India vs Namibia 2026 Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் நமீபியா அணி 116 ரன்களில் ஆல்-அவுட்டானது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - நமீபியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபிஷேக் சர்மா, சிராஜ் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சன் மற்றும் பும்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்களை குவித்தார். அதில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடக்கம். தொடர்ந்து இஷான் கிஷனும் பவர்பிளேவில் அதிரடி காட்டினார். 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 86 ரன்களை இந்திய அணி குவித்தது. இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
Biggest win margin for #TeamIndia by runs in ICC Men's #T20WorldC
— BCCI (@BCCI) February 12, 2026
The #MenInBlue beat Namibia by victories in a row!
https://t.co/SQLoaZjq98#INDvNAM pic.twitter.com/b0PL2LLSbI
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Italy vs Nepal Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தாலி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நடைபெற்று வருகிறது. பிப். 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் மார்ச் 8ஆம் தேதி இத்தொடர் நடைபெறும்.
இந்திய அணி இம்முறை ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கெனவே அமெரிக்க அணியுடன் மோதி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்து நாளை (பிப். 12) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் 11 மாற்றம்
கடந்த போட்டியில் பும்ரா வைரல் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. இதனால், அவருக்கு பதில் சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெற்று, 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் தற்போது ஸ்குவாடுடன் இணைந்துள்ளார். நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா களமிறக்கப்படலாம். அடுத்து வரும் பிப். 15ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாடுவார் என்பதால் அதற்கு முன் ஒரு போட்டியில் அவரை விளையாட வைக்க இந்தியா திட்டமிடும்.
மேலும், கடந்த போட்டியில் கோல்டன் டக்அவுட்டான அபிஷேக் சர்மாவுக்கும் வயிறு வலி இருப்பதால் அவருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நமீபியா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா, சிராஜ் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சன், பும்ரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம்.
பெரிய பிரேமதாசா மைதானம்
இது ஒருபுறம் இருக்க, பிப். 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது இந்திய ரசிகர்களிடம் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இப்போட்டி இரவில் நடைபெற இருக்கிறது. பிரேமதாசா மைதானத்தில் பவுண்டரிகள், இந்திய மைதானங்களை ஒப்பிடும்போது சற்று பெரியதாகும். Deep Cover, Deep Mid-Wicket ஏறத்தாழ 78 மீட்டர் தூரம் இருக்கின்றன.
மெதுவான ஆடுகளம்
இந்திய பேட்டர்களுக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏதும் இது தடையில்லை என பொதுவாக கூறினாலும், ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும். பிப். 8ஆம் தேதி இங்கு நடந்த இலங்கை - அயர்லாந்து போட்டியிலும் அதை பார்க்க முடிந்தது. இலங்கை - அயர்லாந்து போட்டியில் இலங்கை ஸ்பின்னர்கள் தீக்ஷனா மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட்டையும், வெல்லாலகே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 143 ஆகவும், சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 128 ஆகவும் உள்ளது. பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன என்றாலும் இங்கு ஸ்பின்னர்கள் அதிமுக்கியமானவர்கள்.
பாகிஸ்தானில் 5 பௌலர்கள்
இலங்கை மண்ணில் எப்போதுமே சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். நேற்று கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அப்ரார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மான் தாரிக், சயும் அயூப் என 5 ஸ்பின்னர்களை பயன்படுத்தியது. ஷாகின் அப்ரிடி மட்டுமே வேகப்பந்துவீச்சாளர் ஆவார், அவரும் 4 ஓவர்களில் 42 ரன்களை கொடுத்து கடைசி ஓவரில்தான் 1 விக்கெட்டை எடுத்தார். இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் இதே காம்பினேஷனை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு
அந்த வகையில், தற்போது இந்திய அணியில் சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும்; அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே உள்ளனர். ஒரு சில பார்ட் டைம் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள் என்றாலும் விக்கெட் எடுக்கும் அளவிற்கு அச்சுறுத்த கூடிய ஸ்பின்னர் பிளேயிங் லெவனில் தேவை.
ஐசிசி தரவுகளின்படி, இங்கு நடந்த 5 டி20 போட்டிகளில் ஸ்பின்னர்களின் எகானமி 6.5-க்கு கீழ் இருந்துள்ளது. மேலும், பிளேயிங் லெவனில் X Factor வீரர் தேவை. வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருமுனைகளில் இருந்து X Factor திறன் கொண்டு தாக்குதல் தொடுக்க வல்லவர்கள். இதனால், கொழும்புவில் குல்தீப் யாதவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஏன் குல்தீப் யாதவ்?
சமீபத்திய போட்டியில் குல்தீப் யாதவ் பெரியளவில் ரிதமில் இல்லை, அதிக ரன்களை கொடுக்கிறார் என்றாலும் அவர் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். மேலும் பிரேமதாசா போன்ற பெரிய மைதானங்கள் பெரியளவில் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு பலம் அளிக்கும். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20ஐ இன்னிங்ஸில் 8 விக்கெட்டையும், 6 ஓடிஐ இன்னிங்ஸில் 15 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார், குல்தீப் யாதவ்.
காம்பினேஷனை மாற்ற வேண்டாம்
ஆசிய கோப்பை (டி20ஐ) இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. இதனால், சிராஜிற்கு பதில் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம். மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்கள், நம்பர் 8 வரை பேட்டர்கள் என காம்பினேஷனும் சரியாக இருக்கும்.
மேலும் படிக்க | பல்டி அடித்த பாகிஸ்தான்! இந்தியாவுடன் டி20 உலக கோப்பை போட்டி! ஐசிசி உத்தரவு!
மேலும் படிக்க | IND vs PAK: இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் வீரர்.. முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
South Africa vs Afghanistan, ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த பிப். 7ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கையில் நடைபெறும் இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
அந்த வகையில், தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டை இழந்து 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 61, குவின்டன் டி காக் 59 ரன்களை அடித்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 3 விக்கெட்டையும், ரஷீத் கான் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, முதல் 4 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது. குர்பாஸ் அகமது அதில் பெரும்பான்மையான ரன்களை குவித்தார். ஆனால் அடுத்த 2 ஓவர்களில் ஆப்கான் அணி சறுக்கலை சந்தித்தது. அடுத்த 2 ஓவர்களை முறையே இங்கிடி, ரபாடா ஆகியோர் வீசினர். இங்கிடி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுக்க, ரபாடா ஓவரிலும் ஒரு விக்கெட் சரிந்தது. இதனால் 6 ஓவர்களில் 56 ரன்களை எடுத்த ஆப்கான் அணி 3 விக்கெட்டை இழந்தது.
அடுத்து அதிரடியாக ரன்கள் வந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டையும் இழந்து வந்தது. குர்பாஸ் 42 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி என 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஓமர்ஸாய் 22, ரஷீத் கான் 20 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். 10வது வீரராக களமிறங்கிய நூர் அகமதும் சிக்ஸரை அடித்து பரபரப்பை கிளப்பினார்.
கடைசி ஓவரில் ஆப்கான் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது, 1 விக்கெட் மட்டுமே கையில் இருந்தது. ரபாடா வீசிய கடைசி ஓவரில் நூர் அகமது கேட்ச் கொடுத்தார், ஆனால் அந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. நூர் அகமது மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்றார். Free Hit பந்து வைடாக வீசப்பட்டது. மீண்டும் முதல் பந்து வீசப்பட்டு பந்து டாட் ஆக முடிந்தது. அதேநேரத்தில் 2வது பந்தில் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து 3வது பந்தில் 2 ரன்கள் அடிக்க, அந்த பந்தும் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆப்கான் அணி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு நூர் - பசல்ஹக் பரூக்கி ஜோடி ஓடியது. ஆனால், இரண்டாவது ரன் ஓடும்போது பரூக்கி ஆட்டமிழந்தார்.
இதனால், போட்டி டை ஆனது. சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவுக்கு 18 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, தென்னாப்பிரிக்க 17 ரன்களை அடித்து சூப்பர் ஓவரும் டை ஆனது. முதல் பந்தில் மில்லர் 1 ரன் அடிக்க, 2வது பந்தில் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து மிரட்டினார். 3வது பந்தில் பிரெவிஸ் ஆட்டமிழக்க, 4வது பந்தில் ஸ்டப்ஸ் பவுண்டரி அடித்தார். 5வது பந்து டாட் ஆனது. இதனால் கடைசி பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட, ஸ்டப்ஸ் சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
இரண்டாவது சூப்பர் ஓவர் அடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஸ்டப்ஸ் - மில்லர் ஜோடி களமிறங்கியது. இந்த ஓவரை அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் வீசினார். முதல் பந்தில் ஸ்டப்ஸ் சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் அடிக்க, மில்லர் அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்களை மில்லர் அடித்தார். ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நபி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் களமிறங்கினார், கேசவ் மகாராஜ் பந்துவீசினார். முதல் பந்து டாட் ஆக, 2வது பந்தில் நபி ஆட்டமிழந்தார். குர்பாஸ் களமிறங்க தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அடுத்து வைட் பந்தை கேசவ் மகாராஜ் வீசியதால், கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் குர்பாஸ் அகமது கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 2வது சூப்பர் ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியின் அருகே வரை வந்த ஆப்கானிஸ்தான் அணி, 2வது சூப்பர் ஓவரில் முகமது நபியை முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கி பெரிய தவறை செய்துவிட்டது. முதல் இரண்டு பந்துகளில் ரன்னும் வரவில்லை, விக்கெட்டும் விழுந்தது ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இங்கிடி 3 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில இன்றைய ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டி நிச்சயம் மறக்கமுடியாத மற்றும் தலைசிறந்த போட்டியாக பார்க்கப்படும். அழுத்தம் நிறைந்த போட்டியில் கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணி போராடியது, அதிலும் குர்பாஸ் அகமது தனது உயிரைக் கொடுத்து விளையாடியும் அந்த அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்று தென்னாப்பிரிக்கா உடனும் தோல்வியடைந்ததால் குரூப் சுற்றுடன் ஆப்கானிஸ்தான் வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு வரும் வாய்ப்பு 1% தான் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தென்னாப்பிரிக்காவையோ, கனடா அணி நியூசிலாந்தையோ வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்புண்டு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Wanindu Hasaranga Ruled Out World Cup: இந்தியாவுடன் சேர்ந்து டி20 உலகக் கோப்பை 2026 தொடரை நடந்தும் இலங்கை அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இல் வெற்றியுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. இலங்கை அணி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஓமனுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இலங்கை அணிக்கு மிகவும் மோசமான பின்னடைவாக பார்க்கப்படும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அணியின் மூத்த ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) காயம் காரணமாக முழு தொடரிலிருந்தும் விலக உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர்: வெளியேறிய இலங்கை வீரர்
28 வயதான வனிந்து ஹசரங்கா, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) அன்று கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியில், அயர்லாந்துக்கு எதிரான 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரம் அந்த போட்டியில் விலையாடும் போது அவருக்கு வலி இருப்பது நன்றாகவே தெரிந்தது. மேலும் தொடை எலும்புப் பிரச்சினையால் அவர் அவதிப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்தக் காயம் தற்பொது அவரை டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியுள்ளது.
வனிந்து ஹசரங்காவுக்கு என்ன ஆச்சு?
இன்று (செவ்வாய்க்கிழமை) எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் ஹசரங்காவின் இடது தொடை தசைநார் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார். உலகக் கோப்பையில் இருந்து ஹசரங்கா நீக்கப்பட்டது இலங்கைக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது. டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கையின் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரராக அவர் உள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வனிந்து ஹசரங்காவுக்கு பதில் யார்?
கிரிசின்ஃபோவின் கூற்றுப்படி, லெக்-ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா ஹசரங்காவுக்கு பதிலாக இலங்கை அணியில் சேர்க்கப்படலாம். ஹேமந்தா இதுவரை இலங்கைக்காக மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 வயதான அவர் தனது கடைசி டி20 சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக செப்டம்பர் 2025 இல் விளையாடினார்.
JUST IN: Wanindu Hasaranga has been ruled out of the #T20WorldCup after an MRI scan on Tuesday revealed a serious tear in his left hamstring
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 10, 2026
He will likely be replaced in Sri Lanka's squad by fellow legspin-bowling allrounder Dushan Hemantha pic.twitter.com/u9lELt336R
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: இலங்கை அணி விவரம்
தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜெனித் பெரேரா, சரித் அசலங்க, ஜெனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லகே, துஷான் ஹேமந்த, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதிஷா பத்திரன, மதிஷா பத்திரன.
மேலும் படிக்க - பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 5 வீரர்கள்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Kanchipuram District News: காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. இன்று வெயிலும், மேகமூட்டமும் கலந்த வானிலை நிலவும் நிலையில், நாளை வானிலை எப்படி இருக்கும்? எந்தெந்த பகுதிகளில் பவர் கட் இருக்கும்? இளைஞர்களுக்கு முக்கிய செய்திகள் உள்ளதா? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
காஞ்சிபுரம் நாளைய வானிலை நிலவரம் (11-02-26)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதிகாலை வேளையில் மூடுபனியும் பரவலாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு பனிமூட்டம் தொடர்ந்து காணப்படும் என்றும் 13ஆம் தேதி தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தை பொறுத்தவரை, நாளை, அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸ் வரம்பிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸ் வரம்பிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் (11-02-26)
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு 230 கிலோவாட் ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில், நாளை, அதாவது 11.02.26 புதன்கிழமையன்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. பராமரிப்பு பணி நடக்கும் நேரத்தில் பின்வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- கீழம்பி,
- பள்ளம்பி,
- ஆட்டோநகர்,
- ஆரியபெரும்பாக்கம்,
- கூரம்,
- செம்பரம்பாக்கம்,
- புதுப்பாக்கம்,
- பெரியகரும்பூர்,
- சித்தேரிமேடு,
- துலக்கம்,
- தண்டலம்
காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து இந்த வார இறுதியில், பிப்ரவரி 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடந்தவுள்ளன. இந்த முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொள்ளும் என்றும் இதில் 1,000 -க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ முடித்த மாணவர்கள், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவா்கள் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களும் இதில் கலந்துகொள்ளலாம். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், சமீபத்திய பயோ-டேட்டா , கல்விச் சான்றிதழ்கள், தகுதிச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த முகாமிற்கு வந்து நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் நேரம்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 13 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று இதில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
முன்னதாக, திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில், மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துரை சார்ந்த அதிகாரிகளிடம் அளித்து உடனடியாக தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க | TN Weather: தமிழகத்தில் பிப்., 13ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்
மேலும் படிக்க | 12 ஆண்டுகள் பணி செய்த பேராசிரியர்கள் திடீர் பணி நீக்கம்! தூத்துக்குடியில் போராட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் செயல்பாடு மற்றும் அவர்கள் விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் மத்திய ஒப்பந்தங்களை அறிவிக்கிறது. இதில் கிரேடு A,B,C ஆகிய அடிப்படையில் சம்பளங்கள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புதிய சம்பள பட்டியலை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இதில் சில வீரர்களுக்கு கூடுதல் சம்பளமும், சில வீரர்களுக்கு குறைவான சம்பளமும், சிலரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 30 ஆண்களும், 21 பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் இந்த சம்பளப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை சம்பளப் பட்டியலில் இருந்த ஐந்து வீரர்கள் இந்த முறை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டுள்ள ஐந்து வீரர்கள்
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில் இருந்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பெரிதாக இடம் பெறவில்லை. கணுக்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் பழையபடி பந்து வீச முடியவில்லை. இதுவும் அவர் அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாத இஷான் கிஷன் தற்போது டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இவர்களை தவிர ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் கடன் முறை மத்திய ஒப்பந்தத்தில் இருந்த போதிலும், இந்த முறை நீக்கப்பட்டுள்ளனர்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி
கடந்த முறை A + பிரிவில் இருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தற்போது கிரேட் B-க்கு மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் தற்போது, ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாடும் வீரர்களுக்கு தான் A பிரிவில் சம்பளம் வழங்கப்படும். இவர்கள் ஒரு பார்மட்டில் மட்டுமே விளையாடுவதால் தற்போது B-க்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் சுப்மன் கில் கிரேடு A பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த குழுவில் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் அணி
ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் முதன்முறையாக ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மகளிர் அணியை பொறுத்தவரை ஹர்மன்பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் குரூப் A அந்தஸ்தை தக்கவைத்துள்ளனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: பாகிஸ்தான் இல்லை! இந்திய அணியின் அடுத்த போட்டி யாருடன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Chennai Metro Rail Recruitment 2026: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) சென்னையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அந்நிறுவனம் நிரப்பி வருகிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் உள்ள மேனேஜர் பதவி நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் தலைமை ஜென்ரல் மேனேஜர், கூடுதல் ஜென்ரல் மேனேஜர், இணை மற்றும் துணை ஜென்ரல் மேனேஜர், மேனேஜர், துணை மற்றும் உதவி மேனேஜர் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முற்றிலும் ஒப்பந்ந அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை, B.E/B.TECH (Civil) முடித்திருக்க வேண்டும். மேலும், M.E/M.TECH (Civil) முடித்திருப்பவர்களுக்கு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அந்தந்த பணிகளுக்கு ஏற்ப, அனுபவம் ஆண்டுகள் மாறக்கூடும். எனவே, இந்த பணிக்கான முழு அறிவிப்பை தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை, அந்தந்த பணிக்கு மாறுப்படுகிறது. மேலும் அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மாத சம்பளம்
மாத சம்பளத்தை பொறுத்தவரை, தலைமை ஜென்ரல் மேனேஜர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.2.70 லட்சம், ஜென்ரல் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.1.60 லட்சம், இணை ஜென்ரல் மேனேஜர் பணிக்கு ரூ.1.45 லட்சமும், துணை ஜென்ரல் மேனேஜர் பணிக்கு ரூ.1.25 லட்சமும், மேனேஜர், துணை, உதவி மேனேஜர் ஆகிய பணிக்கு ரூ.62,000 முதல் ரூ.85,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு Chennaimetrorail.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300, எஸ்டி, எஸ்சி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்ப படிவத்துடன் கல்வித்தகுதி, அனுபவம் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பிப்ரவரி 23ஆம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறியியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கு தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் படிக்க: விஜய்யை காப்பி பேஸ்ட் செய்யும் தமிழக முதல்வர் - லயோலா மணி பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TNPSC Group 2, 2A Exam: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி இத்தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டது.
TNPSC Group 2, 2A Exam: தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மாற்றம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார் எழுந்ததை தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வெங்கட பிரியா ஐஏஎஸ் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். வெங்கட பிரியா தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
— TNPSC (@TNPSC_Office) February 8, 2026
TNPSC Group 2, 2A Exam: தமிழ்நாடு முழுவதும் ரத்து
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் குறித்து இன்று காலையில் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் இன்று பிப். 8ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2, குரூப்-2ஏ பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
TNPSC Group 2, 2A Exam: பிப். 22இல் பொது அறிவு தேர்வு
மேலும் அதில், "இதுகுறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும். எதிர்வரும் பிப். 22ஆம் தேதி அன்று முற்பகலில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2 பணிகள்) பொது அறிவு தேர்வு (இரண்டாம் தாள் - Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மீண்டும் பிப். 13ஆம் தேதி அன்று வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
TNPSC Group 2, 2A Exam: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது அரசியல் ரீதியாகவும் திமுகவும் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Madurai Latest News Updates: விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர், மதுரை திருநகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனா என்றாலும் சரி, எம்.எம். நரவனே என்றாலும் சரி பேச பிரதமர் மோடி அனுமதிப்பதில்லை.
Madurai News: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
12 மணி நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதும், ஆறு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் ராகுல் காந்தியை அவையில் பேச விடாமல் தடுத்தார்கள். அதன் விளைவாக அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.
ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக எழுதிக் கொடுத்த புத்தகத்தை ஒப்படைத்தார். அதன் பின்னரும் பேச அனுமதி மறுப்பது ஏன்...?. நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, டிஎம்கே உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளையும் பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எதிர்க்கட்சிகள் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தனர்.
தொடர்ந்து எங்களுடைய போராட்டம் அறைக்கு வெளியே நடக்கும். உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும், பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும். மக்களவை மக்களுக்கான விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பங்கேற்க உரிமை வழங்க வேண்டும். நாடாளுமன்றம் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் மன்றமாகவே செயல்படுகிறது" என்றார்.
எய்ம்ஸ் பணிகள் குறித்த கேள்விக்கு, "மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்து பத்திரிகையாளர்களை அழைத்து ஆய்வு செய்ய இயக்குநர் ராவ்விடம் பேசி உள்ளோம். அதிகாரியிடம் பேசி, எப்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் முழுமையான திறப்பு விழா நடைபெறும் என பேசியுள்ளோம். L&T நிறுவனம் கட்டுமான பணிகளை விரைவாக செய்து வருகிறது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடித்தவுடன் மீண்டும் இதை பார்வையிட உள்ளேன்" என்றார்.
Madurai News: தோழர்களை மதித்து காத்திருக்கிறோம்...
திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சி டிசம்பர் ஒன்றாம் தேதி குழு அமைத்துவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் இரண்டு செயலாளர்களும் சேர்ந்து குழு அமைத்து டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எப்போது குழு அமைகிறதோ, அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் பேச தயாராக உள்ளனர்" என பதிலளித்தார். மேலும், திமுகவுடன் கூட்டணி குறித்து பேச குழு அமைத்துள்ளோம் என்றும் காங்கிரஸ் கட்சி எப்பொதும் பொறுமையாக நண்பர்களை அவமதிக்காமல், தோழர்களை தோழமையுடன் மதித்து காத்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுடன் கூட்டணி குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை கேட்கிறது. ஜனவரி 15ஆம் தேதி அகில இந்திய கூட்டத்தில் தலைவர்களை அழைத்து கருத்து கேட்டபின் பெரும்பான்மையான தலைவர்கள் சில உண்மைகளை தெளிவாக கூறினர். இதில் காங்கிரஸ் கட்சியை மரியாதையாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது" என்றார்.
Madurai News: மோடி ஒரு ஏமாற்றுக்காரர்
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இதுகுறித்த கேள்விக்கு, "மோடி டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார், அமித்ஷா தலைமையில் உள்ள கூட்டணி இந்த கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி என்பது நாம் தமிழர் உடன் போட்டியில் மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடும். மோடி ஏமாற்றுக்காரர், தமிழக மக்களை ஏமாற்ற மூன்றாவது, நான்காவது இடத்திற்கு செல்ல மோடி தயாராக உள்ளார்" என்றார். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு தள்ளி வைத்தது குறித்த கேள்விக்கு, "போட்டித் தேர்வுகளில் தயாராக இருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது" என்றார்.
Madurai News: கூட்டணியில் புகைச்சல்
திமுக - காங்கிரஸ் இடையே துளிக்கூட பிரச்னை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பேசி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவை சீண்டும் வகையில் பேசி வருவது கூட்டணிக்குள் புகைச்சலை தொடர்ந்து கிளப்பி வருகிறது. காங்கிரஸில் ஒரு தரப்பு தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு திமுக உடன் கூட்டணியை தொடர வேண்டும் என்றும் விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சாட்டை துரைமுருகனை சீண்டிய தவெக... 3 TVK நிர்வாகிகள் கைது - மோதலின் பின்னணி என்ன?
மேலும் படிக்க | குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து! போராட்டம் வெடிக்கும் - SG சூர்யா கண்டனம்!
மேலும் படிக்க | பிப்.13 சேலம் பொதுக்கூட்டம்: விஜய்க்கு போடப்பட்டுள்ள நிபந்தனைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ICC T20 World Cup 2026, ENG vs NEP: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ICC T20 World Cup 2026: கதறவிடும் கத்துக்குட்டிகள்
நேற்று கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடிதான் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. நேற்று மதியம் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கூட ஸ்காட்லாந்து அணி சேஸிங்கில் மேற்கு இந்திய தீவுகளை சற்று கதிகலங்க செய்தது. ஆனால், ரொமாரியோ ஷெப்பர்ட் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டால் 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றிபெற்றது.
அதேபோல், நேற்றிரவு மும்பையில் நடந்த போட்டியில் கூட இந்திய அணியை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அமெரிக்க அணி ஆட்டம் காண்பித்தது. போராடி 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இன்று ஆப்கானிஸ்தான் அணியும் கூட ஓரளவுக்கு நியூசிலாந்தை பேட்டிங்கில் பதம்பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். கத்துக்குட்டி அணிகள் அனைத்து போட்டியிலும் தோற்றிருந்தாலும் கூட, அனைத்து போட்டிகளையும் சுவாரஸ்யமான ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
ENG vs NEP: பந்துவீச்சில் நேபாளம் சிறப்பு
அந்த வகையில், இன்று மதியம் மும்பையில் தொடங்கிய இங்கிலாந்து - நேபாளம் போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கிலாந்து அணி பேட்டிங்கிலும் பெரியளவில் அடிவாங்கியது. ஆனால் பெத்தெல் 55, புரூக் 53, ஜேக்ஸ் 39*, பட்லர் 26 ரன்களை எடுத்து மொத்தம் 184 ரன்களை எடுத்தது. நேபாளம் பந்துவீச்சாளர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஐரி, நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்களை கொடுத்தது மட்டுமே சற்று பின்னடைவை கொடுத்தது.
ENG vs NEP: பேட்டிங்கும் மிரட்டல்
நேபாளம் அணி பந்துவீச்சை விட பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பியது. பவர்பிளேவில் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டை மட்டும் வீழ்த்தி 47 ரன்களை அடித்தது. ஆர்ச்சரின் ஓவரில் 14 ரன்களை அடித்து புர்டெல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் பவுடல் - ஐரி ஜோடி 54 பந்துகளில் 82 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ஐரி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரோஹித் பவுடல் 39, ஆரிஃப் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், லோகேஷ் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் 22 ரன்கள், லுக் வுட் வீசிய 19வது ஓவரில் 14 ரன்கள் அடிக்கப்பட்டது.
ENG vs NEP: சாம் கர்ரணின் சாமர்த்தியமான பந்துவீச்சு
இதனால், கடைசி ஓவருக்கு 10 ரன்களே தேவைப்பட்டது. கடைசி ஓவரை சாம் கர்ரண் யார்க்கர் லெந்தில் அசத்தலாக வீசினார். முதல் 5 பந்துகளுக்கு வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தையும் யார்க்கராக வீசி 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம், இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லோகேஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் லோகேஷ் 20 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 39 ரன்களை அடித்திருந்தார்.
ENG vs NEP: ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், ரஷீத்
ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 42 ரன்களை கொடுத்தார். அனுபவ வீரர் அடில் ரஷித் 3 ஓவர்களை மட்டும் வீசி 42 ரன்களை கொடுத்தார், விக்கெட் எடுக்கவே இல்லை. சாம் கர்ரண் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் 4 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தி 27 ரன்களை மட்டுமே கொடுத்தார். இவர் பந்தின் வேகத்தை குறைத்து வீசியதன் காரணமாகவே வெற்றி இங்கிலாந்து வசம் வந்தது. இவரின் வேரியேஷன்கள் பாராட்டத்தக்கது. பந்துவீச்சில் 1 விக்கெட்டையும், பேட்டிங்கில் 39 ரன்களையும் அடித்த வில் ஜாக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ENG vs NEP: மனமுடைந்துபோன நேபாள ரசிகர்கள்
போட்டி மும்பையில் நடந்தாலும் வான்கெடே மைதானம் முழுவதும் நேபாளம் அணி ரசிகர்கள்தான் நிரம்பி வழிந்தார்கள். ஒவ்வொரு பந்திற்கும் நேபாள அணிக்கு தங்களின் ஆரவாரமான ஆதரவை வழங்கினார்கள். ஆனால், கடைசி பந்தில் நேபாள அணி வெற்றிக் கோட்டை தாண்ட முடியாமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனார்கள்.
ENG vs NEP: தோற்றாலும் குவியும் பாராட்டு
இருப்பினும் நேபாள அணி நேர்மறையாக இத்தொடரை தொடங்கி உள்ளது, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும்பட்சத்தில் நேபாளம் சூப்பர் 8 சுற்றுக்கு போக அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் நேபாளம் அணி அடுத்த மூன்று போட்டிகளையும் மும்பையில்தான் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகில் இருந்தும் நேபாளம் அணிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
India vs USA Tamil Commentary Scorecard Live: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் (ICC T20 World Cup 2026) இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் நடைபெற இருக்கும் இந்த டி20ஐ திருவிழாவில் இன்று மட்டும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
India vs USA Live Scorecard: இந்தியா - அமெரிக்கா மோதல்
கொழும்புவில் உள்ள எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழா நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இன்று மும்பையில் நடைபெறுகிறது.
India vs USA Live Scorecard: கவனிக்க வேண்டிய அமெரிக்க வீரர்கள்
அமெரிக்க அணி கடந்த டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் பாகிஸ்தானை அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்று வரை முன்னேறியது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளையும் தோற்று வெளியேறியது. தொடர்ச்சியாக அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி கவனம் பெற்றுள்ளனர். கேப்டன் மோனக் பட்டேல், இடது கை வேகப்பந்துவீச்சாளர் சௌரப் நேத்ராவல்கர், சைதேஜா முக்கமல்லா, ஷெஹான் ஜெயசூர்யா, ஆண்ட்ரிஸ் கௌஸ், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமெரிக்க வீரர்கள் கவனம் பெறுகிறார்கள்.
India vs USA Live Scorecard: உள்ளே வரும் சிராஜ்
குரூப் சுற்றில் இந்திய அணி அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை முறையே சந்திக்கின்றன. இதில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பும்ரா இல்லாத இடத்தில் முகமது சிராஜிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகிய நிலையில், சிராஜ் நேற்று அணியுடன் இணைந்தார்.
India vs USA Free Live Scorecard: இந்திய அணியின் காம்பினேஷன்
ஆனால், சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக அவரே ஓபனிங் இறங்கவும் வாய்ப்புள்ளது. இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரும் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால், இந்திய அணி 9 பேட்டர்கள், 2 பிரீமியம் பௌலர்கள் உடன் களமிறங்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சு ஆப்ஷனாக அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே ஆகியோர் இருக்கிறார்கள். அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்பதால் தயங்காமல் இந்திய அணி இந்த காம்பினேஷன் உடன் களமிறங்கலாம்.
India vs USA Live Scorecard: பிளேயிங் லெவன்
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
India vs USA Live Scorecard: நேரலையில் பார்க்க...
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் பார்க்கலாம். அதேநேரத்தில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கவும், தொலைக்காட்சி சேனலில் பார்க்கவும் நீங்கள் சந்தா செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
India vs USA Live Scorecard: தமிழ் கமெண்ட்ரி உடன் ஸ்கோர்கார்ட்
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக் கோப்பை நேரலை ஸ்கோர்கார்டை, தமிழ் வர்ணனையுடன் இலவசமாக பார்க்க உங்களின் Zee Tamil News சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதாவது போட்டியின் நேரலை காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு பந்துகளின் அப்டேட்டையும் நீங்கள் ஸ்கார்கார்டில் பார்க்கலாம். மேலும், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் சிறப்பான வர்ணனையில் போட்டியின் நிலவரத்தையும், கிரிக்கெட் நுணுக்கங்களையும் நீங்கள் தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.
தமிழ் வர்ணனை உடன் கூடிய ஸ்கோர்கார்ட் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து இந்தியா போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதனை நீங்கள் Zee Tamil News ஊடகத்தின் பேஸ்புக், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் தளங்களில் நேரலையில் பார்க்கலாம். போட்டியின் ஸ்கோர்கார்ட் நேரலையில் வந்த உடன் அந்த லிங்க் இப்பக்கத்தில் இணைக்கப்படும்.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஒரே ஒரு கவலை இதுதான்.. தோனி அறிவுரை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Attack Plan On PM Narendra Modi: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே பிரதமரை நேற்று அவைக்கு வர வேண்டாம் என தானே சொன்னதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதிவரை முதல் கட்டமாகவும், மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதிவரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அந்த வகையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பதிலுரை ஆற்ற இருந்தார். ஆனால், பிரதமர் மோடி நேற்று அவைக்கு வரவில்லை, அவரது உரை ரத்து செய்யப்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அஞ்சி பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அவையில் பேசியபோது, "ஜனாதிபதியின் உரைக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒன்றைச் செய்யக்கூடும் என்ற உறுதியான தகவல் எனக்குக் கிடைத்தது. இந்த காட்சியை நான் அவையில் கூட பார்த்தேன். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே உடைக்கும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக இருந்திருக்கும். இதைத் தவிர்க்கவே, பிரதமர் அவைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக் கொண்டேன்" என்றார். இதன்மூலம், காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுக்கு மக்களவை சபாநாயகர் பதிலடி கொடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திமுக அரசு பல்வேறு வழிகளில் ஊழல் செய்வது போல் தவெக மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பல தடைகள் செய்வதாகவும், ஆட்சியில் இருக்கும் தீய சக்திகளை அகற்றுவது எங்கள் முதன்மை குறிக்கோள்; மற்றவர்களைப் பற்றி கவலைப்படமாட்டோம்” என கடலூரில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார். வரும் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க - தமிழக அரசின் 15 அறிவிப்புகள்: அரசு வேலை தேடுபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் Good News
திமுக அரசு
இதில் விவசாயிகள், மீனவர்கள், அரசு அலுவலர் சங்கத்தினர், மகளிர் சுயஉதவி குழுக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களில் மக்கள் அதிக நம்பிக்கையுடன் பங்கேற்கிறார்கள் என தெரிவித்தார். மக்களின் கேள்விகளும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். தலைவர் மக்களை சந்திக்க அனுமதி பெற முயற்சிக்கும் போது, திமுக அரசு பல்வேறு வழிகளில் தடைகள் செய்கின்றதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தவெக கூட்டணி
கூட்டணி தொடர்பான முடிவை தலைவர் மட்டுமே எடுப்பார்; நட்பு அணிகள் இணைந்தாலும் சரி, இணைக்காவிட்டாலும் சரி, தமிழக வெற்றி கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்று அருண்ராஜ் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகர் பிரவீன் சக்கரவர்த்தி கடந்தகாலத்தில் கூறிய 18% வாக்கு ஆதரவு பற்றிய கருத்து தற்போதைய நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு 30% மேல் வாக்கு ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2026 தேர்தல்
வரும் 2026 தேர்தலில், தற்போதைய ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து தான் அரசியல் நடைபெறும் என்றும், “தீய சக்திகளை அகற்றுவது எங்கள் முதன்மை குறிக்கோள்; மற்றவர்களைப் பற்றி கவலைப்படமாட்டோம்” என்றும் அருண்ராஜ் தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, உரிய அனுமதியுடன் மக்களை சந்திக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலைகடல் ஓரத்தில் ஒலித்த மக்களின் உரிமைக்குரல்! - கடலூரில் களம் கண்ட தேர்தல் அறிக்கை குழு!
— Arunraaj TVK (@arunraajkg) February 4, 2026
மதுரை மண்ணில் தொடங்கிய நம் மக்கள் சந்திப்பு பயணம், இன்று கடலூர் மண்ணில் இன்னும் வீரியமாகத் தொடர்ந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கடலூரில்… pic.twitter.com/CcBtDTtfoN
மேலும் படிக்க - சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பொய்கைகரைப்பட்டியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக அதன் தலைவர் மகாவிஷ்ணு தலைமையில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் முருக பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிகழ்வில், பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணு செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும், அரசியலில் தனது ரசிகர்களை அரசியல் பக்குவப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது எனவும் மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
மகாவிஷ்ணு செய்தியாளர் சந்திப்பு!
நான் பிறந்தது மதுரையில் உள்ள அலங்காநல்லூரில் தான். எனக்கும் மதுரைக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. திருப்பரங்குன்றம் சர்ச்சை தொடர்பாக கேள்விக்கு, திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் தான் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை மீறி அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான், அதனை உணர வேண்டும். தீபத்தூணில் விளக்கு ஏற்றலாம் என்று நீதிமன்றம் சொன்னதை பின்பற்றலாம் என்று நினைக்கிறன். தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எந்தவித கலவரமும் வராமல் தடுத்துள்ளனர். ஒவ்வொரு அரசாங்கமும் தவறில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்கிறது. அரசு தவறு செய்யும் போது நீதிமன்றம் தலையிட்டு நீதியை பெற்று தந்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சி
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்மீக அரசியல் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது என்ற கேள்விக்கு, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு பெருகி கொண்டே வருகிறது. நான் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். முன்பு இருந்தது போல இப்போது இல்லை. இந்தியாவை கேட்டு முடிவு எடுக்கும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. GDPயில் இந்தியா ஜப்பானை முந்தி உள்ளது. இந்தியா வலிமையான நாடாக மாறி வருகிறது.
திமுகவின் நான்கரை வருட ஆட்சி எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, அரசாங்கத்தை குறை சொல்லும் அளவிற்கு நான் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஜனநாயகத்தின் படி ஓட்டுரிமை உள்ளது. இவர்கள் இல்லை என்றால் அவர்கள், அவர்கள் இல்லை என்றால் இவர்கள், இவர்கள் 2 பேரும் இல்லை என்றால் புதிய ஒருவர் என்று தேர்வு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது. இந்த முறையும் அவர்களுக்கு வாய்ப்பு வர உள்ளது. மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.
விஜய்யின் அரசியல் வருகை
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, இந்த உலகில் புதிதாக ஒன்றும் இல்லை. விஜய் புதிதாக ஒன்றும் பேசவில்லை. இன்னும் அதிகமாக அவர் பேச வேண்டும். விஜய்க்கு வேண்டுகோளாக ஒன்று வைக்கிறேன். ஒரு இடத்திற்கு அவர் வரார் என்றால் லட்ச கணக்கில் மக்கள் வருகின்றனர். அது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. தொண்டர்களை அரசியல்படுத்த வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உண்டு. உடன் இருப்பவர்களை விஜய் சரியாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வருடத்தில் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியல் என்பது விளையாட்டு அல்ல. ரசிகர்களின் உயிரை நீங்கள் பணையம் வைக்கிறீர்கள். உங்களுக்காக அனைவரும் துடிக்கின்றனர். விஜய் இன்னும் துணிச்சலாக இருக்க வேண்டும். விஜய்க்கு தகுதி இல்லை என்று கூறவில்லை, இன்னும் கவனமாக இருந்தால் அடுத்தடுத்த நிலைக்கு போகலாம். தமிழ்நாடு அரசியலில் கடைசி வரை அறிக்கை மற்றும் பேச்சு மட்டுமே எடுபடாது.

ராஜராஜ சோழன் பற்றிய கேள்விக்கு, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மிகப்பெரிய தமிழ் மற்றும் ஆன்மீக தொண்டாற்றியவர்களை பற்றி இன்றைய பொழுதுகளில் விமர்சனம் செய்யும் தகுதி யாருக்கும் இல்லை. அவர் செய்ய சாதனைகளை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். தமிழக அரசு எனக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ