Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chennai600003
CSK உற்று நோக்கும் இந்த 20 வயது வீரர்... ஜடேஜாவுக்கு சரியான மாற்று கிடைச்சாச்சு...!
SGSudharsan G
Dec 03, 2025 12:39:59
Chennai, Tamil Nadu

Chennai Super Kings, IPL 2026 Mini Auction : ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும். தோனி விளையாடும் கடைசி சீசன் என கூறப்படுவதால் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு அபுதாபியில் வரும் டிச. 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் பற்பல தேவைகளுடன் மினி ஏலத்திற்கு வர இருக்கின்றன. அதிலும் கேகேஆர் அணி ரூ.63.3 கோடியுடனும், சிஎஸ்கே அணி ரூ.43.4 கோடியுடனும் ஏலத்திற்கு வருகின்றன.

Chennai Super Kings: சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர்

சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தானுக்கு டிரேட் செய்துவிட்டு, சஞ்சு சாம்சனை பெற்றிருக்கிறது. இதன்மூலம் டாப் ஆர்டர் பிரச்னையை சிஎஸ்கே தீர்த்துவிட்டது என்றே சொல்லலாம். இதனால் ராகு திரிபாதி, டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோரை சிஎஸ்கே கழட்டிவிட்டது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே என பேட்டிங் சிறப்பாக தோற்றமளிக்கிறது. இருப்பினும் ஜடேஜாவுக்கான மாற்று வீரரை சிஎஸ்கே ஏலத்தில் கண்டெடுக்க வேண்டும்.

Chennai Super Kings: சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை

ஜடேஜாவை போல் 4 ஓவர்கள் சுழற்பந்துவீச்சு வீசவும், பின்வரிசையில் பேட்டிங் செய்யவும் ஒரு இந்திய வீரர் தேவை. ஆனால், ஜடேஜா போன்ற அனுபவம் கொண்டவர் கிடைப்பது அரிதினும் அரிது. அதுவும் இந்திய வீரர் என்பது மிக மிக அரிது. இதனால்தான், மேக்ஸ்வெல் அல்லது லிவிங்ஸ்டனை எடுக்கவேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் பேசி வந்தனர். ஆனால் இப்போது மேக்ஸ்வெல் மினி ஏலத்திற்கு பதிவு செய்யாததால் அவர் ஏலத்திற்கே வரப்போவதில்லை. லிவிங்ஸ்டனின் பார்மை நம்பி அவரை எடுத்தாலும் பெரியளவில் கைக்கொடுப்பாரா என்ற சந்தேகமும் இருக்கும். இதனால்தான், அகேல் ஹூசைன், மைக்கெல் பிரேஸ்வெல் ஆகியோரையும் சிஎஸ்கே குறிவைக்கும் என கூறப்படுகிறது.

Chennai Super Kings: வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரும் தேவை 

மறுபுறம், ஆன்ட்ரே ரஸ்ஸலும் ஓய்வை அறிவித்துவிட்டதால் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிடைப்பதும் சிக்கலாகிவிட்டது. சாம் கர்ரணை சிஎஸ்கே கழட்டிவிட்டாலும், ஜேமி ஓவர்டனை தக்கவைத்திருந்தது. இருப்பினும் இன்னொரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் சிஎஸ்கேவுக்கு தேவை. ஆனால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக கேம்ரூன் கிரீன் மட்டுமே இருக்கிறார். இந்தச் சூழலில், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், வேகப்பந்துவீச்சு் ஆல்-ரவுண்டர் என இரண்டு வெளிநாட்டு வீரர்களை எடுத்தாலும் பிளேயிங் லெவனில் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும். பிரேவிஸ், நூர் அகமது, எல்லிஸ் ஆகியோரின் இடம் உறுதி என்பதால் பிளேயிங் லெவனில் ஒரே வெளிநாட்டவரை விளையாட வைக்க இயலும்.

Chennai Super Kings: இந்திய ஆல்-ரவுண்டரின் தேவை

இதனால், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இரண்டிலும் இந்திய வீரர்களை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும். சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் இந்தியாவில் கொட்டிக்கிடந்தாலும் கூட, சிஎஸ்கேவுக்கு தேவை என்பது ஒரு பினிஷர்தான். அந்த வகையில், பின்வரிசையில் இறங்கி அதிரடி காட்டக்கூடிய வீரராக 20 வயதான உத்தர பிரதேச வீரர் பிரசாந்த் வீர் என்பவரை சிஎஸ்கே குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai Super Kings: யார் இந்த பிரசாந்த் வீர்?

2022ஆம் ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் மூலம் பிரசாந்த் வீர் கவனம் ஈர்த்தார். அதன்பின் 2023ஆம் ஆண்டிலேயே சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் களமிறங்கினார். தொடர்ந்து, உள்நாட்டு தொடர்களில் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்த பிரசாந்த் வீர், இந்தாண்டு நடந்த UPT20 லீக் தொடரில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தினார். அந்த தொடரில் 10 போட்டிகளில் 320 ரன்களை 155.34  ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார், பிரசாந்த். அதில் 3 அரைசதமும் அடக்கம். மேலும், 6.69 எகானமியில் பந்துவீசி 8 விக்கெட்டுகளையும் சரித்தார். ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் திறனும் இவரிடம் இருந்தது. மேலும், UPT20 தொடரின் இந்த சீசனில் வளர்ந்தவரும் வீரருக்கு வழங்கப்படும் Emerging Player of The Season விருதை வென்றார்.

Chennai Super Kings: SMAT தொடரிலும் கலக்கல்

23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் பிரசாந்த் வீரர் கலக்கினார். இந்தாண்டில் மட்டும் 5 போட்டிகளில் 255 ரன்களை அடித்து 14 விக்கெட்டை எடுத்திருக்கிறார். அதேநேரத்தில், 23 வயதுக்குட்பட்டோருக்கான தொடரின் காலிறுதிப்போட்டியில் 22 பந்துகளில் 61 ரன்கள் என அதிரடியாக ரன்களை குவித்தது மட்டுமின்றி அந்த போட்டியில் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதுவே அவரை சீனியர் அணி பக்கம் கொண்டுவந்தது. மேலும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவர் கவனம் ஈர்க்கும் வகையில் விளையாடினார். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக அதுவும் டெத் ஓவர்களில் ஆகிப் நபி மற்றும் யுத்விர் சிங் ஆகியோரை எதிர்கொண்டு 10 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். மேலும், அதே போட்டியில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டையும் கைப்பற்றினார். 

Chennai Super Kings: சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுக்கும் 

ஜடேஜாவை போல் பிரசாந்த் வீர் இடதுகை வீரர் ஆவார். இவருக்கு இருக்கும் பினிஷிங் திறன் மற்றும் ஆல்-ரவுண்டிங் திறன் ஆகியவற்றுக்காகவே சிஎஸ்கே இவரை நிச்சயம் ஏலத்தில் குறிவைக்கும். சிஎஸ்கேவிடம் அதிகம் தொகை இருப்பதால் இவருக்கு கடும் போட்டி இருக்கும்பட்சத்தில் அதிக தொகையை முதலீடு செய்யவும் தயக்கம் காட்டாது. 

மேலும் படிக்க |  கோடிகள் கொட்டும் மினி ஏலம்: 2026-ல் இந்த ஒரு வீரருக்கு ஜாக்பாட் உறுதி?

மேலும் படிக்க |  வெறியோடு காத்திருக்கும் CSK... ஏலத்தில் இந்த இந்திய பௌலருக்கு கோடிகள் கொட்டுமாம்...!

மேலும் படிக்க |  ஏன் திடீர் என மேக்ஸ்வெல், ரஸ்ஸல் ஐபிஎல்லில் இருந்து விலகினர்? காரணம் இது தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RSRK Spark
Dec 04, 2025 08:22:35
Chennai, Tamil Nadu:

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற இமாலய சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடியின் நீண்டகால சாதனையை தகர்த்தெறிந்துள்ள ரோஹித், தற்போது சிக்ஸர் கிங் ஆக மகுடம் சூடியுள்ளார். ஆனால், உலகையே தனது அதிரடியால் மிரட்டும் ரோஹித் ஷர்மாவால், ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் மட்டும் இதுவரை ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மையாகும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ரோஹித் ஷர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் அவர் விளாசிய 3 பிரம்மாண்ட சிக்ஸர்கள் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க | ருதுராஜ் சதத்தால் இந்திய அணியில் இடம் உறுதி - ஆனால் இந்த 3 வீரர்களுக்கு ஆபத்து...!

அப்ரிடியின் 15 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு

கடந்த 15 ஆண்டுகளாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி வசமே இருந்தது. தற்போது தனது 38-வது வயதில் ரோஹித் ஷர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார். 
   

  • புதிய சிக்ஸர் நாயகன்: ரோஹித் ஷர்மா - 352 சிக்ஸர்கள் (இதுவரை).
  • இரண்டாம் இடம்: ஷாஹித் அப்ரிடி - 351 சிக்ஸர்கள் 
  • மூன்றாம் இடம்: கிறிஸ் கெயில் - 331 சிக்ஸர்கள் 
  • நான்காம் இடம்: சனத் ஜெயசூர்யா - 270 சிக்ஸர்கள் 
  • ஐந்தாம் இடம்: எம்.எஸ். தோனி - 229 சிக்ஸர்கள்

ரோஹித்தின் இந்த சாதனை பயணம் மிகவும் பிரம்மாண்டமானது. குறிப்பாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் அவர் அதிகபட்சமாக 93 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். மேலும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 சிக்ஸர்களை விளாசி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். உலக கோப்பை வரலாற்றிலும் அதிக சிக்ஸர்கள் (54) அடித்த வீரர் இவரே.

சிக்ஸர் மழைக்கு தப்பிய ஒரே பந்துவீச்சாளர்

வேகப்பந்து வீச்சில் 232 சிக்ஸர்களும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்ஸர்களும் விளாசி தள்ளிய ரோஹித் ஷர்மா, தனது 277 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் (Marlon Samuels) வீசிய பந்துகளில் மட்டும் ரோஹித்தால் இதுவரை ஒருமுறை கூட சிக்ஸர் அடிக்க முடியவில்லை. புள்ளிவிவரங்களின்படி, ரோஹித் ஷர்மா மார்லன் சாமுவேல்ஸ் வீசிய 100-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் மைதானத்திற்கு வெளியே விரட்டியடித்த ரோஹித்தால், பகுதிநேர பந்துவீச்சாளரான சாமுவேல்ஸின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாதது கிரிக்கெட் உலகின் விசித்திரமான முரண்.

தற்போது மார்லன் சாமுவேல்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த 'சிக்ஸர் அடிக்காத' வரலாற்றை ரோஹித்தால் இனி எப்போதும் மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் விளையாடிய விராட் கோலி (159 சிக்ஸர்கள்) மற்றும் ஜாஸ் பட்லர் (182 சிக்ஸர்கள்) ஆகியோர் ரோஹித்தின் இந்த சாதனையை நெருங்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, இன்னும் பல ஆண்டுகளுக்கு 'சிக்ஸர் கிங்' அரியணையில் ரோஹித் ஷர்மாவே நீடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | விராட் கோலியின் புதிய சாதனை! ஒட்டுமொத்த சதங்கள் எத்தனை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SSSripriya Sambathkumar
Dec 04, 2025 07:14:26
New Delhi, Delhi:

8th Pay Commission Pensioners: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஓய்வூதிய உயர்வு தொடர்பாக மத்திய அரசு கூறியது என்ன? ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த நிவாரணம் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Termes of Reference: பரிந்துரை விதிமுறைகளால் அதிகரித்த கேள்விகள்

8வது ஊதியக்குழு பரிந்துரை விதிமுறைகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.8வது ஊதியக் குழு விதிமுறைகள் (ToR) தொடர்பாக பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதி அமைப்புகள் பல சந்தேகங்களை எழுப்பி பதில்களை கோரியிருந்தன. அவற்றில் சில முக்கிய அம்சங்களை நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரித்த கவலை

அரசாங்கம் ToR-ஐ அறிவித்ததிலிருந்து, 'ஓய்வூதியத் திருத்தம்' என்ற வார்த்தை அதில் இல்லாதது குறித்த ஒரு சிறிய ஆனால் முக்கியமான குறைபாடு பெரிய கவலைகளை ஏற்படுத்தியது. அறிவிக்கப்பட்ட ToR-இல் ஓய்வூதியத் திருத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இது ஒரு வழக்கமான வரைவுப் பிரச்சினை அல்ல, ஆனால் கடந்த கால நடைமுறையிலிருந்து ஒரு கவலைக்குரிய விலகல் என்று அவர்கள் வாதிட்டனர். முந்தைய ஊதியக் குழுக்கள் எப்போதும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் திருத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிட்டன. ஆனால், இந்த முறை 'ஓய்வூதியம்' என்ற வார்த்தை ஒதுக்கப்பட்டதும், அதற்கு பதிலாக அரசு மௌனம் காத்ததும், அரசாங்கம் 8வது ஊதியக்குழுவில் இருந்து ஓய்வூதியத் திருத்தத்தை விலக்கி வைக்க முயற்சிக்கிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியது.

Parliament Winter Session: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

இப்போது, ​​அரசாங்கம் இறுதியாக இதற்கு பதிலளித்துள்ளது. இந்த தெளிவுபடுத்தல் சில நிவாரணங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய திருத்தம் 8வது ஊதியக்குழுவின் ஒரு பகுதி என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்தது. இது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

Finance Ministry: நிதி அமைச்சகம் அளித்த விளக்கம்

மாநிலங்களவையில், நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், இந்த நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியது. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதன் பரிந்துரைகளை வழங்கும்” என்று கூறினார். இதன் மூலம், முந்தைய கமிஷன்களைப் போலவே, 8வது சம்பளக் குழுவிலும் ஓய்வூதிய திருத்தம் நடைபெறும் என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து ஊழியர்கள் சங்கங்கள் வெளிப்படுத்திய மிகப்பெரிய கவலைகளில் ஒன்றை இந்த தெளிவுபடுத்தல் நேரடியாகக் குறிப்பிடுகிறது.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களிடையே குழப்பம் ஏற்பட காரணம் என்ன?

8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளை அரசாங்கம் நவம்பர் 3, 2025 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டாலும், விரிவான ToR பல வித கேள்விகளை எழுப்பியது. ஏனெனில், இதில் ஓய்வூதிய திருத்தம் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.  ToR -இல் இடம்பெற்ற “பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவு” என்ற வரியும் சில சங்கடங்களை உண்டு பண்ணியது. இதை, சமூகப் பாதுகாப்பை விட நிதி நிலைக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாக ஓய்வூதியதாரர் குழுக்கள் கருதின.

69 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், பணிபுரியும் ஊழியர்களுடன் சமநிலையைப் பராமரிக்க அவ்வப்போது திருத்தங்களை நம்பியிருப்பதால், இந்த நிச்சயமற்ற தன்மை விரைவாக ஒரு பெரிய கவலையாக மாறியது. ஓய்வூதிய திருத்தத்தை விலக்குவது ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்றும், இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்து, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதின. தற்போது நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்துள்ள பதில் இந்த அச்சத்தை நீக்குகிறது.

DA Merger: DA இணைப்பு சாத்தியமில்லை

ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் கிடைத்தது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வியில், அரசாங்கம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றை உடனடியாக அடிப்படை ஊதியத்துடன் இணைக்குமா என்றும் கேட்கப்பட்டது. குறிப்பாக அகவிலைப்படி 50% ஐத் தாண்டிய பிறகு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையாக இது உள்ளது. ஆனால் நிதி அமைச்சகம், "தற்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை." என்று கூறி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

8வது ஊதியக்குழு ஓய்வூதிய திருத்தம் சுருக்கமாக....

- ஓய்வூதிய திருத்தம் எப்போதும் ஊதியக்குழுக்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்துள்ளன.

- ஓய்வூதியம் அவ்வப்போது திருத்தப்படாவிட்டால், வயதான ஓய்வூதியதாரர்களின் வருமானம் அவர்களது செலவுகளுடன் ஒத்துப்போவதில்லை.

- இதனால், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் இடைவெளிகள் விரிவடைகின்றன. மேலும் இந்தியாவின் ஓய்வூதிய முறையின் முக்கிய அம்சமான சமத்துவக் கொள்கை பலவீனமடைகிறது.

- 8வது ஊதியக்குழு ஓய்வூதியங்களைப் புறக்கணித்தால், ஓய்வூதியதாரர் நலன் கையாளப்படும் விதம் நிரந்தரமாக மாற்றிவிடும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சின. 

- செவ்வாயன்று கிடைத்த தெளிவுபடுத்தல் பாரம்பரிய கட்டமைப்பு அப்படியே உள்ளது என்ற நம்பிக்கையை மீட்டெடுக்கிறது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பளம், ஓய்வூதியம், DA இணைப்பு.... அரசு ஊழியர்களுக்கு டாப் 10 அப்டேட்ஸ்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: DA இணைப்பு இல்லை, ஓய்வூதிய திருத்தம் உறுதி... நாடாளுமன்றத்தில் டபுள் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

164
comment0
Report
SSSripriya Sambathkumar
Dec 04, 2025 07:13:58
Chennai, Tamil Nadu:

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும்? ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? 8வது ஊதியக்குழு முழுமையாக எப்போது அமலுக்கு வரும்? இந்த கேள்விகளுகான விடைகளை இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு இதில் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, நவம்பர் 2025 தொடக்கத்தில், மத்திய அரசு 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தது. 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அது செயல்படுத்தப்படும். இதன் விளைவாக, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளக் குழுவின் அறிக்கை மற்றும் அரசாங்க ஒப்புதலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புதிதாக அமைக்கப்பட குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க எவ்வளவு காலம் ஆகும்? சம்பளக் குழு 18 மாத காலக்கெடுவிற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமா, அல்லது அதற்கு அதிக நேரம் தேவைப்படுமா? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அரசாங்கம் அறிக்கையை அங்கீகரிக்குமா? செயல்படுத்தல் தாமதமானால், ஊழியர்களுக்கு தொடர்ந்து டிஏ கிடைக்குமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணலாம்.

8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு எவ்வளவு காலம் ஆகும்?

வரலாற்றின் அடிப்படையில் சரிபார்த்தால், அரசாங்கம் சம்பளக் குழுவை அமைத்த பிறகு அல்லது செயல்முறையைத் தொடங்கிய பிறகு, அதை செயல்படுத்த 1 முதல் 2 ஆண்டுகள் ஆகலாம். அதன் படி, 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள்  2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படலாம். 

18 மாதங்களில் அறிக்கை

8வது ஊதியக்குழு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அமைச்சர்கள் குழு அதை மதிப்பாய்வு செய்து, இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பும். இந்த பணிகளுக்கு ஒரு மாதம் வரை ஆகலாம். 8வது சம்பளக் குழு நீட்டிப்பு கோரினால், முழுமையான செயலாக்கம் 2027 இறுதி வரையும் செல்லக்கூடும். 

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் ஊதியக்குழுக்கள்

இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. குழு அறிவிக்கப்பட்ட பிறகு, அதன் முழுமையான செயலாக்கத்திற்கு 2-3 ஆண்டுகள் ஆகும். 

Arrears: அரியர் தொகை கிடைக்குமா?

8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டால், அமலாக்க தேதி முதல் அரியர் தொகை கிடைக்கும். காலக்கெடுவிற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால், சம்பளக் குழு மத்திய அரசிடம் கூடுதல் கால அவகாசம் கோரலாம் என்று அறிக்கை கூறுகிறது. தாமதமானால், கூடுதல் நிதி வழங்குவதன் மூலமோ அல்லது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலமோ அரசாங்கம் சில இடைக்கால நிவாரணங்களை அறிவிக்க முடியும். இது 5வது சம்பளக் குழுவின் போதும் செய்யப்பட்டது.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னும் முக்கிய அம்சம்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஊதிய கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய பெருக்கியாகும். தற்போதைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் இது 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவின் இது 1.92 முதல் 3.0-க்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Salary Hike: சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3.00 -க்குள் இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 இந்த வகையில் உயரும்.

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560, 
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440, 
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040, 
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260, 
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480
3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.54,000

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3.00 -க்குள் இருந்தால், மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வாங்கும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? 

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600, 
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400, 
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400, 
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100, 
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800,
3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.90,000

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நிதி அமைச்சகம்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பளம், ஓய்வூதியம், DA இணைப்பு.... அரசு ஊழியர்களுக்கு டாப் 10 அப்டேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

178
comment0
Report
SSSripriya Sambathkumar
Dec 04, 2025 06:39:31
New Delhi, Delhi:

EPS Pension, EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கான சில முக்கிய செய்திகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடைத்துள்ளன. ஊதிய உச்சவரம்பு அதிகரிக்குமா? குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை உயர்த்துமா அரசு? உயர் ஓய்வூதியத்தின் சமீபத்திய நிலை என்ன? இவற்றை பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடைத்த பதில்களை இந்த பதிவில் காணலாம்.

Parliament Winter Session: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் ஊதிய உச்சவரம்பு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விதிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியாவிடம், EPF ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்த மத்திய அரசு ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்த திட்டங்கள் குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்படன.

அரசாங்கம் எழுத்துப்பூர்வ அளித்த பதில்:

- ரூ.15,000 வரை ஊதியம் பெறும் EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக இபிஎஃப் -இன் கீழ் கவர் செய்யப்பட வேண்டும்.

- EPFO-வின் கீழ் காப்பீட்டிற்கான ஊதிய உச்சவரம்பை உயர்த்துவது விரிவான பங்குதாரர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

- சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 இன் படி, கிக் தொழிலாளர்கள் மற்றும் சாலையோரத் தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் ஊனமுற்றோர் காப்பீடு, விபத்து காப்பீடு, சுகாதாரம் மற்றும் மகப்பேறு சலுகைகள், முதியோர் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் உள்ளன.

Higher Pension: உயர் ஓய்வூதியம் கிடைக்குமா?

உயர் ஊதியத்தில் EPF ஓய்வூதியத்தை நிர்ணயித்தல் மற்றும் வழங்குதல் தொடர்பான விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவது குறித்தும், EPF இன் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பது குறித்தும் மக்களவை உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் விவரங்களைக் கேட்டனர். 04.11.2022 தேதியிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள வழிமுறைகளை காலக்கெடுவிற்குள் செயல்படுத்த EPFO ​​தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் பதிலளித்தது.

- ஜூலை 11, 2023 அன்று கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்காக ஓய்வூதியதாரர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து 17.49 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்ப்பட்டுள்ளன. இதில், ஜனவரி 31, 2025 அன்று நிறுவனங்கள் சுமார் 15.24 லட்சம் விண்ணப்பங்களை EPFO-க்கு அனுப்பின.

- EPFO-வில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் நவம்பர் 24, 2025 அன்று டிஸ்போஸ் செய்யப்பட்டுள்ளன.

- மொத்தம் 4,27,308 கோரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 34,060 வழக்குகள் தகுதியற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

- சுமார் 2,33,303 விண்ணப்பதாரர்கள் கோரிக்கைத் தொகையை டெபாசிட் செய்துள்ளனர். இதில் 96,274 பேர் தொடர்ந்து பணியில் உள்ளனர், 1,37,029 பேர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளனர்.

- 1,24,457 ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு PPOக்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,572 PPOக்கள் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளன.

EPS-95 இன் கீழ் விதிகளை இயற்றுதல்

விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான கேள்விக்கு, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் பத்தி 12 இல் இந்த ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஊதிய உச்சவரம்புக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறுபவர்கள் என இரு பிரிவில் உள்ள ஓய்வூதியதாரர்களையும் சமமாக நடத்துவதாகவும் அரசாங்கம் கூறியது.

அரசாங்கம் தனது பதிலில் பின்வரும் விவரங்கலையும் அளித்தத்து:

- பணியாளர் ஓய்வூதிய நிதியின் கார்பஸ், நிறுவனத்தின் ஊதியத்தில் 8.33 சதவீத பங்களிப்பையும், மாதத்திற்கு ரூ.15,000 வரை ஊதியத்தில் 1.16 சதவீத பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசின் பங்களிப்பையும் கொண்டுள்ளது.

- EPS 1995 இன் பத்தி 32 இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டபடி இந்த நிதி ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது - மேலும் மார்ச் 31, 2019 நிலவரப்படி நிதியின் மதிப்பீட்டின்படி, ஒரு கணக்கியல் பற்றாக்குறை உள்ளது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

EPS-95 இன் கீழ் குறைந்தபட்ச இபிஎஸ் ஓய்வூதியத்தை மாதத்திற்கு 1,000 லிருந்து 7,500 ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு தொழிலாளர் அமைச்சகம் இவ்வாறு பதிலளித்தது:

- EPS 1995 இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட் ஆதரவின் மூலம் அரசாங்கம் மாதத்திற்கு ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) ஆண்டுதோறும் EPS க்கு வழங்கப்படும் ஊதியத்தில் 1.16 சதவீத பட்ஜெட் ஆதரவிற்கு கூடுதலாக வழங்கப்படுகின்றது.

"EPS-95 திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை உறுதி செய்வதற்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்தந்த நிதிகளின் ஆரோக்கியத்தையும் அதன் மீதான எதிர்கால பொறுப்புகளையும் முறையாகக் கருத்தில் கொள்கிறது" என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பதில் கூறுகிறது.

Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?

ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எம்பி பென்னி பெஹனன் எழுப்பினார். இதற்கு பதிலளித்த மன்சுக் மண்டவியா EPF சம்பள வரம்பை உயர்த்துவதற்கான முடிவை உடனடியாக எடுக்க முடியாது என்று கூறினார். 

இந்த முடிவை எடுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் போன்ற அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், PF க்கு ஒதுக்கப்படும் தொகை அதிகமாகும்

மேலும் படிக்க | EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | EPFO 3.0: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு? ATM -இல் பணம் எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

110
comment0
Report
SGSudharsan G
Dec 04, 2025 06:23:48
Moskva, Moskva:

Russia President Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிசம்பர் 4) இந்தியா வருகிறார். ரஷ்யாவில் இருந்து இன்று மாலை டெல்லி வரும் புதின், இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Vladimir Putin India Visit: முக்கியத்துவம் பெரும் புதின் வருகை 

புதின் தனது இந்த சுற்றுப்பயணத்தில் 23வது இந்திய - ரஷ்ய வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் புதின் சந்திப்பு மேற்கொள்கிறார். குறிப்பாக, ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறை புதின் இந்தியா வருவதால், இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Vladimir Putin India Visit: எதிர்ப்பை மீறி வரவேற்பு

புதினின் இந்த சுற்றுப்பயணத்தில் கச்சா எண்ணெய், தொழிலாளர்கள், ராணுவம், அணு ஆயுதம் உள்ளிட்ட பல விஷயங்ள் குறித்து இருநாட்டு தரப்பும் கலந்தாலோசிக்கும். மேலும், புதினின் இந்திய வருகை மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தாலும், இந்தியா - ரஷ்யா உறவை பலப்படுத்தும் நோக்கில், ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரவேற்க தயாராக இருக்கிறது.

Vladimir Putin India Visit: புதினின் பாதுகாப்பு வளையம்

இவை ஒருபுறம் இருக்க, புதினை சுற்றி எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வளையம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. புதின் எங்கு பயணித்தாலும், அவர் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு அறைக்கும் பலத்த பாதுகாப்பு இருக்கும். அதாவது, இது ரஷ்யாவின் உயர்தர 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் என்பது யாராலும் கணிக்கவே முடியாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டிருக்கும். இதை பார்த்தால் நிச்சயம் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளே உங்களின் ஞாபகத்திற்கு வரும். புதின் தனது சொந்த பாதுகாப்புக்கு இந்த உயர் பாதுகாப்பு அமைப்பு அமைத்திருக்கிறார். இது ஒரு நொடி விடாமல் புதினை மிகுந்த பாதுகாப்புடன் பார்த்துக்கொள்கிறது. அந்த வகையில், புதனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உங்களையே அசரவைக்கும் 10 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

1. மர்ம சூட்கேஸ்

ரஷ்ய அதிபர் புதின் வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்றால் அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை சேமிக்க தனியே பிரத்யேகமான சூட்கேஶ் கொண்டுசெல்லப்படும் என தகவல்கள் கூறப்படுகிறது. அவரின் சிறுநீர், மலம் ஆகியவை அவரின் பாதுகாவலர்களால் சேமிக்கப்பட்டு, அந்த சூட்கேஸில் சீலிட்டு அடைக்கப்படும் என கூறப்படுகிறது. இவை ரஷ்யாவுக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் கூறப்படுகிறது. 

அதாவது, ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்த எவ்வித தகவல்களும் வெளியுலகத்திற்கு தெரிந்துவிடக்கூடாது, எந்த துப்பும் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இதை செய்கிறார்கள் என கூறப்படுகிறது. இதற்காகவே, புதின் எங்கு சென்றாலும் இவர்களும் கூடவே செல்வார்களாம். குறிப்பாக, பாத்ரூமிற்கு கூட என சொல்லப்படுகிறது. சிறு தலைமுடி கூட கிடைக்காத அளவிற்கு அவர்கள் பார்த்துக்கொள்வார்களாம். 

2. போலி புதின்

புதினை போன்று உருவ ஒற்றுமையுடன் இருப்பவர்களும் புதினின் சுற்றுப்பயணத்தில் கூடவே இருப்பார்கள் என கூறப்படுகிறது. பெரும் மக்கள் சந்திப்பு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் புதினின் உருவ ஒற்றுமையுள்ளவர்தான் இருப்பார் என கூறப்படுகிறது. அதாவது, ரஷ்ய அதிபர் புதின் அவரை போல் உருவ ஒற்றுமை கொண்ட 3 பேரை சார்ந்திருக்கிறார் என உக்ரைனின் ராணுவ தலைவர் பேசியிருந்தார். மேலும், அவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அனைவரும் நம்பும்படி புதினை போன்றே மாற்றுகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

3. சிறப்பு தொலைப்பேசி

ரஷ்யா எந்த நாட்டுக்கு பயணம் செல்வதாக இருந்தாலும் அந்நாட்டின் தற்போதைய பிரச்னை, தற்போதைய சூழல், பயங்கரவாத பிரச்சனைகள், குற்றச் சம்பவங்கள், மதம் சார்ந்த பிரச்னைகள் ஆகியவை குறித்து தெரிந்துகொள்வாராம். அதேநேரத்தில், வழக்கமான மொபைல் போன்களை ரஷ்ய அதிபர் பயன்படுத்தவே மாட்டாராம். அவருக்கு என பிரத்யேகமாக தொலைத்தொடர்பு வசதி ஏற்பாடு செய்யப்படும். அந்த தொலைப்பேசி பூத்தும் அவருக்கு முன்னரே அந்த நாட்டுக்கு வந்துவிடுமாம். 

4. விமானத்தில் இருக்கும் அந்த ஒரு பட்டன்

Ilyushin IL‑96‑300PU என்ற தனி விமானத்தில்தான் புதின் பயணிப்பார். இது 'பறக்கும் கிரெம்ளின்' என்றழைக்கப்படுகிறது. கிரெம்ளின் என்பது ரஷ்ய அதிபர் மாளிகை ஆகும். அந்தளவிற்கு அந்த தனி விமானத்தில் புதினுக்கு வசதிகள் இருக்குமாம். மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, ஏவுகணை தடுப்பு அமைப்புகள், மதுபானக் கூடம், உடற்பயிற்சிக் கூடம், அணுஆயுதத்தை செயல்படுத்த தனி பட்டன் ஆகியோவை இருக்காம். அதாவது அந்த பட்டனை அழுத்தினால் வானத்தில் இருந்து அணுஆயுத தாக்குதல் நடத்த சிக்னல் கொடுக்கப்படுமாம். அந்த விமானத்தில் 11 ஆயிரம் கி.மீ., இடைவிடாமல் பறக்கலாம் என்றும் 262 பேர் பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

5. ஒரு ஜெட் மட்டும் இல்லை

புதின் எப்போதும் ஒரு விமானத்தில் மட்டும் பறக்கமாட்டாராம். சர்வதேச சுற்றுப்பயணத்தின்போது, எதற்கும் பேக்அப்பாக ஓரிரு விமானங்கள் அவரது பிரதான விமானத்தை பின் தொடருமாம். புதின் சுற்றுலா செல்கிறார் என்றால் அவரது பாதுகாவலர்கள் இரண்டு வாரக்காலம் தனித்திருப்பார்களாம். அதாவது அவர்களது உடல்நிலை சீராக இருகக் இது மேற்கொள்ளப்படுகிறது. 

6. டிரோன்களை தடுக்கும் சாதனம்

டிரோன் தாக்குதல்கள் தற்போதைய நவீன காலகட்டத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. டிரோனை முறியடிக்கும் விதமான சாதனம் அவரது பாதுகாவலர் ஒருவரால் எப்போதும் எடுத்து வரப்படும் என கூறப்படுகிறது. 

7. 35 வயதில் ஓய்வுபெறும் பாதுகாவலர்கள்

இவரது பாதுகாவலர்கள் ராணுவத்தை விட மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள், அதேநேரத்தில் இவர்கள் மீதான கண்காணிப்பும் அதிகமாக இருக்கும். ரஷ்யாவின் ஃபெடரால் பாதுகாப்பு சேவை அகாடமியில் இருந்துதான் இவரது பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்முகத்தேர்வு, பாலிகிராப் பரிசோதனை போன்று அவர் குறித்த அனைத்தையும் சரிபார்த்த பின்னரே தேர்வு செய்வார்களாம். 

புதினின் பாதுகாவலர்கள் 5.8 அடி அல்லது 6.2 அடி உயரம் இருக்க வேண்டும், 75 கிலோவில் இருந்து 90 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும். இவர்களுக்கு வேறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். கடினமான சூழ்நிலையிலும், வானிலையிலும் இவர்கள் பயிற்சி பெற்றிருப்பார்கள். மேலும் இவர்களுக்கு 35 வயதானால் ஓய்வளிக்கப்படுவார்களாம். இந்தக் காவலர்கள் உயர்மட்ட கூட்டங்களில் கூட தலையிட்டுள்ளனர், இந்தாண்டில் கிம் ஜாங்-உன் புதினுடன் மிக நெருக்கமாக வந்தபோது, அவரை தடுத்ததை உதாரணமாக சொல்லலாம். 

8. நான்கு டயர் பஞ்சரானாலும் பிரச்னையில்லை

புதின் அவரது விமானத்தில் இருந்து ஒரு நாட்டில் இறங்கிவிட்டால், அவருடன் Aurus Senat என்ற உயர் பாதுகாப்புகள் அடங்கிய காரும் அந்நாட்டில் இறங்கும். Aurus Motors நிறுவனமும், ரஷ்யாவின் NAMI நிறுவனமும் சேர்ந்து இந்த பாதுகாப்பு காரை தயாரித்துள்ளது. துப்பாக்கி குண்டுகளால் மட்டுமில்லை, வெடிகுண்டால் கூட பாதிக்கப்படாத அளவிற்கு இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் தீ வைக்க முடியாது. அவசரத் தேவைக்கான ஆக்ஸிஜன் வசதிகள் இதிலேயே உள்ளன. இந்த காரின் நான்கு டயர்கள் பஞ்சரானாலும் எந்த பிரச்னையும் இல்லை, தொடர்ந்து அது செல்லுமாம். இது மணிக்கு 249 கி.மீ., வேகத்தில் செல்லுமாம். அனைத்து உயர் தர வசதிகளும் இதில் இருக்கிறது. 

9. பரிசோதனையகம்

புதின் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த சின்ன லேப்பும் செல்லுமாம். அதாவது இது அவர் சாப்பிட இருக்கும் உணவை பரிசோதனை செய்யுமாம். அதில் விஷம் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படுமாம். ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து தனித்து சமையல் கலைஞரையும், பணியாளர்களையும் ரஷ்யாவில் இருந்தே தனியாக அழைத்து வருவாராம். ஒரு மாதத்திற்கு முன்னரே, புதின் தங்கும் ஹோட்டலுக்கு வந்து பரிசோதனை செய்து அங்கு மாஸ்கோவில் இருந்து கொண்டுவரும் பொருள்களை அங்கு நிரப்புவார்களாம். மேலும், அவர்கள் அழைத்து வரும் சமையல் கலைஞர்கள் கூட ராணுவ பயிற்சி பெற்றவர்களாம். 

10. மனித கேடயம்

ஏதாவது ஆபத்து காலங்களில், புதினை பாதுகாப்பாக அவரது காருக்கு அழைத்துச் செல்ல அவரைச் சுற்றி மனித கேடயம் உருவாகுமாம். தொடர்ந்து அவரை பாதுகாப்பாக ரஷ்ய அனுப்பி வைக்கவும் அவர்கள் திட்டமிடுவார்களாம். 

மேலும் படிக்க | ஒன்னு கூடிட்டாங்கய்யா; ஒன்னு கூடிட்டாங்க..! ஷாக்கில் அமெரிக்கா..! நடப்பது என்ன..!

மேலும் படிக்க | மாணவிகள் கர்ப்பம் தரித்தால் உதவித்தொகை... ரஷ்யா அறிவித்த திட்டத்தால் பெரும் சர்ச்சை

மேலும் படிக்க | ரஷ்யா அதிபர் புடின் விரைவில் இறப்பார்... பரபரப்பை ஏற்படுத்திய ஜெலன்ஸ்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

112
comment0
Report
RSRK Spark
Dec 03, 2025 15:45:14
Chennai, Tamil Nadu:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், டி20 ஸ்பெஷலிஸ்ட்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் அம்பயரிடம் என்ன என்ன கருவிகள் இருக்கும் தெரியுமா?

ஹர்திக் பாண்டியா 'ரீ-என்ட்ரி'

ஆசிய கோப்பை 2025-ன் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு எந்தவொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உடற்தகுதியையும், ஃபார்மையும் நிரூபித்தார். இதன் அடிப்படையில், தென்னாப்பிரிக்கத் தொடருக்கு தேர்வுக் குழு அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு இவரது வருகை பெரும் பலமாக அமையும்.

ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஏன் இல்லை?

அணியின் அறிவிப்பில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் நீக்கம் தான். டி20 போட்டிகளில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்பட்ட இவர்கள், இந்த முக்கியமான தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியிருந்த தொடக்க வீரர் சுப்மன் கில், டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், போட்டியில் அவர் பங்கேற்பது அவரது முழுமையான உடற்தகுதியை பொறுத்தே அமையும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. அவர் முழுமையாக தேறும் பட்சத்தில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு கூட்டணி

பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா அணியின் வேகப்பந்து வீச்சு படைக்கு தலைமை தாங்குகிறார். அவருடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் இளம் வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 உலக கோப்பை விரைவில் வரும் நிலையில், இந்த தொடர் வீரர்களுக்கு மிக முக்கியமானதாக அமையும். 

இந்திய டி20 அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

மேலும் படிக்க | சிக்கலில் கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்? பிசிசிஐவுடன் திடீர் சந்திப்பு! என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

131
comment0
Report
SGSudharsan G
Dec 03, 2025 15:20:54
Deoria, Uttar Pradesh:

Uttar Pradesh Bizarre Marriage News: உத்தர பிரதேசத்தில் தியோரியா நகரில் பல மாதங்களாக திட்டமிடப்பட்ட திருமணம் வெறும் ஓரிரு நிமிடங்களில் முறிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவத்தின் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம். 

உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில் உள்ள பலுவானி எனும் பகுதியில் தந்தை வைத்திருக்கும் பலசரக்கு கடையை அவருடன் சேர்த்து கவனித்து வருபவர் விஷால் மாதேஷியா. விஷாலுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி சேலம்பூர் பகுதியைச் சேர்ந்த பூஜா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடந்து மணமகனுக்கான சடங்குகள், மணப்பெண் வீட்டில் நடந்துள்ளது. இதற்காக மாலை 7 மணியளவில் மணமகன், மணப்பெண் வீட்டுக்கு வந்துள்ளார். அன்றிரவு முழுவதும் மணப்பெண் வீட்டில் சடங்குகள் சீரும் சிறப்புமாக நடந்துள்ளன.

Bizarre Marriage News: அதிர்ச்சியில் உறைந்த மணமகன் வீட்டார்

இதற்கு மணப்பெண், மணமகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மணமகன் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. அறைக்குள் சென்ற 20 நிமிடங்களில் மணப்பெண் அறையைவிட்டு வெளியே வந்து, இனி விஷாலுடன் வாழப்போவதில்லை என பகீரங்கமாக கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அங்கிருந்த மணமகன் வீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Bizarre Marriage News: காரணத்தை சொல்லாத மணப்பெண்

முதலில் அந்த பெண் நகைச்சுவைக்காக விளையாடுகிறார் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் பிறகுதான், அவர் உண்மையாகவே சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். அறையில் என்ன நடந்தது?, என்ன பிரச்னை?, ஏன் இந்த திடீர் மாற்றம்? என விசாரித்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் எதையும் சொல்லாமல் மௌனமாகவே இருந்துள்ளார். தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறாரே தவிர அதற்கான காரணத்தை அவர் சொல்லவே இல்லை. மணமகன் வீட்டார் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், மணப்பெண் சமாதானமாகவில்லை. "எனது பெற்றோரை கூப்பிடுங்கள், இங்கு இனி என்னால் வாழவே முடியாது" என அந்த பெண் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, விஷால் குடும்பத்தினர் மணப்பெண் பூஜாவின் வீட்டாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார். பூஜாவின் பெற்றோரும், உறவினரும் கூட பிரச்னையை சுமுகமாக முடித்துவைக்கலாம் என பேசியிருக்கிறார்கள். ஆனால், விஷாலுடன் வாழ முடியாது என்ற முடிவை மட்டும் மாற்றவே இல்லை, மேலும் திடீரென அவர் அப்படி கூறுவதற்கான காரணத்தையும் சொல்லவே இல்லையாம்.

Bizarre Marriage News: பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

இதையடுத்து அவர்களின் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு மறுநாளே, அதாவது நவம்பர் 26ஆம் தேதியே இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது. சுமார் 5 மணிநேரம் மணமக்கள் வீட்டாரும், கிராமத்தினரும் இந்த பிரச்னைக்காக பேசியிருக்கின்றனர். ஆனால், அதிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், அந்த ஜோடி பிரித்துவைக்கும்படி பஞ்சாயத்தினரும் அறிவுறுத்தியிருக்கிறார். இதற்காக தனியே ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து, பரஸ்பரம் இந்த திருமணம் செல்லாது என எழுதி கையெழுத்திட்டுள்ளனர். இரு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட பரிசுகள், பணம் ஆகியோவை திருப்பிக்கொடுக்கப்பட்டன. விஷால் - பூஜா இருவரும் மறுமணம் செய்துகொள்ளலாம் என்றும் பஞ்சாயத்தில் தெரிவித்துள்ளனர். அதன்பின் பூஜா, நவம்பர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனது வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.

Bizarre Marriage News: மணமகன் சொல்வது என்ன?

இதுகுறித்து மணமகன் விஷால் கூறுகையில், "திருமணத்திற்கு முன்னரே தன்னை திருமணம் செய்துகொள்வதில் விருப்பமா, இல்லையா என எதையுமே சொல்லவில்லை. பூஜா என்னிடம் நன்றாக கூட பேசவில்லை. திருமணத்திற்கு பின் அவள் அப்படி நடந்துகொண்டது இரு வீட்டாருக்கும் சங்கடத்தையே தந்தது" என்றார். மேலும், பூஜா மீது விஷால் தரப்பில் போலீசாரிடம் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. இதன்மூலம் பூஜாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதையும், ஆனால் அதை மிக தாமதமாக வெளிப்படுத்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், அதற்கான காரணம் வெளியே தெரியவில்லை.

Bizarre Marriage News: வைரலான சம்பவம்

இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரக்காலமாகிவிட்ட நிலையில், இணையத்திலும் வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்தது தவறு என்றும் லட்சக்கணக்கில் திருமணம் செய்துவிட்டு வெறும் ஓரிரு மணிநேரத்தில் அதை வேண்டாம் என சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், அந்த பெண் தவறான முடிவுக்குச் செல்லாமல் குறைந்தபட்சகம் திருமணத்திற்கு பிறகாவது இதை கூறினாரே... என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

மேலும் படிக்க | ஆணவக்கொலை: காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண்... துயர சம்பவம்

மேலும் படிக்க | 'பொய் சொன்னா பிடிக்காது’ கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - என்னாச்சு?

மேலும் படிக்க | 2 வினாடி வீடியோவால் ரூ.5 லட்சம் சம்பாதித்த பெண்? X தளத்தில் இப்படியொரு ஆப்ஷனா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

169
comment0
Report
SGSudharsan G
Dec 03, 2025 13:47:24
Chennai, Tamil Nadu:

IND vs SA, Team India T20I Squad: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று மாலை அறிவித்துள்ளது.

கழுத்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஓடிஐ போட்டிகளில் விளையாடாத சுப்மான் கில், தற்போது டி20ஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார், துணை கேப்டன் பொறுப்பிலும் தொடர்கிறார். இருப்பினும், இன்னும் அவர் பிசிசிஐயில் உடற்தகுதியை நிருபிக்கவில்லை. அவர் உடற்தகுதியை நிருபிக்கும்பட்சத்தில் ஸ்குவாடில் இணைவார். மேலும், கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20ஐ தொடரில் விளையாடிய ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

156
comment0
Report
SGSudharsan G
Dec 03, 2025 13:16:07
Chennai, Tamil Nadu:

India vs South Africa, Ruturaj Gaikwad: தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 20வது முறையாக இந்திய அணி ஓடிஐ அரங்கில் டாஸை இன்று இழந்தது.

India vs South Africa: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்கத்தில் பந்து எக்குத்தப்பாக ஸ்விங் ஆக அதிக எக்ஸ்ட்ராஸ் இந்திய அணிக்கு பரிசாக கிடைத்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் விடாமுயற்சியுடன் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தனர். கடந்த போட்டியில் அரைசதம் கடந்த ரோஹித் இப்போட்டியில் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ஜெய்ஸ்வால் 38 பந்துகளில் 22 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

இதன்பின், ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஆட்டத்தின் சூழலை புரிந்துகொண்டு முதலில் நிதானம் காட்டினர். இருவரும் ஓரளவு செட்டாகிவிட்ட பின்னரே அடித்து விளையாடினார்கள் எனலாம். ருதுராஜ் 52 பந்துகளிலும், விராட் கோலி 47 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். இவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் தாண்டிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இருப்பினும் ருதுராஜ் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் களமிறங்கினார

India vs South Africa: விராட் கோலியின் அடுத்தடுத்த சதம்

மறுபக்கம் விராட் 105 பந்துகளில் அவரது 53வது ஓடிஐ சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு 84வது சர்வதேச சதமாகும். மேலும், இந்திய மண்ணில் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6,500 ரன்களை இன்று கடந்தார். விராட் கோலி 102 ரன்களிலும், வாஷிங்டன் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஜடேஜா இணை 69 ரன்களை குவித்தது.

India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை குவித்தது. கேஎல் ராகுல் 66 ரன்களுடனும், ஜடேஜா 55 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் யான்சன் 2 விக்கெட்டை வீழ்த்தினார். மொத்தம் 24 எக்ஸ்ட்ராஸ் பதிவாகி உள்ளது. 359 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

India vs South Africa: கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ருதுராஜ்!

இவை ஒருபுறம் இருக்க, இன்றைய ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங், இந்திய அணி இவரை மூன்று பார்மட்டிலும் நிச்சயம் இத்தனை காலம் தவறவிட்டுவிட்டது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது. உள்நாட்டு போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா ஏ தொடரிலும் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்கவாட் தற்போது மீண்டும் ஒருமுறை சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இது அவரது முதல் ஓடிஐ சதமாகும். 

ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஸ்குவாடில் இடம்பெறாத காரணத்தால்தான் ருதுராஜ் கெய்க்வாட் இத்தொடருக்கு தேர்வாகினார். உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் ஓபனரான இவருக்கு நம்பர் 4 இடத்தில் கௌதம் கம்பீர் வாய்ப்பளித்துள்ளார். முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த ருதுராஜ்க் கெய்க்வாட், 2வது போட்டியில் 77 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியிருக்கிறார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் சிறப்பான ஷாட்களை வைத்திருப்பதை இன்றைய இன்னிங்ஸில் பார்க்க முடிந்தது. நிச்சயம் இவர் இந்திய ஓடிஐ ஸ்குவாடில் நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார் எனலாம், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.

India vs South Africa: ஷ்ரேயாஸ் ஐயர் vs ருதுராஜ் கெய்க்வாட் 

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வரும்போது நம்பர் 4 இடம் யாருக்கு என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கும். ருதுராஜ் கெய்க்வாட்டை ஓபனிங்கில் இறக்கலாம் என்றால் சுப்மான் கில், ஜெய்ஸ்வால் ஏற்கெனவே வரிசையில் நிற்கிறார்கள். ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் கூட, கில் - ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவருக்கு பதில் ருதுராஜை களமிறக்க வேண்டும், அது சற்று கடினமாக காரியம் எனலாம். 

மேலும், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடக்க இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்காவில் மொத்தம் 7 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 154 ரன்களை அடித்திருக்கிறார், அதில் ஒரு அரைசதம் அடக்கம். ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவில் 2 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 9 ரன்களை மட்டுமே குவித்திருக்கிறார். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து எந்தளவிற்கு மீண்டு வருகிறாரோ, அதன்பின் தான் நம்பர் 4 இடத்தில் யார் களமிறங்குவார்கள் என கூற முடியும். இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் பவுன்சர் ஆடுகளங்களில் தடுமாறுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்தச் சிக்கல் இருக்கும்பட்சத்தில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நம்பர் 4 இடம் கிடைக்கலாம்.

India vs South Africa: மொத்தம் 3 வீரர்களின் இடத்திற்கு ஆபத்து

ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து தொடருக்குள் உடற்தகுதி பெற வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், ருதுராஜ் அந்த தொடரில் விளையாடுவது உறுதி. அதேநேரத்தில், ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டியில் மட்டுமின்றி, நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் 3 ஓடிஐ போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மட்டுமின்றி ஒருநாள் தொடர்களில் திலக் வர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டது எனலாம்.

மேலும் படிக்க | விராட் கோலியின் புதிய சாதனை! ஒட்டுமொத்த சதங்கள் எத்தனை தெரியுமா?

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் அம்பயரிடம் என்ன என்ன கருவிகள் இருக்கும் தெரியுமா?

மேலும் படிக்க | சிக்கலில் கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்? பிசிசிஐவுடன் திடீர் சந்திப்பு! என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

175
comment0
Report
VLVijaya Lakshmi
Dec 03, 2025 12:27:56
Tamil Nadu:

Tamil Nadu Government Special Bus: பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மாலை 6 மணிக்கு) 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலைமீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனைக் காணவும், மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

சிறப்புப் பேருந்து வசதி

வேலூர் மண்டலம்: பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இயக்கம்: இந்தப் பேருந்துகள் இன்றும் நாளையும் (தொடர்ந்து) இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையம்: இங்கிருந்து மட்டும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளும் வழக்கம் போல் செயல்படுகின்றன.

வேலூரில் பக்தர்கள் கூட்டம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக வரும் ஆந்திர மாநிலப் பக்தர்களும் வேலூரில் இறங்கி, இங்கிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் ஏறி திருவண்ணாமலைக்குச் செல்கின்றனர். ஆந்திராவில் இருந்தும் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு 200-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பக்தர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக, வேலூர் பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இது பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், சிவன் நெருப்பின் ரூபமாக (ஜோதிப் பிழம்பாக) காட்சி தந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள்:

அண்ணாமலையார் திருக்கோவிலுக்குப் பின் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மிகப் பிரமாண்டமான தீபம் ஏற்றப்படும். ஐதீகம்: சிவனே அக்னி ரூபமாக, அடி முடி காண முடியாத ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த தத்துவத்தை உணர்த்தும் நிகழ்வே இந்த மகா தீபம். இந்த ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றியும், கிரிவலப் பாதையிலும் திரள்வர்.

திருவண்ணாமலை கிரிவலம்:

தீபத் திருவிழாவின்போது பௌர்ணமி கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வருவர்.

மேலும் படிக்க | TNPSC: குரூப் 4 கவுன்சிலிங் தேதியை தெரிந்துகொள்வது எப்படி? - தவறவிட்டா மறுவாய்ப்பு கிடையாது!

 மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கொடுக்கும் மனு ஏற்கப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

114
comment0
Report
RSRK Spark
Dec 03, 2025 07:56:51
Chennai, Tamil Nadu:

சமூகத்தில் பின்தங்கிய மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், மத்திய அரசு 'பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை' (PM YASASVI Scholarship) என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓபிசி (OBC), இபிசி (EBC) மற்றும் டிஎன்டி (DNT) பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இந்தியாவில் பல மாணவர்கள் திறமை இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை பாதியிலேயே கைவிடும் அவல நிலை உள்ளது. இதனை மாற்றியமைக்கும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க - வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கவனத்திற்கு... வருகிறது புதிய சட்டம்!

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:

  • வகுப்பு: ஓபிசி (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • வருமானம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி: 9-ம் வகுப்பு அல்லது 11-ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் (8 அல்லது 10-ம் வகுப்பு) குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: விண்ணப்பிக்கும் போது மாணவரின் வயது 14 முதல் 20-க்குள் இருக்க வேண்டும்.

எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையானது படிப்பு நிலையை பொறுத்து மாறுபடும்:

  • பள்ளி மாணவர்கள்: அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 வரை வழங்கப்படும்.
  • கல்லூரி மாணவர்கள்: பொறியியல், மருத்துவம், மேலாண்மை போன்ற தொழில்முறைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வரையும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.8,000 வரையும் வழங்கப்படும்.
  • உயர்தர பள்ளிக் கல்வி: தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக 9, 10-ம் வகுப்பிற்கு ரூ.75,000 வரையும், 11, 12-ம் வகுப்பிற்கு ரூ.1,25,000 வரையும் வழங்கப்படும்.
  • உயர்தரக் கல்லூரி கல்வி: ஐஐடி, ஐஐஎம் போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.2 லட்சம் வரை மற்றும் கணினி வாங்க ரூ.45,000 வரை நிதியுதவி அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளமான [scholarships.gov.in](https://scholarships.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவசியம். முன்பு இதற்கென தனி நுழைவுத் தேர்வு (YET) நடத்தப்பட்டது. ஆனால், 2023 முதல் முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க - Whatsapp Web பயன்படுத்துவோர் கவனத்திற்கு! மத்திய அரசின் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

166
comment0
Report
SGSudharsan G
Dec 03, 2025 07:50:33
Chennai, Tamil Nadu:

TVK Vijay About Tamilnadu Rains: சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள விஜய், வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் என்றும் ஆளும் திமுக அரசை சாடி உள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  மேலும், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்றும் தவெக தொண்டர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் அந்த பதிவில், "மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது" என்றும் தமிழ்நாடு அரசை சாடினார்.

தொடர்ந்து, "மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என கோரிக்கை வைத்துள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

154
comment0
Report
SMShiva Murugesan
Dec 03, 2025 07:31:32
New Delhi, Delhi:

Govt Employees DA Merger Rejected: மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) ஏமாற்றத்தையும் தரும் முக்கிய செய்தியை பற்றி பார்ப்போம். அகவிலைப்படையை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் (nion Finance Ministry) ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் எட்டாவது ஊதிய குழுவும் (8th Pay Commission) அமைக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். எனவே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது? தெரிந்துக்கொள்ளுவோம்.

அகவிலைப்படி + அடிப்படை சம்பளம்

மத்தியரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), தற்போது 50 விழுக்காட்டை தாண்டி 58 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி 50 விழுக்காட்டை தாண்டும்போது அதை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட கால நடைமுறை. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். இதற்காக பல ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. 

அகவிலைப்படி (DA) இணைப்பு குறித்த ஏமாற்றம்

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டும்போது அது அடிப்படைச் சம்பளத்துடன் (Basic Pay) இணைக்கப்படும் என்பதுதான்.

அரசாங்கத்தின் பதில்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி (Pankaj Choudhary) , அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டார்.

பாதிப்பு: அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டிருந்தால், சம்பளம் கணிசமாக உயர்ந்திருக்கும். ஆனால், அந்த உடனடி உயர்வு தற்போது கிடைக்காது என்பது ஊழியர்களுக்குப் பெரும் பின்னடைவுதான்.

சம்பள உயர்வு கணக்கீடு (உதாரணம்)

அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைச்சால் என்ன லாபம்? என்றால், ஒரு ஊழியரோட அடிப்படை சம்பளம் ரூ.1,00000 (ஒரு லட்சம்) என வைத்துகொண்டால், அவருக்கு கிடைக்கும் அகவில்லைப்படி ரூ.58,000 ஆகும். இந்த அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால், அவருக்கு கிடைக்கும் புதிய அடிப்படை சம்பளம் 1 லட்சத்து 58,000 ஆக உயர்ந்திருக்கும். மேலும் அவருக்கு கிடைக்கும் மற்ற அலோவென்ஸு படிகளும், இந்த புதிய அடிப்படை சம்பளத்தின் கீழ் கணிக்கிடப்படும். எனவே மாத சம்பளம் அதிகரிக்கும். இதன் காரணமாக இந்த இணைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

8-வது ஊதியக் குழு: அடுத்த நம்பிக்கை

இந்த ஏமாற்றத்தைப் போக்கக்கூடிய ஒரே நம்பிக்கை 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) மட்டுமே. எட்டாவது மத்திய ஊதிய குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

நோக்கம்: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்த குழு, பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழலை ஆராய்ந்து புதிய சம்பள விகிதத்தைப் பரிந்துரைக்கும்.

பிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor): இதுதான் சம்பள உயர்வின் மிக முக்கியமான காரணி. கடந்த முறை 2.57 ஆக இருந்தது. இம்முறை இது 3.68 வரை உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது நடந்தால் குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயரும்.

எதிர்பார்ப்பு: அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி (DA) இணையவில்லை என்றாலும், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல சம்பள உயர்வை (Salary Hike) கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் குட் நியூஸ் கொடுத்த நிதி அமைச்சகம்

மேலும் படிக்க - ஜனவரி 2026 டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: AICPI IW கொடுத்த குட் நியூஸ்

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு ஷாக்: டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைகப்படுமா? நிதி அமைச்சகம் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

122
comment0
Report
SMShiva Murugesan
Dec 03, 2025 07:30:45
Chennai, Tamil Nadu:

Tamil Nadu TASMAC News: இன்று (டிசம்பர் 3, புதன்கிழமை) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி எறியும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்புப் பொறுப்பை பணியாளர்களுக்கு சுமத்தக்கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடந்தக்காரணம் என்ன?,  டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? போன்ற விவரங்களை பார்ப்போம். 

காலி மதுப் பாட்டில்களால் சுற்று சூழல் பாதிப்பு:

காலி மதுப் பாட்டில்களை வீசி ஏறிவதால், விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், விலங்குகள் பாதிக்கப்படுவது குறித்து நீதிமன்றம் முன்வைத்த உத்தரவை அடுத்து, காலி மதுப் பாட்டில்களை சேகரிக்கும் பணி யை ஊழியர்களே மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கான முக்கிய காரணம் என்ன?

காலி பாட்டில்களை சேகரிக்கும் பணி: குடித்துவிட்டு எறியப்படும் காலி மதுப் பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்களே சேகரிக்க வேண்டும் என அரசு வற்புறுத்துவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

பணிச்சுமை: காலி பாட்டில்களை சேகரிக்கும் பணி, ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை, மன உளைச்சல் மற்றும் கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தனி முகமை கோரிக்கை: காலி பாட்டில்களை சேகரிப்பதற்காக டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல், தனி ஒரு முகமையை அமைக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யார்?

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு அமைப்பாளர் கு. பாலகிருஷ்ணன் அவர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட எட்டு அமைப்புக்கள் இணைந்து இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன.

இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

இந்த வேலைநிறுத்தம் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதுக்குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை.

மேலும் படிக்க - Tamil Nadu Rains Live: வலுவிழந்தது புயல்! சென்னையை மிரட்டும் மழை, விடுமுறை, தவெக விஜய் -முக்கிய செய்திகள்

மேலும் படிக்க - ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு

மேலும் படிக்க - ஆதார் - பான் கார்ட் இணைப்பு! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

161
comment0
Report
Advertisement
Back to top