Nilgiris News: நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் திரைப்படங்களாக வருகின்றன. திரைப்பட சம்பவங்களும் சில சமயங்களில் நிஜமாகின்றன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு வெளிவந்து அமோக வெற்றி பெற்ற 'மஞ்சுமல் பாய்ஸ்' பட சம்பவங்கள் இப்போது நிஜமாக நடந்துள்ளன. ஆம்!! 150 அடி ஆழத்தில் விழுந்த ஒரு நபரை காவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சேர்ந்து 13 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். என்ன நடந்தது என பார்க்கலாம்.
150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயது இளைஞர்
கூடலூர் ஊசிமலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயதான இளைஞர் பல மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அந்த இளைஞர், பல்வேறு மீட்பு குழுக்கள், அமைப்புகள் மற்றும் ராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட 13 மணி நேர நீண்ட மீட்புப் பணிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை பத்திரமாக மீட்கப்பட்டார்.
செல்ஃபி எடுக்க போய் செத்துப்பிழைத்த நபர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் என்ற இளைஞர். அவர் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஊசிமலை காட்சி முனையை அவர் சுற்றிப் பார்க்கச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனேர். அப்போது, வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து 'செல்ஃபி' எடுக்க முயன்றபோது, கால் தவறி அந்த ஆழமான பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளார்.
விழுந்தாலும் விழிப்புடன் செய்த செயல்
சிவகுருநாதன் விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டபோதிலும், தான் தங்கியிருந்த விடுதியைத் தொடர்புகொண்டு உதவி கோரினார். அவரது செய்தியை பெற்று உடனடியாகச் செயல்பட்ட காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரைத் தேடும் பணியைத் தொடங்கினார்கள். இந்த பணியில் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.
பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த இளைஞர்
பள்ளத்தாக்கிற்குள் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்புக் குழுவினர் விரைவில் கண்டுபிடித்தனர். கயிறுகளை கீழே விட்டு அவரால் அதை பிடித்து ஏறி வர முடிகிறதா என காவல்துறையினர் சோதித்தனர். ஆனால், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் காரணமாக, கயிறுகளைப் பயன்படுத்தி மேலே ஏறிவர அவரால் இயலவில்லை. இது மீட்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது.
உதவிக்கு வந்த ராணுவம்
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தின் உதவியை நாடியது. ராணுவ மருத்துவக் குழுவுடன் கூடிய ஒரு சிறப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகள் மூலம் பள்ளத்தாக்கிற்குள் இறங்கியது.
முதலில் காயமடைந்த இளைஞரின் உடல்நிலையைச் சீராக்கும் வகையில் முதலுதவி அளித்த அக்குழுவினர், பின்னர் அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் பத்திரமாகப் படுக்கவைத்தனர். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் சிவகுருநாதன் மிகுந்த கவனத்துடன் பள்ளத்தாக்கிலிருந்து மேலே மீட்கப்பட்டார்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டனர்.
மீட்கப்பட்ட சிவகுருநாதன், மேல் சிகிச்சைக்காக உடனடியாக ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விதிமுறையை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | குறைவான தொகுதிகள் கிடைத்தால்... தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவிப்பு!
மேலும் படிக்க | மாணவர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பள்ளிகளுக்கு விடுமுறை, வெளியான முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 23இல் வாக்குப்பதிவு
கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கத்தில் வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
பரபரக்கும் நான்கு முனை போட்டி
தமிழ்நாட்டை பொருத்தவரை 234 தொகுதிகளில் 118 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையை பெரும் கட்சியோ அல்லது கூட்டணியோ தான் ஆட்சியமைக்கும். தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நடைபெற இருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட நான்கு அணிகளும் அரியணையை குறிவைத்துள்ளன.
வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மொத்தம் உள்ள இந்த 20 நாள்களில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்து, எந்தெந்த தொகுதி யார் யாருக்கு என்பதை இறுதிசெய்து, வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியாக வேண்டும்.
வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நாம் தமிழர்
தேர்தல் களத்தில் எப்போதுமே வேட்பாளர்களை அறிவிப்பதில் நாம் தமிழர் கட்சிதான் முன்னிலை வகிக்கும். இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தவெகவின் விருப்பம் என்ன?
தவெக கூட்டணி ஆட்சி என பங்கீரங்கமாக அறிவிப்பு விடுத்தும் இதுவரை யாரும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இருப்பினும், சசிகலா தரப்பு, ராமதாஸ் தரப்பு என ஒரு சில வாய்ப்புகள் தவெகவுக்கு உள்ளது. இருப்பினும் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட விஜய் விரும்புவதாகவும் தெரிகிறது.
திமுக கூட்டணியின் நிலை என்ன?
மறுமுனையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, மதிமுக 4, மமக 2, ஐயூஎம்எல் 2, கொமதேக 2, சிபிஐ 5 என தொகுதி பங்கீடு உறுதியாகி உள்ளது. இன்னும் சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளின் தொகுதி பங்கீடு இழுப்பறியாக உள்ளது. திமுக கூட்டணியில் போதுமா இடங்கள் ஒதுக்கப்படவில்லை என கூறி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. தவாக, தவெக உடன் கூட்டணி சேரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்னும் இழுபறியில் அதிமுக கூட்டணி
இந்தச் சூழலில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யாமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த கூட்டணிக்குள் அதிமுக பாமகவை (அன்புமணி தரப்பு) மட்டுமே கொண்டுவந்தது. ஏறத்தாழ மற்ற அனைத்து கட்சிகளையும் பாஜகவே கூட்டணிக்குள் அழைத்து வந்தது. கடந்த 2024இல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் திமுக கூட்டணிக்குள் சென்றுவிட்டது. தே.ஜ. கூட்டணிக்குள் வந்த அமமுக கூட, தங்களின் தொகுதிகளை பாஜகவிடம் இருந்து கேட்டு பெறுவோம் என கூறியிருந்தது.
இபிஎஸ் அப்செட்
இதனால், பாஜக தொகுதி பங்கீட்டில் அதிக சீட் கேட்பதாகவும், தாங்கள் அழைத்து வந்த கட்சிகளுக்கும் தாங்களே தொகுதிகளை பிரித்துக்கொடுப்பதாகவும் அதிமுகவிடம் தெரிவித்துள்ளது. ஆனால், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் தாங்களே தொகுதி பங்கீட்டை நடத்திக்கொள்கிறோம் என எடப்பாடியும் விடாப்பிடியாக இருந்துள்ளார். ஆனால், அது சரிவரவில்லை. மேலும் மூன்று முறை தமிழகம் வந்த பிரதமர் மோடியும் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. இதனாலும் இபிஎஸ் அப்செட் என கூறப்படுகிறது.
டெல்லிக்கு படையெடுக்கும் தலைவர்கள்
இதனால் இவர் டெல்லி சென்று அமித்ஷாவை இரு முறை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி, தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
நாளை வெளியாகும் அறிவிப்பு?
இந்நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் நாளை தமிழகம் வர இருப்பதாகவும், நாளையே அதிமுக தொகுதி பங்கீடு உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணிக்குள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி என்பதை இங்கு காணலாம்.
இரட்டை இலை சின்னத்திற்கு எத்தனை தொகுதி?
அதிமுக - 156
புதிய நீதிக் கட்சி - 2
புரட்சி பாரதம் - 2
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 2
இந்திய ஜனநாயக கட்சி - 2
பசும்பொன் தேசிய கழகம் - 2
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
அகில இந்திய பார்வர்ட் பிளாக் - 1
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் - 1
உழவர் உழைப்பாளர் கட்சி - 1
தமிழ் மாநில முஸ்லிம் லீக் - 1
சிங்க தமிழர் முன்னேற்றம் கழகம் - 1
மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
பாஜக - 30
பாமக - 18
அமமுக - 10
தமிழ் மாநில காங்கிரஸ் - 4
டெல்லியில் உறுதியான ஒப்பந்தம்
மொத்தமாக இரட்டை இலை 172 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ள 62 இடங்களில் பாஜக, பாமக, அமமுக, தமாகா கட்சிகள் தனித் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில், நாளை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? உதயசூரியனுக்கு எத்தனை சீட்?
மேலும் படிக்க | திருச்செங்கோடு தொகுதி : வெற்றி பெறப்போவது யார்? முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | திமுக கூட்டணிக்கு டாடா! தவெகவுக்கு தாவும் தவாக? வேல்முருகனின் பிளான் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TN Assembly Election: தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த பதிவில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளிவந்துள்ள முக்கிய சில அறிவிப்புகள் பற்றி காணலாம்.
TN Assembly Election, Perambalur District
தமிழக சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி நேற்று செய்தியாளர்களிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) (147) மற்றும் குன்னம் (148) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் மொத்தம் 732 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி செய்தியாளர் சந்திப்பில் அளித்த முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக மொத்தம் 5,279 அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 720 காவல்துறையினரும் 125 தேர்தல் நுண் பார்வையாளர்களும் அடங்குவர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 732 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அதே போல், இரு தொகுதிகளிலும், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) நியமிக்கப்பட்டுள்ளன.
- 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
- பொது மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1800 599 4402 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.
- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை ஒரு கட்சி பக்கம் கவரும் முயற்சிகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது வோடியோ கிளிப்புகள் மூலம் வாக்காளர்களை மிரட்டும் செயல்கள் ஆகியவை பற்றிய புகார்களை அலைபேசி மூலமாக பதிவு செய்ய உதவும் வகையில், 'CVigil' என்ற செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
- தேர்தல் நேரத்தில் எடுத்துச் செல்லப்படும் ரூ.50,000 -க்கும் அதிகமான ரொக்கம் அல்லது ரூ.10,000 -க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் ஆகியவை வாகனச் சோதனையின்போது அதிகாரிகளிடம் அவற்றுக்கான உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும்.
- இந்த சிக்கல்களை தவிர்க்க, பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் தேவையான அளவு பணத்தை மட்டும் எடுத்துச்செல்லவும், தேவைப்படும் அசல் ஆவணங்களை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
- அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுக்கூட்டங்களை நடத்த, 'Suvidha' செயலி மூலம் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூரில் 4.10 லட்சம் ரூபாய் பறிமுதல்
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா் ரமேஷ் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்திலிருந்து சுவாமிமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி, 1.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | நாளை மழை வெளுக்கும்.. சென்னையிலும் இருக்கு! வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மேலும் படிக்க | அரசியலுக்கு ஏன் வரவில்லை? ரஜினி அறிக்கையில் சொன்னது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சி.வி. சண்முகம் நடிகை சர்ச்சை முழு விவரம்: திமுக ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கண்டனப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 17) நடைபெற்றது.
சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு
இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து போராட்டத்தில் உரையாற்றியபோது, நடிகை ஒருவரது பெயரை குறிப்பிட்டு சர்ச்சையான முறையில் பேசினார்.
சி.வி. சண்முகம் பேசியது என்ன?
அதாவது, "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே போய், அனைவரின் கனவை சொல்லுங்கள் என சொல்கிறார், இவர் நிறைவேற்றி தருகிறாராம். எனக்கு நயன்தாரா வேண்டும், இவர் நிறைவேற்றி தருவாரா...?" என சி.வி. சண்முகம் பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாலபாரதி கண்டனம்
மகளிர் பாதுகாப்பு குறித்து நடைபெறும் போராட்டத்தில், நடிகையை கண்ணியமின்றி அருவருக்கத்தக்க வகையில் மாநிலங்களவை உறுப்பினரே பேசுவதே கண்டனத்திற்குரியது என மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலபாரதி,"நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது கண்டனத்திற்குரியது. சி.வி. சண்முகம் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என பேசியிருந்தார்.
சி.வி. சண்முகம் கண்டனம்
இந்நிலையில், சி.வி.சண்முகம் தற்போது, "விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து கண்டனப் போராட்டத்தின் போது, 'ஸ்டாலினின் கனவு கூறுங்கள்' என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம்" என்றார்.
மேலும் படிக்க | திமுக கூட்டணியில் விசிகவிற்கு எத்தனை தொகுதிகள்? முக்கிய வேட்பாளர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Rajinikanth Condemns TVK Aadhav Arjuna: ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்" என ஆதவ்வின் பேச்சை முற்றிலும் மறுத்துள்ளார்.
மேலும் ஆதவ்வின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்திற்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், அரசியல் ஆளுமைகள், திரையுலகினர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) March 17, 2026
நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
அந்த அறிக்கையில், "அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள்; அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் பஞ்ச் பதிலடி: காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
சென்னையில் சில நாள்களுக்கு முன் நடந்த தவெக ஆர்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் பல்வேறு மிரட்டல்களை திமுக கொடுத்தது என பேசியிருந்தார். அப்போது பேசிய ஆதவ், "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்-க்கு பிறகு ஒரு பிரபலமான அரசியல் தலைவராக வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், இதே திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ரஜினி இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார், இதை நான் அவர் மீது விமர்சனமாக சொல்லவில்லை. ஆனால், மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை நம் தலைவரிடம் (விஜய்) உள்ளது" என பேசியிருந்தார்.
மேலும் படிக்க | திமுகவிடம் இருந்து விலகியது ஏன்? முதல் முறையாக சொன்ன ஆதவ் அர்ஜுனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஐபிஎல் 2026 வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இந்த போட்டிக்கான முதல் பாதி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளனர். முதல் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளிலும் வெளிநாட்டு வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமே. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: ராஜஸ்தான் அணியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்... சிக்கலை தரும் இந்த 3 வீரர்கள்!

பாட் கம்மின்ஸ் காயம்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவருமான பாட் கம்மின்ஸ் கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச தொடரின் போது அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பல்வேறு சர்வதேச போட்டிகளை தவறவிட்டார். குறிப்பாக ஆஷஸ் போன்ற முக்கிய தொடர்களிலும் அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் அவர் முழுமையாக விலகினார். பாட் கம்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி லீக் போட்டியிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. சமீபத்தில் தனது காயம் பற்றி பேசிய பாட் கம்மின்ஸ், "அடுத்து சில வாரங்களில் மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்க உள்ளேன். மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன்" என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் 2026ன் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இஷான் கிசான் புதிய கேப்டன்?
பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அடுத்ததாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற யோசனையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறங்கியுள்ளது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இருந்தாலும் ஒரு இந்திய வீரருக்கு கேப்டன்சி வழங்க வேண்டும் என்று சன்ரைசஸ் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா போன்ற தொடக்க வீரர் மற்றும் நிதிஸ் குமார் ரெட்டி போன்ற ஆல் ரவுண்டர் இருந்தாலும், அவர்களுக்கு பெரிதாக கேப்டன்சி அனுபவம் இல்லை. எனவே சமீபத்தில் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்த இஷான் கிஷனுக்கு கேப்டன்சி பொறுப்பை வழங்கலாமா என்று சன்ரைசஸ் நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் இஷான் கிசான். குறிப்பாக தனது சொந்த மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட இஷான் கிஷான் அந்த அணிக்கு முதல் முறையாக கோப்பை வென்று தனது கேப்டன்சி திறமையும் நிரூபித்துள்ளார். குறிப்பாக பைனலில் 49 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். இது போன்ற சாதனைகள் காரணமாக தான் அவருக்கு தற்போது கேப்டன்சி பதவி தேடி வந்துள்ளது.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் எதிர்பார்ப்பு என்ன?
கடந்த சில சீசனங்களாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற டார்கெட்டை வைத்து அதிரடியாக விளையாடி வருகிறது. இன்று அனைத்து அணிகளும் பவர் பிளேயில் கூடுதல் அதிரடியாக ஆடுவதற்கு அடித்தளம் போட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்று சொல்லலாம். குறிப்பாக அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டணி பௌலர்களை நாலா புறமும் சிதறடித்து வருகின்றனர். இதனால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த முறை முதல் போட்டியிலேயே கடந்த ஆண்டு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சன்ரைசஸ் விளையாட உள்ளது. அதுவும் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் சிக்ஸர் மழைகளை எதிர் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பாட் கம்மின்ஸ் முழுமையாக குணமடைந்து மீண்டும் அணியில் இணையும் வரை, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை இஷான் கிஷன் எவ்வாறு வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சன்ரைஸ் ஹைதராபாத் அணி விவரம்!
பாட் கம்மின்ஸ், இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேல், கமிந்து மெண்டிஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஈஷான் மலிங்கா, ஷிவம் மாவி, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஸீஷன் அன்சாரி, ஆர். ஸ்மரன், சலீல் அரோரா, ஷிவாங் குமார், சாகிப் உசேன், ஓம்கார் தர்மேல், க்ரெய்ன்ஸ் புலேத்ரா, பிரபுல் ஹிங்கே, அமித் குமார்.
மேலும் படிக்க: இந்த ஆண்டும் CSK கோப்பை ஜெயிக்காது? பிளே ஆஃப் சுற்றுக்கும் வாய்ப்பில்லை! அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
DA Arrears | தேர்தல் தேதிக்கு முன் 'தக் லைஃப்' செய்த முதல்வர்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மேற்கு வங்கம் தேர்தல் செய்திகள்: மேற்கு வங்க அரசியல் களம் இப்போது அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது! தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக முதல்வர் மம்தா பானர்ஜி ஆடிய 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. ஒட்டுமொத்த டெல்லி வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது. இதைப்பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.
தேர்தல் தேதிக்கு முன் 'தக் லைஃப்' செய்த மம்தா: அதிர்ச்சியில் பாஜக!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்குச் சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக, மம்தா பானர்ஜி வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்புதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது./
மேற்கு வங்க தேர்தல் 2026 மம்தா பானர்ஜி DA அறிவிப்பு விவரம்
மத்திய அரசுக்கும் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் மம்தா, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால கோரிக்கையான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை அதிரடியாக விடுவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி வழங்கிய DA நிலுவைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பஞ்சாயத்து, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
மம்தா பானர்ஜி DA அறிவிப்பு எப்போது அமல்?
2009-ம் ஆண்டின் 'ROPA' விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை, வரும் 2026 மார்ச் மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணை (GO) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இது மோடி அரசுக்கு பின்னடைவு
தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்த பிறகு இத்தகைய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அதைத் துல்லியமாக கணித்த மம்தா, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கோப்பில் கையெழுத்திட்டு அரசாணையை வெளியிட்டுவிட்டார்.
மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகம் வகுத்திருந்த பாஜகவுக்கு, மம்தாவின் இந்த 'பழைய ஓய்வூதியத் திட்ட' (OPS) பாணி அணுகுமுறையும், அகவிலைப்படி அறிவிப்பும் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ட்விட்டர் அதிரடி
இது குறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். நிதித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா?
தேர்தல் களத்தில் இந்த ஒரு அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடியை மோடி தலைமையிலான பாஜக எப்படிச் சமாளிக்கப் போகிறது? மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
மேற்கு வங்க தேர்தல் அட்டவணை 2026
| தேர்தல் விவரம் | முதற்கட்டம் | இரண்டாம் கட்டம் |
| தேர்தல் நடைபெறும் தொகுதிகள் | தொகுதிகள் | 142 தொகுதிகள் |
| வேட்புமனு தாக்கல் கடைசி நாள் | ஏப்ரல் 6, 2026 | ஏப்ரல் 9, 2026 |
| வாக்குப்பதிவு நாள் | ஏப்ரல் 23, 2026 | ஏப்ரல் 29, 2026 |
| வாக்கு எண்ணிக்கை | மே 4, 2026 | மே 4, 2026 |
மேற்கு வங்க தேர்தல் நடத்தை விதிகள்
இந்த முறை மேற்கு வங்கத்தில் கடந்த காலத்தைப் போல 8 கட்டங்களாக இல்லாமல், வெறும் 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதனால் இனி புதிய சலுகைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிக்க முடியாது.
மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தல் வன்முறையைத் தவிர்க்க இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் சுமார் 1.4 லட்சம் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் (1,500 கம்பெனிகள்) குவிக்கப்பட உள்ளனர்.
மேற்கு வங்க மாநில வாக்காளர் விவரம்
மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி இளைஞர்கள் (20-29 வயது) வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பார்க்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க - 2021ல் 8 கட்டம்... 2026ல் 2 கட்டம்... மேற்கு வங்க தேர்தலில் இந்த மாற்றம் ஏன்?
மேலும் படிக்க - Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Harish Rana Euthanasia: உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் தங்கி இருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அன்று முதல் கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமாவில் நினைவின்றி இருந்துள்ளார். அதாவது, உயிர் இருந்தாலும் உடலில் ஒரு அசைவு கூட இன்றி இருந்துள்ளார்.
ஹரிஷ் ராணாவின் இறுதி நிமிடங்கள்...
2013ஆம் ஆண்டில் இருந்து ஹரிஷ் ராணா உயிர் காக்கும் கருவிகளை பயன்படுத்தி வந்தார். சுவாசிப்பதற்கு டிரக்கியோஸ்டமி குழாய், உணவை உட்கொள்வதற்கு காஸ்ட்ரோஜெஜுனோஸ்டமி குழாய் ஆகியவை அவருக்கு உதவின. படுத்த படுக்கையாகிவிட்ட ஹரிஷ் ராணா, பல வருடங்களாக மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இது பயனளிக்காது என்பதை அறிந்த பின்னரே பெற்றோர் கருணை கொலை முடிவை எடுத்தனர்.
தங்களால் இனி தங்களது மகனை கவனித்துக் கொள்ள இயலாது என்று கூறி, ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், நாட்டில் முதல்முறையாக உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதன்படி ஹரிஷ் ராணாவின் உயிர் காக்கும் மருத்துவ இணைப்புகளை மருத்துவர்கள் துண்டித்தனர். அவரது தாயார் பிரியா விடை கொடுத்த சம்பவம் இணையவாசிகளை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"Forgive everyone… apologize to everyone… it’s time to go now, okay?"
— BALA (@erbmjha) March 15, 2026
Harish Rana has been brought to AIIMS, Delhi. His life support will now be removed.
pic.twitter.com/qZt4RYtA3x
22 விநாடி வீடியோ வைரல்
மனதை உருக்கும் 22 விநாடி வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர், அவரின் கடைசி நிமிடங்களில் அவருடன் இருக்கும் தருணத்தை வீடியோவில் காண முடிகிறது. தீராத வலியில் இருந்து விடுதலையாகும் தனது மகனின் முகத்தை பார்த்து, ஹரிஷ் ராணாவின் பின்னால் அமர்ந்திருக்கும் அவரது தாயார் உணர்ச்சிவசப்படுவதை வீடியோவில் காண முடிகிறது.
சமூக கலாச்சார தன்னார்வ அமைப்பான பிரம்ம குமாரி அமைப்பினர் தொடர்ந்து ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்த அமைப்பினர்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்துகொடுத்து உச்ச நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு சட்டப்போராட்டம் நடத்த உதவினர். இன்று வெளியான வீடியோவில் பிரம்ம குமாரி அமைப்பைச் சேர்ந்த பெண், ஹரிஷ் ராணாவின் நெற்றியில் திலகமிடுவதை பார்க்க முடிகிறது. "அனைவரையும் மன்னியுங்கள், எல்லோரிடமும் மன்னிப்பு கேள். இப்போது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது..." என அந்த பெண் திலகமிடும்போது ஹரிஷ் ராணாவிடம் சொல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
அருணா ஷான்பாக் கருணைக் கொலை வழக்கு
சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான செவிலியர் அருணா ஷான்பாக் என்பவருக்கு 'உயிர் நீக்கம்' உரிமையை உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.
அவரை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்காத சூழலில், அவர் சுமார் 40 ஆண்டுகள் கோமா நிலையிலேயே இருந்தார். கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் பின்னர் கருணைக்கொலையை நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், செயலில் இருப்பவரை கருணைக்கொலை செய்வதை இறுதியில் மறுத்தது. தொடர்ந்து அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2015இல் நிமோனியாவால் அவர் உயிரிழந்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
ஆனால், தற்போது ஹரிஷ் ராணாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணை கொலை செய்ய அனுமதி அளித்திருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. மேலும், பெற்றோரை பாராட்டியது. நீதிபதிகள் அவர்களின் தீர்ப்பில், "ஒருவரை நேசிப்பது என்பது மகிழ்ச்சியான நேரங்களில் மட்டுமல்ல, அவர்களின் சோகமான மற்றும் கஷ்ட காலத்திலும் அவர்களுடன் இருப்பதும் அரவணைப்புதான்" என குறிப்பிட்டனர். மேலும், பெற்றோர் ஆழ்ந்த சோகத்தால் வாடியிருப்பதையும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
"கடந்த 13 ஆண்டுகளாக, வழக்கு தொடுத்தவர் (ஹரிஷ் ராணா) வலியாலும், துன்பத்தாலும் நிரம்பிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நம்மில் பெரும்பாலானோர் போல் இன்றி, அவரது வேதனைக்கு குரல் கொடுக்கும் திறன் கூட அவருக்கு இல்லாமல் போனதால், அந்த வலியும் துன்பமும் இன்னும் கொடூரமானது. வழக்கு தொடுத்தவரின் பெற்றோரம், உடன்பிறந்தவர்களும் ஆதரவு தூண்களாக நிற்பது மிகுந்த மரியாதையுடன் கவனிக்கின்றோம். அவரை பராமரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அவர்களை சோர்வடைய வைத்துள்ளன. இருந்தாலும் அதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மேலும் கருணை கொலைக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, இந்த உத்தரவு மரணத்தை தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல என்றும் மாறாக செயற்கையாக ஆயுளை நீட்டிக்க வேண்டாம் என்பதை பற்றியது என குறிப்பிட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மொத்தமும் விஜய்யை சுற்றி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் யாருடன் கூட்டணிக்கு செல்வார் அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளார் என்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்பட உள்ளதாகவும் பேசப்பட்ட வந்தது. இருப்பினும் இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரக்பூர்வ அறிவிப்பும் இல்லை, மறுப்போம் இல்லை. இதனால் பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதானா என்ற சந்தேகமும் எழுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது.
மேலும் படிக்க: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு! முழு விவரம்

விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி!
தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு 80 சீட்டுகள் தருவதாகவும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடமும், துணை முதலமைச்சர் பதவியும் தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் விஜய் தரப்பில் எங்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் பாஜகவும், அதிமுக தரப்பும் விஜய்யுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற குழப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் கூட்டணி தொடர்பான குழப்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
CTR. நிர்மல் குமார் பதவு!
இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார், "வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச் செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஐடி விங்
மேலும் தமிழக வெற்றிக் கழக ஐடி விங் சார்பில் வெளியான அறிக்கையில், " கல்லாப் பெட்டி கனவுகளும்... கற்பனைப் போர் வீரர்களும்! தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி "உண்மைக்குப் புறம்பான" செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னர் இதேபோல் திரு. பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. "அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்" என்று “வாடகை வியாபாரி” ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், "நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது" என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.
மீண்டும் அதே ‘பழைய ஸ்கிரிப்ட்டை’ அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில "கல்லாப் பெட்டி" முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை.. தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும். போட்டிக்கு என்று சில "Virtual Warriors" உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே "ஜோசியம்" பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஒடிசா கட்டாக் தீ விபத்து செய்திகள்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவமனையின் டிரௌமா கேர் ஐசியூ பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயமடைந்தனர். முதல்வர் மோகன் சரண் மாஜி நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கட்டாக் எஸ்சிபி மருத்துவமனையில் நேரிட்ட இந்தத் துயரம் உண்மையிலேயே நெஞ்சைப் பதறவைக்கிறது. ஒரு உயிர் காக்கும் இடத்தில் இப்படி ஒரு விபத்து நடப்பது என்பது ஜீரணிக்கவே முடியாத ஒன்று. இந்தச் சம்பவம் குறித்த தற்போதைய நிலவரத்தை அறிந்துக்கொள்ளுவோம்.
ஒடிசா மருத்துவமனை தீ விபத்து
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள புகழ்பெற்ற எஸ்சிபி (SCB) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா கட்டாக் தீ விபத்து: என்ன நடந்தது?
திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.30 முதல் 3.00 மணி அளவில், மருத்துவமனையின் டிரௌமா கேர் ஐசியூ (Trauma Care ICU) பிரிவில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒடிசா கட்டாக் தீ விபத்து: எத்தனை உயிரிழப்புகள்?
தீ விபத்தின் போது மற்றும் வார்டுகளை மாற்றும் போது ஏற்பட்ட பதற்றத்தில் மொத்தம் 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
#WATCH | Odisha: A fire broke out at Trauma Care ICU of S.C.B. Medical College and Hospital in Cuttack. Fire brigade present at the spot for firefighting operations. Visuals from the spot. More details awaited. pic.twitter.com/KZVF5wOy4V
— ANI (@ANI) March 16, 2026
ஒடிசா கட்டாக் தீ விபத்து: தீக்காயங்கள் நிலவரம்
நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற போது 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஒடிசா கட்டாக் தீ விபத்து: மீட்பு பணி நிலவரம்
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. சுமார் 23 நோயாளிகள் உடனடியாக மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஒடிசா கட்டாக் தீ விபத்து: அரசின் நடவடிக்கைகள்:
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
"இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். மேலும், விபத்து குறித்து விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தீ தடுப்பு நெறிமுறைகள் அவசியம் ஏன்?
மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தீ தடுப்பு நெறிமுறைகள் (Fire Safety Protocols) எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.
Tamil Nadu Politics Latest News Updates: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று (மார்ச் 15) ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், கூட்டணி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம்; அதுகுறித்து திமுகவிடம் இருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லை; முக்கிய பிரச்னைகள் குறித்து 10 கோரிக்கைகள் கொடுத்திருந்தோம்... அதற்கும் பதில் இல்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.
திமுகவின் பதிலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். முடிவு எடுக்க கட்சியில் எனக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அட்டவணையை, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.
5 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 2.18 வாக்குச்சாவடிகள் உள்ளன. 25 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தலுக்கு ஒப்பானது இந்த 5 மாநில தேர்தல் என தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்புமுனை தேர்தல்
தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான இருமுனைப் போட்டி என்பது மாறி, இம்முறை மும்முனை அல்லது சதுரங்கப் போட்டியாக தேர்தல் களம் காட்சியளிக்கிறது.
மொத்த சட்டப்பேரவை தொகுதிகள்: தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரை, 38 மாவட்டங்களில் மொத்தம் 234 உள்ளன. தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் சேர்ந்து 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முழு அட்டவணை
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி: மார்ச் 30
வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: ஏப்ரல் 6
வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் தேதி: ஏப்ரல் 7
வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 9
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி: ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி: மே 4
#BreakingNews | தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்!#ZeeTamilNews | #TNElection2026 | #TNAssemblyElection | #Date pic.twitter.com/Roa7OlIDAI
— Zee Tamil News (@ZeeTamilNews) March 15, 2026
நான்கு முனை போட்டி
நேரடிப் போட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கும். தற்போது நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்து உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தொடர்ந்து வெல்லுமா திமுக?
திமுக கூட்டணி விவரம் (DMK Allliance): முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த அணி தேர்தலைச் சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் (28 இடங்கள்), விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, தேமுதிக மற்றும் பிற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 1971ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை பிடிக்க திமுக முனைப்பு காட்டுகிறது.
'திராவிட மாடல்' சாதனைகளை முன்வைத்து இவர்கள் களம் காண்கின்றனர். காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகிவிட்ட நிலையில் விசிக, சிபிஐ, சிபிஎம், தவாக உள்ளிட்ட பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
முட்டிமோதும் அதிமுக - பாஜக
அதிமுக கூட்டணி விவரம் (AIADMK Allliance): எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக களம் இறங்குகிறது. 2024 மக்களவை தேர்தலில் முறிந்த பாஜக உடனான உறவு, தற்போது இந்த தேர்தலில் மீண்டும் இணைந்துள்ளது. அதிமுக கடந்த முறை இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அமமுக, பாமக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
கேம் சேஞ்சர் விஜய்
தமிழக வெற்றி கழகம் (TVK): நடிகர் விஜய் தொடங்கி உள்ள இந்தப் புதிய கட்சி, 2026 தேர்தலில் ஒரு 'கேம் சேஞ்சராக' பார்க்கப்படுகிறது. "திமுகதான் எங்களது அரசியல் எதிரி" என நேரடியாக அறிவித்து, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். இது இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டை பிரிக்கும் நாதக
நாம் தமிழர் கட்சி (NTK): வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி நிலைப்பாடு என்பது வாக்கு சதவிகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பிரிக்கும். சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Kerala Election Date 2026: கேரளா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. முழு விவரம்
மேலும் படிக்க | புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு! முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது.
Ajith Kumar Latest c.twitter.com/CWovYqSIa7
— SmartBarani (@SmartBarani) March 13, 2026
ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம்
இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசிங் அடையாளங்கள் ஒன்றிணைந்துள்ளன என்றும், மகிந்திராவின் மின்சார மோட்டார்ஸ்போர்ட் பிரிவுடன் அஜித்தின் நல்லுறவையும் இது வலுப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் அஜித் குமார் முன்னணி நடிகராக இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம் பெற்றவர். ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல ரேஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், தனது சொந்த அணியான அஜித் குமார் ரேசிங் மூலம் சர்வதேச ரேசிங் அரங்கிற்கு வெற்றிகரமாக திரும்பினார். அதாவது, 2025 துபாய் 24H எண்ட்யூரன்ஸ் போட்டியில் 991 பிரிவில் P3 இடத்தையும், கிரெவென்டிக் 24 ஹவர்ஸ் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில் முகெல்லோ சுற்றில் P3 மற்றும் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றில் P2 இடத்தையும் பெற்றார்.
#NewsUpdate | அஜித்துக்கு மஹிந்திரா நிறுவனம் கார் பரிசு#ZeeTamilNews | #AjithKumar | #AnandMahindra | #Mahindra | @anandmahindra pic.twitter.com/Twi2LPMWJe
— Zee Tamil News (@ZeeTamilNews) March 14, 2026
பிஈ 6 ஃபார்முலா எடிஷன்
பிஈ 6 ஃபார்முலா எடிஷன் உலகின் முதல் ஃபார்முலா ஈ தழுவிய சிறப்பு பதிப்பு எஸ்யுவி ஆகும். எஃப்ஐஏ ஃபார்முலா ஈ உலக சாம்பியன்ஷிப்பில் மகிந்திரா பங்கேற்ற பன்னிரண்டு சீசன்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 282 bhp திறன் கொண்ட ரியர் டிரைவ் மின்சார மோட்டார் மற்றும் 380 Nm டார்க் திறனுடன், இந்த எஸ்யுவி 0–100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் சென்றடையும். ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு டிராக், பிரீமியம் சூட் லெதரெட் உள் அலங்காரம், 79 kWh பேட்டரி மற்றும் 180 kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றுடன் உயர் செயல்திறன் மற்றும் சிறந்த மின்சார இயக்க அனுபவத்தை இந்த வாகனம் வழங்குகிறது.
Mahindra Present a Gift @MahindraRise BE 6 Formula E Edition to Our Beloved AK si
—@AjithAzar25) March 12, 2026
Note : Full Next Post #Ajithkumar #AK64 #AK pic.twitter.com/wiTBhRkWNe
AK and family gifted with Mahindra BE 6 Formula E Edition by Mahindra company for his contribution to Automobile sports! #AjithKumar pic.twitter.com/ppk5K2kO35
— Red Drago@ajithianforevr) March 12, 2026
மேலும் படிக்க | ஜனநாயகன் படத்திற்கு அமேசான் வைத்த ஆப்பு! ஓடிடியிலும் வெளியாகாதா? என்ன விவரம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
குளிர்காலம் முடிந்து தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகரங்களை தாண்டி கிராம பகுதிகளிலும் குடிநீருக்காக 20 லிட்டர் தண்ணீர் கேன்களை வாங்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மூலம் குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் 20 லிட்டர் தண்ணீர் கேன்களின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்தான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க: வாடகைக்கு வீடு விடுபவர்கள் கவனத்திற்கு! இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
அழுக்கு கேன்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும்!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு இன்றி தண்ணீர் கேன்கள் விநியோகிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாசி பிடித்த மற்றும் அழுக்கான கேன்களில் தண்ணீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பாசிப்பிடித்த, அசுத்தமான மற்றும் தரமற்ற முறையில் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உடனடியாக ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கேன்களில் கட்டாயம் இருக்க வேண்டியவை
20 லிட்டர் தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு தண்ணீர் கேன்களிலும் சில குறிப்பிட்ட தகவல்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அந்த தண்ணீர் கேன்களில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, FSSAI உரிமை எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஒரு குடிநீர் கேன்களை அதிக பட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த வரம்பை மீறி பழைய கேன்களை பயன்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிநீரின் தரம் மற்றும் தாதுக்கள்
பொதுமக்கள் குடிக்கும் பாதுகாப்பான குடிநீரில் குறிப்பிட்ட அளவு தாதுக்கள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதன்படி விற்கப்படும் 20 லிட்டர் கேன்களில் கால்சியம் அளவு லிட்டருக்கு 10 முதல் 75 மில்லி கிராம் வரையும், மக்னீசியம் அளவு லிட்டருக்கு ஐந்து முதல் 30 மில்லி கிராம் வரையும் சரியான விகிதத்தில் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஒன்றாக செயல்பட்டு குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
அரசு நிர்ணயத்துள்ள விதிகள்
அரசு நிர்ணயத்துள்ள விதிகளையும், முறையான தரச் சான்றிதழ்கள் மற்றும் எந்தவித அனுமதியும் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீதும் சட்டவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை மட்டும் இன்றி அந்த குறிப்பிட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஹரித்வார் - ரிஷிகேஷ் டூர்.! கம்மி விலையில் ஐஆர்சிடிசி புதிய பேக்கேஜ்
மேலும் படிக்க | ரயில்வேயின் ஆன்மீக பேக்கேஜ் ரெடி! குறைந்த செலவில் ஒரு ராயல் பயணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ