இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார்களா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய மிக பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது வழக்கமான பாணியில் நேரடியான பதிலை அளித்துள்ளார். "உலக கோப்பை வர இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எனவே, இப்போதே யாருக்கும் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது," என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஒருநாள் தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். ரோகித் சர்மாவும் தனது பேட்டிங்கால் விமர்சகர்களின் வாயை அடைத்தார். இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பிறகும், அடுத்த உலக கோப்பையில் இவர்களின் இடம் குறித்து பயிற்சியாளர் கம்பீர் எந்தவிதமான உறுதியையும் அளிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கம்பீர், "முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 2027 உலக கோப்பை வர இன்னும் நீண்ட நாட்கள் இருக்கின்றன. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதே முக்கியம். ரோகித் மற்றும் கோலி இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆடை மாற்றும் அறையில் அவர்களின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலம். அவர்கள் தொடர்ந்து இதேபோல சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்," என்றார்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
அதே சமயம், இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் வளர்ச்சியையும் கம்பீர் சுட்டிக்காட்டினார். "ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். உலக கோப்பைக்கு முன்னதாக 20-25 வீரர்கள் கொண்ட ஒரு வலுவான தொகுப்பை உருவாக்க நினைக்கிறோம். இளம் வீரர்களும் எந்த நேரத்திலும் வாய்ப்பு கிடைத்தால் ஆடத் தயாராக இருக்க வேண்டும்," என்று கம்பீர் வலியுறுத்தினார்.
ரோகித் மற்றும் கோலி
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ரோகித் மற்றும் கோலி கவனம் செலுத்தி வந்தனர். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா சந்தித்த படுதோல்விக்கு பிறகு, இந்த இரு மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இங்கிலாந்து தொடருக்கு முன்பு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடி வருகின்றனர். "உடற்தகுதியும், ரன் குவிக்கும் வேட்கையும் இருந்தால் மட்டுமே 2027 உலக கோப்பையில் ரோகித் - கோலி கூட்டணி களமிறங்கும். இல்லையெனில், இளம் வீரர்களுக்கு வழிவிட நேரிடும்," என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் 'மண்' (பிருத்வி) ஸ்தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, நாளை காலை 5.45 மணியளவில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்த ஆன்மீக நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெறும் விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்கள் இவ்விழாவில் பங்கேற்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு நாளை டிசம்பர் 8 ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.29 கோடியில் பிரம்மாண்ட திருப்பணிகள்
இந்த உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) பிறப்பித்துள்ளார். இருப்பினும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதேனும் சிறப்பு வகுப்புகள் இருந்தால் அது குறித்த அறிவிப்புகளை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நேரடி பார்வையில், கடந்த சில மாதங்களாகவே கோயில் திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திருப்பணிகளில், 12 கோடி ரூபாய் அரசு நிதியாகவும், மீதமுள்ள தொகை உபயதாரர்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. ராஜகோபுரம் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், பிரகாரங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து கோயில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
விழா ஏற்பாடுகள் மற்றும் யாகசாலை பூஜைகள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாகவே கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கலசங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 5.30 மணி முதல் 7.00 மணிக்குள், மீன லக்னத்தில் விமானங்களுக்கும், மூலவர் ஏகாம்பரநாதருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகம், காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | டிசம்பர் இன்னும் முடியல.. உருவாகும் இன்னொரு புயல்? சென்னை மக்களே.. வெதர்மேன் அலர்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Smriti Mandhana Marriage Officially Called Off: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு, பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையேயான திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. அதற்கு பல்வேறு காரணங்களும் இணையத்தில் வலம் வந்தன.
இந்தச் சூழலில், நீண்ட காலம் மௌனம் காத்து வந்த ஸ்மிருதி மந்தனா தற்போது அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏராளமான ஊகங்கள் எழுந்தன. எனவே, இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் அனைத்து விஷயங்களையும் பொதுவெளியில் பேசும் நபர் அல்ல, எனவே அதுகுறித்து எதுவும் சொல்லாமல் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
இந்த விஷயத்தை இங்கேயே முடித்துவிடுகிறேன், நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்கள் சொந்த விஷயத்தில் செயல்படவும் முன்னேறவும் இடமளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நம்மை எல்லாம் இயக்கும் ஒரு உயர்ந்த நோக்கம் ஒன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது என்னைப் பொருத்தவரையில், எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதுதான். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதில்தான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது" என அதில் குறிப்பிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், அனைவரும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Reserve Bank of India Latest News: ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று பொதுவாக அழைக்கப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (Basic Savings Bank Deposit - BSBD) குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிக முக்கியமான மற்றும் விரிவான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகள், ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பல இலவச சேவைகளையும், சாதாரண சேமிப்புக் கணக்குக்கு இணையான வசதிகளையும் வழங்குவதை உறுதி செய்கின்றன. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (BSBD) குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.
முக்கிய மாற்றங்களும் சலுகைகளும்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, BSBD கணக்குகளுக்குக் கிடைக்கவுள்ள முக்கிய இலவச சேவைகள் மற்றும் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| வசதி | பழைய நிலை | புதிய RBI விதி (ஏப்ரல் 1, 2026 முதல்) |
| குறைந்தபட்ச இருப்பு | ஜீரோ பேலன்ஸ் கட்டாயம் | எப்போதும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) தேவையில்லை. |
| கட்டணமில்லா டெபாசிட் | வங்கிகள் நிர்ணயித்திருக்கலாம் | ரொக்கப் பணம் டெபாசிட் செய்வது, மின்னணு (NEFT/RTGS) அல்லது காசோலை மூலம் பணம் பெறுவது ஆகியவற்றுக்கு மட்டுமில்லை. |
| ATM/டெபிட் கார்டு கட்டணம் | சில வங்கிகளில் ஆண்டு கட்டணம் உண்டு | எந்தவித ஆண்டு கட்டணமும் இல்லாமல் ATM அல்லது ATM-cum-டெபிட் கார்டு வழங்கப்படும். |
| காசோலைப் புத்தகம் (Cheque Book) | சில வங்கிகளில் கட்டணம் உண்டு | ஒரு வருடத்துக்கு குறைந்தது 25 இலைகள் (leaves) கொண்ட காசோலைப் புத்தகம் இலவசமாகக் கிடைக்கும். |
| இன்டர்நெட் & மொபைல் பேங்கிங் | சில அம்சங்கள் கட்டுப்படுத்தப்படலாம் | இலவச இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி வழங்கப்படும். |
| பணம் எடுக்கும் வரம்பு | மாதம் 4 முறை இலவசம் (அனைத்து பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்) | மாதம் குறைந்தது 4 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம். ஆனால், UPI, NEFT, RTGS, IMPS மற்றும் PoS பரிவர்த்தனைகள் இந்த 4 பரிவர்த்தனைகள் வரம்பில் சேர்க்கப்படாது (அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்). |
| கணக்கு மாற்றம் | கடினமான நடைமுறை | வாடிக்கையாளர் எழுத்து மூலமாகவோ அல்லது டிஜிட்டல் மூலமாகவோ கோரினால், சாதாரண சேமிப்புக் கணக்கை 7 வேலை நாட்களுக்குள் BSBD கணக்காக மாற்ற வங்கிகள் உத்தரவிடப்பட்டுள்ளது. |
RBI-யின் முக்கிய நோக்கம் என்ன?
சமத்துவம்: BSBD கணக்குகளை சாதாரண சேமிப்புக் கணக்குகளைப் போலவே நடத்த வேண்டும்; இதை ஒரு 'குறைவான' மாற்றுத் தேர்வாகப் பார்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நிதி உள்ளடக்கம்: குறைந்த வருமானம் கொண்ட மக்களும், முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்குபவர்களும் கூடுதல் கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் வங்கிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
செயல்படாத கணக்குகள் (Inoperative Accounts) குறித்த புதிய விதி:
ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் உட்பட, நீண்ட காலமாகப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.
பரிவர்த்தனை அவசியம்: வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைச் செயலில் வைத்திருக்க அவ்வப்போது சிறிய பரிவர்த்தனைகளையாவது செய்வது அவசியம்.
அரசுப் பயன் பெறுவோர்: கல்வி உதவித்தொகை அல்லது நேரடிப் பலன்களைப் (Direct Benefits) பெறுவதற்காகத் திறக்கப்பட்ட கணக்குகள் இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவற்றைச் செயல்படாத கணக்குகள் என்று உடனடியாக வங்கிகள் வகைப்படுத்த முடியாது என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க - 2026 முதல் வங்கி விதிகளில் மாற்றம்: RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க - RBI அளித்த குட் நியூஸ், ரெப்போ ரேட் 25 bps குறைந்தது: கடன் EMI குறையும்
மேலும் படிக்க - ICICI, SBI, HDFC வங்கிகளில் கணக்கு இருக்கிறதா? உங்களுக்கு வெளியான முக்கிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
DMK Pension Promise (Chennai): தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வரும் மிக முக்கியமான பிரச்சினை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme - CPS). இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme - OPS) நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.
தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய நிலையும்:
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தான் நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்து, தொடர் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று திட்டங்கள், ஒரே குழப்பம்:
ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு ஒரு புதிய திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டபோதுகூட கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS), மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என மூன்று திட்டங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதால், இதில் எந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவெடுப்பதில் அரசுக்குப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
ககன்தீப் சிங் பேடி குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பு
இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும், பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் சாதக பாதகங்களை ஆய்வு செய்யவும், கடந்த பிப்ரவரி மாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
பணி: பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, ஊழியர் சங்கங்களுடன் பேசி, ஒரு விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிப்பது.
காலக்கெடு: இக்குழு செப்டம்பர் மாதத்திற்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலை: ஆனால், குழுவினர் இதுவரையில் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்துள்ள நிலையில், முழுமையான இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை.
அழுத்தத்தில் தமிழக அரசு
அரசு ஊழியர்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதும் அரசுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்படி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவுக்கு தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன், தமிழக அரசு ஓய்வூதியத் திட்டம் குறித்து மிக முக்கியமான முடிவை அறிவிக்கவுள்ளது. அந்த முடிவு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) செயல்படுத்துவதாக இருக்குமா என்பதே தற்போது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசு ஊழியர்களின் ஆதரவு என்பது தேர்தலில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு முரணான புதிய திட்டத்தை அரசு அறிவித்தால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவை இழக்க வழிவகுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் vs பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
ஓய்வூதியத் திட்டம்_1: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
அறிமுகம்: 2004-க்கு முன்,
சிறப்பம்சம்: ஓய்வூதியத் தொகை கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். பணிக்கொடை (Gratuity) உண்டு. ஊழியர்கள் பங்களிப்பு செய்யத் தேவையில்லை.
ஓய்வூதியத் திட்டம்_2: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS)
அறிமுகம்: 2004-க்கு பின்,
சிறப்பம்சம்: ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பங்களிக்க வேண்டும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும். ஓய்வூதியத் தொகை, முதலீட்டின் சந்தை மதிப்பைப் பொறுத்து மாறும்.
மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் குறையவுள்ளதா? மத்திய அரசு அளித்த முக்கிய விளக்கம்
மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!
மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சென்னை மணலியில், சென்னை வடகிழக்கு மாவட்ட திருவெற்றியூர் மத்திய பகுதி பொறியாளர் அணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 501 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் உதயராஜ் ஏற்பாட்டில் மத்திய பகுதிச் செயலாளரும் மண்டலக்குழு தலைவருமான ஏவி ஆறுமுகம் முன்னிலையில், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு 5 பெண்களுக்கு கிரைண்டர் உள்பட 501 நபர்களுக்கு ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!

அதிமுக டூ திமுக
முன்னதாக அதிமுகவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு திருச்சி சிவா எம் பி கழக இரு வண்ணத்துண்டை அணிவித்து வரவேற்றார். பின்னர் மேடையில் பேசிய கழக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம் பி, அறிஞர் அண்ணாவுக்கு பின்னால் எப்படி கலைஞரோ அப்படி கலைஞருக்கு பின்னால் இன்று தளபதி இந்தியாவிலேயே சிறந்த தலைவராக சிறந்த முதல்வர் என்ற பேரை நிலை நாட்டியிருக்கிறார். ஒரு இயக்கத்தின் பணி என்பதும் தொடர்ச்சி என்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களின் வரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். திமுகவை போல இளைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.
அதிகமான இளைஞர்கள்
இந்தியா தான் உலகத்திலேயே அதிகமான அளவில் இளைஞர்களை மக்கள் தொகையில் கொண்ட ஒரு நாடு. 140 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் 65 விழுக்காடு இளைஞர்கள். அதே போல் இந்த இயக்கத்தில் எப்படி மூத்தவர்கள் இருக்கிறோமோ அதே போல் இளைஞர்களும் நிறைய வந்து சேர்ந்து விட்டார்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு சக்தியாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். தலைவன் என்பது யார் அடையாளம் காட்டப்படுபவர்கள் எல்லாம் அல்ல, முன்னிலைப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் அல்ல, தங்கள் தோள்களிலே சவாரி செய்கின்றவர்கள் சில பேர் என்பதற்கல்ல ஒரு பெரும் கூட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவர்களை ஒரு இலக்கை நோக்கி நடக்க வைக்கிறவன் தான் தலைவன் என்பதற்கு இலக்கணமாக எப்படி தளபதி கிளம்பினாரோ, அப்படி உதயநிதி ஸ்டாலின் பின்னால் இந்த இளைய தலைமுறை அணிவகுக்கிறது என்பதால் என் பூரிப்பாக இருக்கிறது.
திமுக
திமுக என்று சொன்னாலே எதை செய்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆட்சி நடத்துகிறோமோ அது உங்களுக்காக கட்சி நடத்துகிறோமோ இந்த மண்ணுக்காக மொழிக்காக மானத்திற்காக அந்த வகையில் இன்று தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னணியில் நிற்கிறது. டெல்லியில் மாநிலங்களவையில் பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் தங்களிடம் பேசும் பொழுது உங்கள் தலைவர் மு க ஸ்டாலின் போல் எங்களுக்கு ஒருவர் வேண்டுமென்று ஏக்கம் அடிக்கடிக்கு பிறக்கிறது என்பார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு பெரும் பிரச்சனை அந்த பிரச்சனை எழுப்பியது திமுக.
திருப்பரங்குன்றம்
தமிழ்நாட்டில் மதுரையில் திருப்பரங்குன்றம் என்ற இடத்தில் காலங்காலமாக தொடர்ந்து பின்பற்றுகின்ற ஒருமுறை. ஆங்கே கார்த்திகேயன் போது தீபம் ஏற்றப்படும் அது எல்லோரும் எல்லா ஊர்களும் மலைகளில் இருக்கின்ற செய்வது வழக்கம் அந்த மலையில் ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா ஒன்று இருக்கிறது. அந்த இடத்தில் இருவருக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை தீர்க்கப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள் தீபம் ஏற்றுள்ள கொள்ளலாம் நீங்கள் வழிபாட்டுத்தலமாக வெற்றி கொள்ளும் என்று முடிவெடுக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு பின்பற்றி வருகின்றோம். இந்தாண்டு அப்படித்தான் 2016 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற சென்றபோது 2017 இல் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் அங்கு இருக்கின்ற உச்சிப்பிள்ளையர் கருத்துணியில் தீபம் ஏற்றுக்கொள்ளலாம் வேரிடத்தில் ஏற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
முக ஸ்டாலின்
முதலமைச்சரை பொறுத்தவரை அவர் மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் நடுநிலையாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால்தான் ஆயிரக்கணக்கான கோயில்கள் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. பயன்படாமல் இருந்த ஆலயங்கள் புதைக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகின்றன. ஒரு வேலை விளக்கு கூட எரிய முடியாத கோயில்கள் இன்று விழாக்களும் பூஜைகளும் நடைபெறுகிறது. அதனை பணியாற்றுகின்ற பணியாளர்கள் மட்டுமில்லாமல் அர்ச்சகர்கள் கூடும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கென்று வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக இந்துக்களின் உணர்வுகளை எப்படி பாதுகாக்கின்றோமோ அப்படி எல்லோருடைய உணர்வுகளையும் பாதுகாப்போம்.
தமிழ்நாட்டில் இன்றும் அமைதி பூங்காவாக இருக்கிறது காரணம். நடைபெறுகின்ற ஆட்சி அதனுடைய முதலமைச்சர். இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன தேவையோ அதை தேடி தேடி செய்கிறார் யாரும் எதையும் கேட்டு அவர் செய்வதில்லை. சிவபெருமானை சொல்வார்கள் தாயினும் சால புரிந்து இறைவன் தாயை விட அதிகமாக யார் என்ன யாருக்கு என்ன வேண்டும் என்று கேலி செய்வார் என்று பாடுவார்கள் அதற்கு பல கதைகள் உண்டு. அதைப்போல அந்த சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு தாயினும் சால புரிந்து என்பதைப் போல தாயுமானவன் என்று சொல்வதைப் போல ஒரு தாயாக மாறி இந்த நாட்டில் வாழுகின்ற பெண்கள் தாய்மார்கள் இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் யார் யாருக்கு என்னென்ன தேவையோ யாரும் கேட்காமல் தானாகவே செய்கின்ற ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார்.
நாங்கள் நாட்டைக் காப்பாற்ற முனைகிறோம் என்றால் துணை நிற்கின்ற கடமை தாய்மார்களுக்கு இருக்கிறது பல பேர் படையெடுத்து வரலாம் எத்தனை பேர் நல முயற்சி செய்யலாம். திருப்பரங்குன்றத்தில் செய்வதை போல சதி வேலை செய்யலாம் சட்ட ஒழுங்கை எடுக்க முயற்சிக்கலாம் ஆனால் மக்கள் சக்தி எங்கள் பின்னால் இருந்தால் நாங்கள் உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்போம் உயர்ந்த தியாகத்தின் ஏற்க தயாராக இருப்போம் என்று பேசினார்.
மேலும் படிக்க: குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.
Grand Reveal Tomorrow Padaiyappa Rerelease 12.12.2025 #Jailer2 #Superstarrajinikanth pic.twitter.com/nuvmTrjpV2
— Mani (@Mani74261081) December 6, 2025
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்
1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.
தமிழ் புத்தாண்டு
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படையப்பா படம் அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களை கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன், புத்தம் புது பொலிவுடன், தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : ஆதிரை ரீ-என்ட்ரி! FJ-வியானா லவ் ட்ரேக் அவ்ளோ தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது பல்வேறு விமான சேவைகளை தொடர்ச்சியாக ரத்து செய்ததாலும், புதிய விதிமுறைகளை கடைபிடிக்க சற்று கால அவகாசம் கோரியதாலும் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA), விமான நிறுவனங்களுக்கு விதித்திருந்த புதிய விதிமுறைகளை நேற்று (டிசம்பர் 5) ஓரளவுக்கு தளர்த்தியது.
ஆனால், இந்த பிரச்னை இப்போது தொடங்கியது அல்ல. இண்டிகோவும், பிற விமான நிறுவனங்களும் நீண்ட தூர விமான சேவைக்கு, 2 அல்லது 3 விமானங்கள் மாறிப்போக வேண்டிய சூழலில் ஏற்படுத்தியபோதே இந்த தவறு தொடங்கிவிட்டதாக புரிந்துகொள்ள முடிகிறது. முன் ஒரு காலத்தில், குறைவான டிக்கெட் விலையில் நீண்ட தூர பயணங்களுக்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவை ஏறத்தாழ சாத்தியமே இல்லை என்றாகிவிட்டது.
ஒன்று நீங்கள் அதிக பணத்தைச் செலவழித்து நேரடி விமானத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு விமானமாக ஏறி, இறங்கி மாற வேண்டும். அதாவது, நேரடி விமானம் மூலம் மூன்று மணிநேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு, நீங்கள் நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நேரம் செலவிட வேண்டியதாகவிடும். தற்போதைய சூழலில், வெறும் இரண்டு அல்லது மூன்று விமான நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் இயக்குகின்றன. இதனாலேயே இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன.
விமானக் குழுவினர் மற்றும் விமானிகள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயப்படுத்தப்படுவதால் மட்டுமே விமானங்கள் தொடர்ச்சியாக செயல்படுகின்றன. ஆனால் இண்டிகோ நிறுவனத்தில் தற்போது எழுந்துள்ள இந்த குழப்பம் பெருங்கடலில் ஒரு துளி மட்டுமே, இன்னும் ஆழமான சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாக விரிவாக அலசலாம்.
இந்திய விமானங்களுக்கு என்ன தான் பிரச்னை?
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, விமானிகளின் உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு DGCA, விமானப் பணி நேர வரம்புகள் (FDTL) மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கடைநிலை ஊழியர்கள் முதல் விமானிகள் வரையிலான அனைத்து விமானப் பணியாளர்களையும் இதற்கு முன் இருந்த உழைப்புச் சுரண்டல் பிரச்னையில் இருந்து இது விடுத்தது. கடும் வேலையினால் ஏற்படும் உடல் சோர்வு என்பது கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியதாகும். ஏனென்றால், இந்திய விமான நிறுவனங்களில் பணியாற்றும் பல ஊழியர்கள் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களை நோக்கி நகர்கிறார்கள் அல்லது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்புகிறார்கள். இதுதான் அவர்கள் முன் இருக்கும் ஆப்ஷன்களாக உள்ளது.
அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை
விமானப் பணியாளர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, விமான பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. உயர் மத்திய தர வர்க்கத்தினரின் வளர்ச்சி காரணமாக தற்போது விமானப் பயணிகள் அதிகமாகிவிட்டனர். இதற்கு முன் இவர்கள் அனைவரும் ரயிலில் உயர் வகுப்பில் சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது இவர்கள் விமானத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். இதனால், 2024ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 16.13 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தேய்ந்துகொண்டே வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை
பயணிகளின் எண்ணிக்கை இந்தளவிற்கு அதிகரித்திருந்தால், விமான சேவை நிறுவனங்களும் அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா...? மாறாக இங்கு பல நிறுவனங்கள் மாயமாகிவிட்டன. ஒன்று திவாலாகியிருக்கும் அல்லது இன்னொரு நிறுவனத்துடன் இணைந்திருக்கும் அல்லது விமான சேவையில் இருந்தே வெளியேறியிருக்கும். உதாரணத்திற்கு, Kingfisher Airlines, Indian Airlines, Air Asia India, Deccan Air, Vistara, Jet Airways போன்ற பல நிறுவனங்கள் தற்போது இயக்கப்படுவதில்லை அலலது முழுமையான செயல்பாட்டில் இல்லை எனலாம். Akasa Air, GoFirst, SpiceJet போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விமானத்தை இயக்குகின்றனர்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்போது, இந்த நிறுவனங்கள் எல்லாமே சிறப்பாக இயங்கியிருக்கலாமே... ஏன் நஷ்டத்தை சந்திக்கின்றன என்றால் விமானப் பணியாளர்களுக்கு நடக்கும் பணி சார்ந்த சுரண்டல்களே காரணமாக இருக்கின்றன. எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் கதையால், விமான நிலையங்களின் நிலைமையும் நிறுவனங்களின் நஷ்டத்தில் பங்குகொள்கின்றன.
விமான நிலையங்களால் வரும் பிரச்னை
கூட்ட நெரிசலைக் குறைக்க, ராணுவ விமானங்களுக்கான ஹிண்டன் விமான நிலையம் சமீபத்தில் மக்களின் விமானப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. நொய்டா சர்வதேச விமான நிலையம், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முழு செயல்பாடுகளையும் தொடங்குவதற்கு இன்னும் குறைந்தது ஒரு வருடக்காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (முனையங்கள் 2 மற்றும் 3) உட்பட டெல்லியில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் தொடர்ச்சியான கட்டுமான மற்றும் புதுப்பித்தலுக்கு உட்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நெரிசலில் சிறிய முன்னேற்றமே காண முடிகிறது.
இந்தியாவில் இருக்கும் பல விமான நிலையங்கள் தற்போது வானிலை சார்ந்த பிரச்னைகளில் தடுமாற்றம் காண்கின்றன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில்... குளிர்காலத்தில், பனி மூட்டம் அல்லது போதிய வெளிச்சமின்மை காரணமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதஙக்ளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் தினந்தினம் ரத்து செய்யப்படுகின்றன. இதில் 2026ஆம் ஆண்டில் மேலும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய விமான நிறுவனங்களுக்கு கூட பிப்ரவரி மாதத்திற்கு முன்பு வரை நிலைமைகள் சீராகாமல் போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரை கையில் பிடித்துச் செல்லும் பயணிகள்
ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு, ஏராளமான விமானத் தவறுகள், நடுவானில் குழுங்குதல் போன்ற பிரச்னைகள், பறவைகள் மோதுவது, வானிலையால் ஏற்படும் திசைதிருப்பல்கள் மற்றும் முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் விமானங்கள் அடிக்கடி அவசர அவசரமாக தரையிறக்கப்படுவது என இத்தனை சிக்கல்கள் உள்ளன. இதை வைத்து பார்த்தால், விமானப் பயணிகள் தங்களின் பயணத்தின் போது உயிரைக் கையில் பிடித்துதான் செல்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
விமான நிலையத்தில் ஒரு சாதாரண காபி ரூ.200, ரூ.300 போன்ற அநியாயங்கள் (?) ஒன்றும் புதிதில்லை. ஆனால் முன்னர் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது விமானப் பணியாளர்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது விமானப் பயணிகளுக்கு சரியான ஓய்வு நேரத்தை வழங்கி, விமானத்தை சரியாக திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்கு புதிய விதிமுறைகள் விமான நிறுவனங்களை தள்ளியிருக்கிறது.
இண்டிகோவின் சிக்கலுக்கு இதுவே காரணம்
DGCA அதன் விமானப் பணி நேர வரம்புகள் (FDTL) புதிய விதிமுறையை கடந்த நவமபர் 1ஆம் தேதியில் இருந்து முழுமையாக அமல்படுத்தியதில் இருந்தே இண்டிகோ சிக்கலில் சிக்கிக்கொண்டது. விமானிகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இரவு நேர பணி மற்றும் ஓய்வுநேரம் ஆகியவற்றில் DGCA கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இதில் பெரியளவில் சிக்கிக்கொண்டது.
தினமும் 2,300 விமானச் சேவைகளை வழங்குகிறது, 400 விமானங்கள் சேவையாற்றி வருகின்றன. ஆனால் இந்நிறுவனம் பொதுமான அளவிற்கு மாற்று விமானிகளை பணியமர்த்தவே இல்லை. இரவு நேர பணிகளுக்கு தற்போது இருக்கும் பணியாளர்களையே சுழற்சி முறையில் பயன்படுத்தி வந்தது. இதில்தான் புதிய விதிமுறைகள் சிக்கலை கொண்டு வந்தது. புதிய விதிமுறைகள் விமானிகளின் நலனையே முன்னிறுத்தியது, அதில் தவறில்லை. ஆனால், இண்டிகோ புதிய பணியாளர்கள் பணியமர்த்தாததே சிக்கலுக்கு காரணம் எனலாம்.
பெருமையை இழந்த இண்டிகோ
கடந்த நவம்பர் மாதம் மட்டும், இண்டிகோ நிறுவனம் 1,232 விமான சேவைகளை ரத்து செய்திருக்கிறது. அவற்றில் புதிய FDTL விதிமுறைகளின்படி, விமானங்களுக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் மட்டும் 775 சேவைகள் ரத்தாகியிருக்கின்றன. ஒரு காலத்தில், சரியான நேரத்தில் விமானத்தை இயக்குவதையே (On-Time Performance) தனது அடையாளமாகப் பெருமையாக தம்பட்டம் அடித்த இண்டிகோ நிறுவனம், இப்போது சரியான நேரத்தில் விமானத்தை இயக்கும் சதவீதத்தில் சரிவைக் கண்டிருக்கிறது. அக்டோபரில் 84.1 சதவீதமாக இருந்த நிலையில், அது கடந்த நவம்பரில் 67.7 சதவீதமாக வீழ்ச்சிக் கண்டது. அந்தளவிற்கு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
விமானிகள் ஓய்வெடுக்கும்போது, விமானங்களை இயக்க ஆளில்லை. இது அனைத்து விமான சேவை நிறுவனங்களிலும் பார்க்க முடிந்தது. இதனாலேயே ஒரு நாளில் 170-200 எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின. சில நாள்களில் 300 விமானங்கள் கூட ரத்தாகின. இதனால் விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது, அவர்களும் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்றார்கள்.
இரு நிறுவனங்களின் ஆதிக்கம்
Airbus மற்றும் Boeing ஆகிய இருவேறு நிறுவனங்களே விமான சேவை நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை இரண்டு விமானங்களையே நிறுவனங்கள் விலைக்கு வாங்கி இயக்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் விமானங்களில் காணப்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகளும் கவனிக்கப்பட வேண்டும். நடப்பாண்டு மார்ச் மாதத்தில், எஞ்சின் சார்ந்த விநியோகச் சங்கிலி தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக சுமார் 133 விமானங்கள் இயக்கப்படவில்லை. இது மொத்த எண்ணிக்கை 16% விமானங்களாகும்.
நிறுவனங்களுக்கு லாபம் வராதது ஏன்?
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, இண்டிகோவின் 70 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் இயந்திரங்களில் தூள்-உலோக மாசுபாடுதான் காரணமாக உள்ளது. குத்தகைக்கு விடப்பட்ட அல்லது பழைய விமானங்களை மாற்றுவது குத்தகை, வாடகை செலவுகளை அதிகரித்தது. விமானங்களுக்கு எரிபொருள் திறன் குறைவாக இருக்கிறது, ஆனால் எரிபொருள் செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், விமான நிறுவனங்களுக்கு வரும் லாபத்திலும் அடி விழுகிறது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்பட்ட போர்கள் போன்ற புவிசார் அரசியல் சிக்கல்களும் விமான எரிபொருள் விநியோகத்தை பாதித்தன. மேலும் புதிய விமானங்களை நிறுவனங்களுக்கு டெலிவரி செய்வதிலும் கால தாமதம் ஏற்பட்டன.
முழுமையான தீர்வு தான் என்ன?
இவை அனைத்தின் ஒட்டுமொத்த விளைவு, அதிகரித்து வரும் தேவையை இன்னும் பூர்த்தி செய்ய முடியாமல், விமானத் துறையில் பயணிகளுக்கு தொடர்ச்சியான உறுதியற்ற தன்மை உருவாகிறது. எனவே தற்போதைய குழப்பத்தை இண்டிகோ நிறுவனத்தின் ஒற்றை நெருக்கடியாக மட்டும் பார்க்காமல், ஆழமான, நிலையான தோல்வியின் அறிகுறியாகப் பார்க்க வேண்டிய நேரம் இது. அடுத்த பெரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் போன்றோர் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது.
மேலும் படிக்க | IND vs SA T20: இடம் பிடித்தும்.. சுப்மன் கில் விளையாடுவதில் சிக்கல்!
மேலும் படிக்க | CSK வீரரால் பறிபோன வாய்ப்பு.. இனி இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமே கிடையாது!
மேலும் படிக்க | பிரஷித் கிருஷ்ணாவை விட முகமது ஷமி மோசமான பவுலரா? இந்திய அணியில் நடப்பது என்ன?
India vs South Africa 3rd ODI, Playing XI and Toss Update: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஓடிஐ போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 20 ஓடிஐ போட்டிகளுக்கு பின் இந்தியா டாஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் நடந்துள்ளது.
#TeamIndia have won the toss and elected to field first.
— BCCI (@BCCI) December 6, 2025
Updates https://t.co/HM6zm9o7bm#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/vYNPSa1iKF
வாஷிங்டன் சுந்தருக்கு பதில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், இன்று நம்பர் 5 இடத்தில் திலக் வர்மா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திலக் வர்மா ஆப் ஸ்பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா அணியில் டி ஸோர்ஸி மற்றும் நாந்த்ரே பர்கர் ஆகியோருக்கு பதில் ரியான் ரிக்கில்டன் மற்றும் ஓட்னில் பார்ட்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்னாப்பிரிக்கா: ரியான் ரிக்கில்டன், குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம், டெவால்ட் பிரீவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Indigo Flights Ticket Refund: இண்டிகோ நிறுவனம் கடந்த சில நாள்களாக எக்கச்சக்கமான தனது விமான சேவைகளை ரத்து செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணைத்தை திருப்பிச் செலுத்துமாறு (Refund) விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாளை (டிசம்பர் 7) இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தொகையை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Rajasthan High Court: ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள 18 வயதான பெண்ணும், 19 வயதும் ஆணும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமண வயதை அடையாத இருவரும் சமர்பித்த மனுவில்தான், உயர் நீதிமன்ற நீதிபதி அனூப் தந்த் இந்த தனித்துவமான தீர்ப்பை வழங்கி உள்ளார்.
இளம் ஜோடிகள் இருவரின் சம்மத்துடன் லிவ்-இன் உறவுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இந்த இளம் ஜோடி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி லிவ்-இன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு, லிவ்-இன் உறவுக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் அந்த ஜோடியை கடுமையாக எதிர்த்துள்ளது.
குடும்பத்தினர் அவர்களை அடித்து மிரட்டியிருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உள்ளூர் காவல் நிலையத்தையும் அந்த ஜோடி நாடி இருக்கிறது. ஆனால், காவல்துறை தரப்பில் உரிய பதிலும் கிடைக்கவில்லை, அவர்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கவில்லை. எனவே, அந்த இளம் ஜோடிகள் துணிந்து தங்களுக்கு நிதி கிடைக்க உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை ஆண், பெண்ணுக்கு சட்ட ரீதியான திருமண வயது உள்ளது. பெண்களின் சட்ட ரீதியான திருமண வயது 18, ஆண்களின் சட்ட ரீதியான திருமண வயது 21 ஆகும். ஆனால், சட்டத்தை பொருத்தவரை 18 வயதை அடைந்தவர்கள் அனைவருமே வயது வந்தவர்கள் (Adult) ஆவர். அவர்கள் தங்களின் முடிவை சுயமாக தேர்வு செய்துகொள்ளலாம். இதைச் சுட்டிக்காட்டியே வயது வந்தவர்கள் திருமண வயதை அடையாவிட்டாலும் லிவ்-இன் உறவில் வாழலாம் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ், லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்யும் பிரிவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Nanjil Sampath Joins TVK: மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத், இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார்.
தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் Voice of Commons அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த 6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக்கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன்.
Nanjil Sampath: விஜய் சொன்ன அந்த வார்த்தை
நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார்" என்றார். மேலும், விஜய் குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், "என்னைப் பார்த்து, 'நான் உங்கள் ரசிகன் (Fan)' என விஜய் கூறினார். விஜய் அப்படி சொன்னதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன்" என்றார். தொடர்ந்து திமுக குறித்து பேசிய அவர், "கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது தவெகவுக்கு கிடைத்த வெற்றி என கூறியது திமுகவில் என்மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. அறிவாலயத்தில் இருந்து வசை சொற்களால் வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன்.
Nanjil Sampath: திமுகவில் சைக்கிள் கூட கொடுக்க மாட்டார்கள்...
என் வயிற்றில் அடிப்பது போல் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. அவர்களிடம் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டால் அவர்கள் கொடுக்கவும் மாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்" என்றார்.
"எந்த திசைக்கு போக வேண்டும் என்பதை தெப்பம் தீர்மானிக்க முடியாது. தண்ணீர் தான் தீர்மானிக்கும். நானொரு தெப்பம், என்னுடைய திசையை தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார். தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்தில் இருந்து புதியதாக பிறந்ததைப்போல் பூரிக்கிறேன்" என்றார்.
"பாஜகவுடன் இணக்கமான போக்கு இருப்பதாக சொல்கிறார்களே என விஜய்யிடம் கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை, தேர்தல் இங்கு நடக்க இருப்பதால், அதிகாரத்தில் இருக்கும் கட்சியை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவை பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று பதிலளித்தார்" என நாஞ்சில் சம்பத் விஜய்யின் நிலைபாடு குறித்து பேசினார்.
Nanjil Sampath: விஜய் பேசாமல் இருப்பது நல்லது...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் சாதிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், "திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. திருப்பரங்குன்றம் சம்பவத்தை வைத்து குன்றம் எங்களுக்கு, குமரன் எங்களுக்கு என சொல்பவர்கள். ஒரு கலவர அரசியலுக்கு கை, கால் முளைக்க வைக்கமுடியுமா என யோசிக்கிறார்கள். இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது" என்றார்.
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது திராவிட இயக்கத்தின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட நாஞ்சில் சம்பத் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டுள்ளது அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் அரசியல் பயணம்
திராவிட இயக்க பற்றாளரான நாஞ்சில் சம்பத், 1993ஆம் ஆண்டில் வைகோ திமுகவில் இருந்து கட்சியை பிளந்துகொண்டு வெளியேறியபோது அவருடன் வெளியேறியவர். தொடர்ந்து வைகோ தலைமையிலான மதிமுகவில் 1994ஆம் ஆண்டில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராக இருந்த அவர், 2012ஆம் ஆண்டில் மதிமுகவில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முனனிலையில் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரும் அப்போது அதிகளவில் கவனம் பெற்றது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா மற்றும் தினகரனை ஆதரித்து பேசி வந்த நாஞ்சில் சம்பத் அடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், 2019ஆம் ஆண்டில் திமுகவில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
#JustIn | TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்#ZeeTamilNews | #TVKVijay | #NanjilSampath pic.twitter.com/Q4wBehV7fn
— Zee Tamil News (@ZeeTamilNews) December 5, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
IndiGo Latest News: டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் IndiGo-வின் உள்நாட்டு விமானங்கள் நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் X-ல் (முன்னர் ட்விட்டர்) அறிவித்தது. இருப்பினும், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தரப்பில் இருந்து வந்த தகவல்களின்படி, விமானங்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முரண்பட்ட தகவல்கள், ஏற்கனவே பயணத் தாமதங்கள் மற்றும் அதிக செலவுகளால் கவலையில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
IndiGo விமான ரத்துக்கான பின்னணி:
இந்த ரத்துகள், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் போதுமான IndiGo ஊழியர்கள் இல்லாததால், சிக்கித் தவிக்கும் பயணிகளைக் கையாள முடியாத நிலையை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இண்டிகோவின் சேவையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள் அட்டவணை:
வியாழன் (நேற்று): 550 (IndiGo-வின் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்ட அதிகபட்ச விமானங்கள்)
வெள்ளி (இன்று): 500-க்கும் மேல் (டெல்லி விமானங்கள் உட்பட)
செவ்வாய்/புதன்: 200-க்கும் மேல்
மொத்தம் (இதுவரை): இதுவரையில் சுமார் 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன
விமானப் பணிநேர வரம்புகள் (FTL) விதிமுறைகள்:
IndiGo-வின் தற்போதைய விமான ரத்துகளுக்கு முக்கிய காரணம், புதிய Flight Duty Time Limitations (FTL) விதிகள் ஆகும். இந்த விதிகள், விமானிகளின் ஓய்வு நேரத்தை (36-48 மணிநேரம்) அதிகரிக்கவும், ஒரு விமானி தொடர்ந்து பணியாற்றக்கூடிய நேரத்தைக் குறைக்கவும் வழிவகுக்கின்றன.
- ஜூலை 1: முதல் கட்ட FTL விதிகள் அமலுக்கு வந்தன.
- நவம்பர் 1: இரண்டாம் கட்ட FTL விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த விதிகளின் ஒட்டுமொத்த விளைவாக, IndiGo-விடம் போதுமான விமானிகள் அல்லது குழுவினர் இல்லாததால் நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்க முடியவில்லை.
IndiGo-வின் கோரிக்கை என்ன?
கூடுதல் விமானிகள் தேவை: IndiGo, புதிய விமானிகளை நியமிக்கவும், செயல்பாடுகளை சீரமைக்கவும் பிப்ரவரி 10, 2026 வரை FTL விதிகளிலிருந்து விலக்கு கோரியுள்ளது.
மன்னிப்பு : IndiGo CEO பீட்டர் எல்பெர்ஸ், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நிலைமையை சீரமைப்பது எளிதான காரியம் அல்ல என்றும், அரசு மற்றும் DGCA உடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்படும் இடையூறுகள்: டிசம்பர் 8 வரை மேலும் இடையூறுகள் தொடரக்கூடும் என IndiGo ஏற்கனவே எச்சரித்துள்ளது.
விமானிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு:
இந்திய விமானிகள் கூட்டமைப்பு (Federation of Indian Pilots - FIP), IndiGo-வின் "ஒழுங்கற்ற குறைந்த பணியாளர் உத்தி"யைக் கண்டித்துள்ளது. விமானிகளை குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, நிர்வாக நடைமுறைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், போதுமான விமானிகள் இல்லாத நிலையில், விமானப் பட்டியலை விரிவுபடுத்தியதையும், குறிப்பாக பருவகால செயல்பாடுகளை அதிகரித்ததையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் படிக்க - இந்தியா வந்த புதின். இன்று கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ