான் இதுதான்!

மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் 35 வயதிற்கு மேல் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 22, 2025 08:03:42
Chennai, Tamil Nadu:

கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வருங்கால கேப்டனாக கருதப்பட்ட வரும், அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில், உலக கோப்பை போன்ற மிகமுக்கியமான தொடரிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் படிக்க: T20 World Cup: சுப்மன் கில்லை எடுக்காதது மிகப்பெரிய தவறு.. காரணம் இதுதான்!

அதிரடி நீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லின் நீக்கம் குறித்துத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர். முக்கியமாக இரண்டு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. ஒன்று சுப்மன் கில்லின் சமீபத்திய மோசமான பார்ம், மற்றொன்று அணியின் சமநிலை. சுப்மன் கில் கடந்த சில டி20 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முறையே 4, 0 மற்றும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறினார். ஒரு பெரிய தொடருக்கு செல்லும்போது, வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத் திறனில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் கில்லின் சமீபத்திய சறுக்கல்கள் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன.

விக்கெட் கீப்பர்

கில்லின் நீக்கத்திற்கு பின்னால் உள்ள மற்றொரு மிக முக்கிய காரணம் அணியின் சமநிலை மற்றும் விக்கெட் கீப்பர்களின் தேவை. தேர்வுக்குழுவினர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கக்கூடிய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளித்துள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாகவும் செயல்படக்கூடியவர்கள் என்பதால், பிரத்யேக தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லிற்கான இடம் கேள்விக்குறியானது. "எங்களுக்கு தொடக்க வரிசையில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அந்த இடத்தை பூர்த்தி செய்கின்றனர். அணியின் சமநிலையை கருத்தில் கொண்டே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டது," என்று அகர்கர் விளக்கினார். 

துணை கேப்டனாக அக்‌ஷர் படேல்

சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அணியின் துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் அக்‌ஷர் படேல் துணை கேப்டனாக செயல்படுவார். இது அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடியாக விளையாடி 500-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த இஷான் கிஷன் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை சுப்மன் கில்லின் இடத்திற்கு பெரும் போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில்லின் இந்த நீக்கம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், டி20 வடிவத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் கன்சிஸ்டன்சி குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இருப்பினும், வருங்கால கேப்டன் என்று அழைக்கப்பட்ட ஒருவரை இப்படி ஒரு முக்கிய தொடரிலிருந்து கழற்றிவிட்டது பிசிசிஐ எடுத்த மிகத் துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் அணியிலும் இதே நிலைமையா?

டி20 உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம் சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சறுக்கலாக தோன்றினாலும், இது ஒரு தற்காலிக பின்னடைவே என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது பேட்டிங் திறனை மீண்டும் நிரூபித்து அணிக்குள் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல துடிக்கும் வேளையில், கில் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் படை களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் அவரது இடத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. பிசிசிஐ எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா அல்லது கில்லின் நீக்கம் அணியின் பேட்டிங்கை பலவீனப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: அப்பவே உடைஞ்சு போயிட்டேன்”.. ஓய்வு குறித்து மனமுடைந்து பேசிய ரோகித் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 22, 2025 08:03:24
Palani, Tamil Nadu:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான இங்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், விரைவான தரிசனத்திற்காகவும் ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ரோப் கார் சேவையானது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிகக் கடுமையான பராமரிப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

மேலும் படிக்க: பள்ளிகள் லீவ், கிறிஸ்துமஸ் எதிரொலி: இந்த சிறப்பு ரயிலில் ஏறினால்... தமிழ்நாட்டையே சுற்றலாம்!

பக்தர்களின் பாதுகாப்பு

தினசரி பராமரிப்பு: ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சேவை நிறுத்தப்பட்டு அடிப்படை சோதனைகள் செய்யப்படும்.

மாதாந்திர பராமரிப்பு: மாதம் ஒரு முறை முழுமையான ஒரு நாள் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு, ரோப் காரின் கம்பிகள், பெட்டிகள் மற்றும் இயந்திரங்களின் உறுதித்தன்மை சோதிக்கப்படும்.

வருடாந்திர பராமரிப்பு: ஆண்டுக்கு ஒரு முறை சுமார் ஒரு மாதம் வரை சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு, தேய்மானம் அடைந்த பாகங்கள் மாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.

அதன் அடிப்படையில், இந்த மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் இன்று திங்கள்கிழமை மேற்கொள்ளப்படுவதால், ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் முழுவதும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான மாற்று ஏற்பாடுகள்

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இன்று பழனிக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ரோப் கார் சேவை இல்லாத நிலையில், பக்தர்கள் மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்தலாம். இதற்காக கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதால் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மற்றும் இளையவர்கள் படிப்பாதை வழியாகவோ அல்லது யானை பாதை வழியாகவோ மலைக்குச் சென்று முருகனை தரிசிக்கலாம்.

ரோப் கார் சேவையின் முக்கியத்துவம்

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் ரோப் கார் சேவையையே விரும்புகின்றனர். இதற்கு காரணம், அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இதில் பயணம் செய்யும்போது பழனி நகரத்தின் இயற்கை அழகையும், மேற்கு தொடர்ச்சி மலையின் எழிலையும் ரசித்தபடியே பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறிய குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு இந்த ரோப் கார் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இன்று இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தகைய பக்தர்கள் மின் இழுவை ரயிலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோள்

தைப்பூசம் நெருங்கி வரும் வேளையிலும், வார இறுதி விடுமுறை முடிந்து வாரத்தின் முதல் நாளாக இருப்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் வழக்கம் போல் காணப்படுகிறது. ரோப் கார் நிலையத்திற்கு வந்து ஏமாற்றமடைவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை வழக்கம் போல் ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் மற்றும் முருகனின் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: சத்துணவு பிரிவில் வேலை! பெண்கள் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. கை நிறைய சம்பளம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 22, 2025 06:14:19
New Delhi, Delhi:

Air India Plane Engine Malfunction: தலைநகர் டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்தபோது வலது பக்க எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு டெல்லியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. முக்கிய ஆயில் பிரஷர் குறைவாக இருந்ததன் காரணமாக வலது எஞ்சின் நின்றுவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ஏர் இந்தியா AI 887 (போயிங் 777-337 ER விமானம்), டெல்லியில் இருந்து மும்பை நோக்கி இன்று காலையில் புறப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 6.40 மணிக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பத்திரமாக தரையிறங்கினர். இந்த எதிர்பாராத சூழ்நிலையால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா மனதார வருந்துகிறது. விமானம் தேவையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள எங்கள் தரைப்படை குழுவினர் பயணிகளுக்கு உடனடி உதவியை வழங்கி அளித்தார்கள். மேலும் பயணிகள் விரைவில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவில், எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு முன்னுரிமையாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 21, 2025 13:43:02
دبي, دبي:

U19 Asia Cup 2026 Final Highlights: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
RSRK Spark
Dec 21, 2025 07:33:12
Chennai, Tamil Nadu:

ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு புதுப்பித்தால், அந்த இடைப்பட்ட காலத்தை உரிமம் இருந்ததாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெலங்கானா மாநில காவல்துறை தேர்வாணையம் (Telangana State Level Police Recruitment Board) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில், தெலங்கானா காவல்துறை தேர்வாணையம், காவலர் ஓட்டுநர் மற்றும் தீயணைப்பு துறை ஓட்டுநர் ஆகிய 325 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | அசாமில் ரயில் விபத்து: 8 யானைகள் பலியான சோகம்... தடம் புரண்ட பெட்டிகள்

சில விண்ணப்பதாரர்களின் ஓட்டுநர் உரிமம் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் காலாவதியாகி, பின்னர் சில நாட்கள் கழித்து புதுப்பிக்கப்பட்டிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமம் காலாவதியான ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்பட்டால், அது காலாவதியான தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று உயர்நீதிமன்றம் கருதி, அவர்களை தேர்வில் பங்கேற்க அனுமதித்தது. இதை எதிர்த்து தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் எஸ்.வி.என். பட்டி அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. தொடர்ச்சியாக என்ற வார்த்தைக்கு பொருள், எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பது தான். உரிமம் காலாவதியான நாளிலிருந்து அது புதுப்பிக்கப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், அந்த நபருக்கு வாகனம் ஓட்ட சட்டப்பூர்வ அனுமதி இல்லை. எனவே, அந்த காலத்தைத் தொடர்ச்சியான அனுபவமாக கணக்கில் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

சட்ட திருத்தம்

2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உரிமம் காலாவதியான பிறகு 30 நாட்கள் சலுகைக் காலம் என்பது நீக்கப்பட்டுவிட்டது என்பதை குறிப்பிட்டது. எனவே, உரிமம் காலாவதியான மறுநாளே அது செல்லாததாகிவிடும். உரிமத்தை புதுப்பிக்கும்போது அது பழைய தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று கருதினாலும், அது ஆவண ரீதியாக மட்டுமே சரியே தவிர, பணி நியமனத்திற்கான தொடர்ச்சியான தகுதிக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ஓட்டுநர் பணி நியமனங்களில் தொடர்ச்சியான அனுபவம் கேட்கப்படும்போது, இடையில் உரிமம் காலாவதியாகி இருந்தால், அது தகுதியிழப்பாக கருதப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 7 பணக்காரர்கள்.. லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 20, 2025 09:40:51
Chennai, Tamil Nadu:

ICC T20 World Cup 2026, Team India Squad: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஸ்குவாட்

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 20, 2025 05:16:59
Ernakulam, Kerala:

Actor Sreenivasan Passes Away: பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, ரெட்டைச்சுழி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 19, 2025 14:05:52
Chennai, Tamil Nadu:

Ban For Pit Bulls, Rottweilers In Chennai: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ஆகிய இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை (டிசம்பர் 20) முதல் தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை மீறி வளர்த்தால், நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing), வாய்க்கவசம் (Muzzling) உள்ளிட்டவை அணிவிப்பது சென்னையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 19, 2025 12:59:25
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Draft Electoral List After SIR: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.

சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் அதற்கான படிவங்களை நிரப்பியதன் அடிப்படையில், அந்த படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை காரணமாக போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர் நீக்கப்பட்டிருக்கின்றனர். சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன்னர் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
christmas
Advertisement
Back to top