Back

பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்- ரோப்கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசன
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோயிலுக்கு திரைப்பட நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் நயன்தாராவை மலைக் கோயிலுக்கு போலீஸார் அழைத்து வந்தனர். குழந்தைகளை மலைமீது இருந்த படியை தொட்டு வணங்க கூறிய பின்னர் விக்னேஷ் சிவன் அழைத்து சென்றனர். குழந்தை மலைக் கோயிலில் சிறப்பு தரிசன வழியில் சாமி
0
Report
ஆவணி அவிட்டம் பூணூல் போடும் நிகழ்ச்சி
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம்
சிவகிரிப்பட்டி காமாட்சி அம்மன் கோயிலில் ஆவணி அவிட்டம் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. விஸ்வகர்மா சமூகத்தினர் பூணூல் போட்டும் நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை வணங்கி பூணூல் அணிந்து கொண்டர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், ஆராதனையும் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0
Report
பழனியில் கனமழை, வெப்பம் குறைந்து குளிர்ச்சி
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. வெப்பத்தை தணிக்க உதவிய இந்த மழை, ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலமுத்திரம், கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பெய்தது. வெப்பம் குறைந்து குளிர்ச்சியுடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
Report
பழனியில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம்பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் குண்டர்களால் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.
வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்நிகழ்வில் தலைவர் அங்குராஜ் செயலாளர் கலை எழில் வாணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.
0
Report
Advertisement
பழனியில் மாநாட்டு பணிகள் தீவிரம்
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம்பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அனைத்து உலக முருக பக்த மாநாடு நடைபெற உள்ள நிலையில் மின்சார துறையின் மூலம் மின்விளக்குகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரி எதிரே உள்ள நெடுஞ்சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை மின்சார வாரியத் துறையின் மூலம் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பழனி நகரம் விழா கோலம் பூண்டு காணப்பட்டு வருகின்றன.
0
Report