Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North West Delhi110085
மதம் மாறினால் பட்டியல் இனத்தவருக்கான அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
RSRK Spark
Mar 24, 2026 15:49:55
New Delhi, Delhi

இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் அல்லாத பிற மதங்களுக்கு மாறும் பட்டியல் இனத்தவர் தொடர்ந்து தங்களது பட்டியல் இன அந்தஸ்தையோ அல்லது இட ஒதுக்கீட்டு சலுகைகளையோ கோர முடியாது என உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்க - 8-வது ஊதியக் குழு: ஜனவரி 1 முதல் அமலாகுமா? அரியர்ஸ் குறித்த முக்கிய அப்டேட்!

 

மேலும் படிக்க - மதியம் ஏசி போட்டா அதிக காசா? பீக் ஹவர்ஸில் கூடுதல் கட்டணம் -மின்வாரியத்தின் அதிரடி முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SMShiva Murugesan
Mar 24, 2026 12:53:39
Gungia, Tripura:

Govt Employees 5% DA Hike News In Tamil: பணவீக்கத்தால் திணறிக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. திரிபுரா மாநில முதலமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவலைப்படியை (DA) 5 சதவீதம் உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது மாநில நிதி அமைச்சர் பிரணஜித் சிங் ராய், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த கையோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்த முக்கியத் தகவல்கள் குறித்து பார்ப்போம்.

ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்?

திரிபுரா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அம்மாநில முதலமைச்சர் 5% அகவலைப்படி (DA) மற்றும் அகவலை நிவாரணம் (DR) உயர்வை அறிவித்துள்ளார். தற்போது 36% ஆக இருக்கும் அகவலைப்படி, இனி 41% ஆக உயரும். இந்த உயர்வு வரும் 2026, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அகவிலைப்படி உயர்வு எவ்வளவு சதவீதம் உயர்வு?

  1. அகவிலைப்படி உயர்வு சதவீதம்: 5%
  2. புதிய அகவிலைப்படி அளவு: தற்போதைய 36%-லிருந்து 41% ஆக உயர்கிறது.
  3. அகவிலைப்படி  அமுலுக்கு வரும் தேதி: 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும்.
  4. திரிபுரா பட்ஜெட் நிலவரம்: 2026-27 நிதியாண்டிற்கான ₹34,002 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணஜித் சிங் ராய் தாக்கல் செய்த பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: அரியர் தொகை மீது அரசு ஊழியர்களின் கவனம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

அகவிலைப்படி உயர்வால் யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?

இந்த அறிவிப்பின் மூலம் திரிபுரா மாநில அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் செலவாகும். அதேநேரம் இதன்மூலம் நேரடியாகப் பயன்பெறப்போவது யார் என்று பார்த்தால், சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் 80000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வால் சம்பளம் எவ்வளவு கூடும்?

உதாரணத்திற்கு ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ₹30,000 என்று வைத்துக்கொள்வோம்:

  1. பழைய DA (36%): ₹10,800
  2. புதிய DA (41%): ₹12,300
  3. கைக்கு கிடைக்கும் கூடுதல் தொகை: மாதம் ₹1,500 உயரும்.

மேலும் படிக்க - 8-வது ஊதியக் குழு: ஜனவரி 1 முதல் அமலாகுமா? அரியர்ஸ் குறித்த முக்கிய அப்டேட்!

மத்திய அரசு ஊழியர்கள் vs திரிபுரா அரசு ஊழியர்கள் ஒப்பிடு

திரிபுரா மாநில முதலமைச்சர் இந்த அகவிலைப்படி உயர்வை அறிவித்தாலும், ஒரு கசப்பான உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 58% அகவலைப்படி பெற்று வரும் நிலையில், திரிபுரா மாநில ஊழியர்கள் இந்த 5% உயர்வுக்குப் பிறகும் 17% பின்தங்கியே உள்ளனர். இந்த இடைவெளியை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

திரிபுரா பட்ஜெட்டின் சிறப்பம்சம்

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திரிபுரா மாநில பட்ஜெட்டில் பொதுமக்களுக்குச் சுமை தரும் வகையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மாறாக டிஜிட்டல் வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு பின்னணி விவரம்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஆதரவைத் தக்கவைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம் பணவீக்கம் மற்றும் அதிகரிந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, இந்த 5% உயர்வு தங்களுக்குக் கிடைத்த ஒரு முக்கிய நிதி நிவாரணம் என ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

மேலும் படிக்க - சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! ஏப்ரல் 1 முதல் மாறப்போகும் டாப் 5 விதிமுறைகள்

திரிபுரா அரசு ஊழியர்கள் 5% DA உயர்வு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. திரிபுரா அரசு அறிவித்துள்ள புதிய அகவலைப்படி (DA) உயர்வு எவ்வளவு?
திரிபுரா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீத அகவலைப்படி (DA) மற்றும் அகவலை நிவாரணம் (DR) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்த உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும்?
புதிய 5% அகவலைப்படி உயர்வு வரும் 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. இந்த அறிவிப்பால் யாருக்கெல்லாம் லாபம் கிடைக்கும்?
இந்த அறிவிப்பின் மூலம் திரிபுரா மாநிலத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் 80,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயன் பெறுவார்கள்.

4. இந்த உயர்வினால் மாநில அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு எவ்வளவு?
இந்த 5% அகவலைப்படி உயர்வைச் செயல்படுத்துவதன் மூலம், திரிபுரா மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.

5. தற்போதைய நிலவரப்படி மொத்த அகவலைப்படி எவ்வளவு?
இந்த 5% உயர்வுக்கு முன்னதாக ஊழியர்கள் 36% DA பெற்று வந்தனர். இந்த புதிய அறிவிப்புக்குப் பிறகு, மொத்த அகவலைப்படி 41 சதவீதமாக உயரும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1095
comment0
Report
SMShiva Murugesan
Mar 24, 2026 11:51:00
Chennai, Tamil Nadu:

TN Pensioners Identity Card Updates: தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஓய்வூபெற்ற ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications - DoT) ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை (Pensioners Identity Card) வழங்குவது குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி ஆகிய தகவல்கள் குறித்து விரிவான பார்ப்போம்.

ஓய்வூதியர் அடையாள அட்டை புதிய அறிவிப்பு

தமிழ்நாடு வட்டாரத்தின் முதன்மை தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (Office of the Principal CCA, Tamil Nadu Circle) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அரசு சலுகைகளை எளிதாகப் பெறவும் இந்த அடையாள அட்டை அவசியமாகிறது.

எந்த ஓய்வூதியதாரர்கள் பயன்பெற முடியும்?

இந்த அறிவிப்பு குறிப்பாக DoT (Department of Telecommunications) துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தமிழ்நாடு வட்டாரத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

DoT ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம்: உரிய படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

புகைப்படங்கள்: இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவை.

ஒன்றை விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.

மற்றொன்றைத் தனியாக ஒரு கவரில் வைத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க - EPS ஓய்வூதியம்: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வா? நாடாளுமன்றத்தில் கிடைத்த அப்டேட்

DoT பென்ஷனர்ஸ் ஐடி கார்டு தேவையான ஆவணங்கள் என்ன?

  1. PPO (Pension Payment Order) நகல்.
  2. ஆதார் அட்டை நகல்.
  3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்ப முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை நேரில் சென்றோ அல்லது Speed Post மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:

துணைத் தகவல் தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்),
DoT செல், முதன்மை CCA அலுவலகம், தமிழ்நாடு வட்டம்,
T&D வளாகம், முதல் தளம், எண். 60,
எத்திராஜ் சாலை, எக்மோர், சென்னை - 600008.

ஓய்வூதியர் அடையாள அட்டை  நன்மைகள்

இந்த அடையாள அட்டை வைத்திருப்பதன் மூலம் மருத்துவச் சேவைகள், பயணச் சலுகைகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களை எந்தவித தடையுமின்றி ஓய்வூதியதாரர்கள் பெற முடியும். இதுவரை அடையாள அட்டை பெறாத DoT ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க - ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ. 1 லட்சம் வருமானம்: மூத்த குடிமக்களுக்கு சூப்பர் வழி

ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. ஓய்வூதியர் அடையாள அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தொலைத்தொடர்புத் துறையில் (Department of Telecommunications - DoT) பணியாற்றி ஓய்வுபெற்ற, தமிழ்நாடு வட்டாரத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையைப் (Pensioners Identity Card) பெற விண்ணப்பிக்கலாம்.

2. ஓய்வூதியர் அடையாள அட்டையைப் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
இந்த அட்டை நீங்கள் ஒரு ஓய்வூதியதாரர் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இதன் மூலம் மத்திய/மாநில அரசு வழங்கும் மருத்துவச் சலுகைகள், பயணக் கட்டணச் சலுகைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பிரத்யேகத் திட்டங்களை எளிதாகப் பெற முடியும்.

3. ஓய்வூதியர் அடையாள அட்டை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
பூர்த்தி செய்யப்பட்ட ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பப் படிவம்,  PPO (Pension Payment Order) நகல், ஆதார் அட்டை நகல்,  இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

4. விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியுமா?
தற்போதைய அறிவிப்பின்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆவணங்களுடன் இணைத்துச் சென்னை எக்மோரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீட் போஸ்ட் (Speed Post) மூலமாகவோ மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

5. விண்ணப்பத்தை எங்கு அனுப்ப வேண்டும்?
துணைத் தகவல் தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), DoT செல், முதன்மை CCA அலுவலகம், தமிழ்நாடு வட்டம், T&D வளாகம், முதல் தளம், எண். 60, எத்திராஜ் சாலை, எக்மோர், சென்னை-600008.

மேலும் படிக்க - டாஸ்மாக்கில் திடீர் கட்டுப்பாடு.. இனி ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1095
comment0
Report
RSRK Spark
Mar 24, 2026 08:40:50
Puducherry, Puducherry:

தமிழகத்தை தாண்டி புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது; தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளன. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியிலும் இது மிக வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த தொகுதி பங்கீடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தும் முனைப்புடன் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து புதுச்சேரியில் களமிறங்க உள்ளன.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பரிசு - தை மாதம் தமிழ்நாடு அரசின் டபுள் ட்ரீட்

புதுச்சேரியில் யாருக்கு எத்தனை இடங்கள்?

புதுச்சேரியில் நீண்ட ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், திமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளையும் இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே பிரித்துக்கொண்டுள்ளன. இந்த கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதி பங்கீட்டிற்கு முன்பே அதன் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். 

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது திமுக சார்பில் யார் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளில், 13 இடங்களில் திமுகவை சேர்ந்த வேட்பாளர்களும், ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேட்பாளரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். 

புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியல்

1. வில்லியனூர் - இரா.சிவா
2. மங்கலம் - எஸ்.எஸ்.ரங்கன்
3. திருபுவனை - பி.அங்காளன்
4. பாகூர் - ஆர்.ஆர். செந்தில்குமார்
5. முதலியாபேட்டை - லீ. சம்பத்
6. உப்பளம் - வி.அனிபால்கென்னடி
7. உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
8. நெல்லித்தோப்பு - வே.கார்த்திகேயன்
9. ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன்
10. காலாப்பட்டு - ஏ. செந்தில் (எ) ரமேஷ்
11. கதிர்காமம் - ப.வடிவேலு
12. காரைக்கால் தெற்கு - ஏ.எம்.எச்.நாஜிம்
13. நிரவி டி.ஆர். பட்டினம் -  எம். நாகதியாகராஜன்

கூட்டணி கட்சி

14. உழவர்கரை - விடுதலை சிறுத்தைகள் கட்சி

தனித்து களமிறங்கும் விஜய்

தமிழகத்தை தாண்டிப் புதுச்சேரியிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த முறை போட்டியிட உள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் தான், இந்த 30 தொகுதிகளுக்குமான தங்களது முழுமையான வேட்பாளர் பட்டியலைத் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் நேயம் மக்கள் கழகம் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மற்றும் தனித்து களமிறங்கும் தவெக எனப் புதுச்சேரி அரசியல் களம் தற்போது மூன்று முனை போட்டியை சந்திக்க தயாராகியுள்ளது.

 

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட் : பெண்களே இந்த தவறை செய்துவிடாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1046
comment0
Report
RSRK Spark
Mar 24, 2026 07:18:53
Chennai, Tamil Nadu:

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களும் -தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் அவற்றில் 6 தனி தொகுதிகளிலும் 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட் : பெண்களே இந்த தவறை செய்துவிடாதீர்கள்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பரிசு - தை மாதம் தமிழ்நாடு அரசின் டபுள் ட்ரீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

1062
comment0
Report
RSRK Spark
Mar 23, 2026 14:07:30
Mumbai, Maharashtra:

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இந்த வாரம் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், கேப்டன்சி விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 2024ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்றது முதலே மும்பை அணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் செயல், ரோகித் சர்மா ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் திட்டும் சம்பவமும் அரங்கேறியது.

மேலும் படிக்க: 2018 போல முரட்டு ஃபார்முக்கு மாறுவாரா ரிஷப் பண்ட்.. பேட்டிங் வரிசையை மாற்ற பிளான்!

ரோகித் சர்மா வைத்த நிபந்தனை

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ஒரு இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடினார். பேட்டிங் மட்டும் செய்த அவர் ஃபீல்டிங்கின் போது மைதானத்தில் இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். "ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ஒரு சாம்பியன் கேப்டனுக்கு இந்த நிலைமையா?" என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பதிவிட்டு வந்தனர். இதற்காகவும் ஹர்திக் பாண்டியாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். 

இந்த நிலையில், "இந்த ஆண்டு என்னால் ஒரு இம்பேக்ட் வீரராக மட்டும் பெஞ்சில் இருக்க முடியாது" என்று ரோகித் சர்மா மும்பை நிர்வாகத்திடம் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோகித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவரது உடல் எடை குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது அதனையும் அவர் முறியடித்துள்ளார். உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக காணப்படும் ரோகித் சர்மா, ஒரு புது அவதாரத்தில் இந்த ஆண்டு களமிறங்க உள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் எதிர்ப்பு

ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது என்று தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் ஹர்திக் பாண்டியாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஹர்திக் பாண்டியா தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே முழுநேர பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். இதில் 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவை இம்பேக்ட் பிளேயராக உட்கார வைக்க முடியாது. அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு தான் ரோகித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக விளையாட வைக்கிறோம். இந்த ஆண்டும் அதனைத்தான் செய்ய முடியும். அவருக்கு பதிலாக ஒரு கூடுதல் பவுலர் விளையாடினால், அது அணிக்குத்தான் சாதகம்" என்று ஹர்திக் பாண்டியா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஹர்திக்?

ரோகித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வேண்டாம் என்று மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிடம் அறிவுறுத்தியதாகவும், ஆனால் ஹர்திக் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மீண்டும் இது தொடர்பாக நிர்வாகம் அழுத்தம் கொடுத்தால், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமியுங்கள் என்றும் ஹர்திக் பாண்டியா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியும் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கலாமா என்ற தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

திலக் வர்மாவிற்கு வந்த சிக்கல்

ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக இல்லாமல் முழுநேர வீரராக அணியில் விளையாடினால், மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு திட்டத்தையும் கையில் வைத்துள்ளது. அதன்படி, இளம் வீரரான திலக் வர்மாவை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திலக் வர்மா ஒரு பேட்ஸ்மேனை தாண்டி சில ஓவர்கள் வீசக்கூடிய ஸ்பின்னர் என்றாலும், அவரால் பவுலிங்கில் பெரிய இம்பேக்ட்டை கொடுக்க முடியவில்லை. எனவே, அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.

ஹர்திக்கின் எதிர்காலம் என்னவாகும்?

ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை பெரிதாக வெற்றியை பெற முடியவில்லை. கடந்த சீசனில் அணி பிளே ஆஃப் வரை சென்றிருந்தாலும், இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர் கேப்டன்சியில் தொடர்ந்து நீடிப்பார். ஆனால், ஒருவேளை மும்பை அணி மோசமான தோல்விகளை சந்தித்தால், உடனடியாக அவரிடமிருந்து கேப்டன்சியை மாற்றலாம் என்ற முடிவில் அணி நிர்வாகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் என்பது, இந்த சீசனில் அவரது செயல்பாட்டைப் பொறுத்தே அமையும். 

மேலும் படிக்க: IPL வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் வென்றது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

1070
comment0
Report
SGSudharsan G
Mar 22, 2026 03:20:08
Washington, District of Columbia:

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்: கச்சா எண்ணெய் என்பது சர்வதேச அரசியலில் முக்கிய பங்கை வகிக்கிறது. உலக நாடுகள் பயன்படுத்தும் 26% - 31% கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளே உற்பத்தி செய்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்

அந்த வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனா, ஜப்பான், இந்தியா போன்ற பிற ஆசிய நாடுகளுக்கும்; ஐரோப்பிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெய்யை கொண்டுசெல்ல ஹார்முஸ் ஜலசந்தி பயன்படுகிறது. உலக பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது. 

சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்போது போரின் காரணமாக முடக்கியிருக்கிறது. தங்கள் நாட்டின் மீது கடந்த மூன்று வாரக் காலமாக தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகளுக்கு நெருக்கிடி கொடுக்கும் வகையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

ஈரான் திட்டமிட்டது போல் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் காரணமாகவும், போர் பதற்றம் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் எரிபொருள்களின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. இது சர்வதேச பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என்றும் வல்லுநர்களால் அஞ்சப்படுகிறது.

டிரம்ப் - நெதன்யாகு என்ன செய்யப்போகிறார்கள்?

இந்தச் சூழலில், ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கியிருக்கின்றன. அதுவும் இந்த போரை தொடங்கிவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் கைகளில்தான் போரின் முடிவும் இருக்கிறது எனலாம். எனவே, மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்த பதற்றத்தை தணிக்க டிரம்ப் - நெதன்யாகு என்ன நடவடிக்கைகளை எடுப்பார்கள் என உலகமே அவர்களை உற்றுநோக்கி வருகிறது.

ஈரானுக்கு கெடு விதித்த டிரம்ப்

இந்தச் சூழலில், எண்ணெய் கப்பல்களுக்கு முக்கிய போக்குவரத்து பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலும் அழித்துவிடுவோம் என டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், ஈரான் நாட்டுக்கு 48 மணிநேரம் டிரம்ப் கெடுவிதித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அவரது Truth சமூக வலைதளப் பக்கத்தில், இந்திய நேரப்படி காலை 5.14 மணிக்கு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். இதன்மூலம், வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 24) காலை வரை ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க, டிரம்ப் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

'மிகப்பெரிய மின் உற்பத்தி ஆலையை அழிப்போம்'

டிரம்ப் அவரது பதிவில், "ஹார்முஸ் ஜலசந்தியை எந்தவித அச்சுறுத்தலும் இன்றி, ஈரான் முழுமையாக திறக்காவிட்டால், இந்த நேரத்தில் இருந்து அடுத்த 48 மணிநேரத்தில், அமெரிக்கா அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கி தகர்க்கும். முதலில் அவர்களின் மிகப்பெரிய நிலையங்களை தாக்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கொடுத்த பதிலடி

48 மணிநேரம் கெடு விதித்து டிரம்ப் கொடுத்த எச்சரிக்கைக்கு, ஈரானிய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் இருக்கும் அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தொழில்நுட்ப, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய கட்டமைப்புகளை தாக்கும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

கதம் அல்-அன்பியா எனும் ஈரானிய ராணுவ நடவடிக்கைகளின் தலைமையகம், டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து, "முந்தைய எச்சரிக்கைகளை தொடர்ந்து, ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் அரசுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவோம்" என தெரிவித்திருப்பதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமடையும் போர்

போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்போருக்கு இது பெரும் கவலையை அளித்துள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையும், ஈரானின் பதிலடியும் போர் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கிறது. போர் இன்னும் தீவிரமானால் பல்வேறு நெருக்கடிகள் உருவாக்கக்கூடும். ஒருவேளை, மற்ற நாடுகளும் இந்த போரில் இணைந்துவிட்டால் நிச்சயம் உலகப்போர் போன்ற சூழல் உருவாகிவிடும்.

மேலும் படிக்க | ஈரான் போரால் நெருக்கடி: உலகை காக்க 10 பரிந்துரைகள் - IEA சொல்லும் பெஸ்ட் ஐடியா

மேலும் படிக்க |  ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய 22 இந்தியக் கப்பல்கள்: ஈரானின் நிபந்தனை! தீருமா LPG தட்டுப்பாடு?

மேலும் படிக்க |மொஜ்தபா உயிர் தப்பியது எப்படி? ஜஸ்ட் மிஸ்... நொடியில் நடந்த சம்பவம் - லீக்கான ஆடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

999
comment0
Report
SGSudharsan G
Mar 22, 2026 02:05:50
Chennai, Tamil Nadu:

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே ரசிகர்களிடம் இந்த சீசன் குறித்த பேச்சுகள் எப்போதோ தொடங்கிவிட்டன.

காத்திருக்கும் ஐபிஎல் ரசிகர்கள்

கடந்த மார்ச் 8ஆம் தேதி இந்திய அணி டி20 உலகக் கோப்பையை தக்கவைத்ததில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள்  பெரும்பாலானோர் ஐபிஎல் தொடருக்காகவே காத்திருக்கிறார்கள். சுமார் 20 நாள்கள் போட்டிகள் ஏதும் இல்லாமல், மார்ச் 28ஆம் தேதியில் இருந்து மே மாதம் இறுதிவரை இரவு 7 மணியாகிவிட்டால் அனைவரும் திரைக்கு முன் அமர்ந்துவிடுவார்கள். 

ஒவ்வொரு சீசனிலும் ஐபிஎல் ஒவ்வொரு சர்ப்ரைஸை வைத்திருக்கும். அந்த வகையில், நடப்பு தொடரில் ஐபிஎல் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடர் கோடை காலங்களில் இந்திய சமூகத்திடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக, ஒரு கலாச்சாரமாக வளர்ந்துவிடடது. இந்திய அணியின் போட்டிகளை பார்ப்பவர்களை விட ஐபிஎல் போட்டிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனலாம்.

உச்சத்தை தொட்டிருக்கும் ஐபிஎல்

ஐபிஎல் தொடர் வணிக ரீதியாகவும் பெரும் உச்சத்தை அடைந்திருக்கிறது. கிரிக்கெட் லீக் தொடர்களில் அதிகம் வருவாய் ஈட்டும் தொடராக ஐபிஎல் உயர்ந்திருக்கிறது. கால்பந்து விளையாட்டில் பிரீமியர் லீக் அளவிற்கு ஐபிஎல் தொடரை கொண்டுசெல்வதே நோக்கமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் இந்தளவிற்கு வளர்ந்திருப்பதற்கு பல்வேறு தரப்பின் பங்கு இருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. 

மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்குதான் ரசிகர்கள் அதிம். இந்த அணிகள்தான் அதிக முறை கோப்பையை வென்றிருக்கின்றன. இதுவரை 18 சீசன் முடிந்திருக்கும் நிலையில், இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கின்றன. இந்த அணிகளுக்கு பின் பார்த்தால் கேகேஆர் அணிதான் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. மும்பை அணியும், சிஎஸ்கேவும் பல சீசன்களாக ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு அணிகளில் யார் தலைசிறந்த அணி என்ற விவாதம் எப்போதும் ரசிகர்களிடையே இருக்கும். 

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் எந்த அணியும் சிறந்த அணி என இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான் பதில் அளித்துள்ளார். JioStar தளத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், "ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் எம்ஐ ஆகிய அணிகளில் தலைசிறந்த அணியைத் தேர்ந்தெடுப்பது எப்போதுமே விவாதத்திற்குரியதாகவே இருக்கும். 

2010ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே கோப்பையை கைப்பற்ற தொடங்கியது. அவர்கள் 2010, 2011 சீசன்களில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை வென்றார்கள், இரண்டு முறை தொடர்ந்து கோப்பையை வென்ற முதல் அணியும் அவர்கள்தான். ஆனால், எம்ஐ அணி 2013இல் கோப்பையை கைப்பற்ற தொடங்கினாலும், ஒவ்வொரு ஆண்டும் விட்டுவிட்டு தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை பெற்றனர் (2013, 2015, 2017, 2019, 2020). மும்பை அணியும் கூட 2019, 2020 சீசன்களில் தொடர்ச்சியாக கோப்பையை வென்றுள்ளது. 

அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டுக்கு பல மேட்ச் வின்னர்களை கொடுத்திருக்கிறது, அது மிகச் சிறப்பானது. அதை எப்படி சாதிக்க முடிந்தது..? முதலில் உங்களின் அணியை பெரிய வலிமையான அணியாக கட்டமைக்க வேண்டும். பின்னர், அதில் இருந்து வெற்றிகளை குவிக்க வேண்டும். இப்போது பார்த்தால் கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசனில் சிறப்பான அணி இருந்தது, அவர்களால் எளிதாக கோப்பையை வென்றிருக்க முடியும். ஆனால் அவர்களால் ஜெயிக்க முடியாததற்கு வேறு காரணங்கள் இருந்தன" என்றார்.

மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி

தொடர்ந்து சிஎஸ்கே குறித்தும் பேசிய இர்பான் பதான், "சிஎஸ்கேவை பார்த்தோமானால் அவர்களிடம் நான்கு இந்திய கேப்டன்கள் இல்லை, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருக்கிறார்கள். அந்த வகையில், அணியை கட்டமைத்து, உயர்ந்த நோக்கத்திற்காக பங்களித்தது என அனைத்தையும் பார்த்தால் மும்பை அணிதான் தலைசிறந்த ஐபிஎல் அணி என தோன்றுகிறது. 

தாங்களும் தலைசிறந்த அணிதான் என சிஎஸ்கேவும் எப்போதும் சொல்லிக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும், தங்களிடமும் 5 கோப்பைகள் இருக்கிறது என்பார்கள். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. இதில் எப்போதுமே விவாதம் இருக்கும், அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டிற்கு பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களையம் இளம் திறமைகளையும வழங்கியிருப்பதால் அவர்களுக்கு முன்னிலை பெறுவார்கள் என நினைக்கிறேன்"  என்றார்.

மும்பை இந்தியன்ஸ் - புள்ளிவிவரங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 18 சீசன்களில் 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதுவரை 277 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 151 போட்டிகளில் வென்று, 122 போட்டிகளில் தோற்றுள்ளது. 4 போட்டிகள் டையில் முடிந்துள்ளது, அதில் 2 முறை சூப்பர் ஓவரில் வென்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 55.23% ஆகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - புள்ளிவிவரங்கள

அதேநேரத்தில் சிஎஸ்கே அணி 16 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளது, 2016, 2017 சீசன்களில் சிஎஸ்கே தடை செய்யப்படடிருந்தது. சிஎஸ்கே அணி இதுவரை 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 12 முறை சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. இதுவரை 253 போட்டிகளில் விளையாடி 142 போட்டிகளில் வென்று, 108 போட்டிகளில் தோற்றுள்ளது. 1 போட்டி சமனில் முடிந்து, அதில் சூப்பர் ஓவரில் தோற்றது. 2 போட்டிகளுக்கு முடிவில்லை. சிஎஸ்கே அணியின் வெற்றி சதவீதம் 56.57% ஆகும்.

மேலும் படிக்க | இந்த வீரரை தவறவிட்டால்.. மும்பை அணிக்கு பெரிய நஷ்டம்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | CSK களமிறக்கும் இளம் சிங்கம்... உள்ளே வரும் 22 வயது வீரர்? - யார் இந்த ஜாரன் பாச்சர்?

மேலும் படிக்க | கடப்பாரை மும்பை அணி... மிரட்டும் இந்த 2 வீரர்கள் - 6வது கப் உறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1048
comment0
Report
SSSripriya Sambathkumar
Mar 21, 2026 10:12:26
Ooty, Tamil Nadu:

Nilgiris News: நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் திரைப்படங்களாக வருகின்றன. திரைப்பட சம்பவங்களும் சில சமயங்களில் நிஜமாகின்றன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு வெளிவந்து அமோக வெற்றி பெற்ற 'மஞ்சுமல் பாய்ஸ்' பட சம்பவங்கள் இப்போது நிஜமாக நடந்துள்ளன. ஆம்!! 150 அடி ஆழத்தில் விழுந்த ஒரு நபரை காவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சேர்ந்து 13 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். என்ன நடந்தது என பார்க்கலாம்.

150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயது இளைஞர்

கூடலூர் ஊசிமலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயதான இளைஞர் பல மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அந்த இளைஞர், பல்வேறு மீட்பு குழுக்கள், அமைப்புகள் மற்றும் ராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட 13 மணி நேர நீண்ட மீட்புப் பணிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை பத்திரமாக மீட்கப்பட்டார்.

செல்ஃபி எடுக்க போய் செத்துப்பிழைத்த நபர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் என்ற இளைஞர். அவர் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஊசிமலை காட்சி முனையை அவர் சுற்றிப் பார்க்கச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனேர். அப்போது, வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து 'செல்ஃபி' எடுக்க முயன்றபோது, கால் தவறி அந்த ஆழமான பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளார்.

விழுந்தாலும் விழிப்புடன் செய்த செயல்

சிவகுருநாதன் விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டபோதிலும், தான் தங்கியிருந்த விடுதியைத் தொடர்புகொண்டு உதவி கோரினார். அவரது செய்தியை பெற்று உடனடியாகச் செயல்பட்ட காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரைத் தேடும் பணியைத் தொடங்கினார்கள். இந்த பணியில் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த இளைஞர்

பள்ளத்தாக்கிற்குள் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்புக் குழுவினர் விரைவில் கண்டுபிடித்தனர். கயிறுகளை கீழே விட்டு அவரால் அதை பிடித்து ஏறி வர முடிகிறதா என காவல்துறையினர் சோதித்தனர். ஆனால், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் காரணமாக, கயிறுகளைப் பயன்படுத்தி மேலே ஏறிவர அவரால் இயலவில்லை. இது மீட்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது.

உதவிக்கு வந்த ராணுவம்

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தின் உதவியை நாடியது. ராணுவ மருத்துவக் குழுவுடன் கூடிய ஒரு சிறப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகள் மூலம் பள்ளத்தாக்கிற்குள் இறங்கியது.

முதலில் காயமடைந்த இளைஞரின் உடல்நிலையைச் சீராக்கும் வகையில் முதலுதவி அளித்த அக்குழுவினர், பின்னர் அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் பத்திரமாகப் படுக்கவைத்தனர். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் சிவகுருநாதன் மிகுந்த கவனத்துடன் பள்ளத்தாக்கிலிருந்து மேலே மீட்கப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டனர்.

மீட்கப்பட்ட சிவகுருநாதன், மேல் சிகிச்சைக்காக உடனடியாக ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விதிமுறையை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | குறைவான தொகுதிகள் கிடைத்தால்... தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவிப்பு!

மேலும் படிக்க | மாணவர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பள்ளிகளுக்கு விடுமுறை, வெளியான முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1072
comment0
Report
SGSudharsan G
Mar 20, 2026 10:04:20
Chennai, Tamil Nadu:

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

ஏப்ரல் 23இல் வாக்குப்பதிவு

கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கத்தில் வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

பரபரக்கும் நான்கு முனை போட்டி

தமிழ்நாட்டை பொருத்தவரை 234 தொகுதிகளில் 118 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையை பெரும் கட்சியோ அல்லது கூட்டணியோ தான் ஆட்சியமைக்கும். தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நடைபெற இருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட நான்கு அணிகளும் அரியணையை குறிவைத்துள்ளன.

வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மொத்தம் உள்ள இந்த 20 நாள்களில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்து, எந்தெந்த தொகுதி யார் யாருக்கு என்பதை இறுதிசெய்து, வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியாக வேண்டும்.

வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நாம் தமிழர் 

தேர்தல் களத்தில் எப்போதுமே வேட்பாளர்களை அறிவிப்பதில் நாம் தமிழர் கட்சிதான் முன்னிலை வகிக்கும். இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தவெகவின் விருப்பம் என்ன?

தவெக கூட்டணி ஆட்சி என பங்கீரங்கமாக அறிவிப்பு விடுத்தும் இதுவரை யாரும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இருப்பினும், சசிகலா தரப்பு, ராமதாஸ் தரப்பு என ஒரு சில வாய்ப்புகள் தவெகவுக்கு உள்ளது. இருப்பினும் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட விஜய் விரும்புவதாகவும் தெரிகிறது. 

திமுக கூட்டணியின் நிலை என்ன?

மறுமுனையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, மதிமுக 4, மமக 2, ஐயூஎம்எல் 2, கொமதேக 2, சிபிஐ 5 என தொகுதி பங்கீடு உறுதியாகி உள்ளது. இன்னும் சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளின் தொகுதி பங்கீடு இழுப்பறியாக உள்ளது. திமுக கூட்டணியில் போதுமா இடங்கள் ஒதுக்கப்படவில்லை என கூறி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. தவாக, தவெக உடன் கூட்டணி சேரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இன்னும் இழுபறியில் அதிமுக கூட்டணி 

இந்தச் சூழலில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யாமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த கூட்டணிக்குள் அதிமுக பாமகவை (அன்புமணி தரப்பு) மட்டுமே கொண்டுவந்தது. ஏறத்தாழ மற்ற அனைத்து கட்சிகளையும் பாஜகவே கூட்டணிக்குள் அழைத்து வந்தது. கடந்த 2024இல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் திமுக கூட்டணிக்குள் சென்றுவிட்டது. தே.ஜ. கூட்டணிக்குள் வந்த அமமுக கூட, தங்களின் தொகுதிகளை பாஜகவிடம் இருந்து கேட்டு பெறுவோம் என கூறியிருந்தது.

இபிஎஸ் அப்செட்

இதனால், பாஜக தொகுதி பங்கீட்டில் அதிக சீட் கேட்பதாகவும், தாங்கள் அழைத்து வந்த கட்சிகளுக்கும் தாங்களே தொகுதிகளை பிரித்துக்கொடுப்பதாகவும் அதிமுகவிடம் தெரிவித்துள்ளது. ஆனால், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் தாங்களே தொகுதி பங்கீட்டை நடத்திக்கொள்கிறோம் என எடப்பாடியும் விடாப்பிடியாக இருந்துள்ளார். ஆனால், அது சரிவரவில்லை. மேலும் மூன்று முறை தமிழகம் வந்த பிரதமர் மோடியும் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. இதனாலும் இபிஎஸ் அப்செட் என கூறப்படுகிறது. 

டெல்லிக்கு படையெடுக்கும் தலைவர்கள்

இதனால் இவர் டெல்லி சென்று அமித்ஷாவை இரு முறை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி, தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

நாளை வெளியாகும் அறிவிப்பு?

இந்நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் நாளை தமிழகம் வர இருப்பதாகவும், நாளையே அதிமுக தொகுதி பங்கீடு உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணிக்குள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி என்பதை இங்கு காணலாம். 

இரட்டை இலை சின்னத்திற்கு எத்தனை தொகுதி?

அதிமுக - 156

புதிய நீதிக் கட்சி - 2

புரட்சி பாரதம் - 2

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 2

இந்திய ஜனநாயக கட்சி - 2

பசும்பொன் தேசிய கழகம் - 2

பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1

அகில இந்திய பார்வர்ட் பிளாக் - 1

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் - 1

உழவர் உழைப்பாளர் கட்சி - 1

தமிழ் மாநில முஸ்லிம் லீக் - 1

சிங்க தமிழர் முன்னேற்றம் கழகம் - 1

மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

பாஜக - 30

பாமக - 18

அமமுக - 10

தமிழ் மாநில காங்கிரஸ் - 4

டெல்லியில் உறுதியான ஒப்பந்தம்

மொத்தமாக இரட்டை இலை 172 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ள 62 இடங்களில் பாஜக, பாமக, அமமுக, தமாகா கட்சிகள் தனித் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில், நாளை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? உதயசூரியனுக்கு எத்தனை சீட்?

மேலும் படிக்க | திருச்செங்கோடு தொகுதி : வெற்றி பெறப்போவது யார்? முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | திமுக கூட்டணிக்கு டாடா! தவெகவுக்கு தாவும் தவாக? வேல்முருகனின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

1092
comment0
Report
SSSripriya Sambathkumar
Mar 17, 2026 12:39:23
Perambalur, Tamil Nadu:

TN Assembly Election: தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த பதிவில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளிவந்துள்ள முக்கிய சில அறிவிப்புகள் பற்றி காணலாம்.

TN Assembly Election, Perambalur District

தமிழக சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி நேற்று செய்தியாளர்களிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) (147) மற்றும் குன்னம் (148) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் மொத்தம் 732 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி செய்தியாளர் சந்திப்பில் அளித்த முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

- பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக மொத்தம் 5,279 அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 720 காவல்துறையினரும் 125 தேர்தல் நுண் பார்வையாளர்களும் அடங்குவர்.

- பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 732 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

- இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

- அதே போல், இரு தொகுதிகளிலும், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) நியமிக்கப்பட்டுள்ளன. 

- 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

- பொது மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1800 599 4402 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.

- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை ஒரு கட்சி பக்கம் கவரும் முயற்சிகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது வோடியோ கிளிப்புகள் மூலம் வாக்காளர்களை மிரட்டும் செயல்கள் ஆகியவை பற்றிய புகார்களை அலைபேசி மூலமாக பதிவு செய்ய உதவும் வகையில், 'CVigil' என்ற செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

- தேர்தல் நேரத்தில் எடுத்துச் செல்லப்படும் ரூ.50,000 -க்கும் அதிகமான ரொக்கம் அல்லது ரூ.10,000 -க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் ஆகியவை வாகனச் சோதனையின்போது அதிகாரிகளிடம் அவற்றுக்கான உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும்.

- இந்த சிக்கல்களை தவிர்க்க, பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் தேவையான அளவு பணத்தை மட்டும் எடுத்துச்செல்லவும், தேவைப்படும் அசல் ஆவணங்களை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

- அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுக்கூட்டங்களை நடத்த, 'Suvidha' செயலி மூலம் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூரில் 4.10 லட்சம் ரூபாய் பறிமுதல்

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா் ரமேஷ் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்திலிருந்து சுவாமிமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி, 1.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | நாளை மழை வெளுக்கும்.. சென்னையிலும் இருக்கு! வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

மேலும் படிக்க | அரசியலுக்கு ஏன் வரவில்லை? ரஜினி அறிக்கையில் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

1094
comment0
Report
SGSudharsan G
Mar 17, 2026 11:25:15
Viluppuram, Kalamarudur, Tamil Nadu:

சி.வி. சண்முகம் நடிகை சர்ச்சை முழு விவரம்: திமுக ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கண்டனப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 17) நடைபெற்றது.

சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு 

இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து போராட்டத்தில் உரையாற்றியபோது, நடிகை ஒருவரது பெயரை குறிப்பிட்டு சர்ச்சையான முறையில் பேசினார்.

சி.வி. சண்முகம் பேசியது என்ன?

அதாவது, "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே போய், அனைவரின் கனவை சொல்லுங்கள் என சொல்கிறார், இவர் நிறைவேற்றி தருகிறாராம். எனக்கு நயன்தாரா வேண்டும், இவர் நிறைவேற்றி தருவாரா...?" என சி.வி. சண்முகம் பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பாலபாரதி கண்டனம்

மகளிர் பாதுகாப்பு குறித்து நடைபெறும் போராட்டத்தில், நடிகையை கண்ணியமின்றி அருவருக்கத்தக்க வகையில் மாநிலங்களவை உறுப்பினரே பேசுவதே கண்டனத்திற்குரியது என மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலபாரதி,"நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது கண்டனத்திற்குரியது. சி.வி. சண்முகம் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என பேசியிருந்தார்.

சி.வி. சண்முகம் கண்டனம்

இந்நிலையில், சி.வி.சண்முகம் தற்போது, "விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து கண்டனப் போராட்டத்தின் போது, 'ஸ்டாலினின் கனவு கூறுங்கள்' என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம்" என்றார்.

மேலும் படிக்க | 2026 தேர்தல்: யாருக்கு வெற்றி? விஜய் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் - மூத்த பத்திரிகையாளர் கணிப்பு!

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் விசிகவிற்கு எத்தனை தொகுதிகள்? முக்கிய வேட்பாளர் யார்?

மேலும் படிக்க | தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1025
comment0
Report
SGSudharsan G
Mar 17, 2026 07:25:18
Chennai, Tamil Nadu:

Rajinikanth Condemns TVK Aadhav Arjuna: ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்" என ஆதவ்வின் பேச்சை முற்றிலும் மறுத்துள்ளார். 

மேலும் ஆதவ்வின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்திற்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், அரசியல் ஆளுமைகள், திரையுலகினர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

அந்த அறிக்கையில், "அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள்; அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார். 

ரஜினிகாந்தின் பஞ்ச் பதிலடி: காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

சென்னையில் சில நாள்களுக்கு முன் நடந்த தவெக ஆர்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் பல்வேறு மிரட்டல்களை திமுக கொடுத்தது என பேசியிருந்தார். அப்போது பேசிய ஆதவ், "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்-க்கு பிறகு ஒரு பிரபலமான அரசியல் தலைவராக வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், இதே திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ரஜினி இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார், இதை நான் அவர் மீது விமர்சனமாக சொல்லவில்லை. ஆனால், மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை நம் தலைவரிடம் (விஜய்) உள்ளது" என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | ரஜினி அரசியலுக்கு வராதது ஏன் தெரியுமா? - திருமா சொன்ன முக்கிய மேட்டர்... தவெகவுக்கு பதிலடி!

மேலும் படிக்க | தவெக-வின் சகுனி.. ’ஸ்லீப்பர் செல்’ ஆக செயல்படும் ஆதவ் அர்ஜுனா.. விஜய்யை எச்சரிக்கும் உறவினர்!

மேலும் படிக்க | திமுகவிடம் இருந்து விலகியது ஏன்? முதல் முறையாக சொன்ன ஆதவ் அர்ஜுனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

999
comment0
Report
RSRK Spark
Mar 17, 2026 00:56:54
Hyderabad, Telangana:

ஐபிஎல் 2026 வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இந்த போட்டிக்கான முதல் பாதி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளனர். முதல் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளிலும் வெளிநாட்டு வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமே. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: ராஜஸ்தான் அணியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்... சிக்கலை தரும் இந்த 3 வீரர்கள்!

பாட் கம்மின்ஸ் காயம் 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவருமான பாட் கம்மின்ஸ் கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச தொடரின் போது அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பல்வேறு சர்வதேச போட்டிகளை தவறவிட்டார். குறிப்பாக ஆஷஸ் போன்ற முக்கிய தொடர்களிலும் அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் அவர் முழுமையாக விலகினார். பாட் கம்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி லீக் போட்டியிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. சமீபத்தில் தனது காயம் பற்றி பேசிய பாட் கம்மின்ஸ், "அடுத்து சில வாரங்களில் மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்க உள்ளேன். மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன்" என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் 2026ன் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 

இஷான் கிசான் புதிய கேப்டன்?

பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அடுத்ததாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற யோசனையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறங்கியுள்ளது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இருந்தாலும் ஒரு இந்திய வீரருக்கு கேப்டன்சி வழங்க வேண்டும் என்று சன்ரைசஸ் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா போன்ற தொடக்க வீரர் மற்றும் நிதிஸ் குமார் ரெட்டி போன்ற ஆல் ரவுண்டர் இருந்தாலும், அவர்களுக்கு பெரிதாக கேப்டன்சி அனுபவம் இல்லை. எனவே சமீபத்தில் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்த இஷான் கிஷனுக்கு கேப்டன்சி பொறுப்பை வழங்கலாமா என்று சன்ரைசஸ் நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் இஷான் கிசான். குறிப்பாக தனது சொந்த மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட இஷான் கிஷான் அந்த அணிக்கு முதல் முறையாக கோப்பை வென்று தனது கேப்டன்சி திறமையும் நிரூபித்துள்ளார். குறிப்பாக பைனலில் 49 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். இது போன்ற சாதனைகள் காரணமாக தான் அவருக்கு தற்போது கேப்டன்சி பதவி தேடி வந்துள்ளது. 

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் எதிர்பார்ப்பு என்ன?

கடந்த சில சீசனங்களாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற டார்கெட்டை வைத்து அதிரடியாக விளையாடி வருகிறது. இன்று அனைத்து அணிகளும் பவர் பிளேயில் கூடுதல் அதிரடியாக ஆடுவதற்கு அடித்தளம் போட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்று சொல்லலாம். குறிப்பாக அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டணி பௌலர்களை நாலா புறமும் சிதறடித்து வருகின்றனர். இதனால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த முறை முதல் போட்டியிலேயே கடந்த ஆண்டு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சன்ரைசஸ் விளையாட உள்ளது. அதுவும் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் சிக்ஸர் மழைகளை எதிர் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பாட் கம்மின்ஸ் முழுமையாக குணமடைந்து மீண்டும் அணியில் இணையும் வரை, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை இஷான் கிஷன் எவ்வாறு வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சன்ரைஸ் ஹைதராபாத் அணி விவரம்!

பாட் கம்மின்ஸ், இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேல், கமிந்து மெண்டிஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஈஷான் மலிங்கா, ஷிவம் மாவி, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஸீஷன் அன்சாரி, ஆர். ஸ்மரன், சலீல் அரோரா, ஷிவாங் குமார், சாகிப் உசேன், ஓம்கார் தர்மேல், க்ரெய்ன்ஸ் புலேத்ரா, பிரபுல் ஹிங்கே, அமித் குமார்.

மேலும் படிக்க: இந்த ஆண்டும் CSK கோப்பை ஜெயிக்காது? பிளே ஆஃப் சுற்றுக்கும் வாய்ப்பில்லை! அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

951
comment0
Report
SMShiva Murugesan
Mar 16, 2026 08:10:03
Kolkata, West Bengal:

மேற்கு வங்கம் தேர்தல் செய்திகள்: மேற்கு வங்க அரசியல் களம் இப்போது அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது! தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக முதல்வர் மம்தா பானர்ஜி ஆடிய 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. ஒட்டுமொத்த டெல்லி வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது. இதைப்பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

தேர்தல் தேதிக்கு முன் 'தக் லைஃப்' செய்த மம்தா: அதிர்ச்சியில் பாஜக!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக, மம்தா பானர்ஜி வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்புதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது./

மேற்கு வங்க தேர்தல் 2026 மம்தா பானர்ஜி DA அறிவிப்பு விவரம்

மத்திய அரசுக்கும் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் மம்தா, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால கோரிக்கையான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை அதிரடியாக விடுவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி வழங்கிய DA நிலுவைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பஞ்சாயத்து, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

மம்தா பானர்ஜி DA அறிவிப்பு எப்போது அமல்?

2009-ம் ஆண்டின் 'ROPA' விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை, வரும் 2026 மார்ச் மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணை (GO) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏன் இது மோடி அரசுக்கு பின்னடைவு

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்த பிறகு இத்தகைய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அதைத் துல்லியமாக கணித்த மம்தா, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கோப்பில் கையெழுத்திட்டு அரசாணையை வெளியிட்டுவிட்டார்.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகம் வகுத்திருந்த பாஜகவுக்கு, மம்தாவின் இந்த 'பழைய ஓய்வூதியத் திட்ட' (OPS) பாணி அணுகுமுறையும், அகவிலைப்படி அறிவிப்பும் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ட்விட்டர் அதிரடி

இது குறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். நிதித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா? 

தேர்தல் களத்தில் இந்த ஒரு அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடியை மோடி தலைமையிலான பாஜக எப்படிச் சமாளிக்கப் போகிறது? மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

மேற்கு வங்க தேர்தல் அட்டவணை 2026

தேர்தல் விவரம் முதற்கட்டம் இரண்டாம் கட்டம்
தேர்தல் நடைபெறும் தொகுதிகள் தொகுதிகள் 142 தொகுதிகள்
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 6, 2026 ஏப்ரல் 9, 2026
வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 23, 2026 ஏப்ரல் 29, 2026
வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 மே 4, 2026

மேற்கு வங்க தேர்தல் நடத்தை விதிகள்

இந்த முறை மேற்கு வங்கத்தில் கடந்த காலத்தைப் போல 8 கட்டங்களாக இல்லாமல், வெறும் 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதனால் இனி புதிய சலுகைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிக்க முடியாது.

மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் வன்முறையைத் தவிர்க்க இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் சுமார் 1.4 லட்சம் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் (1,500 கம்பெனிகள்) குவிக்கப்பட உள்ளனர்.

மேற்கு வங்க மாநில வாக்காளர் விவரம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி இளைஞர்கள் (20-29 வயது) வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பார்க்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க - இவர்களுக்கு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு - தேர்தல் அறிவிப்புக்கு முன் மாநில அரசு அதிரடி

மேலும் படிக்க - 2021ல் 8 கட்டம்... 2026ல் 2 கட்டம்... மேற்கு வங்க தேர்தலில் இந்த மாற்றம் ஏன்?

மேலும் படிக்க - Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

193
comment0
Report
Advertisement
Back to top