Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
'கேப்டனின் ஆன்மா மன்னிக்காது...' U-Turn போட்ட பிரேமலதா... அதிமுக - பாஜக ஷாக்!
SGSudharsan G
Feb 19, 2026 08:07:34
Chennai, Tamil Nadu

DMK - DMDK Alliance: 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக - தேமுதிக முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

DMK - DMDK Alliance Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தமிழ்நாட்டில் வரும் பிப். 23ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. கூட்டணி இறுதியானதும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அடுத்து தொடங்கும். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என தற்போதைய சூழல் நான்கு முனை தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது, தவெக உடன் இதுவரை எந்த கட்சியும் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

திமுக vs அதிமுக கூட்டணி

திமுகவில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளே தற்போதும் தொடர்கின்றன. காங்கிரஸ் - திமுக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிப். 22ஆம் தேதி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னரே காங்கிரஸ் கூட்டணியில் தொடருமா அல்லது விலகுமா என்பதும் தெரியவரும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக - தேமுதிக கூட்டணி

ஓபிஎஸ், சசிகலா, பாமக (ராமதாஸ்) ஆகியோர் யார் பக்கம் செல்வார்கள்? அவர்களின் அடுத்த நகர்வு என்ன? உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், நீண்ட காலமாக கூட்டணியை அறிவிக்காமல் இருந்த தேமுதிக இன்று திமுக உடனான கூட்டணியை உறுதிசெய்துள்ளது. திமுக மற்றும் அதிமுக இரு அணிகளிலும் தேமுதிக கூட்டணி பேரத்தை நடத்தி வந்ததாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன, ஆனால் கட்சி யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கட்சி தொண்டர்களின் முடிவின்படி கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறிவந்தார்.

முதல்முறையாக திமுக உடன்...

இந்நிலையில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் திமுக கூட்டணியாக இருந்தது என்றும் அதனால் திமுக உடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்றும் பிரேமலதா இன்று தெரிவித்துள்ளார். தேமுதிக தொடங்கி 21 ஆண்டுகளாகும் நிலையில், முதல்முறையாக திமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளது. இருப்பினும் எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும், மாநிலங்களவை உறுப்பினர் சீட் உள்ளிட்ட விவரங்களை திமுக விரைவில் அறிவிக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

'கேப்டனின் ஆன்மா மன்னிக்காது'

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக அதன் X தளத்தில் இன்று (பிப். 19),"தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்திற்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவிற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது" என திமுக - தேமுதிக கூட்டணியை கடுமையாக சாடி உள்ளது.

பாஜக கனவில் மண்ணள்ளி போட்ட தேமுதிக

கடந்த பிப். 15ஆம் தேதி கோவை ஈஷா மஹா சிவராத்திரி நிகழ்வின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தேமுதிக விரைவில் அதிமுக கூட்டணிக்குள் வரப்போகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, வரும் மார்ச் 1ஆம் தேதி மதுரையில் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதாவும் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகின. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி பலப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா கொடுத்த ட்விஸ்ட் அவர்களின் கனவில் மண்ணள்ளி போட்டுள்ளது.

தேமுதிக கடந்து வந்த பாதை

விஜயகாந்த் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாகவே கடந்த 2005ஆம் ஆண்டில் தேமுதிகவை தொடங்கினார், விஜயகாந்த். 2006 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. விஜயகாந்த் போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் மட்டும் தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்தது. 2009 மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு 10% அளவிற்கு வாக்கு வங்கியை பெற்றாலும் ஒரு தொகுதியை கூட தேமுதிக வெல்லவில்லை.  

2011 சட்டப்பேரவை தேர்தல் அக்கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதிமுகவுடன் தேமுதிக முதல்முறையாக கூட்டணி வைத்து போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 எம்எல்ஏக்களை தேமுதிக பெற்றது. அதேநேரத்தில், 2012ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் விஜயகாந்த், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுகவை எதிர்த்து பேசிய பின் அக்கட்சியின் சரிவு தொடங்கியது. தேமுதிகவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் உருவாகினர், சட்டமன்றத்தில் தேமுதிகவின் எண்ணிக்கை குறைந்தது, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை விஜய்காந்த் இழந்தார். 

தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தலில் பாஜக உடன் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக இடம்பெற்று, 105 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால், அப்போது ஒரு இடத்தில் கூட தேமுதிகவும் சரி அவர்களின் கூட்டணி கட்சிகளும் சரி வெற்றிபெறவில்லை. 2019 மக்களவை தேர்தலிலும் பாஜக கூட்டணியில்  போட்டியிட்டும், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேமுதிகவுக்கு சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் ஓரளவு நம்பிக்கையை பெற்றிருக்கிறது தேமுதிக வட்டாரம். 

மேலும் படிக்க | திமுக தேமுதிக கூட்டணி: எத்தனை தொகுதிகளில் போட்டி? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்

மேலும் படிக்க | பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்: இனி கரண்ட் பில் மாசம் மாசம் கட்டணுமா?

மேலும் படிக்க | முடிஞ்சது சஸ்பென்ஸ்! தட்டி தூக்கிய எ.வ. வேலு.. திமுக கூட்டணியில் தேமுதிக வந்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SSSripriya Sambathkumar
Feb 19, 2026 06:39:06
Chennai, Tamil Nadu:

Chennai Corporation Budget Announcements: புதன்கிழமை, சென்னை மாநக​ராட்சி மன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் மாநக​ராட்சி நிலைக்​குழு தலை​வர் (வரி விதிப்பு மற்​றும் நிதி) சர்​பஜெயா தாஸ் 2026-2027 ஆம் ஆண்டுக்கான மாநக​ராட்சி பட்ஜெட்டை தாக்​கல் செய்​தார்.

ரூ.8,900 கோடி பட்ஜெட் செலவினம்: மாறும் முன்னுரிமைகள்

சென்னை மக்களின் கனவுகளை நிகமாக்கும் வகையில், பல வித மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக சென்னை மாநகராட்சி புதன்கிழமை ரூ.8,900 கோடி பட்ஜெட் செலவினத்தை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் முக்கிய கவனம் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் போன்றவற்றின் பக்கமே அதிகம் இருந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் மாநகராட்சி பட்ஜெட் இதுவரை இல்லாத அளவுக்கு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாவில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மாநகராட்சியின் வருவாய் ரூ.8,557 கோடி

இந்த ஆண்டு மாநகராட்சியின் வருவாய் ரூ.8,557 கோடியாக இருந்தது. இதனால் ரூ.343 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.137 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியின் பட்ஜெட் செலவினம் கடந்த ஆண்டின் ரூ.8,405 கோடியிலிருந்து ரூ.500 கோடி உயர்ந்துள்ளது. இதில் முக்கிய உந்துதலாக சொத்து வரி உள்ளது. இது ரூ.150 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.2,450 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாம்ப் டியூட்டி சர்சார்ஜ்

ஸ்டாம்ப் டியூட்டி சர்சார்ஜும் கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகரித்துள்ளது. இதற்கான வருவாய் ரூ.450 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில நிதி ஆணையம் கிரேட்டர் சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,350 கோடி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூ.150 கோடி அதிகமாகும். 

போக்குவரத்து வசதிகள் மீது அதிக கவனம்

மிகக் குறைந்த வருவாய் உள்ள நிலையிலும், போக்குவரத்து வசதிகள் போன்ற புதிய வளர்ச்சித் துறைகளில் ஜி.சி.சி கவனம் செலுத்தியுள்ளது. பேருந்து வழித்தட சாலைகள் துறைக்கு ரூ.725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் பின்வரும் முன்னேற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன:

- மாநகராட்சி நடைபாதைகள்,
- சுமார் ஐந்து பேருந்து நிலையங்கள், 
- செயிண்ட் ஆண்ட்ரூ தேவாலயத்தைச் சுற்றி ஒரு பாரம்பரிய வழித்தடம், 
- மெரினாவில் ஒரு ரோப் கார் திட்டம், 
- பல மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்.

இவை தவிர மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவற்றை பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்:

- நகரில் உள்ள சுமார் 60 பூங்​காக்​களை அறி​வியல் ரீதியாக பொலிவேற்​ற ரூ.60 கோடி​ செலவில் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

- முக்கிய நீர்​நிலைகளை சீரமைக்கும் பணிகள் ரூ.100 கோடி செலவில் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் அம்​பத்​தூர் ஏரி, மஞ்​சம்​பாக்​கம் ஏரி உள்​ளிட்ட சுமார் 30 ஏரிகள் அடங்கும்.

- நகரில் உள்ள நீர்​நிலைகளை கண்​காணிக்க செயற்கை நுண்ணறிவின் (AI) உதவி​யுடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு செயல்​படுத்​தப்​படும். இதற்கு ஆகும் செலவு ரூ.10 கோடி என மதிப்​பிடப்பட்டுள்ளது.

- சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பள்​ளி​களில் படிக்கும் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் யோகா மற்​றும் தற்​காப்​புக்​கலைப் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- பள்ளி மாணவர்கள் தினம் பள்ளிக்கு வந்துபோக உதவும் வகையிலும், கல்விச்சுற்றுலாக்கள் செல்ல ஏதுவாகவும் 11 புதிய பேருந்​துகள் வாங்கப்படும். இதற்கு சுமார் ரூ.4 கோடி​ செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- மெட்​ரோ, எம்​.ஆர்​.டி.எஸ். மற்​றும் பேருந்து நிலை​யங்​களை இணைக்​கும் வகை​யில் 25 கிமீ தூரத்​துக்கான நடை​பாதை மற்​றும் மிதிவண்​டிப் பாதைகள் அமைக்கப்படும். இதற்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

- மின்ட்​ரோட் - வண்​ணாரப்​பேட்டை மெட்ரோ மற்​றும் சேப்​பாக்​கம் - மெரினா இடையே பன்​முக போக்​கு​வரத்து ஒருங்​கிணைப்பு வசதி ரூ.40 கோடி மதிப்​பீட்​டில் அமைக்​கப்​படும்.

- கோடை காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்தை அதிகரிக்க தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு மோர் வழங்​கப்​படும் என அறிவிக்கபட்டுள்ளது.

- பக்​கிங்​ஹாம் கால்​வாய் வழித்​தடத்தை மேம்படுத்தும் வகையில், அங்கு நடை​பாதை, மிதிவண்​டிப் பாதை, நகர்ப்​புற பசுமை​யாக்​கல் திட்​டம் ஆகியவை ரூ.45 கோடி செலவில் மேற்​கொள்​ளப்​படும்.

- சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தியாக, மெரினா கலங்​கரை விளக்​கம் முதல் அண்ணா நினை​விடம் வரை ரோப் கார் வழித்​தடம் அமைக்​கப்​படும் என்ற அரிவிப்பு வந்துள்ளது.

- 50 கிமீ தூரத்​துக்கு பள்​ளி​களுக்கு பாது​காப்​பான வழித் தடங்​கள் சுமார் ரூ.200 கோடி செலவில் அமைக்​கப்​படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இப்படிப்பட்ட சுமார் 90 புதிய அறி​விப்​பு​கள் பட்ஜெட்டில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

மேலும் படிக்க | போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய பரிசு - சிறப்பு நிதி ஒதுக்கீடு

மேலும் படிக்க | முடிஞ்சது சஸ்பென்ஸ்! தட்டி தூக்கிய எ.வ. வேலு.. திமுக கூட்டணியில் தேமுதிக வந்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SSSimply Siva
Feb 18, 2026 10:34:49
Thiruvananthapuram, Kerala:

கேரளா லாட்டரி  செய்திகள்: தனலட்சுமி (Dhanalekshmi) லாட்டரி என்பது கேரள மாநில அரசால் வாரந்தோறும் புதன்கிழமைகளில் (Wednesday Lottery Results) நடத்தப்படும் ஒரு பிரபலமான லாட்டரி திட்டமாகும். இந்த லாட்டரியின் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். இன்று (பிப்ரவரி 8, 2026) பிற்பகல் 3 மணிக்கு தனலெட்சுமி DL-40 லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேரடியாக அறிவிக்கப்படும். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் இந்த குலுக்கல் நடைபெறுகிறது.

தனலட்சுமி (Dhanalekshmi) DL-40 லாட்டரி வெற்றி பெற்ற எண்களின் பட்டியல்:

முதல் பரிசு (₹1 கோடி) பெற்ற அதிர்ஷ்ட எண்

DW 809210

இரண்டாவது பரிசு (₹30 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

DO 503175

மூன்றாவது பரிசு (₹5 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

DX 475553

ஆறுதல் பரிசு (₹5,000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

DN 809210
DO 809210
DP 809210
DR 809210
DS 809210
DT 809210
DU 809210
DV 809210
DX 809210
DY 809210
DZ 809210

நான்காவது பரிசு (₹5,000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0259  0375  0497  0701  2709  3083  
3362  4165  4255  5063  5343  5347  
5690  6421  6767  6815  7800  9133  
9626

ஐந்தாவது பரிசு (₹2,000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

2072  3709  6776  7476  7685  9941

ஆறாவது பரிசு (₹1,000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0273  0798  1084  1133  1629  2962  
3301  3523  3621  3992  4581  4704  
5125  5169  5217  5505  5742  5766  
6316  6332  7023  7707  9141  9219  
9281

ஏழாவது பரிசு (₹500) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0191  0243  0535  0592  0603  0636  
0790  0833  0858  0887  0978  1278  
1439  1552  1598  1671  1722  1786  
1794  1882  1905  1918  2203  2470  
2587  2812  3118  3732  3753  3859  
3887  3934  4011  4068  4107  4181  
4416  4713  4718  4761  4867  5055  
5249  5466  5553  5691  6036  6383  
6388  6408  6633  6787  6827  6980  
7007  7053  7091  7250  7387  7676  
7985  8067  8173  8202  8305  8461  
8504  8559  9062  9107  9185  9339  
9397  9526  9756  9969

எட்டாவது பரிசு (₹200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0157  0752  0776  0826  0836  1025  
1108  1196  1199  1253  1300  1350  
1676  1767  1829  1982  2230  2307  
2341  2375  2486  2519  2527  2775  
2835  2882  3007  3078  3134  3340  
3445  3454  3504  3777  3857  3917  
4060  4064  4387  4483  4558  4716  
4731  4784  5046  5275  5401  5527  
5574  5852  5962  5980  6016  6025  
6115  6313  6338  6360  6558  6605  
6831  6875  6895  7117  7286  7287  
7528  7551  7594  7607  7787  7831  
7962  8023  8066  8090  8120  8135  
8257  8330  8390  8526  8634  8767  
8792  8794  8857  9042  9267  9298  
9345  9400  9404  9702  9713  9821

ஒன்பதாவது பரிசு (₹100) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்
காத்திருக்கவும்

கேரளா லாட்டரி குலுக்கல் நாள் மற்றும் நேரம்

இடம்: கோர்கி பவன், திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகில்
நாள் மற்றும் நேரம்: 18 பிப்ரவரி 2026 பிற்பகல் 3 மணி
வெற்றி எண்கள்: நிகழ்வு தொடங்கிய உடனே வெளியிடப்படும்

Information about Dhanalekshmi Lottery: தனலட்சுமி லாட்டரி பற்றிய தகவல் 

- தனலெட்சுமி லாட்டரி வாராந்திர டிராக்களில் மிகவும் பிரபலமானது.
- முதன்மை பரிசாக ₹1 கோடி உட்பட பல பரிசுகளை வழங்கப்படுகிறது.
- ஆறுதல் பரிசு உட்பட 1 முதல் 9 வரை என மொத்தம் 10 பரிசு பட்டியல் உள்ளது.

Kerala Lottery Key Notes: கேரளா லாட்டரி முக்கிய குறிப்புகள் 

- அதிகாரப்பூர்வ முடிவுகள் கேரளா லாட்டரி இணையதளத்தில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களில் வெளியிடப்படும்.
- பிற்பகல் 3 மணிக்கு பிறகு லாட்டரி முடிவுகளை இணையதளங்கள் மூலம் அறிந்துக்கொள்ளுங்கள்.
- வெற்றி டிக்கெட்டுகள் மற்றும் அடையாள ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல் அவசியம்.
- டிக்கேட்டுகளை 40 நாட்களுக்குள் சமர்ப்பிக்காவிட்டால் பரிசு பெறும் உரிமை இழக்கப்படு

Kerala Lottery Prize Winning Rules: கேரளா லாட்டரி பரிசு பெறும் விதிமுறைகள்

- வெற்றியாளர்கள் கேரள லாட்டரி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்க்க வேண்டும்.
- தனித்துவம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பார்கோடு ஸ்கேனர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
- பரிசு பெறுபவர்கள் டிரா முடிந்த 40 நாட்களுக்குள் அசல் டிக்கெட் சமர்ப்பிக்க வேண்டும்.
- ₹5,000 வரை பரிசுகள் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பெறலாம்.
- ₹5,000க்கு மேல் பரிசுகள் பெற டிக்கெட் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களுடன் மாவட்ட லாட்டரி அலுவலகம் அல்லது மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- அனைத்து வெற்றியாளர்கள் அரசு அதிகாரப்பூர்வ பட்டியலுடன் எண்களை சரிபார்த்து பரிசு பெற வேண்டும்.

Dhanalekshmi Lottery Prize List: தனலட்சுமி லாட்டரி பரிசு பட்டியல்

முதல் பரிசு: ₹1 கோடி
இரண்டாவது பரிசு: ₹40 லட்சம் 
மூன்றாவது பரிசு: ₹5 லட்சம்
ஆறுதல் பரிசு: ₹5,000
நான்காவது பரிசு: ₹5,000
ஐந்தாவது பரிசு: ₹2,000
ஆறாவது பரிசு: ₹1,000
ஏழாவது பரிசு: ₹500
எட்டாவது பரிசு: ₹200
ஒன்பதாவது பரிசு: ₹100

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Feb 18, 2026 10:32:04
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Political News: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கிட்டத்தட்ட சில மாதங்களாக தொடர்ந்து சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் சில புள்ளிகள் பொதுவழியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. இடையில் மட்டும் மதுரையை சார்ந்த ஒரு எம்எல்ஏ அதற்கு ரியாக்ஷன் செய்தார். அதன்பிறகு திமுக தரப்பில் இருந்து எந்தவித கருத்தும் பேசப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் அமைதியாக இருப்பது போலத் தெரிவில்லை. மீண்டும் சர்ச்சை தொடர்ந்து நீடித்து கொண்டே வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் சென்னை வருகை தந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட மாவட்ட தலைவர்களோடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் பிரச்சனை தீர்வை நோக்கி சொல்கிறதா அல்லது முறிவை நோக்கி சொல்கிறதா என்ன நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. 

இந்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தை உணர்த்துகின்றன. திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான இந்த "சலசலப்பு" என்பது வெறும் வார்த்தை போர் மட்டுமல்ல, அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 'பேரம் பேசுதல்' (Bargaining) மற்றும் 'வலிமையைக் காட்டுதல்' (Posturing) ஆகும்.

திமுக - காங்கிரஸ் இடையிலான "நிழல் யுத்தம்"

கே.சி. வேணுகோபால் சந்திப்புக்கு முதல்வர் நேரம் கொடுக்காதது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.சி. வேணுகோபால் வருகை மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதில் உள்ள இழுபறி, காங்கிரஸ் மீதான திமுகவின் அதிருப்தியை காட்டுகிறது.

"ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையை திமுக ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டது. 1952 ராஜாஜி காலம் முதல் 2006 கலைஞர் காலம் வரை, தமிழகத்தில் 'கூட்டணி ஆட்சி' என்ற கலாச்சாரம் கிடையாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது.  மேலும் தமிழகத்தில் 1952 முதல் கூட்டணி ஆட்சி முறை இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியிருப்பது, காங்கிரஸை ஒரு 'ஜூனியர் பார்ட்னர்' ஆகவே வைத்திருக்க விரும்புவதைக் காட்டுகிறது.

மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் டிவிகே (விஜய்) உடன் கூட்டணி பற்றிப் பேசுவது திமுகவை மிரட்டுவதற்கான ஒரு தந்திரமாகவே தெரிகிறது. ஆனால், திமுக தலைமை இதற்கு அலட்டிக்கொள்ளாமல், சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைப் பாராட்டிப் பேச வைப்பதன் மூலம் அக்கட்சிக்குள்ளேயே ஒரு பிளவை அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது.

திமுக நிலைப்பாடு

- தற்போதைக்கு தொடர விருப்பம். ஆனால் காங்கிரசின் நிபந்தனைகளுக்கு உட்படாது.

- காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) அரவணைப்பதன் மூலம் கட்சித் தலைமைக்கு அழுத்தம் தருதல்.

- காங்கிரஸ் வெளியே சென்றால் மாற்று கட்சிகளை (சிறு கட்சிகள்) இணைத்து ஓட்டு வங்கியை உறுதி செய்தல்.

காங்கிரஸ் நிலைப்பாடு

- அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும்.

- டெல்லி தலைமையைப் பயன்படுத்தி பேரம் பேசுதல்.

- தவெக போன்ற புதிய சக்திகளுடன் பேசும் வாய்ப்பை திறந்தே வைத்தல்.

தமிழக அரசியலில் "டெல்லி மைண்ட்செட்" எப்போதுமே வெற்றி பெற்றதில்லை

திமுக - காங்கிரஸ் குழப்பம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் முனைவர் தராசு ஷயாம் அவர்கள், யூடுப் சேனலில் பேசும் போது,  "திரைத்துறையில் இருந்து வருபவர்கள் கள யதார்த்தத்தை (Field Experience) எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. காங்கிரஸ் விஜயுடன் கைகோர்த்தால், அது விஜய்க்கு அட்வான்டேஜா அல்லது காங்கிரஸின் "சிலுவைகளை" விஜய் சுமக்க வேண்டுமா என்ற உங்கள் கேள்வி மிகச் சரியானது. காங்கிரஸ் போன்ற ஒரு பழைய பாரம்பரியமிக்க கட்சி, இன்னும் வேரூன்றாத ஒரு கட்சியுடன் சேர்வது அவர்களின் பலவீனத்தையே காட்டும். காங்கிரஸ் தனித்து நின்றால் அது திமுகவிற்கு 3-4% ஓட்டு இழப்பை ஏற்படுத்தலாம். ஆனால் காங்கிரஸிற்கு அது தமிழகத்தில் தன் அடையாளத்தையே இழக்கும் ஆபத்தாக முடியும். தமிழக அரசியலில் "டெல்லி மைண்ட்செட்" எப்போதுமே வெற்றி பெற்றதில்லை. மாநில சுயாட்சியும், திராவிட அரசியலும் மேலோங்கி இருக்கும் சூழலில், தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தயவின்றி இயங்குவது கடினம். எனவே இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு திமுக தனது அடுத்த அதிரடி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - “அதிமுகவிற்கு 3வது இடம்தான்”..அடித்து சொல்லும் மாணிக்கம் தாகூர்!

மேலும் படிக்க - 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் 2026: தேர்தல் தேதி அறிவிப்பில் மாற்றம் ஏன்? முழு விவரம்

மேலும் படிக்க - பிப்ரவரி 22-ல் க்ளைமாக்ஸ்: 20 வருட திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? 2026-ல் நடக்கப்போவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Feb 17, 2026 13:36:52
Tamil Nadu:

DMK-Congress Seat-Sharing Talks: தமிழக அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஏற்பட்டுள்ள சலசலப்புகள் என்பது வெறும் அரசியல் விவாதமாக மட்டும் பார்க்கப்படாமல், தமிழகத்தின் எதிர்கால அதிகார மையத்தையே தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. 2004-ம் ஆண்டு உருவான இந்த பந்தம், இடையில் சில கசப்பான சம்பவங்களைச் சந்தித்தாலும் தேர்தல் களத்தில் ஒரு வெற்றிகரமான ஃபார்முலாவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இப்போது காங்கிரஸ் முன்வைக்கும் 'அதிகாரப் பகிர்வு' என்ற ஒற்றை வார்த்தை, திமுகவின் 'தனிப் பெரும்பான்மை' என்கிற பலமான அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி என்பது டெல்லி தலைமையின் ஆசிர்வாதத்தோடு நடக்கிறதா அல்லது உள்ளூர் தலைவர்களின் தனிப்பட்ட அதிருப்தியா என்ற கேள்வி எழுந்தாலும், ஆட்சிப் பகிர்வு என்ற கோரிக்கையை திமுக தலைமை ஒருபோதும் ஏற்கத் தயாராக இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் "திராவிட மாடல்" குறித்த தெளிவான பதில்கள் உணர்த்துகின்றன.

கடந்த 20 வருடங்களாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்து வரும் நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் சிக்கல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2004 முதல் இன்று வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனால் தற்போது நடக்கும் சம்பங்களை வைத்து பார்த்தால், விரைவில் கூட்டணி உடையும் எனத்தெரிகிறது.

தவெக காரணி (The Vijay Factor)

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு, தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்கியுள்ளது; குறிப்பாக ராகுல் காந்தி அவர்கள் விஜய்யிடம் காட்டும் மென்மையான அணுகுமுறை, திமுக மேலிடத்திற்கு ஒருவித நெருக்கடியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

காங்கிரஸின் எதிர்பார்ப்பு மற்றும் சிக்கல் 

ஆட்சிப் பகிர்வு (Power Sharing): தமிழக காங்கிரஸ் தரப்பில் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை, இது திராவிட மாடல் ஆட்சி" என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தொகுதிகளின் எண்ணிக்கை: 2021 தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை (சுமார் 40 தொகுதிகள் வரை) காங்கிரஸ் கோருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த முறை திமுக தோல்வியடைந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் போன்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீண் சக்கரவர்த்தியின் ட்வீட்களை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் குருமூர்த்தி ரீட்வீட் செய்வதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸுக்குள் இருக்கும் ஒரு தரப்பினர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் அஜெண்டாவிற்கு ஏற்பச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது 

டெல்லி கூட்டம்: கடந்த ஜனவரி 18 அன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில், திமுக கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்து நின்றால் பாதிப்பு ஏற்படும் என்று ஆலோசிக்கப்பட்டது. பொதுவெளியில் கூட்டணி குறித்துத் தவறாகப் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி மற்றும் கார்கே அறிவுறுத்தியும், மாணிக் தாகூர் போன்றவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது 

தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைத்தால் தென்னிந்தியாவில் பலம் கிடைக்கும் என்று ராகுல் காந்திக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாகவே விஜய் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு ராகுல் காந்தி போன் செய்து ஆறுதல் கூறியதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

திமுக-வின் நிலைப்பாடு என்ன?

தொகுதி பங்கீடு: திமுக தனது செல்வாக்கை நிரூபிக்க அதிக இடங்களில் (சுமார் 170+) தனித்து நிற்க விரும்புவதால், காங்கிரஸுக்குப் பெரிய அளவில் தொகுதிகளை உயர்த்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

உள்கட்சி அதிருப்தி: காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் பகிரங்கமான விமர்சனங்களால் அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மற்றும் சனாதனம்: இந்தியா கூட்டணியை உருவாக்கியதே திமுகதான் என்றும், பாஜக மற்றும் சனாதனத்தை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் போன்ற கட்சிகளை திமுக அரவணைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

திமுக தொண்டர்கள் கடும் கோபம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமாக ஓட்டு வங்கி இல்லை என்றும், திமுகவின் உழைப்பால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றும், இவ்வளவு விமர்சனங்களுக்குப் பிறகு திமுக தொண்டர்கள் காங்கிரஸுக்காக வேலை செய்யத் தயங்குவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்பொழுது? 

திமுக குழு: திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், வரும் பிப்ரவரி 22, 2026 அன்று தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் ஒரு குழுவை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் குழு: காங்கிரஸ் கட்சி தனது பேச்சுவார்த்தைக் குழுவில் மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக கிரிஷ் சோடங்கர் தலைமையில் இருந்த குழுவுக்குப் பதிலாக, தற்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. சுமுகமான தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய ராகுல் காந்தி நேரடியாக இதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் படிக்க - ஆட்சியில் பங்கு கோரிக்கை ராகுலுக்கு தெரியுமா...? - மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த மேட்டர்

மேலும் படிக்க - Check வைக்கும் காங்கிரஸ்... படையோடு காத்திருக்கும் விஜய் - ஆட்டத்தை முடிப்பாரா ஸ்டாலின்?

மேலும் படிக்க - "வாய் தவறி பேசிட்டேன்".. திரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Feb 17, 2026 10:24:07
Chennai, Tamil Nadu:

TN Assembly Session Date: தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் வரவு செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்றும், எதிர்க்கட்சித் தலைவரின் நேரலை துண்டிக்கப்படுவதாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டியின் முக்கிய அம்சம்

இடைக்கால நிதிநிலை அறிக்கை: 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை: அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் வேளாண் வரவு செலவு திட்டத்திற்கான இடைக்கால அறிக்கையை வாசித்தார்.

ஆய்வுக்குழு கூட்டம்: சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கான (நாளை மற்றும் நாளை மறுநாள்) விவாதங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

விவாதங்கள்: தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வேளாண் திட்டங்கள் மீதான விவாதங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.

விவாதம்: நாளை மறுநாள் நிதி அமைச்சரும், வேளாண் அமைச்சரும் விவாதங்களுக்கு பதிலளிப்பார்கள். மேலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான முன்பண கோரிக்கைகளும், 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளும் அன்றே நிறைவேற்றப்படும்.

நேரலை குறித்த விளக்கம்: எதிர்க்கட்சித் தலைவரின் உரைகள் நேரலையில் துண்டிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட புகாரை சபாநாயகர் மறுத்தார். கேள்வி-பதில் நேரம், அமைச்சர்களின் பதில்கள் மற்றும் முதலமைச்சரின் தனி தீர்மானங்கள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

சட்டமன்ற மரபு: ஆளுநர் உரை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான நடைமுறைகள் வழக்கம் போல மரபுப்படியே பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TN Budget: இடைக்கால வரவு செலவு திட்டம்

முன்னதாக பிப்ரவரி 17, 2026 காலை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டதை (Interim Budget) சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் விவரம்.

கல்வித் துறை: பள்ளி கல்வித்துறைக்கு ₹48,534 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ₹8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் நலன்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக சுமார் 1.3 கோடி பெண்கள் பயனடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக ₹4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு: பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ₹5,463 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) செயல்படுத்த ₹11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை: மருத்துவத் துறைக்காக ₹22,090 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை: மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ₹21,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி: மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எரிசக்தித் துறைக்கு ₹18,091 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ₹28,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி: 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்: இத்திட்டத்தின் மூலம் இதுவரை 48 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு லேப்டாப்: 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகங்கள்: கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிரம்மாண்ட நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தக் கடன்: 2026-27 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ₹10.62 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி வருவாய்: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ₹2,29,579 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - தமிழக அரசின் கடன் அதிகரிப்பு... வரி வருவாய் குறைவு - தங்கம் தென்னரசு சொன்ன அந்த 7 பாயிண்ட்

மேலும் படிக்க - வேளாண் பட்ஜெட் 2026: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு விவரம்

மேலும் படிக்க - Tamil Nadu Budget 2026 LIVE : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முதல் முதியோர் ஓய்வூதியம் வரை - தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் புதிய அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
UKUmabarkavi K
Feb 16, 2026 04:36:14
Chennai, Tamil Nadu:

Chennai Bus Ticket Machine Technical Glitch: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது பேருந்து சேவை. பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மாநகர போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. குறிப்பாக, பயணிகள் ஈஸியாக டிக்கெட் எடுப்பதற்கு அண்மையில் சென்னை ஓன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ஈஸியாக பேருந்து, மெட்ரோ டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட் போன்றவற்றை எடுத்துக் கொளள்லாம். பேருந்துகளில் பணம் கொடுத்தோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வாங்குவோருக்கு நடத்துனர்கள் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் முலம் டிக்கெட் வழங்கி வருகின்றனர்.  இந்த நிலையில் தான், இன்று (பிப்ரவரி 16) காலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்னை பேருந்துகளில் டிக்கெட் மெஷின் கோளாறு

அதாவது, சென்னை மாநகர பேருந்துகளில் மின்னனு பயணச்சீட்டு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு பயணிச்சீட்டு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு  பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   அதே நேரத்தில், சென்னை ஓன் செயலி மூலம் ரூ.1,000, ரூ.2,000க்கு பஸ் பாஸ் எடுத்தவர்கள் ஒடிபி பயன்படுத்தி பயணம் செய்யலாம் எனவும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் வரையில், பயணிகள் கையில் பணம் எடுத்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், தற்போது மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது,  சென்னை ஒன் செயலியில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது என்றும் செயலி மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனால்,  பயணிகள் பெருமூச்சி விட்டனர். இருப்பினும்,  பயணச்சீட்டு இயந்திரம்  சரி செய்யப்படும் வரை, கையில் பணம் எடுத்துக் கொண்டோ அல்லது சென்னை ஒன் செயலி வாயிலாகவோ டிக்கெட்டுகளை புக் செய்யுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மத்திய கைலாஷில் ’L' வடிவ மேம்பாலம் திறப்பு! இனி கிண்டி, கோயம்பேடு, ஓஎம்ஆரில் No Traffic.. சல்லுன்னு போகலாம்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரூ.5000 வரவில்லையா? பெண்கள் 3 விஷயங்களை சரிபார்க்கவும்

மேலும்  படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
SGSudharsan G
Feb 15, 2026 17:42:31
Colombo, Western Province:

ICC T20 World Cup 2026 Highlights, India vs Pakistan Result: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஏ பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. 

176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி பவர்பிளேவிலேயே 38 ரன்களை மட்டும் எடுத்து 4 விக்கெட்டை இழந்தது. உஸ்மான் கான் மட்டுமே ஒரு முனையில் ஆறுதல் அளித்து வந்தார். அவர் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உடன் 44 ரன்களை எடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷதாப் 14, நவாஸ் 4, பஹீம் அஷ்ரப் 4, அப்ரார் அகமது 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

முன்னதாக, இந்திய அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டை இழந்து 175 ரன்களையே எடுத்திருந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 77(40) ரன்களை அடித்தார். சயீம் அயூப் 3 விக்கெட்டை எடுத்திருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Feb 15, 2026 13:40:38
Colombo, Western Province:

India vs Pakistan Toss Update: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Feb 15, 2026 13:28:21
Chennai, Tamil Nadu:

India vs Pakistan, Live Scorecard With Tamil Commentary: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. அரசியல் பதற்றம் முதல் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே இப்போட்டி நடைபெற உள்ளது.

சம பலத்துடன் மோதும் இந்தியா - பாகிஸ்தான் 

இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன, தலா 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ன. நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி தோற்றாலும் சூப்பர் 8 செல்வதற்கு பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும், இரு அணிகளும் சம பலம் கொண்டு மோதுவதால் எதிர்பார்ப்புகள் வலுவடைந்துள்ளன.

இரு அணிகளின் முக்கிய வீரர்கள்

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் வெற்றியை தீர்மானிக்கும் வீரர்களாக இருப்பார்கள். இலங்கை பிரேமதாசா மைதானம் சற்று பெரியது என்பதால் சிக்ஸர்கள் பறக்கவிடுவது சிரமம் ஆகலாம், எனவே பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் அதிரடி முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல், வருண் மற்றும் குல்தீப் பந்துவீச்சுக்கு எதிராக பெரிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு பேட்டிங் செய்யவும் சிரமமாக இருக்கும். அதேபோல் பாகிஸ்தான் அணியை பொருத்தவரை சைம் அயூப், அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் ஆகியோரும் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள்.

குஷியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 

அதேநேரத்தில், நேற்றில் இருந்து மழையின் காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளம் அதிகளவில் வெயில்படாமல் இருந்தால் நிச்சயம் ஈரத்தன்மையுடன் இருக்கும். ஈரத்தன்மையுடன் ஆடுகளம் இருந்தால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பவர்பிளேவிலேயே தாக்குதல் தொடுப்பார்கள். இன்று அர்ஷ்தீப் விளையாடுவது சந்தேகம் எனலாம். சிவம் தூபே மிடில் ஓவர்களில் கைக்கொடுப்பார். பாகிஸ்தான் அணியை பொருத்தவரை கடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளராக ஷாகின் ஷா அப்ரிடி மட்டுமே பந்துவீசினார். சல்மான் மிர்சா இந்த போட்டியில் விளையாடுவதற்கும் வாய்ப்பு குறைவு. பஹீம் அஷ்ரப் வேகப்பந்துவீச்சு ஆப்ஷனாக அணியில் இருக்கிறார்.

பிளேயிங் லெவன் கணிப்பு

இந்திய அணி: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணி: சைம் அயூப், சஹிப்சாதா பர்ஹான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), பாபர் அசாம், முகமது நவாஸ், ஷதாப் கான், பஹீம் அஷ்ரப், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷகீன் அப்ரிடி, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.

போட்டி எப்போது தொடங்கும்?

குரூப் ஏ-வில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6.30 மணிக்கு வீசப்படும். டாஸின் போது கேப்டன்களும், போட்டி நிறைவடைந்த பின்னர் வீரர்களும் பரஸ்பரம் கைக்குலுக்குவார்களா என்ற கேள்வியும் தற்போது நிலவுகிறது. 

ஆட்டம் தாமதமாக வாய்ப்பு

மழையின் தாக்கம் இரவு 7 மணிவரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் தாமதமாகலாம். பிரேமதாசா மைதானத்தில் வடிகால் உலகத்தரத்தில் இருப்பதால், குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரலையில் காணலாம்.

தமிழ் கமெண்டரி + லைவ் ஸ்கோர்கார்ட்

சந்தா செலுத்தினால் மட்டுமே இவற்றை நேரலையில் நீங்கள் கண்டுகளிக்க முடியும். ஒருவேளை சந்தா செலுத்த வாய்ப்பில்லாதவர்கள், போட்டியை நேரலையில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் ஆகியோருக்கு வசதியாக தமிழ் கமெண்டரியுடன் கூடிய லைவ் ஸ்கோர்கார்டை நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் இன்று ஒளிபரப்ப இருக்கிறது. இதனால், ஒவ்வொரு பந்தையும் நமது கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள் தமிழில் எளிமையாக விளக்குவார்கள், அதேநேரத்தில் திரையிலும் போட்டியின் அனைத்து விவரங்களும் ஸ்கோர்கார்ட் முறையில் ஒளிபரப்பாகும்.

ஸ்கோர்கார்ட் நேரலையை பார்ப்பது எப்படி?

இதனால், போட்டியை காண வாய்ப்பில்லாதவர்கள் எங்களின் தமிழ் கமெண்டரியுடன் கூடிய ஸ்கோர்கார்டை பார்த்தாலே போட்டியை காண்பது போன்ற அனுபவத்தை பெறலாம். தமிழ் கமெண்டரியுடன் கூடிய லைவ் ஸ்கோர்கார்டை நமது ஜீ தமிழ் நியூஸின் யூ-ட்யூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பார்க்கலாம். இதன் நேரலை மாலை 6.30 மணியளவில் தொடங்கும். யூ-ட்யூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேரலை லிங்க் இங்கு நேரலை தொடங்கியதும் இணைக்கப்படும்.

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

மேலும் படிக்க | இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யலாம்...? பாகிஸ்தானை வீழ்த்த பெஸ்ட் வியூகம்!

மேலும் படிக்க | பாகிஸ்தான் போட்டியில் தோற்றால் சூப்பர் 8க்கு இந்தியா தகுதி பெறாதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
UKUmabarkavi K
Feb 15, 2026 04:59:12
Chennai, Tamil Nadu:

Chennai Madhya Kailash L Shape FlyOver: சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது.  தற்போது பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகர  போக்குவரத்து கழகமும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக மெட்ரோ பணிகள், மேம்பாலம் பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. 

L Shape FlyOver: ’எல்' வடிவ மேம்பாலம்

அந்த வகையில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்  வகையில், மத்திய கைலாஷ் பகுதிகளில் எல் வடிவ மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  சென்னை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மத்திய கைலாஷ் பகுதியும் ஒன்று. மத்திய கைலாஷ் சந்திப்பு தொடங்கி,  நாவலூர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த வழித்தடத்தில் ஏராளமான வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள உள்ளன. இதனால் நெரிசல் மிகுந்த பகுதியாக மத்திய கைலாஷ் இருக்கும். வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னல்களை நின்று ஊர்ந்து செல்லும்.  

அந்த அளவுக்கு  கடுமையாக போக்குவரத்து நெரிசல் இருக்கும்.  இதற்கிடையில், மத்திய கைலாஷில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில்,  மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.    ரூ.61 கோடி மதிப்பில் இந்த எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டது.  சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.  650 முதல் 652 கி.மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.  

L Shape FlyOver: OMR-க்கு ஈஸியா போகலாம்

மூன்று பாதைகளுடன் எல் வடிவத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.  இந்த பாலத்தில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் தான் செல்ல முடியும். சர்ந்தார் படேல் சாலையில் இருந்து ஓஎம்ஆர்  நோக்கி திரும்பும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல முடியும்.   இந்த பாலம் ஐஐடி மெட்ராஸ்  சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து 350 கி.மீ தொலைவில் தொடங்கி கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் இந்த பாலம் முடிகிறது. 

இதன் மூலம் கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட  இடங்களில் இருந்து ஓஎம்ஆர் செல்லும் சாலைகளின் நெரிசலை குறைக்கும்.  அதாவது, மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், ஆளுநர் மாளிகை, கிண்டி, கோயம்பேடு 100 அடி சாலை எதிரொலிக்கும். இதனால், முக்கிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் முடங்கும். 

இந்த புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால், அடையாறில் இருந்து கிண்டி செல்வது நெரிசலின்றி செல்வது எளிதாக்கப்பட்டுள்ளது. அதே போல, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, நந்தனம் செல்லும்  பாதைகளிலும் நெரிசல் குறையக் கூடும். அதே நேரத்தில், ஒஎம்ஆர் சாலையில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு திருவான்மியூர்  சென்றால், மேம்பாலத்திற்கு கீழ்வாக்கில் யூடர்ன் உள்ளது. அந்த வழியாக அடையாறு, திருவான்மியூர் பகுதிக்கு செல்ல முடியும்.  

0
comment0
Report
SGSudharsan G
Feb 12, 2026 18:30:01
Delhi, Delhi:

India vs Namibia 2026 Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் நமீபியா அணி 116 ரன்களில் ஆல்-அவுட்டானது. 

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - நமீபியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபிஷேக் சர்மா, சிராஜ் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சன் மற்றும் பும்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். 

பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்களை குவித்தார். அதில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடக்கம். தொடர்ந்து இஷான் கிஷனும் பவர்பிளேவில் அதிரடி காட்டினார். 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 86 ரன்களை இந்திய அணி குவித்தது. இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
Advertisement
Back to top